Saturday, February 1, 2014

பிப்ரவரி 2 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 2 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் காணிக்கை பெருவிழா
Malachi 3:1-4
Ps 24:7-10
Hebrews 2:14-18
Luke 2:22-40


இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்
39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறில் ஆண்டவர் இயேசுவை காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்டதை கொண்டாடுகிறோம். குழ்ந்தை இயேசு கடவுளுக்கு அர்ப்பநிக்கப்பட்டதால், அவரின் முழு வாழ்வும் , அவரது இறப்பும் கூட கடவுளுக்கு ஒப்புகொடுக்கபட்டது – நமக்காக .

உங்கள் வாழ்வை கடவுளுக்கு ஒப்பு கொடுத்துள்ளீர்களா?

உங்கள் இறப்பையும் கடவுளுக்கு அர்ப்பணித்தால் என்ன? உங்கள் கடைசி மூச்சு கூட இறைவனுக்கு சேவை செய்ய நீங்கள் கடவுளிடம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் இவ்வுலகை விட்டு மோட்சத்திற்கு செல்லும்பொழுது எந்த மாதிரியான தேவ சாட்சியத்தை இங்கே விட்டு செல்ல இருக்கிறீர்கள்?

உங்கள் ஞானஸ்நாணத்தில் நீங்கள் கிறிஸ்துவின் வாழ்விலும், மரணத்திலும், அவரின் இரத்சிப்பிலும் மீண்டும் பிறக்கிறீர்கள், ஆனால், முழு மனதோடு, முழு இருதயத்தோடு  நீங்கள் உங்களை அவருக்கு அற்பணித்தீர்களா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணப்பொழுதும் இந்த  அர்ப்பணிபை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்  ஞானஸ்நாணத்தில் மட்டுமல்ல.

இதற்கு அர்த்தம் என்ன என்றால், தொடர்ந்து நம் ஜெபித்து கொண்டே இருக்க வேண்டும், எவ்வளவு வேலை இருந்தாலும்

இதன் அர்த்தம் என்ன என்றால், ஒவ்வொரு சூழ் நிலையிலும், அதற்கு தகுந்தார் போல நாம் நடந்து கொள்ளாமல், கடவுளின் விசுவாசத்தின் மூலம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இதற்கு அர்த்தம் என்ன என்றால், முழு இருதயத்தோடு எந்நேரமும் கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும் , அப்படியில்லாமல், நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்து விட்டு, நாம் நினைவுகளை வேறு இடத்தில் செலுத்தாமல் இருக்க வேண்டும்.
இதன் அர்த்தம் என்ன என்றால், இவ்வுலக ஆசைகளோடு , நாம் எப்படி ஒட்டி வாழ்கிறோம் என்பதை கண்டு பிடித்து , அதனை விட்டு விட்டால், நாம் கடவுளோடு இணைந்து வாழலாம்.

இதன் அர்த்தம் என்ன என்றால், எப்பொழுதுமே ஆவியில் விழிப்பாயிருப்பது .

இதன் அர்த்தம் என்ன என்றால், பரிசுத்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்வது.


இதன் அர்த்தம் என்ன என்றால் – தொடர்ந்து, நமக்குள்ளேயே, “கடவுளின் அன்பை நாம் முழுதுமாக இக்கணம் அனுபவிக்கிரோமோ? அப்படி இல்லையென்றால் , அவரின் அன்போடு இணைய நாம் என்ன செய்ய வேண்டும். “ என்ற கேள்விகளோடு, இன்னும் “அவரின் அன்பில் வாழ, மிகவும் கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு நம்மிடம் உள்ளதை கொடுக்கிறோமோ? அல்லது அன்போடு வாழ என்னை நானே உட்படுத்தி கொள்கிரேனா?” என்ற கேள்விகளையும் நாம் கேட்டு நாம் திருந்தி வாழவேண்டும்.

© 2014 by Terry A. Modica

No comments: