Saturday, May 6, 2017

மே 7 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே   7 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பாஸ்கா காலத்தின் 4ம்  ஞாயிறு
Acts 2:14a, 36-41
Ps 23: 1-6
1 Peter 2:20b-25
John 10:1-10
யோவான் நற்செய்தி
ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை
1நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.

2வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.

3அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.

4தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.

5அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.
6இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இயேசுவே நல்ல ஆயர்
7மீண்டும் இயேசு கூறியது: 
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே.

8எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.

9நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.
10திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.

(thanks to www.arulvakku.com)
உங்களுக்கு ஒரு திருப்புமுனை ஏற்படனுமா ?
உங்கள் இறை வாழ்விலோ , அல்லது ஏதோ ஒரு பிரச்சினையிலோ அல்லது ஏற்பட்ட காயங்கள் ஆறாமல்  அப்படியே ஒரு தேக்க நிலையில் இருக்கிறீர்களா? அதனை தாண்டி வர வேண்டுமா ? அமைதியும் , சந்தோசமும், திருப்தியும் , காயங்களை ஆற்றும் செயலும், இருக்கும் இடம் தாண்டி, ஒரு வேலியை தாண்டி நாம் கிடக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?  ,
இன்றைய  நற்செய்தியில், இயேசு தான் வாயில் என்று சொல்லபடுகிறது.  நாம் மோட்சத்தின் வாயிலை அடைய இயேசு நமக்கு உதவுகிறார். இந்த   உலகத்தின் எல்லா தடைகளையும் தாண்டி பரலோகம் அடைய மட்டும் அல்ல, இந்த உலகத்திலும் இறையரசு வாழ்வை நாம் பெற அவர் உதவி செய்கிறார்.

நமது பயண வழி தடைப்படும்பொழுது , இயேசு நமக்கு ஆயனாக நாம் ஏற்று செல்லும் போது  தான் , நம் பயணத்தை தொடரலாம் . கடவுள் நம் மூலம் ஒன்று செய்ய சொல்லும் போது, வேறு ஒருவர் அதற்கு தடையாக இருந்தால்,  இயேசு இன்னும் அவர் வாயில் வழியாக நம்மை அழைத்து சென்று அதனை செய்ய வைக்கிறார். யாரும் அவர் வழியினை தடுத்து விட முடியாது. இயேசு தான் நமக்கு வாயில். அவர் நமக்கு புதிய வாய்ப்பினை தந்து , அதன் மூலம் கடவுளின் திட்டத்தை செயல் படுத்த வைப்பார். கடவுள் நமக்கு செய்ய முடியாத அதிர்ச்சியை தரக்கூடிய இறைபணி கொடுக்கும் பொழுது, நாம் எப்படி  செய்வது என்று திண்டாடும்போது , அதனை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கும் பொழுது, இயேசு நமக்கு வழியாக இருப்பார், அவரை நோக்கி நாம் செல்லும் பொழுது, அந்த தடைகளை விளக்கி நமக்கு புதிய வழியை காண்பிப்பவர் இயேசு.

ஆனாலும் நினைவில் கொள்ளுங்கள், நாம் மோட்சத்தின் வாயில் வரை செல்லும் வரைக்கும்   ஊமை ஆட்டினை போல ஆயன் இயேசு அருகில் எப்பொழுதும் ஒட்டி கொண்டே இருக்கணும். இந்த எல்லையிலிருந்து அடுத்த எல்லைக்கு செல்லும் வரை அங்கே ஒரு பயணம் தேவையாக இருக்கிறது.
இயேசுவை விட்டு நாம் விலகி இருந்தால் மட்டுமே திருடார்களால் நம்மை திருடி, நம்மை அவர்கள் தேவைக்கு வெட்டி போட முடியும். எனவே எப்பொழுதும் இயேசுவின் மேல் நம் கண்கள் இருக்கட்டும்.

அவநம்பிக்கையும், கவலையும் இரண்டு திருடர்கள், நம் அமைதியை, சந்தோசத்தை, திருப்தியை மேலும், குனமாக்குதலை திருடிவிடுகிறார்கள். ஆனால் நாம் நினைப்பது போல அவ்வளவு பெரிய விசயம் ஒன்றும் இல்லை. அவையெல்லாம் உண்மையே இல்லை என்று நாம் நினைத்தால், அவைகளை நாம் தோற்கடித்து விடலாம். உண்மை என்னவென்றால்: இயேசு நல்லாயன், நம்மை அதிகமான வெற்றியை நோக்கி துணை நின்று நடத்தி செல்வார்.

© 2017 by Terry A. Modica

No comments: