Friday, February 24, 2012

பிப்ரவரி 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு
Gen 9:8-15
Ps 25:4-9
1 Peter 3:18-22
Mark 1:12-15
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1 - 11; லூக் 4:1 - 13)
12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

2. இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மத் 4:12 - 17; லூக் 4:14 - 15)
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் 'என்று அவர் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, இயேசு அவர் ஜோர்டான் நதியில் ஞானஸ்நாணம் பெற்ற பின், அவர் சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர் தந்தை கடவுளிடம் தன்னை முழுதும் ஒப்படைத்ததை ஞானஸ்நாண நாள் குறிக்கிறது. தண்ணீரிலிருந்து அவர் எழுந்த பொழுது, அவரின் பழைய வாழ்வை விட்டு விட்டு, இறைசேவையை தனது புதிய வாழ்வில் ஆரம்பித்தார்.

தந்தை கடவுள் இயேசுவிடம், அவர் மிகவும் சந்தோசமடைந்துள்ளார் என்பதை தெரிவித்தார். மேலும் பரிசுத்த ஆவி, இயேசுவை முழுதும் மனிதனாக்கினார். கடவுளாக இயேசு, ஏற்கனவே பரிசுத்த ஆவியானவர் அவரிடத்தில் இருக்கிறார். அந்த ஜோர்தான் நதியில், இயேசுவிற்கு பரிசுத்த ஆவியை பெற்ற பின்பு, அவர் எப்படி உற்சாகத்தில் இருந்திருப்பார் என்பதை நாம் கற்பனை பன்னி பார்க்கலாம். அதற்கு அடுத்ததாக , சாத்தான் அவரை சோதித்தது.
இதே சுழற்சி முறை தான் நமக்கும் நடக்கிறது. நமது விசுவாசத்தில், நாம் புதிய வளர்ச்சியை கானும் பொழுது, இந்த இறையரசில் , இறைவனின் விருப்பத்தை , செய்ய நாம் அழைக்கப்டும்பொழுது, நமது வலிமையையும், விசுவாசத்தின் மேல் உள்ள உண்மையும் சோதிக்கபடுவோம். எனினும், இப்படி நடக்க வில்லையென்றால், நமது விசுவாசம் எவ்வளவு உறுதியானது, என்பது நமக்கு எப்படி தெரியும்.? . நாம் ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடைந்து விட்டோம் என்பது நமக்கு எப்படி தெரியும். இறையரசிற்காக நாம் இறைசேவையை செய்து, நாம் கடவுள் வழியில் செல்கிறோம் என்பது நமக்கு எப்படி தெரியும்?
சில நேரங்களில், நமது ஆன்மீக வாழ்வு ஒரு பலனையும் அளிக்கவில்ல என்று நம்மை அறியாமலேயே நாம் உள்ளுக்குள் நினைப்பது உண்டும். நாம் சோதிக்கபட இருக்கிறோம் என்று நினைத்தால், நாம் நமது போராட்டதில், தோத்து விடுவோம் என்று நினைத்தால், நமது ஆண்மீக வாழ்வில் வளராமல், இறையரசிற்கு கிறிஸ்துவோடு இனைந்து இறைசேவை செய்யாமல், ஆண்மீகத்தில் இன்னும் அதிகம் வளராமல் இருந்து விடலாம் எனவும் தோனலாம். இன்னும் ஒரு சோதனை நமக்கு.!
தவக்காலத்தில், நாம் சந்திக்கும் சோதனைகளை நாம் சுய பரிசோதனை செய்து, அந்த சோதனைகள் நம் விசுவாசத்தை இன்னும் உறுதிபடுத்தி கொண்டு வளரவேண்டும்.
ஒவ்வொரு முறையும், நாம் பாவத்தில் விழுந்து, கடவுள் மன்னிப்பை கோரும்பொழுது, இன்னம் நாம் விசுவாசத்தில் உறுதியாகிறோம். இன்னும், கொஞ்சம் அதிகமாக, நாம் பாவசங்கீர்த்தனம் செய்து நாம் பாவமன்னிப்பு பெறும்பொழுது, குருவின் வழியாக இயேசு விடமிருந்து நாம் பல அருட்கொடைகளை பெறுகிறோம், அந்த அருட்கொடைகள் நம் சோதனையை இன்னும் உறுதியாக எதிர்கொள்ள துனைபுரியும்.
இதன் மூலம், கடவுளின் இறைசேவையை முழுதும் ஏற்று அதனை செய்யும்பொழுது, இவ்வுலகில் உள்ள சாத்தானை வெற்றி கொள்ள முடியும். மேலும் இறையரசை நம்மிடையே உள்ள மக்களுக்கும் பரப்ப முடியும்.
எனவே சோதனைகள் என்று வரும்போது, மறைந்திருக்கும் ஆசிர்வாதம் என நினைத்து, அதனை நம் வாழ்வை சுத்தம் செய்யும் வாய்ப்பாக எடுத்து கொண்டு, யேசுவை போல நாம் வாழ முயலவேண்டும். மேலும் விசுவாசத்தில் வலிமையுடன் இருக்க வேண்டும்.
© 2012 by Terry A. Modica

No comments: