Friday, July 26, 2013

ஜூலை 28, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூலை 28, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
Gen 18:20-32
Ps 138:1-3, 6-8
Col 2:12-14
Luke 11:1-13


லூக்கா நற்செய்தி
அதிகாரம் 11:1-13
இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தல்
(மத் 6:9 - 15; 7:7 - 11)
1 இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ' ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் ' என்றார்.2 அவர் அவர்களிடம், ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக!3 எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)' என்று கற்பித்தார்.
5மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ' உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ' நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.6 என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.7 உள்ளே இருப்பவர், ' எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது ' என்பார்.8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.9 ' மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.10ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.11 பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, விசுவாசத்துடன் ஜெயிப்பது எப்படி என்று நமக்கு சொல்லி கொடுக்கிறார். அவர் சொல்வதை கவனமாக கேட்டால், நாம் கேட்பதையெல்லாம், நாம் பெறமுடியும் என்று அவர் சொல்லவில்லை. எல்லாமே நமக்கு நல்லதில்லைல் “ப்ரெட்” அதனை கொண்டு தான் இந்த நற்செய்தி பரிசுத்த வாழ்வை பற்று கூறுகிறது, இயேசு தான் வாழ்வின் உணவு. பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு, வாழ்க்கை கொடுத்தவர், பரிசுத்த வாழ்வை கொடுத்தவர், இயேசு தான். இந்த உவமையில், வரும் நன்பன் கூட, புதியவர் அல்ல, பக்கத்து விட்டு காரர் தான். அவரின் நண்பனோடு உணவை பகிரிந்து கொள்ள விரும்பினார். ஞாணஸ நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் கடவுளின் நட்பை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். (“மூன்று ப்ரெட் துண்டுகள்” – திரித்துவ கடவுள்) ஆனால், அவரோ, அவளோ பகிர்ந்து கொள்ள முழுமையான தகுதியுடன் இல்லை.

நமது குறைகளுக்காக, கடவுளின் இதயத்தை தொட்டால், அவரின் உதவியை கேட்டால், தந்தை கடவுள் நாம் முழுமையாக இருக்க உதவி செய்வார். பரிசுத்த ஆவியை நமக்கு தருகிறார். அது மட்டுமில்லை,  நாம் ஜெபிக்கும் போதெல்லாம், பரிசுத்த ஆவி நம்மை தந்தை கடவுளோடும், இயேசுவோடும், நம்மை இனைக்கிறார். அதனால், ஒவ்வொரு ஜெபமும்,  நம்மை இன்னும் பரிசுத்தமாக்குகிறது. நம்மை இன்னும் கடவுளிடம் நெருங்கி வர செய்கிறது, இயேசுவை போல வாழ நமக்கு ஆற்றல் வழங்குகிறது. பரிசுத்த வாழ்வு அவ்வளவு சுலபமானதில்லை. மேலும் உடனே வந்து விடுவதில்லை. இடைவிடாது நமது ஜெப வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டால் தான்,  நம்மால் பரிசுத்த வாழ்வில் வாழ முடியும். கடவுளின் பரிசுத்த ஆவியை நம்பி, நமது சோதனைகளை தாண்டி , விசுவாசத்தில் வளர வேண்டும்.

நாம் கடவுளிடம் எது கேட்டாலும், இவ்வுலக பொருட்களை கேட்டாலும், கடவுள் அதன் மூலம், நமது ஆண்மாவை வளர்க்க உதவ அந்த வேண்டுதலை உபயோகிக்கிறார். நம்முடைய ஜெபத்தில், “எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளூம்”  என்று வேண்டுகிறோம். இடைவிடாது, ஜெபியுங்கள். ஒரே ராத்திரியில்,கடவுளின் ப்ரெட் நமக்கு கிடைத்துவிடாது, (நாம் மிகவும் மெதுவாக கற்று கொள்கிறோம்)

நாம் கேட்பதையெல்லாம் உடனே கிடைத்துவிடும் என்று நம்முள் ஆசையை விதைப்பது சாத்தானில் வேலையாகும். இந்த கால முறைகள், விரைவு உணவகம் போன்றது. அந்த உணவில் உடலுக்கு ஒவ்வாத விசயங்கள் பல இருக்கும். பரிசுத்த ஆவியின் மூலம் தான் நாம் பரிசுத்த வாழ்வில் வளர முடியும். பரிசுத்த வாழ்வில் வளர்ந்திட அதிகம் கடினப்பட வேண்டியிருப்பதால், பலர் சுல்பமான வழிக்கு செல்கின்றனர்.

தெய்வீகமான, போதுமான பரிசுத்த ஆவியின் கொடை நம்மிடம் இருக்கிறது. ஏனெனில், நாம் ஞாணஸ்நாணத்தில் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளோம். எனினும், கடவுளின் தெய்வீகத்தில், அதன் ஆற்றலில், வாழ, நாம் இடைவிடாது, ஜெபித்து, நமது பாவங்களை கண்டுணர்ந்து, மணப்பூர்வமாக மணம் மாறி , நமது சுய நலத்திற்கான காரண  காரியங்களை அகற்றி, , பரிசுத்த ஆவியின் தூய நிலைக்கு, நம்மை ஏற்று கொள்ள வேண்டும்.

© 2013 by Terry A. Modica


Friday, July 19, 2013

ஜூலை 21 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 21 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Gen 18:1-10a
Ps 15:1-5
Col 1:24-28
Luke 10:38-42

லூக்கா நற்செய்தி
மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார்.41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது 'என்றார்.

(Thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு  நம்முடைய கவலைகளையும், கலக்கங்களையும் பற்றி பேசுகிறார்.  அவைகள் நம்மை வேறு பாதைக்கு அழைத்து செல்கின்றன. அவைகள் நம்மை கட்டுபடுத்த ஆரம்பித்தால், அவைகள் நம் வாழ்வை பாதிக்க கூடியவை, ஏனெனில், நம் கண்களை ஆண்டவரை நோக்கி அல்லாமல், வேறு பக்கம் திருப்பிவிடும். அதனால், எந்த தவறு நடக்க போகிறது, அதனால் இன்னும் துன்பம் இன்னும் மிகுதியாகும் என்ற கவலைக்கு உள்ளாகிறோம்.

மரியா நல்ல ப்ங்கை தேர்ந்துகொண்டாள். இயேசுவின் உண்மையான சீடராக எதுவும் அவரை தொந்தரவு செய்யாமல், இயேசுவிடமிருந்து அவரின் போதனைகளை கற்று கொண்டார். நமது வாழ்வின் முக்கிய அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியாக அமர்ந்து, இயேசுவிடமிருந்து கற்று கொள்வோம். அதன் மூலம், நமது கவலைகள் பற்றி உண்மையாக நாம் அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்பதனை நம்மால் அறிய முடியும்.

இயேசுவின் காலடியில் அமர்ந்து, அமைதியாக அவரிடம் கற்று தேர்ந்தால் தான், நமது கலக்கத்தையும் போக்கி,  நமது சோதனைகளின் மூலம் ஞானத்தையும் பெறுவோம். சின்ன சின்ன கவலைகள் கூட, மார்த்தாவை போல, சமையல் செய்ய முடியவில்லையே என்று கவலைபடுவது, பாவமாகும், ஏனெனில், அது நம்மை இயேசுவின் பார்வையிலிருந்து விலகி வைக்கிறது. இயேசுவை விட்டு விலக வைக்க எந்த தொந்தரவும், நமக்கு நல்லதல்ல.

இயேசுவை நாம் பார்த்து, அவரிடமிருந்து பரிசுத்த வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ளாவிட்டால், நாம் பரிசுத்த வாழ்வில் வாழமுடியாது. நாம் அமைதியாக ஜெப வாழ்வில் நிலைத்து, இயேசுவோடு  நேரம் செலவிட்டால் தான், இயேசு அன்பு செய்தது போல, நாமும் அன்பு செய்ய முடியும். அவர் போதனைகளை உள்வாங்கி , அவர் வாழ்வை நாம் அரவனைத்து செல்ல முடியும். கோவிலிலும், மற்ற சில நேரங்களிலும் ஜெபம் செய்வது மட்டும் போதாது, கவலைகளும், கலக்கமும் பயத்தை கண்டிப்பாக கொண்டு வந்துவிடும். ஏதாவது, பெரிய துன்பம் வந்துவிடும் என்று  பயந்து விடுகிறோம். உண்மையான காரணமாக இருந்தாலும், , இந்த பயம், நமது பார்வை யேசுவின் மேல் இல்லாமல் செய்துவிடும். இதனால், நாம் இயேசுவை விட்டு விலக ஒரு வாய்ப்பாகும். இந்த பயம் ஒரு சிக்னல் ஆக நமக்கு இருக்கிறது. அதனால், அமைதியாக கலக்கம் எதுவும் இன்றி, இயேசுவோடு அமர்ந்து, அவரோடு பேசி, நமது ப்ரச்சினைகளை சொல்ல வேண்டும். அவரிடம் அதற்கான பதில் இருக்கிறது. உற்சாகமாக அதனை கொடுத்து, அமைதி கண்டிப்பாக வரும் என்ற உறுதியையும் கொடுப்பார்.

© 2013 by Terry A. Modica


Friday, July 12, 2013

ஜூலை 14, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 14, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு

Deut 30:10-14
Ps 69:14, 17, 30-31, 33-34, 36-37 or Ps 19:8-11
Col 1:15-20
Luke 10:25-37

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 10:25-37
நல்ல சமாரியர்
25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், ' போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்.26 அதற்கு இயேசு, ' திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்? ' என்று அவரிடம் கேட்டார்.27 அவர் மறுமொழியாக, ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ' என்று எழுதியுள்ளது ' என்றார்.28இயேசு, ' சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் 'என்றார்.29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ' எனக்கு அடுத்திருப்பவர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்டார்.30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ' ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார்.32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.35 மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார்.36 கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது? ' என்று இயேசு கேட்டார்.37 அதற்கு திருச்சட்ட அறிஞர், ' அவருக்கு இரக்கம் காட்டியவரே ' என்றார். இயேசு, ' நீரும் போய் அப்படியே செய்யும் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

அன்பிற்கு எதிர்சொல் வெறுப்பது அல்ல. அக்கறையின்மை, தேவையான பொழுது நிராகரிப்பது, சில நேரங்களில் நம்மால் செய்ய முடியும் என்றாலும், அதனை செய்யாமலிருப்பது, அதனால், அவர்கள் வேதனையை தொடரவிடுவது ஆகும். இன்றைய நற்செய்தியில், இயேசு நல்ல சமாரியனினின் கதையை சொல்லி, முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. என்று கூறுகிறார். இயல்பாகவே, நாம் மற்றவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம், நமக்கு தெரியாதவர்களிடம் கூட, நாம் கனிவுடன் நடந்து கொள்கிறோம். நாம் யாருக்கும் அன்பு செய்ய கூடாதவர்களிடம் கூட நாம் அன்பு செய்கிறோம்.

இன்றைய உலகின் நடக்கும் பல்வேறு ப்ரச்சினைகளுக்கும், கிறிஸ்தவர்களாகிய நாம் தான் – கிறிஸ்துவின் மூலமாக நாம் இவ்வுலகை மாற்ற ஆற்றல் பெற்றிருக்கிறோம் – நாம் நமது நேரத்தை தியாகம் செய்து, நமது உள்ள ஆசைகளுக்கு தூர எறிந்து, இவ்வுலகில் மாற்றலாம். நாம் கடவுளை முழுமையாக நம்பி, மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு,  நாம் ப்ரச்சினைகளுக்கு தலையிட்டால்,  நம் குடும்பத்தில் உள்ள ப்ரச்சினைகளும், வேலையிடத்தில் உள்ள துன்பங்களும், பங்கில் உள்ள குழப்பங்களும் முடிவிற்கு வரும்.

கடவுளை நீங்கள் எவ்வளவு அன்பு செய்கிறீர்கள்? இதற்கு பதில், மற்றவர்களை அன்பு செய்ய, எவ்வளவு தியாகம் நீங்கள் செய்கீறீர்கள் என்பதில் இருக்கிறது. இதையே தான் கிறிஸ்து இன்றைய கதையில் நமக்கு விளக்குகிறார்.
நம்மில் எல்லோருமே இன்னும் முழுமையாக கடவுளை அன்பு செய்வதில்லை. உத்தரிக்கிற ஸ்தலத்தில், நாம் அன்பு செய்யாமல் இருந்த்ததற்கு மனம் வருந்துவோம்.மேலும், நம்மை சுற்றியுள்ளவர்கள் அனைவர் மேலும், இன்னும் முழுமையாக அன்பு செய்வோம். அதுவரைக்கும், நமக்கு தினமும் நம்மை இன்னும் தூய்மைபடுத்தி கொள்ள வரும் வாய்ப்புகளை உபயோகித்து, நம்மை இந்னும் பரிசுத்தமாக்கி கொள்வோம். தினமும், அன்பு செய்ய பல வாய்ப்புகள்  நமக்கு கிடைக்கின்றன, அதன் மூலம் நம்மால் அன்பு செய்வதை முன்னேற்றுவோம்.
அதனால் தினமும், பரிசுத்த ஆவியிடம்(நம் போதகர், நமக்கு ஆற்றல் கொடுப்பவர்,  நம்மை பரிசுத்தமாக்குபவர்) ஜெபம் செய்து, கிறிஸ்துவை போல மாற அவரிடம் வேண்டுவோம். கிறிஸ்து மற்றவர்களை அன்பு செய்தது போல,  நாமும் அன்பு செய்ய நமக்கு பரிசுத்த ஆவியானவர் துனை புரிய வேண்டுவோம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்கிறபொழுது, நமக்கு புதிய சந்தோசமும், மற்றவர்களோடு, இனைந்து பழக  நாம் புதிய உத்வேகத்துடன் செயல்படுவோம். அப்போது, கடவுளின் அன்பை முழுமையாக நம்மால் உணர முடியும், மேலும், அவருடன் நெருக்கமாக இனைந்து செயல்பட முடியும்.
© 2013 by Terry A. Modica


Saturday, July 6, 2013

ஜுலை 7 , 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுலை 7 , 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு
Isaiah 66:10-14c
Ps 66:1-7, 16, 20
Gal 6:14-18
Luke 10:1-12, 17-20

லூக்கா நற்செய்தி,
அதிகாரம் 10:1-12, 17-20
எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புதல்
1 இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.http://www.arulvakku.com/images/footnote.jpg2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ' அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.3 புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.4 பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ' இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! ' என முதலில் கூறுங்கள்.6 அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.10 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,11 ' எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள் ' எனச் சொல்லுங்கள்.12 அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன். 
எழுபத்திரண்டு சீடர்களும் திரும்பிவருதல்
17 பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, 'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன' என்றனர்.http://www.arulvakku.com/images/footnote.jpg18 அதற்கு அவர், ' வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.19 பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.20ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு “' அறுவடை (கிறிஸ்துவிடம் மனம் மாறுதல்)  மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் (தந்தை கடவுள்) மன்றாடுங்கள்.3 “ என்று கூறி “ புறப்பட்டுப் போங்கள்;” என்று அவர்களை ஒவ்வொரு ஊராக அனுப்புகிறார்.

கத்தோலிக்க திருச்சபையில், மனம் மாற்றுபவர்களை பற்றி நீங்கள் நினைக்கும்போது, யார் உங்கள் மனதில் முதலில் வருவது? நிறைய பேர் குருக்களை நினைக்கிறார்கள்? நாம் எல்லோரும் குருக்கள் இன்னும் அதிகம் தேவை என நினைக்கிறோம்.  மேலை நாடுகளில் வயதான குருக்களை ஓய்வு கொடுத்து விட்டு, அவர்களுக்கு பதிலாக இளம் குருக்கள் நிறைய பேர் வருவதில்லை.

அதிக குருக்கள், கன்னியர்கள் தேவை என நீங்கள் ஜெபிப்பது உண்டா? ஆனால் அது இயேசு நம்மை செய்ய சொல்லும் பல வேலைகளில் அதுவும் ஒன்று. “உங்கள் வழியில் செல்லுங்கள்” என்று நம் எல்லோரையும் அழைத்து சொல்கிறார். உங்கள் ஆற்றலை, திறமைகளை, சாமார்த்தியத்தையும் உபயோகிங்கள் என்று யேசு கூறி, அறுவடைக்கு முடிந்த வரை உதவுங்கள். என்றும் கூறுகிறார். இயேசு என்றுமே ஒன்று கூடி வேலை செய்வதில் உறுதியாக உள்ளவர். நாம் எல்லாம் ஒன்று கூடினால் தான் திருச்சபையின் இன்றைய தேவைகளை  நாம் நிறைவேற்றா முடியும். – குருக்கள், மத சேவகர்கள்,மற்றும் பொதுமக்கள்- ஒன்று சேர்ந்து இறைசேவை செய்யும்பொழுது, நம் எல்லோரின் திறமைகளும் ஒன்று சேர்ந்து, தாழ்மையுடன் ஒருவருகொருவர் உதவி செய்து, இறையாட்சியை கொண்டு வர முடியும்.


இந்த போதுமான அளவை நாம் அடைவதற்கு, “மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள்” என்ற மன நிலையிலிருந்து நாம் மாற வேண்டும். “எல்லாமே சரியாக இருக்க வேண்டும்” என்ற மனப்பான்மையும் அகல வேண்டும். “நானே இதனை இன்னும் சரியாக செய்வேன்” என்று மனப்பான்மையும் போக வேண்டும். இது மற்றவர்கள் இறைசேவையில் ஈடுபட தடுப்பாக இருக்கும்.

நான் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும்” என்ற மனப்பான்மையுடன் இருப்பவர்கள் அனைவரும் அதனை மாற்றி கொள்ள வேண்டும். இதனால் என்ன ஆகும் என்றால், திறமையான வேலையாட்களை நாம் துரத்தி விடுவதாக ஆகிவிடும். இயேசு, நாம் எதையும் எடுத்து செல்ல கூடாது என்று கூறுகிறார். அதே போல், அங்கே கிடைப்பவற்றை ஏற்றுகொள்ள வேண்டு.

ஒன்று கூடி வேலை செய்யும் பொழுது, நமது ஜெபம் அதிக குருக்கள் கிடைக்க வேண்டும்பொழுது, கண்டிப்பாக கிடைக்கும். குருவானவர்களும், கன்னியர்களும், நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றனர். அதன் மூலம், இன்னும் பலர் ஈர்ப்புடன் இறைசேவைக்கு செல்கின்றனர். அதே போல், குருக்கள் அல்லாதவர்களும், குருக்களை போல அதே, உணர்வுடனும், வெற்றியுடனும், ஈடுபடவேண்டும். ஏனெனில், பரிசுத்த குருவானவர்கள், நமக்கு சேவை செய்கிறார்கள், நாம் அவர்களுக்கு சேவை செய்தல் வேண்டும்.
© 2013 by Terry A. Modica


Saturday, June 29, 2013

ஜூன் 30, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூன் 30, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு

1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9: 51-62
5. எருசலேம் நோக்கிப் பயணம்
இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர்
51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்
(மத் 8:19 - 22)
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம்,' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(Thanks to www.arulvakku.com)

உங்களை யாராவது  நிராகரீக்கும்  பொழுது, அதனை எப்படி கையாள்வீர்கள்? இன்றைய ஞாயிறின் நற்செய்தி, சீடர்கள் எப்படி அவர்களுக்கு ஏற்படும் மறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கிறோம். இயேசுவிற்கு முன் சமாரியர்களின் ஊருக்கு செல்கிறார்கள். ஏனெனில், இயேசு அவர்களிடம் கூறி மக்களை சந்திப்பதற்கு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். ஆனால் சமாரியர்களோ, இயேசு எருசலேம் செல்லவிருப்பதை தெரிந்து கொண்டு, இயேசுவை வரவேற்க அவர்கள் தயாராகவில்லை. இயேசு அங்கேயே தங்கினாலும் தங்குவார் என்ற எண்ணத்திற்கு அவர்கள் இதயத்தில் விதைக்காமல் மூடிவிட்டார்கள். அதனால் மெசியாவுடன் அருகில் இருக்கும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டனர்.

உங்களுக்கு மிகவும் நெருங்கிய ஒருவர், இயேசுவை அவர்களுக்கு கொண்டு வர செய்யும் எல்லா முயற்சிகளுக்கும் நிராகரிப்பை கொடுத்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்?   நீங்கள் சொல்வதை யாரும் காது கொடுக்க கேட்கவில்லையென்றால், உங்கள் எண்ணம் எண்ணவாக இருக்கும்.? அல்லது திருச்சபையின் போதனையை நீங்கள் விளக்கி சொல்ல முற்படும்பொழுது, அவர்கள் அதற்கு புரிந்து கொள்ளவில்லையென்றால்?


நம்மை போலவே, இயேசுவுடன் சென்ற சீடர்களும்,  நிராகரிப்புகளை விரும்பவில்லை. இயேசுவின் நெருங்கிய சீடர்கள் ஜேம்ஸும், ஜானும், இயேசுவிற்கு உதவி செய்வது போல, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். இயேசு அவர்களீடம் ஏற்கனவே, யாராவது உங்களை நிராகரித்தால், உங்கள் காலனிகளில உள்ள தூசை தட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இயேசு என்ன சொன்னாரோ, அதனை தன் வாழ்வில் கடைபிடித்தார். அந்த சமாரியர்களிடமிருந்து, ஒதுங்கி வேறு இடத்திற்கு  சென்றார்.  இயேசுவின் நம்பிக்கைகளை, அந்த கிராமத்தினரிடம் தினிக்க விரும்பவில்லை. அவர்களுக்கு தேவையான  நீதிகளை இயேசுவால் போதித்திருக்க முடியும்.  ஆனால் இயேசு அதனை செய்யவில்லை.

இயேசுவின் பின் செல்ல நாம் அதிகம் விட்டு கொடுக்க வேண்டும். நம்மை நிராகரிப்பவர்களின் மேல், உள்ள கோபத்தையும், விட்டு விட வேண்டும்.  நம் எண்ணத்திற்கு, நாம் ஏன் கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும்.? நம் காலணிகளில் உள்ள தூசை தட்டிவிடுவது என்றால், நமது மகிழ்ச்சியை, குலைக்கும் எதையும்  நாம் தூர எறிந்துவிட வேண்டும்.


இந்த நற்செய்தியின், முடிவில், இயேசு, அவரை பின் செல்வது என்பது முன்னோக்கி தான் பார்க்கவேண்டும், திரும்பி பார்க்க கூடாது. என்று கூறுகிறார். நாம் எப்பொழுதுமே, ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஒதுங்கி , நிராகரிப்பிலிருந்திலிருந்து, அன்பில்லாதவர்களிடமிருந்தும், தனது இதயத்தை மூடியே வைத்திருப்பவர்களிடமிருந்தும். விலகியே செல்ல விரும்புகிறோம். அங்கிருந்து விலகி கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க செல்கிறோம்.

முன்னோக்கி செல்ல, பரிசுத்த ஆவிதான் நமது இதயத்தை தயார் செய்து, இயேசுவை நம்மில் வரவேற்க ஆயத்துபடுத்துவார் என்பதை நினைவில் கொள்வோம். நாம் சிலருக்கு இயேசுவை கொண்டு வர, முயற்சி செய்து, அதில் தோற்றால், உண்மையிலேயே, நாம் தோற்கவில்லை, இப்பொழுது தான் நாம் விதையை விதைக்கிறோம், பரிசுத்த ஆவியானவர், அறுவடை செய்யும் வேலையை செய்யட்டும், நாம் அடுத்த வயலுக்கு செல்வோம்.

© 2013 by Terry A. Modica


Friday, June 21, 2013

ஜுன் 23, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 23, 2013 ஞாயிறு  நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9:18-24
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மத் 16:13 - 19; மாற் 8:27 - 29)
18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? ' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மத் 16:20 - 28; மத் 8:30; 9:1)
22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24 ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

(thanks to www.arulvakku.com)

“நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?”  இந்த கேள்வியை தான் இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் நம்மை நோக்கியும் எழுப்படுகிறது: உங்கள் வாழ்க்கை, இயேசு தான் கடவுள், மெசியா, மீட்பர் என்று உரத்து சொல்கிறதா? அவர் தான் அன்பின் வடிவம், போதகர், மேய்ப்பர் என்று உங்கள் வாழ்க்கை மூலமாக காட்டுகிறீர்களா? ஒவ்வொரு தருணத்திலும் இது நடக்கிறதா?

உங்கள் வாழ்வு நன்றாக இருக்கும்பொழுது, இயேசு தான், இவ்வாழ்க்கையை ஆசிர்வதித்து கொடுத்துள்ளார் என எல்லோரிடமும் சொல்கிறீர்களா? நீங்கள் மற்றவரால் காயப்படும்பொழுது, இயேசு உங்கள் மன வேதனையை, வலியை எடுத்து கொண்டார் , காயப்படுத்தியவரின் பாவத்தை இயேசு சிலுவைக்கு எடுத்து சென்றார் என்று எல்லோருக்கும் தெரியும்படி நடந்து கொள்கிறீர்களா?

வாயால் இயேசு தான் நமது கடவுள் என்று சொன்னாலும், நமது வாழ்வு அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறோம். நமது நடத்தையின் மூலம், நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை முறையாக கவனத்துடன் நடந்து காமிக்க வேண்டும். தெளிவுடனும், வெளிப்படையாகவும், நமது செயல்களும், வாழ்வும் நடந்திட வேண்டும். எங்கே  நாம் தவறி விடுகிறோம் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். நம் உள்ளே உள்ள மன வலியாலும், பயத்தினாலும், ஆறாத வடுக்கலாலும் தான் நாம் பாவம் செய்கிறோம். அதனால் ஏற்படும் எதிர்வினையால் தான் நாம் பாவம் செய்கிறோம். நமது நடத்தையில் உள்ள குறியீடுகளை, துப்புகளை உற்று நோக்கி, அதனை பரிசோதித்து, நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், இயேசு உண்மையிலேயே யார் என்பதனை அறிந்து, அவர் கொடுக்கும் அன்பை அனுபவித்து, நமது குறைகளை நீக்கும் வாய்ப்பிற்காக நாம் உபயோகிப்போம்.


“என் வாழ்வு உண்மையாகவே இயேசுவை உலகிற்கு காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் தினமும் நாம் கேட்டு கொள்ள வேண்டும். அதன் பதில், நாம் எந்த விசயத்தில், அதிகம் கவனம் கொள்ள வேண்டும். என்பதை தெரியபடுத்தும். இதன் மூலம் நாம் ஏன் இன்னும் முழுமையாக மனம் திரும்பவில்லை என்பதையும் தெரியபடுத்தும். நமது வாழ்வு ஒன்றாகவும் வார்த்தை வேறாகவும் இருக்கும் பொழுது, நமது வார்த்தைகளை மக்கள் நம்புவதில்லை.

இயேசு யார்? உங்களை அவருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் போன்றும், உங்களை முழுதும் அக்கறை கொண்டவருமாக இருக்கிறார். உங்களுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, உங்களை முழுதும் அன்பு செய்கிறார். மேலும் எப்பொழுதுமே உங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அதனை நீங்கள் கண்டு அறியாமல் இருக்கும்பொழுதும், உங்களுக்கு உதவி செய்கிறார். உங்களை எப்பொழுதுமே ஒதுக்கியதில்லை.
இதனை நாம் ஓரளவிற்கு நம்பினாலும், எவ்வளவு கஷ்டமான சூழ் நிலை இருந்தாலும், அவரோடு இருக்கும்போது, நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். அவரின் உண்மையான அன்பை அறிந்து கொண்டு, அவரோடு நெருக்கத்துடன் இருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொண்டு, நமது அனுதின சிலுவையை சுமந்து கொண்டு, மற்றவர்களை அன்பு செய்து, அவர் பின் செல்வோம் .
© 2013 by Terry A. Modica


Saturday, June 15, 2013

ஜூன் 16, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 16, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 11ம் ஞாயிறு
2 Sam 12:7-10, 13
Ps 32:1-2, 5, 7, 11
Gal 2:16, 19-21
Luke 7:36–8:3
லூக்கா நற்செய்தி
பாவியான ஒரு பெண் நறுமணத் தைலம் பூசுதல்
(மத் 26:6 - 13; மாற் 14:3 - 9; யோவா 12:1 - 8)
36 பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ' இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.40 இயேசு அவரைப் பார்த்து, ' சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் ' என்றார். அதற்கு அவர், ' போதகரே, சொல்லும் ' என்றார்.41 அப்பொழுது அவர், 'கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். 42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? ' என்று கேட்டார்.43 சீமோன் மறுமொழியாக, ' அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன் ' என்றார். இயேசு அவரிடம், ' நீர் சொன்னது சரியே ' என்றார்.44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ' இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.47ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் ' என்றார்.48பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ' உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன 'என்றார்.49 ' பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்? ' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.50இயேசு அப்பெண்ணை நோக்கி, ' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க ' என்றார்.

இயேசுவின் பெண் சீடர்கள்
1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் எப்போதாவது உங்கள் பாவங்கள் எப்படி மன்னிக்கபடுகின்றன? என்று நினைத்து பார்த்தது உண்டா? நாம் எப்படி பாவ நிலையிலிருந்து ,  நியாய வாழ்வில் எப்படி மாறுகிறோம். நியாய வாழ்வு என்பது “ஓரளவிற்கு, நியாயமாகவும்” என்று அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில், சில நேரங்களில் நாம் தவறாக நடந்து விடுகிறோம். இயேசு மிகவும் பரிசுத்தமானவர், மிகவும் சரியான ஒருத்தர், நம் பாவங்களை சிலுவையில் எடுத்து சென்றார். அநியாயங்கள் எல்லாம், அங்கேயே இறந்துவிட்டன.
நீதி என்பது ஒரு சட்டத்தின் வார்த்தை ஆகும். இன்றைய நற்செய்தியோ, ‘சட்டத்தினால், பாவங்களை மன்னிக்க முடியாது; நம் பாவங்கள்   இயேசுவின் மீது நம்பிக்கையினால் மட்டுமே மன்னிப்பு பெற முடியும் “ என்று கூறுகிறது. ஒருவேளை சட்டத்தினால் மட்டுமே மன்னிப்பென்றால், இயேசு எதற்காக சிலுவையில் இறந்தார்.
இன்றைய நற்செய்தியில், இயேசு இதனை விளக்கி சொல்கிறார். பாவப்பட்ட பெண், அவளுடைய கண்ணீரால் இயேசுவின் பாதங்களை கழுவினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அவரின் மிகுந்த அன்பினால், அவரின் பாவங்கள் மன்னிக்கபட்டன. பாவங்களின் சக்தியிலிருந்து, மீள அன்பினால் மட்டுமே முடியும். அன்பினால் மட்டுமே நியாயமாக வாழ முடியும்.
நாம் எப்பொழுதும் அன்புடன் இருக்க தான் ஆசைபடுகிறோம், ஆனால் பாவத்தில் விழுந்து விடுகிறோம். சில நேரங்களில், மற்றவர்களை காயபடுத்துகிறோம், என்று  நாம் அறியாமலே பாவத்திற்கு விழுகிறோம்.
நாம் இயேசுவின் மேல் பார்வையை எடுத்து விடும் நேரத்தில், நாம் பாவம் செய்கிறோம். நம்முடைய கடந்த காலத்திலும், இப்பொழுதும் உள்ள எழுச்சியும், ஊக்கத்தாலும், நாம் உடனே எதிர்ப்பாக செயல்படுகிறோம். ஆனால், இயேசுவிடம் ஜெபம் செய்ய அதிக காலம் எடுத்து கொண்டால், அவரோடு இனைய முயற்சி எடுக்காமல் இருந்தால், நாம் நம்மையே கன்ட்ரோல் செய்கிறோம். ஆனால் நாமே, அன்பு செய்ய முயற்சிக்கலாம்.
நாம் அன்பை மட்டுமே நம்முடைய முதல் ப்ரதானமாக ஆக்க முயலும்பொழுது, நம் பாவம் செய்ய தூண்டும் ஆர்வம் குறைந்து விடும். மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வதால், நம் பாவ தூண்டல்கள் கொஞ்சம் குறையும். நம் பாவத்தின் மூலமாக மற்றவர்களை காயப்படுத்திவிட்டோமோ என்று நாம் நினைத்துவிட்டால், அல்லது கண்டுபிடித்து விட்டால், அன்பினால், நாம் அதனை அந்த காயத்தை குறைக்க முடியும்.  அதன் மூலம், கடவுளின்  நீதி தீர்ப்புக்குள் நம்மால் நுழைய முடியும்.
இயேசுவை போலவே நாம் மற்றவர்களை அன்பு செய்தால், நமது விசுவாசம், நம் மீட்பாக மாறுகிறது. இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணிற்கு சொன்னது போல, “' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்று யேசு நம்மிடமும் சொல்கிறார்

© 2013 by Terry A. Modica