Saturday, April 1, 2017

ஏப்ரல் 2, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 2, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவகாலத்தின் 5ம் ஞாயிறு

Ezekiel 37:12-14
Psalm 130:1-8
Romans 8:8-11
John 11:1-45
யோவான் நற்செய்தி

இலாசர் இறத்தல்
1பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.

2இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.

3இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்என்று தெரிவித்தார்கள்.
4அவர் இதைக் கேட்டு
இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்
 என்றார்.

5மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.

6இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.

7பின்னர் தம் சீடரிடம்
மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்
 என்று கூறினார்.
8அவருடைய சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள்.

9இயேசு மறுமொழியாக
பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.

10
ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது⁕ ஒளி இல்லை
 என்றார்.

11இவ்வாறு கூறியபின்
நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்
 என்றார்.

12அவருடைய சீடர் அவரிடம், “ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்என்றனர்.

13இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.

14அப்போது இயேசு அவர்களிடம்
இலாசர் இறந்து விட்டான்
 என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,

15
நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்
 என்றார்.

16திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்என்றார்.
நம்புவோர் வாழ்வர்
17இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.

18பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்⁕ தொலையில் இருந்தது.

19சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.

20இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

21மார்த்தா இயேசவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.

22இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்என்றார்.

23இயேசு அவரிடம்
உன் சகோதரன் உயிர்த்தெழுவான்
 என்றார்.

24மார்த்தா அவரிடம் , “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்என்றார்.

25இயேசு அவரிடம்
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.

26
உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?”
 என்று கேட்டார்.

27மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்என்றார்.
இயேசு கண்ணீர் விடுதல்
28இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், “போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்என்று காதோடு காதாய்ச் சொன்னார்.
29இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.

30இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.

31வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.
32இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்என்றார்.
33மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,

34
அவனை எங்கே வைத்தீர்கள்?”
 என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்என்றார்கள்.
35அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.
36அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!என்று பேசிக் கொண்டார்கள்.

37ஆனால் அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.
இலாசர் உயிர்பெறுதல்
38இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.

39
கல்லை அகற்றி விடுங்கள்
 என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!என்றார்.
40இயேசு அவரிடம்
நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?”
 என்று கேட்டார்.
41அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து
தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.

42
நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்
 என்று கூறினார்.

43இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில்
இலாசரே, வெளியே வா
 என்று கூப்பிட்டார்.

44இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. 
கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்
 என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
இயேசுவைக் கொலை செய்யத் திட்டம்
(
மத் 26:1 - 5; மாற் 14:1 - 2; லூக் 22:1 - 2)
45மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

46ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர்.

(thanks to www.arulvakku.com)
இந்த தவக்காலத்தில் உள்ள சந்தோஷ உண்மை
தியாகம் செய்வதும், துன்புறுவதும், மட்டும் தவக்காலம் இல்லை. புதிய வாழ்விற்கு தவக்காலம் அமைக்கும் பாதை. பெரிய வெள்ளி ஒன்றும், வழியும், வேதனையும், மரணத்தையும் தரும் சாத்தான் இல்லை. பெரிய வெள்ளியின் கதவின் வாயிலாக இயேசு நம்மை புதிய வாழ்விற்கு அழைத்து செல்கிறார்.
ஆமாம், துன்புறுவது , தவக்காலத்தின் ஒரு பகுதியாகும். (இவைகள் வருடம் முழுதும் நாம் செய்யலாம் ). தவக்காலத்தில் விரதம் இருந்தும், புலால் உணவுகளை தவிர்த்தும், தானம்  கொடுத்தும், கோவிலில் அதிக நேரம் செலவழித்தும் நாம் கடக்கிறோம். ஆனால் , இவைகள் அனைத்தும் நம் பயணத்திற்கான வாகனங்கள் ஆகும்.
நமது துன்பங்களை கடவுள் உபயோகித்து நம்மை அதிகம் இரக்கம் உள்ளவர்களாகவும், விடா  முயற்சியுடன் , நாம் இறை சேவை செய்யவும் நம்மை மாற்றுகிறார். நமது தியாகங்கள், நம்மை கட்டுபாட்டுடன் இருக்க உதவுகிறது. இதன் மூலம் நம்மை சுத்த படுத்தி கொண்டு, இன்னும் பரிசுத்த வாழ்வை ஆற்றலுடன் இன்னும் வளர்க்க உதவும். ஆனால் இந்த பயணம் ஒன்றும் இறுதியாக செல்ல வேண்டிய இடம் இல்லை.
தவக்காலம் என்பது மீட்பை அடைவது தான்: நமது விசுவாசத்தை புதுபித்து கொண்டு, பழைய பாவங்களை விட்டு புது வாழ்வில் அடியெடுத்து வைப்பதும், பிரச்சினை உள்ள உறவுகளுடன் சமாதானம் செய்து கொண்டு, கடவுளின் ஆவியில் நிலைத்திருந்து இன்னும் அதிகமாக இறைவனுடன் இணைந்திருப்போம்.

உங்கள் விசுவாசத்தில் எந்த நாள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது ? பெரிய வெள்ளியா அல்லது ஈஸ்டர் ஞாயிறா ?  மிகவும் துன்ப மயமான அந்த கல்வாரி பயணம், ஈஸ்டர் நாளுக்கு முக்கியமானது தான், ஆனால், நாம் மீட்பின் காலத்தில் இருக்கிறோம்!  கத்தோலிக்கர்கள் மீட்பின் / ஈஸ்டர் மக்கள். இதன் அர்த்தம் என்ன என்றால், எந்த ஒரு தவறும், தீங்கும் , இயேசு நம் வாழ்வின் கடவுளாக இருக்கும்போது நமக்கு ஏற்படாது என்பது தான் .
இயேசு தனது ஆற்றலினால்,  வாழ்விற்கும், சாவிற்கும் மேல் தான் என்று காட்டி நமக்கு மீட்பு கொடுத்தார். அந்த வெற்றியை மீண்டும் - நமக்கும், நம்மை சுற்றியிருக்கும் அனைவருக்கும் அவரின் வெற்றியை , எடுத்து கூற இயேசு விழைகிறார்.

© 2017 by Terry A. Modica

No comments: