Friday, March 25, 2016

மார்ச் 27 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 27 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு - இயேசுவின் உயிர்ப்பு
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Colossians 3:1-4 or 1 Corinthians 5:6b-8
John 20:1-9 or Matthew 28:1-10


யோவான் நற்செய்தி
இயேசு உயிர்த்தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

2எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!என்றார்.
3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.

4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

5அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.

6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,

7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.

9இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
10பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)
உங்கள் சிலுவைகளுக்கான கிறிஸ்துவின்   வெற்றி
அல்லேலூயா! இந்த புனித வாரத்திலும் , இந்த தவக்காலம் முழுதும் நாம் மேற்கொண்ட எல்லா பரிசுத்த , விசுவாச ஜெப முயற்சிகளினால், நாம் இன்னும் இயேசுவோடு நெருங்குவதால், நாம் பெரும் சுகத்தையும் , அதிக விசுவாசத்தினாலும் நாம் இந்த நாளை கொண்டாடுவோம்! 

மோட்ச கதவின் திறவு கோல் சிலுவை தான். இந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாடும்பொழுது - நமது இருதயத்தில் , நம் தேவைகளுடன் , நம் ஆசைகளுடன் - கொண்டாடும்பொழுது  -- நமது கவலைகளை, தியாகங்களை , துன்பங்களை ஏற்று கொண்டு அவைகளே நமக்கும் இயேசுவிற்கும் தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கிறது. இயேசு நமக்காக சிலுவையில் மரணித்ததால் மட்டும் நமக்கு ஈஸ்டர் சந்தோசம் கொடுப்பதில்லை, அதனோடு கூட அந்த பயணம் இன்னமும் இயேசுவோடும் நாம் தொடர்வதால் இந்த சந்தோசம் இரட்டிப் பாகிறது.
கிறிஸ்துவை பின் செல்வதில் நாம் கண்ணும் கருத்துமாக ஒற்றை குறிக்கோளுடன் இருக்கும் பொழுது, விசுவாசத்தில் உண்மையாக வளர ஆசைபட்டால், இயேசு செய்வதை நாமும் செய்வோம், அவரது இறைபணியில் நாமும் இணைந்து , நித்திய வாழ்வில் கடவுளோடு நாமும் இணைவோம். இதற்காக நாம் சிலுவையை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டி வரும். தியாகத்தின் அன்பினால் , நாம் வழியை சுமந்தால் தான் நமக்கு மீட்பின் சந்தோசம் கிடைக்கும்.

ஈஸ்டர் அன்று நாம் கொண்டாடும் அல்லேலூயா, சிலுவையின் வெற்றி ஆகும். நாம் இந்த வாழ்வில் சந்தோசமாய் இருப்பதற்கு பிரச்சினைகள் இல்லாம் இருக்க வேண்டும் என்பதில்லை. கடவுள் கேட்டதில் இருந்தும் நல்லதை கொடுப்பார் என்ற நம்பிக்கையுடனும் , கடவுள் நம்மை எல்லா சோதனைகள் இருந்தும் காத்து வருகிறார் என்ற நம்பிக்கையுடன் இருந்தால் நாம் ஈஸ்டரை சந்தோசமாக கொண்டாட முடியும்.
சிலர் நம்மை கோபபடுத்தும் பொழுது, அவர்களை திட்ட வேண்டும் என்ற எண்ணத்தை நாம் தடுத்து கொள்வது சாதாரண சிலுவை தான். இது நமக்கு  ஏற்படும் சிலுவை ஆகும். மிகவும் கஷ்டத்தில் இருக்கும் ஒருவரை அணுகி அவர்களுக்கு தேவையானதை செய்யும் பொழுது, அந்த வேலை நமக்கு சவுகரியம் இல்லாதபொழுது , அது நமக்கு சிலுவை ஆகும். நமக்கு அநிதி செய்தவர்களுக்கும், அசிங்கபடுத்துபவர்களுக்கும் நல்லது செய்வதும் நம் சிலுவை ஆகும். இறையரசிற்காக நாம் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்ததும் மாற்றம் தான், நமக்கு ஏற்படும் மகிழ்வும், நம் மீட்புமாகும்.
ஒருவரை அன்பு செய்ய மிகவும் கடினமாக இருக்கும்போது , அந்த அன்பை நாம் வெளிபடுத்தும் பொழுது , அந்த அன்பு தான் , வேதனையின் அன்பு, இரக்கத்தின் அன்பு, மீட்பின் அன்பு. அதன் அர்த்தம் என்ன என்றால், மற்றவர்களின் நித்திய வாழ்விற்கு நாம் உதவிடுகிறோம்.   நமது தியாகங்கள் , மிகவும் மதிப்பு வாய்ந்தவை ஆகும். சுலபமான வாழ்வை விடவும், நமக்காகவே வாழ்வதை விடவும் இந்த தியாக வாழ்வு மேலானது. நித்திய வாழ்விற்கும் பயனுள்ளது . ஈஸ்டர் திருப்பலி , இயேசுவோடு இணைந்து , அவரோடு சாத்தானை வீழ்த்தி , அவன் மேல் வெற்றி கொள்ளும் கொண்டாட்டம் ஆகும்.


© 2016 by Terry A. Modica

No comments: