Friday, June 5, 2009

ஜூன் 7, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 7, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த தமத்திருத்துவ பெருவிழா
Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 28
16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.18 இயேசு அவர்களை அணுகி, ' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.




நீங்கள் அனைவரும் கடவுளுக்கு மிகவும் வேண்டியவர்கள், மிக மிக விசேஷமானவர்கள். நீங்கள் அவருக்கு சொந்தமானவர்கள். அவர்கள் மூவருக்கும் சொந்தமானவர்கள்.: தந்தை, மகன் மற்றும் ஆவியானவர்.


பரிசுத்த தமத்திருத்துவத்தின் பெயரால், திருமுழுக்கு கொடுக்கபடுவதற்கு ஓர் காரணம் இருக்கிறது. இன்றைய நற்செய்தியில், யேசு குறிப்பிடப்படுவது போல, சில ப்ராட்டஸ்டன் குழு யேசுவின் பெயரால் மட்டுமே கொடுப்பது போல இல்லாமல், நாம் மூன்று பேராலும் கொடுக்கிறோம். ஏனெனில், தமத்திருத்துவ கடவுளும் ஒன்றானவர்கள், அவர்கள் அனைவரும் உங்களோடு சிறந்த உறவை கொண்டாட விரும்புகிறவர்கள். உண்மையான நட்பை உங்களோடு வைத்து கொள்ள விரும்புகிறார்கள்.

பரிசுத்த திருத்துவ கடவுளிடம், ஒவ்வொருவரிடமும், நீங்கள் தனியான மிக அன்பான நட்பை வைத்து கொள்ளலாம் என்று உங்களுக்கு தெரியுமா? கடவுள் தந்தையுடனும், நம்மை இரட்சித்த மகனுடனும், பரிசுத்த ஆவியுடனும், நீங்கள் தனியாக அமர்ந்து, அவர்களோடு பேசியதுன்டா? நீங்கள் துன்பமடையும்போது, தந்தை கடவுள் மடியில் அமர்ந்து அவரின் ஆறுதலை பெறமுடியுமா? நீங்கள் சோதனைக்கு உட்படும்போது, யேசுவின் ஆற்றல் உங்களிடம் வந்து உங்கள் சோதனையை தாங்கி கொள்ள உதவுவதை நீங்கள் உணர்கிறீர்களா? நீங்கள் கவலை அடையும்போதும், விசுவாசத்தில் குழப்பமடையும்போதும், பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை அறிந்து கொள்கிறீர்களா?

யேசுவின் தந்தை நமக்கு தந்தையாவார். நம்முடைய மிகவும் சிறப்பு வாய்ந்த "அப்பா" (இன்றைய ரோமன் வாசகத்தில், குறிப்பிடப்படுகிறது, அதன் அர்த்தம், யூதர்களின் அர்த்தத்தில், சின்ன குழந்தைகளின் தந்தை ஆகும்) , அவர் பயப்படும்படியான, தன்டனை கொடுக்கும் அப்பாவாக, உங்களை புரிந்து கொள்ளாத அப்பாவா? இல்லை! உங்கள ஞானஸ்நானத்தில், சந்தோசமாக உங்களை தத்தெடுத்து கொண்டார். ஏனெனில், அவர் மிகவும் அன்பான தந்தை, நமக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பவர்.

இதனையெல்லாம், பரிசுத்த ஆவியானவர் நமக்கு உறுதியளிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை தழுவி, ஆறுதலளித்து, மேலும், நாம் வாழ்வதற்கு தேவையான படிப்பினைகளை கற்று கொடுத்து, நமது வாழ்வில் சந்தோசத்துடனும், முழு அன்புடனும் வாழ வழி வகுக்கிறார். மேலும் அந்த அன்பின் முலமாக , யேசு அவரையே நமக்காக தியாகம் செய்து, நமது பாவத்தின் தன்டனையிலிருந்து விடுபட்டு, பரிசுத்த ஆவியின் துனையுடன் பரிசுத்த வாழ வழி வகுத்தார்.

கடவுள் திரித்துமமானவர், நமக்கு உதவி செய்பவர், குணப்படுத்துபவர், ஆற்றலை கொடுப்பவர், விசுவாசம் கொள்ள செய்பவர். அவருடைய இந்த திரித்துவ தெய்வீகத்தில், நாம் வாழவேண்டும் என விரும்புகிறார். அவர்களின் முழுமையின் முழு பயன்களையும், நாம் பெற்று பயனடைய வேண்டும் என விரும்புகிறார். ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர்கள், கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் கடவுளின் ப்ரசன்னம், திவிய நற்கருணையில் உள்ளது. அதனால், மிகவும் கவலைபடக்கூடிய எந்த ஒரு குறையும் நமக்கு இல்லை
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: