Friday, April 26, 2013



ஏப்ரல் 28, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Rev 21:1-5a
John 13:31-35
 

யோவான் நற்செய்தி
புதிய கட்டளை
31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 ' ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் மரணம் அடைய போகீறீர்கள் என்று தெரிந்தால், உங்கள் அன்பானவர்களுக்கு என்ன அறிவுரை உங்களின் கடைசி நேரத்தில் வழங்குவீர்கள்? உங்களிடமிரிந்து அவர்கள் கற்று கொள்ள கூடிய முக்கியமான விசயம் என்ன?

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசுவிற்கு அவரது காலம் குறைவு என்பது தெரியும். முதலில் அவரது நண்பர்கள் அனைவரிடமும், தந்தை கடவுளுக்கு புகழ் கூறி ஆரம்பிக்கிறார். அதே  நேரத்தில்,   தந்தை கடவுளும் அவரும் ஒன்றே என்பதையும் குறிப்பிடுகிறார். அவரது நண்பர்களை பிள்ளைகளே என்றும் கூறுகிறார், தந்தை கடவுள் போல அவர்களை கூப்பிடுகிறார். தந்தை கடவுளோடு அவரும் ஒன்றானவர் என்பதை இதன் மூலம் விளக்கமாக நமக்கு தெரிவிக்கிறார். இதனை மிகவும் தாழ்மையுடன் தெரிவிக்கிறார்.  தந்தை கடவுளுக்கும் , மீட்பர் மகனுக்கும் இடையே உள்ள கோடு நமக்கு புரிவதில்லை. இதையே அவர் வேறு மாதிரியாக சொல்லியிருக்கலாம் , “ நான் தெய்வம், நான் தான் கடவுள், என்னை ஆராதியுங்கள் “ என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் கடவுளின் புகழை மேன்மைபடுத்துவதில் குறியாய் இருந்தார்.

கடவுளின் ப்ரசன்னம் மூலம் , அவர் புகழொளி எங்கும் வீசுகிறது. அதில், அவரின் அன்பு, புனிதம், அமைதி, ஞாணம், அவரின் படைப்பு மேலும் அவரின் எல்லாமும், அங்கே  நிறைந்திருக்கிறது, அந்த புகழொளியில் நாம் முழுதும் குளித்து அவரின் ஆசிர் பெறலாம். அவரை நாம் மகிமைபடுத்தும்பொழுது, நாமும் புகழொளியை கடவுளுக்கு திருப்பி அனுப்ப்புகிறோம். அவரின் புகழொளி உங்களில் எந்த அளவிற்கு ஒளிர்கிறது.?


தந்தை கடவுளுக்கும், மகன் சுதனுக்கும் புகழொளி ஒருவருக்கொருவர் மகிமைபடுத்திய பின்பு, யேசு அவரின் சீடர்களுக்கு, அவரின் உல்க, தெய்வீக ஞாணத்தை அளித்தார். இயேசுவின் புகழொளியில், நாம் சேர்வதற்கு, நாம் இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்ய வேண்டும்.

சுய நலமின்றி மற்றவர்களுக்கு நாம் செலுத்தும் அன்பே, உண்மையாகும். யேசு சுய நலமின்றி அவரை முழமையாக , அவரது இறப்பை நமக்கு கொடுத்தார். குருக்களும், சீடர்களும், இயேசுவை பின் செல்பவர்களும், திருச்சபையின் தலைவர்களும், உண்மையான அன்புடன் அவர்கள் இறைசேவை செய்ய வில்லை என்றால், அவர்கள், உண்மையான குருக்களோ, திருச்சபையின் தலைவர்களோ, சீடர்களாகவோ இருக்கமுடியாது.

தியாகத்துடனும், முழுதுமாக கொடுக்கப்பட்ட அன்பு தான் கடவுளின் அன்பாகும், அது தான் கடவுளின் புகழ் ஓளியாகும். ஈஸ்டர் காலத்தில், இன்றைய நற்செய்தி, ஏன் பாடுகளை பற்றி வாசிக்கிறார்கள்?  மற்ற வாசகங்களோ ஈஸ்டர் காலத்தை பற்றியது. “ இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (Rev 21:5a)  இருந்தாலும்,  இயேசு, துரோகத்தையும், துன்பத்தையும், மரணத்தையும் தாங்கி கொள்ள தயார் படுத்தி கொண்டிருந்தார். ஏன்? கடவுள் புகழை நாம் இயேசுவை தொடர்ந்து அவரின் திருப்பணிகள் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.  அதற்கு இயேசு அவரது ஞாணத்தை சீடர்களுக்கு கொடுக்கிறார். தியாகத்தோடு, நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இயேசு உண்மையானவர்  என்று உலகிற்கு அறிவிப்போம். அவர் உயிர்த்தெழுந்துவிட்டார், நம்மில் வாழ்கிறார்.

© 2013 by Terry A. Modica

Saturday, April 20, 2013

ஏப்ரல் 21, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 21, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின்  4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Rev 7:9, 14b-17
John 10:27-30

யோவான் நற்செய்தி
அதிகாரம் 10:27-30
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.http://www.arulvakku.com/images/footnote.jpg30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி மிகவும் சுருக்கமாகவும், இயேசுவின் நோக்கத்தையும் தெரிவிக்கிறது. நமது நல்லாயனை மட்டுமே நாம் பின்பற்றி செல்ல வேண்டும். அவர் ஒருவரை மட்டும் தான் நாம் கண்ணை மூடிகொண்டு நாம் நம்பலாம்.

மற்றவர்கள் நம் மேல் அக்கறை கொண்டவர்கள், நாம் அவர்களுக்கு செவி சாய்க்கலாம். ஆனால் கண்ணை மூடி கொண்டு அவர்களை பின்பற்றுவதில்லை. அவர்களுள் உள்ள நல்ல உயர்ந்த குணத்தை கூட நாம் வளர்த்து கொள்வதில்லை. ஆயர்க்ளையும், பங்கு குருக்களையும், நம் கம்பெனி முதலாளீகளையும், ஆசிரியர்களையும், பெற்றோரையும் நாம் மரியாதை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் பாவம் செய்கிறவர்கள். அவர்களது பொறுப்புகளை, முழுதாக புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் பரிசுத்த ஆவியின் துனையை பெற்று, அவரிடம் வேண்டி, அவரின் அறிவுரையோடு நாம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ளாமல், நாம் வேறாக நடக்கும் பொழுது, கடவுள் வருத்தம் அடைவார்.

இயேசுவை மட்டும் தான் கண்ணை மூடிகொண்டு நாம் நம்பலாம். அவர்தான் முழுமையான பரிசுத்தமானவர், எல்லாம் அறிந்தவர், மேலும் பாவம் செய்யாதவர். அவரால் தான் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்க தெரியும், மேலும், சாத்தானின் தூண்டுதலுக்கு நாம் இரையாகாமல் பார்த்து கொள்வார். நமக்கு எது உகந்ததோ, எது சரியோ உங்கள் வாழ்விற்கு எது தேவையோ, மற்றும், எல்லோருக்கும் சரியான வழியை, முடிவை கொடுப்பவராக இருக்கிறார். மேலும், இயேசு மட்டும் தான் நம்மை மோட்சத்திற்கு நம்மை செல்லும் பாதையில், ஏற்படும் ஆபத்துகளை தாண்டி அழைத்து செல்ல முடியும்.

இயேசுவின் திட்டத்தை தாண்டி, நாம் தவறாக செல்லும்பொழுது, நம்மை பார்த்து புன்னகைத்து, நமது அன்பினை ஏற்று, நாம் இன்னும் சரியான பாதைக்கு வருவோம் என்ற எண்ணத்தோடும் இருப்பவர் இயேசு ஒருவர் மட்டுமே. அதனால் தான் நம்மை பார்த்து அவர் புன்னகைக்கிறார். புதிய திட்டத்தை நம்மில் கொண்டு வர அவருக்கு தெரியும். இரக்கத்துடன், நம் கையை புடித்து கொள்வார், அதன் மூலம் தந்தை கடவுளை விட்டு நாம் விலகாமல் பார்த்து கொள்வார். நாம் யாரையாவது  நம்பாமல் இருக்கும்போது, நம்மையே நம்பாமல் இருக்கும்போது கூட, என்ன நடந்தாலும், நாம் அவரை கண்டிப்பாக நம்பலாம். எப்படி விலகி சென்றாலும், நம்மை மீண்டும் அவர் அழைத்து செல்வார். நமது தவறுகளிலிருந்து நம்மை மீட்டு, நல்லதாக மாற்றி, நம்மை மீட்பவர் அவரே. ஏனெனில், நாம் அவரை அன்பு செய்கிறோம், நல்லதே செய்ய ஆசைபடுகிறோம். நமது பாதுகாப்பை எப்பொழுதும் காப்பவர். நம்மை மீட்பவர். கெட்டதிலிருந்து  நல்லதை கொடுப்பவர். நமது பாவத்திலிருந்து நம்மை நல்வழிக்கு கொண்டு வருபவர். எப்பொழுதுமே நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர். நம்மை சரியான வழியில் கொண்டு செல்பவர்.

© 2013 by Terry A. Modica

Friday, April 12, 2013

ஏப்ரல் 14, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 14, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 3ம் ஞாயிறு
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19


யோவான் நற்செய்தி
அதிகாரம் 21:1-19
8. பிற்சேர்க்கை
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்
1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4 ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள்.6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார்.11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

இயேசுவும் பேதுருவும்
15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! 'என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார். 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார்.17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? ″ என்றார். இயேசு அவரிடம், ″ என் ஆடுகளைப் பேணிவளர். ″ 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் 'என்றார்.
(thanks to www.arulvakku.com)

எப்பொழுதுமே இந்த வார நற்செய்தியை வாசிக்கும்பொழுது, சீடர்கள் கரைக்கு வரும் முன்பே , இயேசுவிற்கு அவர் சுட்டு கொண்டிருந்த மீண்கள் எங்கிருந்து வந்தது? அவர் தனியாக வலை வைத்திருந்தாரா? ரொட்டியும் மீனையும், சந்தையிலிருந்து வாங்கி வந்திருந்தாரா? அப்படி சந்தைக்கு சென்றிருந்தால், யாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? அல்லது மீன் தண்ணியிலிருந்து துள்ளி குதித்து அந்த  அடுப்பிற்கு வந்த்தா? சாத்தான் கல்லை உணவாக மாற்றி அவரை சோதனை செய்தது போல, இயேசுவும் கல்லை ரொட்டி துண்டாக மாற்றினாரா?


ரொட்டி துண்டுகளையும், மீனையும் பல மடங்காக இயேசு பெருக்கிய அற்புதத்தை நினைவில் கொள்வோம். இங்கேயும் அதே போல் ஒரு அற்புதம். குறைந்த அளவாக இருந்தாலும், அற்புதம் அற்புதம் தான். இவ்வுலகை படைத்த கடவுள், அளவிடமுடியாத செல்வங்களையும் பொருட்களையும் , அன்பையும் வைத்திருக்கிறார். எல்லாவற்றிலும் தேவைக்கு மேல் வைத்திருக்கிறார். நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து அல்ல. அவர் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதாகும்.

கடவுளுக்கு  நம்மிடமிருந்து என்ன விரும்புகிறார் என்றால், கடவுள் நமக்கு கொடுத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள  நீங்கள் விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது தான். ரொட்டியும், மீணும் பல மடங்காக பெருக்கிய அற்புத நிகழ்வில், இயேசு சீடர்களிடம் அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுக்க சொல்கிறார். இன்றைய நிகழ்வில், சீடர்கள் பிடித்த மீன்களை  கொஞ்சம் எடுத்து வர சொல்லி, இயேசுவோடு அவருடைய உணவோடு சேர்த்து கொள்ள செய்கிறார்.

அதன் பிறகு, இராயப்பரிடம், இயேசு மேல் அவர் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாரோ, அதே அன்பை , இயேசுவின் ஆட்டு மந்தையிடமும், பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்ளபடுகிறார். அந்த அன்பு எங்கிருந்து வந்தது? இராயப்பர் ஒன்றும் அவருடைய சொந்த முயற்சியால் மற்றவர்களை அன்பு செய்யவில்லை. நாமும் அப்படி தான். இராய்ப்பார் கடவுளின் அன்புடன், அவருள் கடவுளின் அன்பு இனைத்து படைக்கபட்டிருக்கிறார். நாமும் அப்படிதான்  கடவுளீன் அன்போடு படைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளைபோலவே நாமும் படைக்கப்பட்டிருக்கிறோம், கடவுள் என்றால் அன்பு.

கடவுளின் அளவில்லாத அன்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என இராயப்பரிடம் கேட்டுகொள்ளப்பட்டது. அதன் மூலம், இறையரசு, இவ்வுலகில் தொடர்ந்து இங்கே பரவ முடியும் என்பதற்காக தான். கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் பதில் இருக்க வேண்டும் என்பதில்லை. கடவுளிடம் உள்ளதை எவ்வளவு விருப்பத்துடன்,  நீங்கள் பகிர்ந்து கொள்ள தயாராய் இருக்கிறீர்கள் என்பது தான்.

© 2013 by Terry A. Modica

Friday, April 5, 2013

ஏப்ரல் 7 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 7 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 2ம் ஞாயிறு
Acts 5:12-16
Ps 118:1-4, 13-15, 22-24
Rev 1:9-13, 17-19
John 20:19-31

யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.28தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார்.

முடிவுரை: நூலின் நோக்கம்
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, பரிசுத்த ஆவியின் வரவிற்கு அடித்தளமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியை அன்பளிப்பாக சீடர்களுக்கு கொடுக்கும் முன்பு, அமைதியையும், அவரது இதயத்தையும் சீடர்களுக்கு வழங்குகிறார். இயற்கையை தாண்டிய இந்த அனபளிப்பு, நமது இதயத்தை ஊடுருவி செல்கிறது. கிறிஸ்து,, நாம் ப்ரச்சினைகளிலும, கஷ்டங்களிலும் இருக்கும்போது, நம்மை அவரது வருகையினால் அமைதிபடுத்தும் அன்பளிப்பு ஆகும்.

இந்த வரத்தை, அவரின் முதல் 12 சீடர்களுக்கும், இயேசு இரண்டு முறை அதே சந்திப்பில், அவர்களுக்கு வழங்குகிறார். பிறகு, ஆண்டவரின் ஆவியை, (வாழ்வின் ஊற்றான), வழங்கி, குருவாக யாருக்கு மன்னிப்பு வழங்குகிறீர்களோ அவர்கள் மன்னிக்கபடுவர் என்றும், அவர்களுக்கு அமைதியையும் அன்பளிப்பாக வழங்குகிறார்.

இயேசுவால் வழங்கப்பட்ட, இந்த அமைதியின் அன்பளிப்பு, குருக்களின் மூலமாக, புனிதமான பாவசங்கீர்த்தனத்தின் மூலமாக, நாம் பெறுகிறோம். இதன் மூலம், நாம் பரிசுத்த வாழ்வில் நிலைத்திருக்கு முடிகிறது. இயேசு இன்றும் கடவுளின் ஆவியை நமக்கு கொடுத்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் கடவுளின் ப்ரசன்னமும் இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கிறது. அந்த ஆவி தான் இவ்வுலகை உருவாக்கியது, மேலும், நம்மை பரிசுத்த வாழ்வில் நிலைத்திருக்க செய்கிறது. பரிசுத்த ஆவியின் மூலம் தான், கடவுளின் பரிசுத்தம் நம்மை செயல்படவும், நம்மில்  பிரகாசிக்கவும் செய்கிறது.

இரக்கத்தின் தெய்வமான இயேசு நமக்காக சிலுவையில் மரணமடைந்து, அவரது ஆவியை நமக்கு கொடுத்துள்ளர். அதன் மூலம், நம்மில் பரிசுத்தம் இல்லாததையும், ஆவியோடு இல்லாததையும், நமது பாவத்தையும் விட்டொழித்து, கடவுளின் மன்னிப்பின் மூலமாக நாம் பரிசுத்த வாழ்வில் வாழ் முடியும்.

“பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” என்ற ஜெபத்தை சொல்லும் பொழுதெல்லாம், மிகவும் மெதுவாக, அர்த்தத்தோடு ஜெபியுங்கள். ஒவ்வொரு வாத்தையின் அர்த்தத்தையும் தியானித்து சொல்லுங்கள். “எங்களுக்கு எதிராக பாவம் செய்பவர்களை மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும்  மன்னியும்” என்று சொல்கிறோம் அல்லவா. உங்களை துன்புறுத்திய நபரை, இன்னும் அதே நோக்கத்தில் இருப்பவர்களை  நினைத்து, மனப்பூர்வமாக அவர்களை இந்த ஜெப நேரத்தில் மன்னியுங்கள்.

மாறாக,  நீங்கள் அவர்களை மன்னிக்காவிட்டால், அவர்களின் ஆண்மாவும் , உங்கள் ஆண்மாவும் பாதிக்கபடும். ஏனெனில், அவர்களுக்கு கடவுளின் மன்னிப்பை பெறும் வாய்ப்பை தடுத்து விடுகிறீர்கள் நீங்கள் மற்றவர்களை மன்னிக்காததால், கடவுள் உங்கள் பாவங்களை மன்னிக்கும் வாய்ப்பை தடுத்து விடுகீறீர்கள். அதனால் உங்கள் பாவங்களும் மன்னிக்கபடவில்லை.

மன்னிப்பது என்பது, அவர்களின் பாவங்களை ஏற்று கொள்வதில்லை. ஆனால், அவர்களின் பாவத்திற்கு தண்டனை கொடுக்காமலிருப்பது தான் நம் முதல் வேலையாகும்.  அவர்களுக்கு தகுதியிருந்தாலும், இல்லையென்றாலும், அவர்களை கிறிஸ்துவின் அமைதியின் அன்பளிப்பாக அன்பு செய்தல் வேண்டும்.

© 2013 by Terry A. Modica

Friday, March 29, 2013

மார்ச் 31 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மார்ச் 31 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு, ஆண்டவரின் உயிர்த்தெழுதல்
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Colossians 3:1-4 or 1 Corinthians 5:6b-8
John 20:1-9 or Mark 16:1-7 or Luke 24:13-35

இயேசு உயிர்த் தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.10 பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)


அல்லேலூயா! இந்த புனித வாரத்தில் நாம் மேற்கொண்ட தியானத்தினாலும், தவக்காலத்தில் யேசுவோடு நெருங்கியிருப்பதாலும், நம்மில் ஏற்பட்டுள்ள அதிக விசுவாசத்திற்காகவும், குணமடைதலுக்காகவும் இன்று கொண்டாடுங்கள்.

மோட்சத்திற்கு செல்லும் வழி, கதவு எல்லாமே சிலுவைதான். ஈஸ்டரின் மகிமையை நாம் நமது உள்ளத்திலும், நமது தேவைகளிலும், ஆசைகளிலும் அனுபவிக்கும் முன்பு- நமது துயரங்களை, தியாகத்தை ஏற்றுகொண்டு, நம் வாழ்வோடு இயேசுவை இனைக்கும் கருவியாக்க வேண்டும்.

தற்போது, ஈஸ்டர் சந்தோசம் யேசு சிலுவையில் என்ன செய்தாரோ அதற்காக கொண்டாடுவது மட்டும் அல்லாமல், அவரோடு தொடர்ந்து, அவரது பயனத்தில், ஒவ்வொரு அடியாக அவரோடு எடுத்து வைத்து நடந்தோமானால், இந்த ஈஸ்டர் சந்தோசம் நம்மில்  தொடர்ந்து இருக்கும். உண்மையாகவே விசுவாசத்தில் வளர வேண்டுமானால், யேசு என்ன செய்தாரோ, அதனை நாமும் செய்ய வேண்டும். அவரது இறைசேவையில் இனைந்து, மற்றவர்களுக்கு உதவவும், அவர்கள் கடவுளோடு நட்பு கொள்ளவும், நாம் தொடர்ந்து இறைசேவையாற்ற வேண்டும். இச் சேவையில் நாம் சிலுவையை தொடர்ந்து எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தியாகமும், கஷ்டமும் இல்லாமல், நாம் மீட்பை அடைய முடியாது.


சிலுவையின் வெற்றி தான், ஈஸ்டர் அன்று நாம் கூறும் அல்லேலூயா ஆகும். இதன் மூலம், நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், வாழ்க்கை முழுதும் ப்ரச்சினையே இல்லாமல் இருந்தால் தான், நாம் சந்தோசமாக இருக்க முடியும் என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், கடவுள் நம்மை சோதனைகளிலிருந்தும், ப்ரச்சினைகளிலிருந்தும், நம்மை காத்து, தீயவற்றிலிருந்து நம்மை காத்து நல்லவற்றை கொடுக்கிறார் என்ற விசுவாசத்தில் வளரவேண்டும்.


சிலர் நம்மிடம் கோபமான வார்த்தைகளால் பேசும்பொழுது, அமைதியான முறையில் நாம் பதில் கூறுவது நம்முடைய சிலுவையாகும். நாம் அந்த கோபத்திலுருந்து வெளியே செல்லலாம் என்று நினைத்தாலும், அவர்களிடம் நாம் அரவனைப்பது போன்று (நமக்கு அசௌகரியமாக இருந்தாலும்) நாம் நடந்து கொள்வது, நமது சிலுவையாகும். நமக்கு அநியாயம் செய்கிறவர்களிடம், நாம் பழிவாங்க நினைத்தாலும்,  நாம் அவர்களுக்கு நல்லது செய்கிற பொழுது அது நம் சிலுவையாக மாறுகிறது. கடவுளரசிற்காக நாம் சிலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக நாம் மீட்பின் சந்தோசத்தை அனுபவிக்கிறோம்.

கடினமான நேரத்தில் கொடுக்கபடும் அன்பு, ஆழ்ந்த அன்பாகும், தியாகத்தின் அன்பாகும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மற்றவர்களின் நித்திய வாழ்விற்கு பயன்படுவதாகும். அதனால், நமது தியாகங்கள், அளவிடமுடியாத பலன்களை கொண்டதாக இருக்கும். சாத்தானை வெற்றி கொண்டு, இயேசுவோடு, நாமும் மேலெழுந்து அவரது மகிமையில் நிலைத்திருப்பது ஈஸ்டர் ஞாயிறின் கொண்டாட்டமாகும்.
© 2013 by Terry A. Modica

Friday, March 22, 2013

மார்ச் 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மார்ச் 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
குருத்து ஞாயிறு
Procession with Palms: Luke 19:28-40
Is 50:4-7
Ps (2a) 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11 
Luke 22:14 – 23:56

லூக்கா நற்செய்தி
ஆண்டவரின் திருவிருந்து
(மத் 26:26 - 30; மாற் 14:22 - 26; 1கொரி 11:23 - 25)
14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.15 அப்போது அவர் அவர்களை நோக்கி, ' நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.16 ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.17 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், ' இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.18 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்றார்.20 அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, ' இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.21 என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.22 மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு ' என்றார்.23 அப்பொழுது அவர்கள், ' நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார் ' என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.

யார் பெரியவர்?
24 மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.25 இயேசு அவர்களிடம், ' பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.26ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.27யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.28 நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.29 என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.30 ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்
(மத் 26:31 - 35; மாற் 14:27 - 31; யோவா 13:36 - 38)
31 ' சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.32 ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து ' என்றார்.33 அதற்கு பேதுரு, ' ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன் ' என்றார்.34 இயேசு அவரிடம், ' பேதுருவே, இன்றிரவு, ″ என்னைத் தெரியாது ″ என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.

பணப்பையும் வாளும்
35 இயேசு சீடர்களிடம், ' நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா? ' என்று கேட்டார். அவர்கள், ' ஒரு குறையும் இருந்ததில்லை ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.37 ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ' கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார் ' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன ' என்றார்.38 அவர்கள் ' ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன ' என்றார்கள். இயேசு அவர்களிடம், ' போதும் ' என்றார்.

ஒலிவ மலையில் இயேசு
(மத் 26:36 - 46; மாற் 14:32 - 42)
39 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.40 அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், ' சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், ' என்றார்.41 பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்;42 ' தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ' என்று கூறினார்.43 (அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.)http://www.arulvakku.com/images/footnote.jpg45 அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.46அவர்களிடம், ' என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார்.

இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்
(மத் 26:47 - 56; மாற் 14:43 - 50; யோவா 18:3 - 11)
47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.48 இயேசு அவனிடம், ' யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? ' என்றார்.49 அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, ' ஆண்டவரே, வாளால் வெட்டலாமா? ' என்று கேட்டார்கள்.50அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.51 இயேசு அவர்களைப் பார்த்து, ' விடுங்கள், போதும் ' என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.52 அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, ' ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்?53 நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது ' என்றார்.

பேதுரு மறுதலித்தல்
(மத் 26:57 - 58, 69 - 75; மாற் 14:53 - 54, 66 -72; யோவா 18:15 - 18, 25 - 27)
54 பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.55 வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.56 அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, ' இவனும் அவனோடு இருந்தவன் ' என்றார்.57 அவரோ, ' அம்மா, அவரை எனக்குத் தெரியாது ' என்று மறுதலித்தார்.58 சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், ' நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ' என்றார். பேதுரு, ' இல்லையப்பா ' என்றார்.59 ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், ' உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான் ' என்று வலியுறுத்திக் கூறினார்.60 பேதுருவோ, ' நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது ' என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.61 ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; ' இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,62 வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இயேசுவை ஏளனம் செய்தல்
(மத் 26:67 - 68; மாற் 14:65)
63 இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.64 அவரது முகத்தை மூடி, ' உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல் ' என்று கேட்டார்கள்.65 இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.

தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு
(மத் 26:59 - 66; மாற் 14:55 - 64; யோவா 18:19 - 24)
66 பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.67 அவர்கள், ' நீ மெசியா தானா? எங்களிடம் சொல் ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;68 நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.69 இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார் ' என்றார்.70 அதற்கு அவர்கள் அனைவரும், ' அப்படியானால் நீ இறைமகனா? ' என்று கேட்டனர். அவரோ, ' நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள் 'என்று அவர்களுக்குச் சொன்னார்.71 அதற்கு அவர்கள், ' இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே ' என்றார்கள்.
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்
(மத் 27:1 - 2, 11 - 14; மாற் 15:1 - 5; யோவா 18:28 - 38)
1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.3 பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க, அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார்.4பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ' இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை ' என்று கூறினான்.5ஆனால் அவர்கள், ' இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான் ' என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

ஏரோது முன்னிலையில் இயேசு
6 இதைக் கேட்ட பிலாத்து, ' இவன் கலிலேயனா? ' என்று கேட்டான்;7 அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.8 இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.9 அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.10 அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.11 ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.12அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.

இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்
(மத் 27:15 - 26; மாற் 15:6 - 15; யோவா 18:39 - 19:16)
13 பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.14 அவர்களை நோக்கி, ' மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.15 ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.16 எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் ' என்றான்.17(விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.)http://www.arulvakku.com/images/footnote.jpg18 திரண்டிருந்த மக்கள் அனைவரும், ' இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும் ' என்று கத்தினர்.19 பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.21 ஆனால் அவர்கள், ' அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள்.22 மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, ' இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் ' என்றான்.23 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.24 அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.25கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல்
(மத் 27:32 - 44; மாற் 15:21 - 32; யோவா 19:17 - 27)
26 அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.27 பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.28 இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, ' எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.29 ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது ' மலடிகள் பேறுபெற்றோர் ' என்றும் ' பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் ' என்றும் சொல்வார்கள்.30 அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ' எங்கள் மேல் விழுங்கள் ' எனவும் குன்றுகளைப் பார்த்து, ' எங்களை மூடிக்கொள்ளுங்கள் ' எனவும் சொல்வார்கள்.31 பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்! ' என்றார்.32 வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.33மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.34 அப்போது (இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' என்று சொன்னார். ) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.http://www.arulvakku.com/images/footnote.jpg35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள்.36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர்.38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான்.40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான்.42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான்.43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார்.44ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.45 கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.46 ' தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.47 இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், ' இவர் உண்மையாகவே நேர்மையாளர் ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.48 இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.49 அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம்
(மத் 27:57 - 61; மாற் 15:42 - 47; யோவா 19:38 - 42)
50 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.51 தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.52 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.53 அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.54 அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம்.http://www.arulvakku.com/images/footnote.jpg55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,56 திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)

குருத்து ஞாயிறு புனித வாரத்தின் முதல் நாளாக ஆரம்பிக்கிறது இயேசுவோடு இனைந்து உங்கள் பரிசுத்த வாழ்வை ஆரம்பிக்கிறது இந்த நாள் இருக்குமா? இயேசுவின் அவரின் அளப்பறிய அன்போடு இணைய தயாராகிவிட்டீர்களா?

இன்றைய திருப்பலியின் வாசகத்தில், இந்த வாசகத்தை “தலைவருக்கு தேவையாய் இருக்கிறது” என்று கேட்கிறோம். குருத்து பவனியிலும் கேட்கிறோம். இது தான் நாம் கடவுளோடு இனைவதை அதன் அனுபவத்தை குறிக்கிறது.

ஏன் நற்செய்தியை எழுதியவர், இயேச் கழுதையை கொண்டு வர நடந்த கதைகளை எழுத வேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இது நம்முடைய இக்கால வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நமக்கு விளக்கி கூறுவதாக உள்ளது. நமது வாழ்விலும் கழுதை போல ஒன்றை கட்டி கொண்டு தான் செல்கிறோம். இது நம் சொந்த பொருளாக இருக்கலாம் ஆனால், கிறிஸ்துவோடு பகிர்ந்து கொள்ளாத பொருளாக இருக்கலாம். நமது சொத்து, பணம், திறமை, நேரம், நமது ஆற்றல் , இன்னும் பலவற்றையும் குறிக்கிறது. தலைவருக்கு/குருவுக்கு தேவையாக இருக்கிறது!. ஆனால் சில நேரங்களில், சுய நலத்தோடு, நமது சொந்த விசயங்களுக்காக நாம் உபயோகித்துவிடுகிறோம். அதனை யேசுவிடம் கொடுத்தால், அவருக்கு உதவியாக இருந்திருக்கும். கழுதை மேல் ஏறி யேசு போனது போல, நாம் கொடுப்பதையும் இயேசு உபயோகிப்பர். அந்த அன்பளிப்பு, நம் மீட்பரை போற்றுவதாக இருக்கும்.

இயேசுவின் அன்பிற்காக, நாம் அவரை மகிமை படுத்த வேண்டும் என குருத்து ஞாயிறு நமக்கு அறிவுறுத்துகிறது. அந்த அன்பை அவர் சிலுவையில் நமக்கு காட்டினார். வேறு யார் உங்களுக்காக இறப்பர்? அதுவும் அவ்வளவு வேதனையோடு? இயேசு அவரின் சவுகரியங்களை, உடலை இரத்தத்தை நம் தண்டனைக்கிற்காக ஏற்று கொண்டு தியாகம் செய்தார்.

சந்தோசமாக நாம் இயேசுவை கொண்டாடவேண்டும். ஒவ்வொரு ஞாயிறும், ஓசானா சொல்லி, திவ்ய நற்கருணை மேல் ஆர்வம் கொண்டு, இயேசுவின் அன்போடு நாம் இணையவேண்டும். காதலர்கள் அவரின் துணையோடு ஒன்றினைந்து மகிழ்வது போல, நாம் இயேசுவோடு இனையும்பொழுது செய்வதில்லை. ஏனெனில் நாம் இன்னும் பலதை (கழுதையை) நம்மோடு கட்டி கொண்டிருக்கிறோம்.

உங்கள் சொத்துகளை, திறமைகளை, பணத்தை இயேசுவோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என இயேசு அவரின் சீடர்களை உங்களிடம் அனுப்பி உள்ளார். அவரின் சீடர்கள், திவ்ய நற்கருணையை பீடத்தில் புனிதப்படுத்துகிறார்கள். “உதவி தேவை” என்று அறிவிப்பு செய்கிறார்கள் உங்கள் ஜெபத்தை, ஆலோசனையையும், உதவியையும், உங்கள் வேலைக்கிடையே செய்ய சொல்லி கேட்கிறார்கள். சில புதியவர்கள் நன்கொடைகள் உங்களிடம் கேட்கிறார்கள். கடவுளின் இறையரசில் இன்னும் அதிகம் ஈடுபடவேண்டும் என்று உங்களில் யாரையாவது எவரும் கேட்டதுண்டா?

© 2013 by Terry A. Modica

Friday, March 15, 2013

மார்ச் 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
Isaiah 43:16-21
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11
யோவான் நற்செய்தி
அதிகாரம் 8 (1-11)
1 (இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,4 ' போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர்.6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ' உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்று அவர்களிடம் கூறினார்.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.10 இயேசு நிமிர்ந்து பார்த்து, ' அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? ' என்று கேட்டார்.11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம், 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, மிகவும் தாழ்ந்த நிலையில் சமூகத்தில் உள்ளவர்களை எப்படி கையாளவேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது. வாழ்வதற்கே தகுதியில்லாதவர் என சமூகத்தால் ஒதுக்கிவிடப்படுபவர் ஒருவர் இன்று கிறிஸ்துவின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுள்ளார். ஆனுக்கு கீழாக மதிக்கப்படும் பெண்களில், இப்பெண் இயேசுவின் இரக்கத்தை பெற்ற முதல் பெண்ணாகிறாள். அவள் ஒரு பாவி, அதனால் அவருக்கு தண்டனை கொடுக்கபடவேண்டும். அவளை கண்டித்த அனைவரையும் ஒரே ஆளாக எதிர் கொண்டு இருந்தாள். இதனை விட ஒருவர் எவ்வளவு தாழ்ந்து விட முடியும்.?

முக்கியமானவராக இல்லாமல், அல்லது தனித்து விடப்பட்டவராக எப்பொழுது எல்லாம் நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்? உங்களை சமூகமே கண்டித்த தருணங்கள் இருந்திருக்கலாம். மேலும், நீங்கள் யாரையாவது, அவர்கள் முக்கியமற்றவர்களாக நினைத்து ஒதுக்கியிருக்கிறீர்களா? இதுவும் சரியே, நம்மில் யாரும் முதல் கல்லை எறிய முடியாது.

இன்றைய திருச்சபையில், நிறைய பேர் ஒதுக்கி வைக்கபட்டும், மறக்கடிக்கபட்டும் இருக்கிறார்கள். நமக்கு அவர்களில் சிலரை தெரியும். அவர்களின் தனிமை நமக்கு தெரியாமல் போகிறது. நாம் நம் கடைமைகளில் மூழ்கியிருக்கும்போது, அதனிடையே, நாம் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நமக்கு அது ஒரு உற்சாகமான உணர்வை கொடுக்கிறது.  நாம் அவர்களோடு செலவிடும் நேரம், அவர்களின் தேவையைவிட பெரிதாக மதிக்கபடுகிறது. மேலும், நமது பங்கிற்கு இன்னும் ஒரு ஆள் கூடுகிறது, நம் சுகத்தை தியாகம் செய்வதால், திருச்சபை இன்னும் பலம் பெறுகிறது.

விவாகரத்தான கத்தோலிக்கர்களை எல்லோரும் கண்டிக்கிறார்கள் என்று அவர்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். திவ்ய நற்கருணையை கூட அவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். ஏனெனில், திருச்சபையின் சட்டத்தை அவர்களுக்கு தவறுதலாக புரியவைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் யாரும் அவர்களை அனுகி அவர்களை திருச்சபைக்கு கொண்டு வர முயல்வதில்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்க்களை திருச்சபையில் நிறுத்தினாலும், பெரியவர்களுக்கு எதிரான அநீதியை யாரும் சட்டை செய்யவில்லை. ஏனெனில், அதனை யாரும் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.

சில நேரங்களில் சமயம் சாராத நிறுவனங்கள் சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளவர்களை அனுகி அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதே போல், அவர்களை அனுகி , அவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பது, இத்தவக்காலத்தின் முக்கிய செயலாக இருக்ககூடும்.

© 2013 by Terry A. Modica