Friday, May 12, 2017

மே 14 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே  14 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பாஸ்கா காலத்தின் 5ம்  ஞாயிறு
Acts 6:1-7
Ps 33:1-2, 4-5, 18-19 (with 22)
1 Peter 2:4-9
John 14:1-12
யோவான்  நற்செய்தி

1மீண்டும் இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
2தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்என்று சொல்லியிருப்பேனா?
3நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்”  என்றார்.

5தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்றார்.

6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
7 நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்
 என்றார்.

8அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்என்றார்.

9இயேசு அவரிடம் கூறியது: 
பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்என்று நீ எப்படிக் கேட்கலாம்?

10நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.

11நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.

12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்
(thanks to www.arulvakku.com)
இயேசுவை விட பெரிய செயல்கள் நம்மால் எப்படி/ஏன்  செய்ய முடியும்
இன்றைய நற்செய்தியில், கடைசி வரிகள் மிகவும் அதிர்ச்சி தரகூடிய வசனங்களோடு முடிகிறது: "12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். "   இதன் அர்த்தம் என்ன ? இயேசு செய்வதை போல , -- இன்னும் அதற்கு மேலே -- நம்மால் எப்படி செய்ய முடியும் ?
இதற்கான பதில் அந்த அதிகாரம் அனைத்திற்குமான அர்த்தத்தில் உள்ளது. இயேசு அவர் தந்தையின் உடன் உள்ள நெருங்கிய தொடர்பை நமக்கு விளக்கி சொல்கிறார். நன்றாக நினைவில் கொள்ளுங்கள், இயேசு இன்னும் மனிதனாகவும் தெய்வமாகவும் இருக்கிறார். இந்த வார்த்தைகளையும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். மனிதனின் மகனாக இயேசு அவர் தந்தைக்கு எவ்வாறு பணிவிடை செய்தார்? கடவுளின் மாகனாக அவர் தந்தைக்கு எவ்வாறு பணிவிடை செய்தார் ?

"நான் செய்யும் செயலகள் " மனிதனாக அவர் சொல்லும் செயல்கள்: எல்லோரையும் அன்பு செய்தார், எல்லோருக்கும் போதனை செய்தார், அவரிடம் கேட்க விருப்பம் உள்ளவர்களோடு, உரையாடினார். மற்றவர்களோடு சேர்ந்து விருந்தில் கலந்து கொண்டார். அவர் தனது வேளையில் கடின உழைப்போடு செய்தார், அவர் இறைபணியை  தீவிரமாக மேற்கொண்டார். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்" -- பரிசுத்த மனிதனாக நாம் வாழ இயேசு எடுத்து காட்டாக இருக்கிறார். இயேசு மற்றவர்களை அன்பு செய்வது போல , நாமும் அன்பு செய்வோம் விசுவாசத்தை மற்றவர்களுக்கு போதிப்போம். யாராவது அவர்கள் கவலையை பகிர்ந்து கொள்ளும் பொழுது, நாம் கூர்ந்து கேட்போம், நமது வேளைகளில் கடின வேலை செய்வோம் . தேவையானோர்க்கு உதவி செய்வோம். இன்னும் பல செயல்கள் இயேசுவை போல செய்வோம். இவைஎல்லாம் இயற்கையை தாண்டிய செயல்கள் இல்லை. நாம் யாராக இருக்கிறோம் என்பது தான் முக்கியம்: அன்புள்ள கடவுள் தந்தையின் மனித குழந்தைகளாக இருக்கிறோம்.
"பெரிய செயல்கள்"  தெய்வீக   கடவுளிடமிருந்து வருகிறது: இயேசு தந்தையின் தெய்வீக செயல்களை இங்கே செய்தார். "என் மேல் நம்பிக்கை கொள்பவர் அனைவரும் தந்தையின் செயல்களை செய்வர்"  தந்தையின் வழியே நாம் சென்று நாமும் இவ்வுலகில் அற்புதங்கள் நிகழ்த்த அழைக்கப்ட்டுள்ளோம்.
இயேசு நம்மோடு மனிதனாக இணைத்து கொண்ட பொழுது, இந்த மனிதனுக்குன்டான வரம்புகளை விட்டு எப்படி மேலே வருவது நமக்கு காட்டினார். இப்போது, ஞானஸ்நானம் மூலமாகவும், திவ்ய நற்கருணை மூலமாகவும் , உறுதி பூசுதல் மூலமாகவும் , நாம் கிறிஸ்துவின் தெய்வீகத்தோடு இணைந்து, தந்தையின் பணிகளை நாம் இங்கே தொடர்வோம். திவ்ய நற்கருணை மூலம் எந்த ஒரு பிரிவும் கிறிஸ்துவோடு இணைந்து விடும். அன்பு செய்ய முடியாதவர்களையும் அன்பு செய்ய முடியும் , தெய்வீகத்தின் வழியாக நாம் இருக்க முடியும். நம்மில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் , கடவுள் கேட்கும் அனைத்தும் நம்மால் செய்ய முடியும்.   

© 2017 by Terry A. Modica

No comments: