Friday, February 25, 2011

பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Is 49:14-15
Ps 62:2-3,6-9
1 Cor 4:1-5
Matt 6:24-34


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 6


கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
24 ' எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22 - 34)
25 ' ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' 26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். 34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய நற்செய்தி, இயேசு மலைகள் மேல் கொடுத்த ப்ரசங்கத்தின் ஒரு பகுதியாகும். இது இயேசு வாழ்ந்தது போல், எப்படி பரிசுத்தமாகவும், முன் மாதிரியாகவும் வாழ்வேண்டும் என்று நமக்கு அறிவுறை சொல்கிறார். இதே அறிவுரை, இயேசு கூறிய "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே " ஜெபத்திலும் "எங்கள் அனுதின உணவை இன்று அளித்தருளும்" என்றும் இருக்கிறது. ஜெபத்திலும், ப்ரசங்கத்திலும், நமது அனுதின தேவைகளுக்கு நாம் கடவுளை நம்பி இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நற்செய்தியின் நோக்கம்.


ஒவ்வொரு நாளும், நமது தேவைகளுக்கு, நாம் கடவுளை நம்பியிருக்க வேண்டும் அல்லது இவ்வுலக வழியில் நாமாக நமது முடிவை எடுக்க வேண்டும். நாம் இரண்டு பேருக்கும் பணியாளனாய் இருக்க முடியாது. நமது மதச்சடங்குகள் மூலம் நாம் ஒரு காலை மோட்சத்திற்கும், இன்னொரு காலை, இவ்வுலக வாழ்வின் முறைகளிலும் வைத்து கொண்டு நாம் நம்மையெ ஏமாற்றி கொள்ள கூடாது.


"செல்வம்" என்ற வார்த்தை அரமாயிக் வார்த்தையிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் என்னவென்றால், "செல்வம்" அல்லது "சொத்து" ஆகும். ஒரு காலத்தில் ஒரு கதை உண்டு, யாரோ ஒருவர், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று கடவுளிடம் வேண்டிகொண்டார்களாம் அதற்கு கடவுள், "உங்களிடம் ஏற்கணவே உங்கள் உணவு உள்ளது, மற்றவர்கள் உணவையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்" என்று கூறினாராம். மற்றவர்களுக்கு தேவையானதை ஏன் நாம் சேமித்து வைத்திருக்கிறோம் ? நாம் நமது எதிர்காலத்திற்காக நாம் சேமித்து வைக்கிறோம். ஆனால் பலர், நம்மிடம் அதிகம் உள்ளதை தினமும் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அவர்களிடம் அதை கொடுத்து விட்டால், நமக்கு பிற்காலத்தில் கிடைக்காமல் போய்விடுவோமா என்ற பயம் நம்மிடம் இருக்கிறது.

அப்படி ஒரு எண்ணம் நமக்கு இருந்தால், நாம் கடவுளை நம்பவில்லை என்று அர்த்தம். கடவுள் நம்மை கவனிக்கமாட்டார் என்ற கொள்கையுடன் இருக்கிறீர்கள். நாம் எப்படி மற்றவர்களிடம் தாரளமாக இருக்கிறோமோ, அப்படி ஒன்றும் கடவுள் இருக்கமாட்டார் என்று அனுமானித்து விடுகிறோம். அதனால் தான் இயேசு "நீங்கள் ரொம்பவே கவலைபடுகிறீர்கள்!, உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக வைத்து இருந்தால், கவலை படவேண்டாம்" என்று கூறுகிறார். நாம் நமது கவலையை விட கடவுள் எவ்வளவு நல்லவர் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.


"கடவுள் உங்களை அதிகமாக அன்பு செய்கிறார். அவர் உங்களை கவனித்து கொள்வார்! நீங்கள் இறையரசிற்காகவும், கடவுளின் வழியிலும் செல்ல முனைந்தால், உங்களுக்கு தேவையானது ஒவ்வொன்றும் கிடைக்கும், அதனால் கவலைபடுவதை நிறுந்துங்கள் " என்று இயேசு கூறுகிறார்.

கவலைபடுவது ஒரு பாவமாகும், இது நம்மை இயேசுவின் மீது உள்ள கண்களை விலக்கிவிடும். கவலை சாத்தானின் வேலையாகும், , இது நம்மை மற்றவர்களிடம் நாம் காட்ட வேண்டிய இயேசுவின் தாராள குணத்தையும், அன்பையும் பிரித்து விடும்.


(www.gnm.org)

Friday, February 18, 2011

பிப்ரவரி 20 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 20 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
Lev 19:1-2, 17-18
Ps 103:1-4,8,10,12-13
1 Cor 3:16-23
Matt 5:38-48


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5


பழி வாங்குதல்
(லூக் 6:29 - 30)
38 ' ″ கண்ணுக்குக் கண் ″ , ″ பல்லுக்குப் பல் ″ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். '
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27 - 28, 32 - 36)
43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

(thanks to www.arulvakku.com)

இரக்கம் தான் இந்த வார நற்செய்தியை புரிந்து கொள்வதற்கு நமக்கு உறுதுனையாகும். அன்பு தான் மற்றவர்களின் இதயத்திற்குள் நாம் நுழைய முதல் கதவு என்று யோசியுங்கள். அவர்கள் அந்த கதவை மூடினால் நீங்கள் இரக்கத்தின் மூலமாக பின் கதவு மூலமாக நீங்கள் செல்லுங்கள்.

முற்காலத்தில், யாராவது ஒருவர் ஒருவரின் கண்ணை நோண்டி எடுத்தால், அவர் அவரது குழுவினருடன் சேர்ந்து கொண்டு, நோடியவரின் உற்றார் உறவினரையும் திருப்பி அடிப்பார். அதனால், கடவுள் அவர்களெல்லாம் அன்பினால் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று கடவுள் அவர்களுக்கு இந்த சட்டத்தை கொடுத்தார். அதனால், உங்களின் கண்ணை யாராவது காயப்படுத்தினால், நீங்கள் அதற்கு மேல் அவர்களை ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே அன்பு இல்லாத செயல் தான், இருந்தாலும் அவர்களை எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது.

இயேசு இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வந்தவர், "யாராவது உங்களை துன்ப்புறுத்தினால், அவர்களை அன்பு செய்" என்று கூறுகிறார்.

மற்றவர்கள் நம்மிடம் பாவம் செய்யும்பொழுது, அவர்கள் கடவுளுக்கும், அவரது அன்பிற்கும் அவர்களின் இதயத்தை மூடிவிட்டார்கள். ஆனால், நாம் அவர்களிடம் அன்பினை கொடுத்தால், நாம் அவர்களுக்கு பின் கதவு வழியாக கடவுளை கொடுக்கிறோம்.

இதன் மூலம், நாம் அப்படியே நமக்கு தீங்கு நடக்க வேண்டும் என்றே இருந்து விட வேன்டும் என்றில்லை. ஆனால், நாம் தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருந்தால், நாம் கடவுளையும், அவரது குணப்படுத்தலையும் பெறுவோம்.

நியாயமற்ற முறையில், உங்களிடம் யாராவது பணத்தையோ அல்லது வேறு ஏதாவது எடுத்து கொண்டால், அவர்களின் பேராசையை நீங்கள் தடுக்க முடியாது, ஆனால், உங்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் பாவத்தை தடுக்க முடியும்: அவர்கள் கேட்பதை சந்தோசமாகவும், இலவசமாகவும் கொடுங்கள். தாராளமான அன்பினால், உங்களிடம் உள்ளதை அதிகமாகவே கொடுங்கள், அதை தான் இயேசு சொல்கிறார்.


உங்களை யாராவது நியாயம் அற்ற முறையில் ஏதாவது செய்ய சொன்னால், இந்த குரூரமான பாவத்தை தடுக்க, அந்த செயலை நீங்களாகவே, தானாகவே முன் வந்து ஏற்று செய்தால் நல்லது.

நமது அன்பை அன்பளிப்பாக அவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்பதை, அவர்களுக்கு தெரியபடுத்த வேன்டும். நாம் அவர்களின் பாவத்திற்கு உட்பட்டவர் அல்ல என்பதனை அவர்களுக்கு தெரியபடுத்த வெண்டும். நாம் கடவுளின் அன்பை மற்றவர்களுக்கு கொடுப்பதில் முன் மாதிரியாக செய்யும்போது, அந்த அன்பு சாத்தானை வெற்றி கொள்ளும்.
இது தான் மிகச்சரியாக இருப்பதற்கு சமம். மிகச்சரியாக இருப்பதற்கு பைபிளில் இருக்கும் அர்த்தம் - முழுமையான அன்பு, பூரனமான, முழுமையான, நிரம்ப, எல்லையில்லாத அன்பும், இரக்கமுள்ள அன்பும் ஆகும்.



© 2011 by Terry A. Modica

Friday, February 4, 2011

பிப்ரவரி 6 , 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 6 , 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு

Is 58:7-10
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matt 5:13-16


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5



உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34 - 35)
13 ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

(thanks to www.arulvakku.com)


"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்று இயேசு கூறுகிறார். உப்பாய் இருப்பதாக இருப்பது என்றால், அதற்கு என்ன அர்த்தம். உப்பு என்ன செய்யும் என்று யோசித்து பாருங்கள். சுவையில்லாத உணவிற்கு சுவையை கூட்டுகிறது. மேலும் உப்பு உவர்ப்பற்று போனால் என்ன ஆகும் என்று இயேசுவே ஒரு கேள்வியை கேட்கிறார். எப்படி மீண்டும் அந்த உவர்ப்பை எப்படி பெறுவது? அதற்கு பதில்: கடவுள் நம்மிடம் அதனை மீண்டும் சேர்க்க செய்ய அவரிடம் சரண்டைய வேண்டும்.

உங்கள் ஞானஸ்நானத்திலேயே, கடவுள் உங்களுக்கு எல்லா சுவைகளையும் வழங்கியிருக்கிறார். கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளின் வாழ்வான, கடவுள் அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவை கூட்டி அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள்.

ஆனால், எல்லாவற்றிற்கும் அதிகமான உழைப்பை கொடுத்தால் என்ன ஆகும் என்று நினைவில் கொள்ளுங்கள்!. உணவிற்கு அதிக உப்பு இருந்தால் என்ன ஆகும் என்றும் யோசியுங்கள். அதன் சுவை ஏற்று கொள்ள முடியாது. நாம் நல்ல எண்ணத்தில் அதிகமாக அந்த சுவையை கொடுத்தாலும், அது ஏற்று கொள்ளபடுவதில்லை, நல்லது செய்ய போய், அழிவை தான் கொடுப்போம்.

இயேசுவின் அன்பை நம்மிடமிருந்து பெறும் அனைவரும், இயேசுவை நோக்கி திரும்புவார்கள். இயேசுவின் அமைதியை நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் வாழ்வை நாம் வாழ்ந்து காமிக்கும்பொழுது, பலர் இயேசுவிடம் திரும்புவார்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே, இயேசு அவர்களை அன்பு செய்கிறார் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும், ஆனால், இயேசு அவர்களை மனப்பூர்வமான தெய்வீக வாழ்வை துவங்க வேண்டும் என்று விரும்புகிறார், அப்போது தான், இயேசு அவர்களின் ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும், சோதனைகளையும் ஆசிர்வாதங்களாகவும், சந்தோசமாகவும் இயேசு மாற்றுவார்.

மேலும் இயேசு நம்மை ஒளியாய் இருக்க சொல்கிறார். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியாது ஆனால், அந்த ஒளியை நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள். ஆனால் குருடாக்கும் ஒளியை நாம் வீசக்கூடாது. நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். நம் ஒளியையும் கிறிஸ்துதான் ஒளியூட்ட வேண்டும். அதனால் மற்றவர்கள் அந்த ஒளியை நோக்குவார்கள்.

மேலும், இயேசு நம்மை மலை மேல் இருக்கும் நகர் போல இருக்க சொல்கிறார். நாம் ஒருவர் மட்டும் மணமாற்றுதல் செய்ய முடியாது. ஒரு "நகர்" என்பது கிறிஸ்தவர்களின் குழு : ஒரு பங்கு, ஒரு குடும்பம், பங்கு குழு, இன்னும் பல. கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது நாம் ஒரு குழுவில் இருக்கிறோம் என்பது ஆகும். நமது ஒளி மற்றவர்களின் ஒளியோடு சேரும்போது, எல்லாம் சேர்ந்த வெளிச்சம் கிறிஸ்துவை இவ்வுலகிற்க்கு காட்ட பலமான ஒளியாக இருக்கும். ஏன்? ஏனெனில், கிறிஸ்துவை நம்பாதவர்கள், நாம் எல்லாம் சேர்ந்து ஒருவரையொருவர் அன்பு செய்யும்பொழுது, கிறிஸ்துவின் அன்பு உண்மையானது என்று அவர்கள் நம்பி, கிறிஸ்துவின் அன்பை புரிந்து கொள்வார்கள். எவ்வித நிபந்தனையின்றி, தாராளமாகவும், பணி செய்யும் பன்பும் அவர்களிடம் கிறிஸ்துவின் அன்பை காமிக்கும். நாம் ஒருவொருக்கு ஒருவர் கிறிஸ்துவின் ஒளியாய் இருக்கிறோம். நாம் ஒருவர்க்கு ஒருவர் சுவையூட்டுகிறோம். மற்றவர்கள் இல்லையென்றால், நமது ஒளி மங்கிவிடும். நமது சுவை குறைந்து விடும், கடவுளரசிற்கு வேண்டாதவர் ஆகி விடுவோம்.

© 2011 by Terry A. Modica

Friday, January 28, 2011

ஜனவரி 30, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 30, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு

Zep 2:3; 3:12-13
Ps 146:6-10 (with Matt 5:3)
1 Cor 1:26-31
Matt 5:1-12a


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5


மலைப்பொழிவு
1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
பேறுபெற்றோர்
(லூக் 6:20 - 23)
3 ' ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.7இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நமது புனிதராக இருக்கும் காட்சியை கொண்டு வருகிறது. மத்தேயு 5:12ல் 8 பேரின்பங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பேரின்பங்கள் இயேசு கிறிஸ்துவை போல இருப்பவர்களுக்கு கிடைப்பவை ஆகும். முதல் நான்கும் நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை பற்றியதாகும்; கடைசி நான்கும் நாம் மற்றவர்களோடு உள்ள உறவை குறிப்பிடுகிறது.

நாமே நம்மை புனிதர் என்று சொல்லிகொள்ளலாம்? நினைவில் வையுங்கள், நீங்கள் ஒரு புனிதர், உங்கள் பயனத்தில், நீங்கள் குறையுள்ளவர்களாக இருந்தாலும், யேசுவின் சிலுவையின் மூலம் கடவுள் உங்களை புனிதப்படுத்தியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால், கடவுள் உங்களை ஆசிர்வதித்துள்ளார். மேலும் நீங்களும் மற்றவர்களை கிறிஸ்துவை போல் அன்பு செய்வதால் நீங்களும் ஆசிர்வதிக்கப்படுகிறீர்கள்.

கடவுள் ஆசிர்வதித்த அனைத்துமே பரிசுத்தம் தான்! கிறிஸ்துவை போல், பேரின்பத்தை அடைய முற்படும் யாரும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்,மேலும் அவர்களை நாம் புனிதர்கள் என்று சொல்லலாம்: அவர்கள் கடவுளின் அன்பு நமக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள். பரிசுத்த ஆவியின் மூலம் அவர்கள் கவலைக்கு மருந்தும் , ஆறுதலும் தேடிகொள்வர். பரமானந்தத்தின் ஒவ்வொரு பயனும் அடைய அவர்கள் செயல்களை செய்வர், எங்கெல்லாம் அவர்கள் குரல் எங்கே ஒலிக்க வேண்டுமோ அங்கே அவர்கள் நிற்பார்கள், ஏனெனில், அவர்கள் கடவுளை அன்பு செய்பவர்கள். அதனால், அவர்கள் பேரின்பத்தை அடைவார்கள். ஒவ்வொரு சவாலையும் ஏற்று நீங்கள் இயேசுவை போல் நடந்து கொண்டு, புனித வாழ்வில் வாழ் வேண்டும். ஒவ்வொரு ஆசிர்வாதத்தையும் நினைத்து தியானம் செய்யுங்கள்.

திருச்சபை புனிதர்களை புனிதர்கள் என்று அர்ச்சித்து அவர்களை போல நாமும் இருக்க வேண்டும் என கூறுகிறது. அவர்கள் நமக்கு முன் மாதிரியாக இருக்கிறார்கள். நாம் அந்த புனிதர்களை போல் பரிசுத்தமாக இல்லாவிட்டாலும், நாமும் அந்த புனிதர்களின் குழுவோடு தான் இருக்கிறோம். மோட்சாத்தை நோக்கி கிறிஸ்துவின் பாதையை பின் செல்பவர்கள் யாவரும் புனிதர்கள் தான், உத்தரிக்கிறஸ்தலத்திற்கு சென்றோ அல்லது போகாமலே நாம் எல்லாருமே புனிதர்கள் தான். நாம் இன்னும் புனித வாழ்வில் முன்னேற , புனிதர்களிடம் நாம் அவர்கள் நம்மை வழிநடத்த சொல்லி கேட்கலாம்.


© 2010 by Terry A. Modica

Friday, January 21, 2011

ஜனவரி 23, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 23, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Cor 1:10-13, 17
Matt 4:12-23

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 4


இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. '17 அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
முதல் சீடர்களை அழைத்தல்
(மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(மாற் 3:7 - 12;லூக் 6:17 - 19)
23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.24
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், இசையாஸ் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறியதை பார்க்கிறோம்: உங்களுக்கு தெரிந்த மக்கள் இருளில் வாழ்பவர்கள் (மேலும் அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யாதவர்கள்), அவர்கள் மேல் பிசாசின் தீய ஆவி அவர்களை ஆட்கொண்டு, அவர்களின் அழிவுக்கு காரணமாக இருக்கும் வேளையில், இயேசுவின் மகிமையால், அவர்களின் வாழ்வு வெளிச்சத்திற்கு வருவதை பார்ப்பீர்கள்.
உங்களின் ஜெபத்தினாலும், விசுவாசமிக்க அன்பினாலும், யேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தினோம். அவர்கள் இயேசுவை விட்டு வெளியே இருக்க முயற்சி செய்தாலும், அவரிடமிருந்து மறைந்து இருந்தாலும், ப்ரகாசமான கிற்ஸிதுவின் ஒளியை நிறுத்தி விட முடியாது. கூடிய விரைவிலோ அல்லது சில கால தாமதமானாலும், அவர்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியிலும் , அளவில்லா சந்தோசத்தையும் இயேசுவின் முலம் அடைவார்கள். அது உங்களுக்கும் பரவும்.

மேலும் (லூக்கா 12:49- 50), இயேசு இருளில் இருக்கும் மக்களை பார்த்து: "அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்." உங்களின் வேதனையும் எவ்வளவு என்று இயேசுவிற்கும் தெரியும் என்று இங்கே கூறிகொள்கிறார். ஆனால் இந்த மணவேதனையை இன்னும் ஆழத்துடனும் ,அதிக பற்றுடனும், அவரது வேதனையை கூறுகிறர். நீங்கள் நினைக்கும் வித்ததை விட, எதிர்பார்க்கும் செயல்களை விட, இயேசு அதிகமாகவே செய்கிறார், உங்களின் ஜெபத்தினால், என்ன அடைய விரும்புகிறீகளோ, அதைவிட அதிகமாகவே செய்கிறார். இயேசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, செய்ய முடியாததை கூட செய்து, உங்களுக்கு தேவையான அனைத்தையும் முழுதுமாக கிடைக்க ஏற்பாடு செய்கிறார்.


இருளில் இருக்கும் மக்களின் தீய குணத்தினால் , தவறான விளைவுகள் ஏற்பட்டுவிட கூடாது என இறைவனிடம் ஜெபியுங்கள். கடவுள் மற்றவர்கள் மூலம் அவரின் ஒளியை பரப்ப செய்ய வேண்டுங்கள். தீய ஆவியின் எதிர்ப்புகளை, கலகங்களை நீக்க கடவுள் அவரது வழியில் (நாம் எதிர்பார்க்கும் வழியில் அவர் செய்வதில்லை) செய்ய நாம் ஜெபிக்க வேண்டும். இருளில் இருப்பவர்கள், அவர்களது மணமாற்றத்திற்கு பிறகு, அவர்களும் கிறிஸ்துவின் ஒளியை இன்னும் அதிகமாக எல்லோருக்கும் பரவ செய்ய வேண்டும் என்று கடவுளின் மன்றாடுங்கள். மேலும் அவர்களின் மணம் மாறுதல், ஆழமான மணம் மாறுதலாகவும், நிரந்தரமானதாகவும், உறுதியான மணம் மாற்றமாக இருக்க ஜெபியுங்கள்.

நாம் கடவுளின் மனதை மாற்ற ஜெபம் செய்வதில்லை. கடவுள் ஏற்கனவே இருளில் இருக்கும் மக்களிடம் கிறிஸ்துவின் ஒளியை கொண்டு செல்வதில் முழு முனைப்புடன் இருக்கிறார். நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவர்களை கடவுளின் கைகளில் வைப்பதற்காக ஜெபியுங்கள். ஏனெனில் அவர்கள் அவர்களுக்காக ஜெபிப்பதில்லை.

© 2010 by Terry A. Modica

Friday, January 14, 2011

ஜனவரி 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 1

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
(thanks to www.arulvakku.com)

ஒவ்வொரு திருப்பலியிலும், "இதோ இறைவனின் செம்மறி, இவரே உலகின் பாவங்களை போக்குபவர்" என்று இன்றைய நற்செய்தியில் வருவது போல குருவானவர் சொல்வதை நாம் கேட்கிறோம். அதற்கு பதிலுரையாக நாம் : " இறைவா உன்னை பெறுவதற்கு நான் தகுதியற்றாவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்" என்று சொல்கிறோம்.

இந்த ஆண்மாவின் குணமடைதல், திருப்பலியின் ஆரம்ப நிலையிலேயே, நாம் பாவ மன்னிப்பு கேட்கும்பொழுது ஆரம்பித்து விடுகிறது. இந்த குணமடைதலால், நாம் யேசுவை தெய்வமாகவும், மனிதனாகவும் முழுவதுமாக பெறுகிறோம். அதன் மூலம், கோவிலை விட்டு வெளியேறி, யோவானை போல , நாமும், "யேசு தான் கடவுளின் மகன் " என்று இவ்வுலகிற்கு எடுத்துரைக்க தயாராக நாம் செல்கிறோம்.
திருப்பலியில் உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்கிறதா?

திருப்பலியின் எல்லா பகுதிகளிலும் இந்த ஆண்ம குணமடைதல் பங்களிப்பு இருக்கிறது. நாம் பாடல் குழுவோடு இனைந்து பாடும்பொழுது, இயேசு அங்கே இருக்கிறார். பாவ மன்னிப்பு அருட்சாதனத்தில் இயேசு அங்கே இருக்கிறார். நாம் முழுமனதுடன் நமது பாவ மன்னிப்பையும், மனம் திருந்துவதையும் பார்க்கிறார். நற்செய்தி வாசகத்திலும் இயேசு இருக்கிறார், எப்படி ரொட்டி துண்டு உடைந்து நம்மை வளர்க்கிறதோ, அதே போல் ஒவ்வொரு நற்செய்தி வார்த்தையும் உடந்து நமது ஆன்மீக வளர்ச்சிக்காக உதவும். ப்ரசங்கம் நன்றாக இல்லாவிட்டாலும், அந்த திருப்பலியில் ப்ரசங்கமே இல்லாவிட்டாலும் , பரிசுத்த ஆவியானவர் நமக்கு தனியாக ப்ரசங்கம் சொல்கிறார். (நமது மனத்தில் ஒடும் ஏனோதானோ எண்ணங்கள் இறைவனின் செயலாகும்) மேலும் ஒவ்வொரு வேண்டுதலிலும் யேசு அங்கே இருக்கிறார்: நமது ப்ரார்த்தனைகளிலும் , குருவானவர் சொல்லும் ஜெபத்திலும் இயேசு இருக்கிறார்.

எல்லா திருப்பலியும், நம்மை மாறச் செய்கிறது, நம்மை தயார்படுத்துகிறது, கிறிஸ்துவின் சாட்சியாக நம்மை வெளியே அனுப்புகிறது. ஞான்ஸ்நாணம் கொடுத்த யோவானை போல நாமும் : "அவரை எனக்கு தெரியாது", அதனையே மாற்றி : " நாம் ரொட்டி துண்டையும், திராட்சை ரசத்தையும் தான் பார்த்தேன்",மேலும் " நான் பாவியாய் இருக்கிறேன் , மேலும் நான் செய்த அழுவுகள் எனக்கு தெரியவில்லை" மேலும் "எப்படி நாம் குணமடைகிறோம் என்பது எனக்கு ஆச்சரியாமாக இருக்கிறது" .

யோவனை போல நாமும்: "இப்போது நானும், கடவுளின் மகனை பார்த்து விட்டேன்" என்று சாட்சியம் கூற முடியும், "பரிசுத்த ஆவியானவர் திவிய நற்கருணையில் இயேசு இருக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தினார், அதே பரிசுத்த ஆவியானவர், எனது பாவங்களை எனக்கு கான்பித்து அதிலிருந்து மீண்டு வர உதவினார். எனது புண்களை குணமாக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தார்"

© 2010 by Terry A. Modica

Saturday, November 13, 2010

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Mal 3:19-20a
Ps 98:5-9
2 Thess 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21


எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.
வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, "ஒரு நாள் வரும், அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்று கூறி இவ்வுலகில் உள்ளதெல்லாம் தற்காலிகமானது தான் நமக்குஅறிவுறுத்துகிறார்.

இவ்வுலகில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசமான எல்லாமெ தற்காலிகமானது தான். உங்களை எது அதிகம் துன்பத்தை கொடுக்கிறது. அதுவும் தற்காலிகமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை அதிகம் சார்ந்து இருக்கிறீர்கள்? அதுவும் தற்காலிகமானது தான். எதனை பார்த்து ஆச்சரியபடுகிறீர்கள்? யாரிடம் நம்பிக்கை கொள்கிறீர்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? அதிக நேரம் உழைத்து எந்த குறிக்கோளை அடைய முற்படுகிறீர்கள், மேலும், உங்கள் உழைப்புக்காக , அதன் பரிசாக எங்கே சுற்றுலா கிளம்பிவிட்டீர்கள்? இது எல்லாமெ தற்காலிகமானது தான். அல்லது இதனையெல்லாம், இறையரசிற்காக உபயோகித்தால், அது உபயோகமானதாக இருக்கும்.

கடவுளுடைய அரசிற்காகவும் அவரைபற்றியும், நாம் எப்பொழுதும் நோக்கி அதற்காகவே நாம் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும், அவை தான் நமது இறுதி காலம் வரைக்கும் இருக்கும் என்பதும் நமக்கு தெரியும், ஆனால் இந்த கண்மூடிதனமான விசுவாசம் நம்பிக்கை நமக்கு என்னமோ பிடிப்பதில்லை. நாமெல்லாம் கடவுளின் சீடர்கள், கடவுள் அநீதிக்காக எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், அநியாயத்திற்கு பழிவாங்க வேண்டும் , இந்த அழிவுள்ள உலகில் பழிவாங்களை கடவுள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். போர்கள், நில அதிர்வுகள், ப்ளேக் நோய் மற்றும் பல கஷ்டங்கள். மேலும், இயேசு அவரது இரண்டாம் வருகையை விரைவில் வந்து, இவ்வுலக சாத்தானையும், ப்ரச்னைகளுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் என ஆசைபடுகிறோம்.

ஒவ்வொரு நாளும், நமது வாழ்வில், கடவுளின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், மிகச்சரியான ஆணித்தரமான ஒரு ஆதாரத்தை நமது விசுவாசத்திற்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதனை நமக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறோம்; கடவுளின் நமக்கான திட்டம் என்ன என்பதனை நமக்கு தெரியாமல் இருப்பதால் ஒரு வித தவிப்புடனும், பயத்துடனும் இருக்க நாம் விரும்புவதில்லை. நாம் நமக்கு கண்ணுக்கு முன்னே தெரிவதில் தான் நாம் சார்ந்து இருக்கிறோம், கடவுள் நம் கண்ணில் காமிக்காததை நாம் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. அதனால் கடவுளிடம் நாம் அதற்கான குறிப்புகளை கேட்கிறோம், ஆதாரங்களையும் கேட்கிறோம். எனினும், நாம் கடவுளோடு கூட சேர்ந்து நடந்து , முதல் அடியாக ஒரு காலை தூக்கி காற்றில் நிறுத்துங்கள், அடுத்த காலை எங்கே வைப்பது என்று கடவுளிடம் கேளுங்கள்.
இதற்கு நாம் சமநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும், நாம் கடவுளை சார்ந்து எப்பொழுது இருக்க வில்லை என்றால், நாம் நிலை தடுமாறி விழுவோம். கடவுள் நமக்கு அடுத்த காலை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றால், நாம் தடுமாறி விழலாம் அல்லது கடவுளின் கைகளில் விழுந்துவிடுவோம்.
கடவுளின் கைகள் தற்காலிகமானது அல்ல! அவரது கைகள் தான் நமக்கு உண்மையான பாதுகாப்பு, அதுவும் கடவுளின் இணையில்லாத, முடிவில்லாது, எல்லா வல்ல ஆற்றல்களுடன், முழு பரிசுத்த அன்புடனும்,அந்த கைகள் நம்மை தாங்கும். இது எல்லாவற்றையும் நாம் எப்பொழுதும் பெறாத மாதிரியாக இருக்கும் ஆனால், அவரது அன்பும், பாதுகாப்பும் என்றுமே தவறுவதில்லை.

© 2010 by Terry A. Modica