Saturday, January 16, 2010

17 ஜனவரி 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

17 ஜனவரி 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

Isaiah 62:1-5
Ps 96:1-3, 7-10
1 Cor 12:4-11
John 2:1-11


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 2

1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″ திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ″ என்றார்.4 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். 5 இயேசுவின் தாய் பணியாளரிடம், ' அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார்.6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.7 இயேசு அவர்களிடம், ' இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.8 பின்பு அவர், ' இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,10 ' எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார்.11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

(thanks to www.arulvakku.com
)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, மாறுபட்ட கருத்து கொண்டிருந்தால், எந்த பாவமும் இல்லாமல், அதனை எப்படி எதிர்கொள்வது, அந்த ப்ரச்னைக்கு நல்ல முடிவு கொடுப்பதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டாக உள்ளது.
மேரி திருமண வீட்டில் உள்ள தேவையை தெரிந்து கொண்டு, அந்த தேவையை யேசு பூர்த்தி செய்ய வேண்டும் என விரும்பினார்.தெய்வீக அற்புத நிகழ்ச்சி அன்றி வேறு எப்படியும், அவரால், இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பது மேரிக்கு தெரியும். அவருடைய வேண்டுதலுக்கு, யேசுவின் தெய்வீக அருளோடு அவர் செய்ய வேண்டும் என விரும்பினார். ஆனால், யேசு மனித குணத்தோடு, முதலில் மறுத்தார். அவர் அவருடைய தெய்வீக குணத்தை அங்கே வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த மாதிரி அற்புதத்தை அவர் முதலில் செய்ய விரும்ப வில்லை. ஆன்மாக்களை குணப்படுத்தவே விரும்பினார். வெறும் தொட்டியில் திராட்சை ரசத்தை நிரப்ப அல்ல.

4 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார், இது அவர் எப்படி சொல்கிறார் என்றால், "நான் உங்கள் வேண்டுதலை ஏற்கிறேன், ஏவாளின் பரிசுத்த மகளே, நான் செய்ய வேன்டிய இறை சேவை, இந்த சூழ்னிலையில், ஆரம்பிக்கமுடியுமா? நீங்களே யோசித்து சொல்லுங்கள், மக்கள் அனைவரும், பல விசேச நிகழ்ச்சிகளுக்கு என் உதவியை தேடி வருவார்கள், இவ்வுலக இன்பங்களுக்கு என்னை தேடுவார்கள், ஆனால், அவர்களின் இறுதி வாழ்க்கைக்கு மீட்பளிக்கவே வந்தேன்.

கத்தோலிக்கர்கள் நாம் அனைவரும், இன்றைய நற்செய்தியை, கன்னி மரியாளின் உதவிக்கு சாட்சியாக, நமது விசுவாச வாழ்வில் எடுத்து கொண்டு, அவர் எப்போதும், நமக்கு உதவி செய்வார் என்று நம்புகிறோம். யேசுவிடமிருந்து நமக்கு என்ன வேண்டுமோ, அதனை நம் அன்னை மரியாள் நமக்காக யேசுவிடம் வேண்டி பெற்று தருவார்.ஏனெனில், அன்னை மரியாளால், யேசுவின் மனதை மாற்றி, நமக்கு பெற்று தருவார். யேசு முடியாது என்று சொன்னார், ஆனால், அவர் கருத்தை மாற்றி, மரியாள், அவருக்கு தேவையானதை பெற்றார். இறுதியில் மரியாள் வென்றார். யேசு தோற்றார்.



இப்படித்தான் நாம் நமது கருத்து வேற்றுமைகளை பார்க்கிறோம்? எந்த ஒரு கருத்து வேற்றுமையிலும், ஒருவர் வெற்றியாளராகவும், ஒருவர் தோற்காவிட்டால், அந்த ப்ர்ச்னை என்றுமே முடியாது. நாம் கடவுளிடம் சில வேண்டுதல்களை கேட்டு, அது நமக்கு கிடைக்காத பொழுது, நாம் தோற்றவராக நாமே நினைக்கிறோம். அதனால், இன்னும் அதிகம் வேண்டுகிறோம், அதன் மூலம் கடவுளை தோற்பவராக ஆக்க நினைக்கிறோம். அதற்கும் ஒரு பதிலுமில்லை என்றால், அன்னை மரியாளை நம் பக்கம் இருந்து, அவர் மகனிடம் பரிந்து பேசி, அவர் விருப்பத்திற்கு மாறாக நமக்கு தேவையானதை கேட்கிறோம்.

ஆனால், கடவுள், தொடக்கத்தில் இருந்தே நாம் வெற்றியாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறார். நமக்கு எது நல்லதோ அதையே நமக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். திராட்சை ரசம் பரிமாறுபவரிடம் , கன்னி மரியாளும் கடவுளின் விருப்பத்தை அறிந்திருந்தாலும், "எனது மகன் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று கூறினார். கருத்து வேற்றுமைகள் எல்லாம் ஒன்றும் தப்பானது இல்லை. யேசு அந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மேல் யேசு அக்கறை அக்கறை கொண்டுள்ளார் என்று மேரி நம்பினார். யேசுவோ, கடவுள் அவரது மகனின் இறைசேவையிலும், மீட்பு செயலிலும், மக்கள் மேலும் அக்கறை கொண்டுள்ளார் என்று நம்பினார். இது இரண்டு பேருக்குமே வெற்றி - வெற்றி கிட்டும் சூழ்நிலை ஆகும்.

© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, g o to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: