Saturday, October 29, 2011

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Mal 1:14b-2:2b, 8-10
Ps 131:1-3
1 Thes 2:7b-9, 13
Matt. 23:1-12

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 23

மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்
(மாற் 12:38 - 40; லூக் 11:37 - 52; 20:45 - 47)
1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ' மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். 6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். 8 ஆனால் நீங்கள் ' ரபி ' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.11உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்
(thanks to www.arulvakku.com)


"இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்" இன்றைய நற்செய்தியில் உள்ள இந்த வசனத்தை வைத்து கொண்டு, ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களை , அவர்கள் குருவானவர 'தந்தை' என அழைப்பதால், கண்டனம் செய்கிறார்கள். இயேசு "இவ்வுலகில் யாரையும் தந்தை என அழைக்காதீர்கள்" என்று கூறுகிறார் அப்படி என்றால், நம்மை பெற்றெடுத்த தந்தையும் சேர்த்தா? சூசையப்பரை இயேசு தந்தை என அழைத்ததில்லையா? இயேசு தச்சு தொழில் கற்று கொண்ட பொழுது, சூசையப்பரிடம் அம்மாவை திருமணம் செய்தவர் யார் என கேட்டிருக்க வாய்ப்பில்லை.
நற்செய்தியில், இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்த்தோமானால், முழு அதிகார்த்தையும் நாம் படிக்க வேண்டும்: எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதும் அதன் அர்த்தமாகும். நாம் யாரையும் நம்மை விட பெரியவர் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை என்பதை தான் இயேசு கூற வருகிறார். கடவுள் தான் பெரியவர். அவரை தவிர வேறு யாருமில்லை.

இயேசு இவ்வாறு சொல்கிறார்: "உங்களுள் பெரியவர் உங்களுக்கு தொண்டராக இருக்க வேண்டும்". மேலும் "நீங்கள் பெரியவராக இருக்க விரும்பினால், நாம் எல்லோருக்கும் தொண்டராக இருக்க வேண்டும்" என்று கூறுகிறார். மேலும், இன்றைய போதனையாக, நாம் மற்றவர்களை விட குறைந்தவராக நாம் நினைத்து விட கூடாது. நம் தாழ்வான மனப்பான்மையையும் போக்கவே இவ்வாறு இயேசு கூறுகிறார்.

போப்பாண்டவரை விட நீங்கள் தாழ்வானவர் இல்லை, என்று உங்களுக்கு தெரியுமா? அதனால் இறை சேவை செய்பவர்களுக்கெல்லாம், சேவை செய்பவர் என்று அழைக்கப்படுகிறார். மக்களின் ஊழியர் என்று அழைக்கபடுகிறார். கிறிஸ்துவின் பிரதிநிதியாக , போப் ஆண்டவர், எல்லோருக்கும் ஊழியம் செய்கிறார், திருப்பலி நடத்துவதாக இருந்தாலும், திருச்சபை சட்டதிட்டங்கள் தயாரிப்பதாக இருக்கட்டும், முக்கியமான முடிவாக இருந்தாலும், அவர் மக்களுக்காக செய்யும் இறை சேவை தான்


கடவுள் எவ்வளவு அதிகாரங்கள், குருக்களுக்கும், திருச்சபை தலைவர்களுக்கு கொடுத்திருந்தாலும், எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், எலோருக்கும் பிடித்தமானவராக இருந்தாலும், எல்லோருமே ஒரே அளவில் தான் கடவுளால் அன்பு செய்யபடுகிறோம். எல்லோருமே கடவுளுக்கு முக்கியமானவர்கள் தான். கடவுளின் கண்கள் மூலமாக நம்மை பார்க்க கற்றுகொண்டால் தான், நமக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

© 2011 by Terry A. Modica

No comments: