Friday, February 17, 2012

பிப்ரவரி 19, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 19, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு

Isaiah 43:18-19,21-22,24b-25
Ps 41:2-5,13-14
2 Cor 1:18-22
Mark 2:1-12


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 2

முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்
(மத் 9:1 - 8; லூக் 5:17 - 26)
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?9 முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,11 ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார்.12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், முடக்குவாதமுற்றவரை வீட்டின் கூரையை பிரித்து இயேசு குணமாக்கியதை பார்க்கிறோம். அவர் குணமானது அவரின் நண்பர்களால் தான்.

கடவுள் நாம் வாழ்க்கை முழுவதும் தனியாகவே நம் கஷ்டங்களோடு வாழவேண்டும் என நினைக்கவில்லை. பல நேரங்களில் நமது ஜெபத்திற்கு விசுவாசமிக்க குழுவில் இருக்கும் மற்ற கிறிஸ்தவ நண்பர்கள் மூலமாக தான் கடவுள் பதிலும், வேண்டுதலுக்கு என்ன தேவையோ அதனையும் கொடுக்கிறார். நாம் கிறிஸ்துவை இவ்வுலகில் உள்ள கிறிஸ்துவின் உடல் மூலமாகவும், குருக்களாலும், மற்ற திருச்சபை குழுவில் உள்ள சகோதரர்களாலும் கொடுக்கப்படும் திவ்ய நற்கருனை மூலமாகவும், பங்கு குழுக்களின் வழியாகவும் நாம் கிறிஸ்துவை பெறுகிறோம். அது என்னவென்றால், நம் பங்கில் உள்ள குழுக்களோடும், கோவிலிலும், தூரத்தில் இருக்கும் நமது நண்பர்களின் வழி வரும் நல்ல செய்திகளாலும், தொலைபேசி அழைப்புகளாலும் , இந்த தோழமையில் நாம் கிறிஸ்துவை காண்கிறோம்.

கடவுள் மற்றவர்கள் மூலம், நம்மை அரவணைத்து நமக்கு அன்பை தெரிவிக்கிறார். கடவுள் நம் சகோதரர்கள் மூலம் நம்மிடம் பேசுகிறார். நாம் நமது துன்ப வேளையில், நம் நன்பர்கள் மேல் தோளை சாய்த்து நமக்கு ஆறுதல் பெறுவது , கடவுள் நமக்கு நண்பர்கள் மூலம் அவர் தோளை கொடுக்கிறார்.

கடவுள் அன்பை, கிறிஸ்தவ நண்பர்கள் மூலம், நாம் பெறும்போது நாம் நமது விசுவாசத்தில், மிக விரைவாக வளர்கிறோம், மிகவும் விரைவாக குணமடைகிறோம் , கடவூலை இன்னும் அதிகம் நம்புவதற்கு கற்று கொள்கிறோம் , இதன் மூலம், நமக்கு தேவையான எல்லாம் இருக்கிறது என்ற கர்வத்தோடு இல்லாமல் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு , மற்றவர்கள் நம்மிடம் கொடுப்பதை கனிவோடு பெற்று கொள்ள வேண்டும்.



உங்களுக்கு யேசுவோடு நெருக்கம் உள்ள 4 நண்பர்கள் உண்டா? உங்கள் படுக்கையின் 4 முனைகளிலும் உங்களை தூக்கி செல்ல ? இவர்களை கண்டு கொள்ள, நாம் பங்கு மற்றும் கிறிஸ்தவ மத குழுக்களில் இனைந்து செயல்பட வேண்டும். உங்கள் பங்கில் பல வாய்ப்புகள் இருக்கும். அதில் உங்களை இனைத்து கொண்டு, கடவுள் கொடுத்த திறமைகள உபயோகிக்க வேண்டும்.

எவ்வித குழு ஈடுபாடும் இல்லாமல், விசுவாசமிக்க நண்பர்களோடு நாம் இனையாமல், கடவுளோடு ஒரு நல்ல உறவில் இருக்கிறோம் என்பது நல்ல அர்த்ததுடன் இல்லை.
© 2012 by Terry A. Modica

No comments: