Saturday, December 17, 2016

டிசம்பர் 18, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 டிசம்பர்  18, 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு
Isaiah 7:10-14
Ps 24:1-6 (with 7c & 10b)
Romans 1:1-7
Matthew 1:18-24
மத்தேயு நற்செய்தி
  
இயேசுவின் பிறப்பு
(லூக் 2:1 - 7)
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்என்றார்.
22-23இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார்என்பது பொருள்.

24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
(Thanks to www.arulvakku.com)

நம்மோடு இருக்கும் கடவுளிடம்  வரும் அன்பு
இந்த நான்காவது திருவருகை கால் ஞாயிறின் முக்கிய கரு பொருளாக அன்பை வைத்திருக்கின்றோம். முதல் வாசகத்தில் அன்பின் முழு பொருளை நாம் காண்கிறோம், மேலும், நற்செய்தி வாசகத்தில் இம்மானுவேல் , "கடவுள் நம்மமோடு" என்ற பொருளோடு , கடவுளின் இறைவாக்கு நிறைவேறியதை நாம் காண்கிறோம். அன்போடு இருப்பது என்பது, "கடவுள் நம்மோடு"  என்பது ஆகும். அன்பை கொடுப்பது என்பது , நம்மில் உள்ள கடவுளை கொடுப்பது.
நீங்கள் எப்போதாவது , அன்பு செய்வதற்கு,  பகிர்வதற்கு உங்களிடம் ஒன்றும் இல்லை என்று நினைத்தது உண்டா?  ஆனால் அப்படி ஒன்றும் நடக்காது!, அனால், நம்மிடம் பொறுமை இருப்பதில்லை; நாம் அன்பை பெற்று கொள்வதில் தான் அதிகம் விரும்புகிறோம், அனால் அன்பை கொடுப்பதில் விரைவில் அயர்ச்சி அடைகிறோம். ஆனால், கடவுள் நம்மோடு , அன்புடன் எப்பொழுதும் இருக்கிறார்.
சிலரை அன்பு செய்வதில் நாம் கஷ்டபட்டிருக்கும் பொழுதோ அல்லது நம்மில் ஒரு வெற்றிடத்தை நாம் கொண்டிருக்கும் பொழுதோ , அல்லது சிலர் நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்கிற பொழுதோ , நாம் கடவுளின் தெய்வீக சக்தியை , அவரின் அன்பை கேட்டு பெற்று, நாம் நம் பகைவர்களையும் அன்பு செய்ய வரம் கேட்க வேண்டும். இந்த ஜெபத்திற்கு எப்பொழுதுமே பதில், பலன் கிடைக்கும்!. இதன் மூலம் நாம் கடவுளின் பகிர்ந்தளிக்கும் இறை பணியாளர்களாக மாறுகிறோம்.
அன்பு செய்ய முடியாதவர்களிடம் கடவுளின் அன்பை நாம் காட்டும் பொழுது, நம்மிடம் உள்ள கடவுளை நாம் அவர்களுக்கு காண்பிக்கிறோம்.
நம் வாழ்வில் பலர் கிறிஸ்துவை போல நம்மிடம் இருப்பது இல்லை. கடவுள் நம்மை எப்படி அன்பு செய்ய வேண்டும் என விரும்புகிறாரோ அப்படி அவர்கள் நம்மை அன்பு செய்வதில்லை. அதனால் , மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ , அதன் மூலம் நம் மகிழ்ச்சி சார்ந்து இருப்பதில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்!. நாம் இம்மானுவேலை அழைப்போம். கடவுள் ஏற் கனவே நம்மோடு இருக்கிறார். நம்மை எப்பொழுதும் அன்பு செய்கிறார், எவ்வித நிபந்தனையின்றி , நாம் அவரின் அன்பிற்கு தகுதி ஆனவர்களா இல்லையோ , ஆனால் என்றும் நம்மை கடவுள் அன்பு செய்கிறார்.

மற்றவர்கள் அனைவரும் இன்னும் அதிகமாக நம்மை அன்பு செய்ய வேண்டும் என  எதிர் பார்த்து காத்திருந்தால், நமக்கு யாரும் அன்பு செய்யவில்லை என்ற தோற்றம் தான் நமக்கு கிடைக்கும். ஆனால், இயேசுவின் மேல் நம் கண்களை எப்பொழுதும் வைத்திருந்தாள், அவர் நம் வெற்றிடத்தை அன்பால் நிரப்புவார்.
வருடம் முழுதும் இம்மானுவேல் என்ற பெயரை நாம் உபயோகித்து கொண்டே இருக்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு நம்மை தயார் செய்கிற பொழுது, இம்மானுவேல் மேல் நம் கண்கள் , நோக்கம் இருக்கட்டும். இம்மானுவேலை புகழ்ந்து பாடுங்கள். இம்மனுவேளிடம் ஜெபம் செய்யுங்கள். இந்த அடையாளம், ஞாபகம் படுத்துதல் , கடவுளின் பெயர், உங்கள் அனைவருக்கும் கடவுளின் அன்பளிப்பு ஆகும்.

© 2016 by Terry A. Modica

Saturday, December 10, 2016

டிசம்பர் 11, 2016 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர்  11, 2016  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு
Isaiah 35:1-6a, 10
Ps 146:6-10
James 5:7-10
Matthew 11:2-11
மத்தேயு நற்செய்தி
விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(லூக் 7:18 - 35)
2யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.

3அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.

4அதற்கு இயேசு மறுமொழியாக
நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.

5பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
6
என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்
 என்றார்.
7அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: 
நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?

8இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.

9பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
10இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்
என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.

11மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(Thanks to www.arulvakku.com)
கிறிஸ்துவால் மீட்கப்பட்ட பின்பு வரும் சந்தோசம்
மூன்றாவது திருவருகை கால ஞாயிறின் கருத்தாக்கம் - சந்தோசம் - மகிழ்ச்சி - ஆகும். முதல் வாசகத்தில் திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்;இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.'' , இது தான் நம் மகிழ்ச்சிக்கு உரிய காரணம் ஆகும். பாவத்திலிருந்தும், அழிவிலிருந்தும் விடுவிக்கப்பட்டோம். இயேசு சிலுவை முலம் அவரது தியாகத்தால் நம்மை விடுவித்தார். இதற்காக தான் இயேசு இந்த பூமியில் நம்மை போல மனிதனாக பிறந்தார், அதன் முலம் கடவுளிடமிருந்தும் , அவரின் அளவு கடந்த அன்பிலுமிருந்தும் நம்மை பிரித்த வேதனையிலிருந்து நம்மை மீட்டார்.
நித்திய வாழ்வை நாம் ஒப்பிடும்  பொழுது, இவ்வுலக வாழ்வு, மற்றும் இங்கே உள்ள பிரச்சினைகள் எல்லாம் மிகவும் சிறியது ஆகும்.
நம் பாவங்கள், அழிக்கும் சக்திகள் நமக்கு நிரந்தர பாதிப்பை கொடுக்க முடியாது, ஏனெனில், இயேசு அதற்கான தண்டனை அவரே ஏற்று கொண்டதால், நம்மால், மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. மேலும் கடவுள் ஒவ்வொரு செயலையும் நமக்கு நல்லதாக மாற்றி கொடுக்கிறார். சாத்தானை விழ்த்தி அதன் முலம் நாம் ஆசிர்வாதமடைய செய்கிறார்.
மிகவும் மோசமான காலங்கள் கூட நமக்கு ஆசிர்வாதமாக முடியும், நம் பிரச்சினைகளை இயேசுவிடம் இணைத்து கொண்டால் அது மிக பெரிய ஆசிர்வாதமாக முடியும். கிறிஸ்துவோடு , அவரை போலவே, நாமும் மற்றவர்களுக்காக துன்பத்தை ஏற்று கொள்ளும் பொழுதும் நமக்கு ஆசிர்வாதமாக இருக்கும். நாம் மேற்கொள்ளும் கடின உழைப்புகள் இறைசேவை ஆகும். நமது வருத்தங்கள் மதிப்பு வாய்ந்ததாகும், அது நமக்கு பல மடங்காக மகிழ்ச்சி யாக மாறும்.
கிறிஸ்துவுக்குள், நமக்கு என்றும் நிலைத்த சந்தோசம் கொடுக்கபட்டிருக்கிறது. கிறிஸ்துவின் சந்தோசத்தை நாம் உணர்கிறோம் , ஏனெனில் ஏராளமான நன்மைகள் அதன் மூலம் நமக்கு வர இருக்கிறது. நமது வருத்தங்கள், துக்கங்கள் கண்டிப்பாக எல்லாம் பறந்து போகும், நமக்கு கிறிஸ்துவின் நிலையான சந்தோசம் அவரது இறைபணியில் இணைந்திருக்கும் போது நமக்கு வந்து கொண்டே இருக்கும். மேலும் கடவுளின் பேரிரக்கமும், நம்பிக்கையும் நம்மை மேலே கொண்டு செல்லும்.
இரன்டாவாது வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல, கடவுள் நமது சோதனைகளை வெற்றியாக மாற்றும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். சந்தோசத்தில் என்றும் நிலைத்திருக்க , நமது விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும், கடவுள் நம் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். கடவுள் இன்னும் நம்மை காக்கவில்லை , உதவி செய்யவில்லை என குற்றம் சாட்ட வேண்டாம், கடவுளுக்கு எது சரியான நேரம் என்று தெரியும், அப்பொழுது நம் பிரச்சினைகளை அகற்றுவார்.
கடவுள் கண்டிப்பாக என் மேல் அக்கறை கொண்டுள்ளளார், அவர் எனக்காக , என் பிரச்சினைகளுக்காக , என் நிலையான வாழ்விற்காக, எப்பொழுதும் பணி செய்து கொண்டிருக்கிறார் என்ற நினைப்பே நம்மை மகிழ்ச்சியில் வைத்திருக்கும். நமது சோதனைகள் , துன்பங்கள் அனைத்தும் ஆசிர்வாதம் ஆகா மாறும். இயேசு நற்செய்தியில் சொல்வது போல "என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்"

© 2016 by Terry A. Modica