Saturday, March 5, 2016

மார்ச் 6 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச்  6 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு

Joshua 5:9a, 10-12
Ps 34:2-7
2 Cor5:17-21
Luke 15:1-3, 11-32

லூக்கா  நற்செய்தி

1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.

2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரேஎன்று முணுமுணுத்தனர்.
3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

காணாமற்போன மகன் உவமை
11மேலும் இயேசு கூறியது: 
ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.

12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.

13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.

14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;

15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.

16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

17அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!

18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;
19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்என்று சொல்லிக்கொண்டார்.

20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.

21மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்என்றார்.

22தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;

23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.

24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

25அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,

26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார்.

27அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்என்றார்.

28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

29அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.

30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!என்றார்.

31அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.

32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்என்றார்.
(Thanks to www.arulvakku.com)
நாம் அன்பிற்கு தகுதியானவர்கள். ஏன் ?
நிபந்தனையில்லா கடவுளின் மன்னிப்பிற்கும், அன்பிற்கும் யார் தகுதி ஆனவர்கள்? ஒவ்வொரு திருப்பலியிலும் , "ஆண்டவரே என் உள்ளத்தில் வர நான் தகுதி அற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்" என்று  நாம் ஜெபிக்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு நாமெல்லாம் தகுதி உள்ளவர்கள் என நமக்கு விளக்கி சொல்கிறார் , நம் செயல்கலாள் இதனை சொல்லவில்லை, அனால் இயேசு நமக்க சிலுவை மரம் சுமந்ததால் இப்படி சொல்கிறார். நம் பாவங்களை சிலுவையில் சுமந்து அதிலே மரணித்து , நம் பாவங்களையும் சாகடித்தார், அதன் முலம் நித்திய வ்வாழ்வில் அவரோடு இணைவோம்.
இந்த உவமையில், மகன் திருந்தி , தம் வீட்டிற்கு வந்ததால் அல்ல, அவனின் தந்தையின் அன்பிற்கு தகுதி பெற வில்லை.  அவனின் தந்தை , அவனை எந்த வித நிபந்தனை அன்றி அவனை முழுதும் அன்பு செய்தார். அந்த மகன் அவரை விட்டு தூரம் போனாலும், தந்தை அவனை அன்பு .செய்தார். பாவ வாழ்வில் வாழும் பொழுதும் தந்தை அவனை அன்பு செய்தார்.

நிபந்தனையற்ற தந்தையின் அன்பு, விசுவாசமான அன்பு , மகனுக்கு கொடுத்த அன்பளிப்பு, ஆனால், மகனோ அதனை நிராகரித்து விட்டார்.
மகன் திருந்தி விட்டிற்க்கு வந்த பொழுது, திறந்த  மனதை , தந்தையின் அன்பை எப்பொழுதுமே பெற்று கொள்ள தயாராய் வந்திருந்தார்.
ஒவ்வொரு திருப்பலியிலும், நாம் அந்த மகனை போல செல்கிறோம். அந்த வாரம் முழுதும் நல்ல கிறிஸ்தவனாக இருந்தோம் என்று நாம் நினைத்திருந்தாலும், ஏதோ ஒரு நிகழ்வில், நாம் கடவுளின் நிபந்தனையற்ற , நம்பிக்கையுள்ள அன்பை நாம் ஏற்காமல் இருந்திருபோம். அதனால், திருப்பலியில் நாம் பாவத்தை அனுமதித்து பாவ மன்னிப்பு கேட்டு திருப்பலியை துவங்குகிறோம்.  இந்த வாய்ப்பை முழுதும் நாம் பயன் படுத்துவோம்.
அடுத்ததாக , நாம் நற்செய்தி வாசகங்களை கேட்கிறோம். அந்த வாசகங்கள் கடவுளோடு நமக்கு ஏற்பட்ட பிரிவை இணைக்க உதவுகிறது. பிரசங்கம் இதனை தொடர்ந்து வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றால், இயேசு பரிசுத்த ஆவி மூலம் உங்களிடம் பேசுகிறார். உங்கள் இருதயத்தில் அவரை கேளுங்கள். வரத்தை மனு உருவான இயேசு நீங்கள் திருப்பலியில் இருப்பதை, ஏற்று கொள்கிறார்.

காணிக்கை நிகழ்வில், நாம் நம்மையே தந்தை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம். இது நம்மை அர்ப்பணிக்கும் தருணம். "நாம் உன் குழந்தை என அழைக்க தகுதியற்றவன், உன் விருப்பம் எதுவோ அதனை செய்" என நாம் நம்மை அர்ப்பணிப்போம். கடவுளின் விருப்பம், நம்மை முழுதும் திருந்தியவனாக, முழு அன்புடனும் , அவரின் குடும்பத்தில் நம்மை இணைத்து கொள்வது தான். அதிலிருந்து நற்கருணை நிகழ்வில் நாம் இயேசுவை முழுமையாக திவ்ய நற்கருனையாக பெற்று, அவரின் முழு குடும்பத்துடன் இணையும் அன்பளிப்பை பெறுகிறோம். அந்த முழு குடும்பம் நமது திருச்சபை ஆகும். (திவ்ய நற்கருணை நேரடியாக பெற முடியாதவர்கள், ஆவியின் இணைப்பு மூலம் பெறுகிறார்கள்)

© 2016 by Terry A. Modica

No comments: