Friday, March 13, 2009

மார்ச் 15, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 15, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3வது ஞாயிறு

Exodus 20:1-17
Ps 19:8-11
1 Cor 1:22-25
John 2:13-25
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 2
13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் ' என்று கூறினார்.17 அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18 யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம், ' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ' என்றார்.20 அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.23 பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.25 மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியின் கடைசி பத்தி நமக்கு முக்கையமான செய்தியை கூறுகிறது. யேசு செய்த அடையாளங்களை/சாட்சியத்தை வைத்து அவரை நம்பிய மக்களை அவர் நம்பிக்கை வைக்க விடவில்லை. யேசு செய்த பல புனித காரியங்களினால் அவர்கள் அவரை நம்பினர். காரணம்: யேசு மனித உணர்வுகளுடன்/மனிதர்கள் அனைவரும் அவரை நம்ப வேண்டாம் என்று என்னினார்.

அடையாளங்களை வைத்து, அதனை நம்புவது, மனிதரின் குணம். நாம் பார்ப்பதை, தொட்டு பார்த்ததை, மற்றவர்மூலம் கேட்டதை நாம் நம்புவது மிகவும் சுலபம் ஆகும். ஆனால் கடவுளோ எதையுமே மிகவும் மொளனமாக, யாருக்கும் தெரியாதவர். இந்த மாதிரி அடையாளங்களை வைத்து விசுவாசம் கொள்வது, ஆச்சரியமானதோ, தெய்வீகமானதோ இல்லை. ஆனால் கடவுள் தெய்வீகமானவர்.

நாம் கடவுளிடம் பல முறை தொடர்ந்து வேண்டி அந்த வேன்டுதலுக்கு எதுவும் கடவுளிடமிருந்து கிடைக்கா விட்டால் என்ன ஆகும் ?

யேசு அங்கே முழுமையாக இருப்பதே மிகப்பெரிய அடையாளமாகும், ஆனால், அதுவும் சீக்கிரமே அகன்று விடும். சில நேரங்களில், யேசு நம் முன்னே தோன்றி நாம் கேட்பவற்றை நமக்கு கொடுக்க வேன்டும் என நினைப்பதுண்டு. இப்படி நடந்தால், நமது விசுவாசம் இன்னும் உறுதியாகும் என நாம் நினைக்கிறோம்.

பல அடையாளங்களை வைத்தே நமது விசுவாசம் இருக்கிறது. நம்து வேண்டுதல்களுக்கு பதில் கிடைக்கிறது. அன்பின் சாட்சியம் பெறுகிறோம், அமைதியும், சந்தோசமும் நமது இதையத்தை நிரப்புகிறது. ஆனால், பல சோதனைகளையும், வேதனைகளையும், நம் வாழ்க்கையில் நடைபெறும்போது நமது விசுவாசம் எப்படி இருக்கிறது? நாம் தொடர்ந்து கடவுள் மேல் நம்பிக்கை வைக்கிறோமோ? இல்லையா?

எந்த மாதிரியான விசுவாசம் நமக்கு தேவை என்றால், அது நம்பிக்கையில்ருந்து வருகிறது. உண்மையான நம்பிக்கை. கடவுள் எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளார், உண்மையாகவே நம் மீது அன்பு வைத்துள்ளார் என்பதனை கொண்டு நாம் அவர் மேல் நம்பிக்கை கொண்டுள்ளோம், பல அடையாளங்களினால் அல்ல.
இந்த விசுவாசத்தில் நாம் வெற்றி கொள்ள, நமக்கு தெய்வேக விசுவாசம் தேவை. நாம் கிறிஸ்துவின் தெய்வீகத்தோடு இனைந்தால், நாம் அவரின் விசுவாசத்தில் சேர்கிறோம். பிறகு நாம் எந்த் அடையாளங்களும் இல்லாமல், அவரை முழுதும் நம்புவோம்.

இதனை அடுத்த முறை திருப்பலியில், திவிய நன்மை பெறும்போது நினைவுகொள்ள வேன்டும். அவர் உடலை மட்டும் நீங்கள் வாங்கவில்லை, அவரோடு அவர் தெய்வீகத்தில் இனைகீறீர்கள். மேலும் யேசு உங்களோடு அவரை இனைத்து கொள்கிறார்!. இதனை நீங்கள் உண்மையாக நம்பினால், கண்டிப்பாக அற்புதம் நிகழும். ஆனால் அது ஒன்றும் யேசுவின் மிகப்பெரிய அன்பளிப்பு அல்ல. யேசு உங்களோடு பகிர்ந்து கொண்டவைகளில் அது ஒன்றும் பெரிய அன்பளிப்பு அல்ல. எது பெரிய அன்பளிப்பு என்றால், அவரையே முழுமையா உஙக்ளுக்கு தர விரும்புகிறார்.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: