Wednesday, May 1, 2019

மே 5 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே 5 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 3ம் ஞாயிறு

Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Revelation 5:11-14
John 21:1-19
யோவான் நற்செய்தி
8. பிற்சேர்க்கை
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்
1பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:
2சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

3அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

5இயேசு அவர்களிடம்
பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?”
 என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லைஎன்றார்கள்.

6அவர்
படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்
 என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

7இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

8மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகுதொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
9படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

10இயேசு அவர்களிடம்
நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்
 என்றார்.

11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

12இயேசு அவர்களிடம்
உணவருந்த வாருங்கள்
 என்றார். சீடர்களுள் எவரும், ‘நீர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

13இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

14இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
இயேசுவும் பேதுருவும்
15அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம்
யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிடமிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
 என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!என்றார். இயேசு அவரிடம்
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்
 என்றார்.
16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம்
யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!என்றார். இயேசு அவரிடம்
என் ஆடுகளை மேய்
 என்றார்.
17மூன்றாம் முறையாக இயேசு அவரிடம்
யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?”
என்று கேட்டார். உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம்
என் ஆடுகளைப் பேணிவளர்.
18
நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்
 என்றார்.

19பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம்
என்னைப் பின்தொடர்
 என்றார்.

 (thanks to www.arulvakku.com)
நமது அழைப்பின் இயல்புகள்
எப்பொழுதெல்லாம் இன்றைய ஞாயிறின் நற்செய்தியை நான் படிக்கிறேனோ , அப்பொழுதெல்லாம், இயேசு, அவர் சுட்டு கொண்டிருந்த மீனை எங்கிருந்து பிடித்தார் ? என்ற ஆர்ர்சரிய கேள்வி என்னுள் எழும். அவரிடம் மீன் வலை இருந்ததா? அல்லது ரொட்டி வாங்கும் பொழுது மீனையும் சேர்த்து வாங்கினாரா? அப்படி இருந்தால், இயேசுவை யாரும் அந்த கடை வீதியில் கண்டு பிடிக்கவில்லையா? அல்லது, மீன் தானே துள்ளி குதித்து கரைக்கு வந்ததா? மேலும், சாத்தான் அவரை சோதித்தது போல, கல்லை ரொட்டி துண்டுகளாக இயேசு மாற்றினாரா  ?
ரொட்டிகளையு, மீன்களையும் பல மடங்காக மாற்றிய அதிசயத்தை மீண்டும் நினைத்து பார்த்தோமானால்,  இப்பொழுதும் அதே உணவு தான், மீனும் ரொட்டி துண்டுகளும். இங்கேயும் அதே அதிசயம். எவ்வளவு சிறியதாக இருந்தாலும், கடவுள் இந்த உலகை உருவாக்கியவர், பல மடங்காக ஆக்க கூடியவர் கடவுள். எல்லாவற்றையும் பல மடங்காக செய்ய கூடியவர். நம்மில் என்ன இருக்கிறது என்பது பெரிய விசயமில்லை, கடவுள் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதே முக்கியம்.
கடவுள் நமக்கு கொடுத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் விருப்பமாய் இருக்கிறோம் என்பதை தான் கடவுள் கேட்கிறார். ரொட்டி துண்டுகளை பல மடங்காக பெருக்கிய அதிசயத்தில் சீடர்கள் அதனை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க சொன்னார். அதே போல , இங்கே மீன் பிடிக்க சொல்லி நிறைய மீன்கள் பெற்ற அதிசயத்தில், "பிடித்த மீன்களில் சிலவற்றை இங்கே கொண்டு வாருங்கள்" எண்று சொல்லப்பட்டு, இயேசு ஏற்கனவே சமைத்து கொண்டிருந்த உணவோடு அதனையும் சேர்த்தனர்.
அதன் பிறகு, இயேசுவின் மேல் இராயப்பர் கொண்ட அன்பினை, "ஆடுகளுடன்" பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லபடுகிறது. இந்த அன்பு எங்கிருந்து வந்தது? ராயப்பர், அவராகவே , சொந்த முயற்சியினால், யாரிடமும் அன்பு செலுத்தவில்லை. நாமும் அதே போல் தான்.  கடவுளால், அவரின் அன்பினை வைத்து தான் ராயப்பார் படைக்கபட்டார். நாமும், கடவுளின் உருவத்தை போல, அவரின் அன்போடு தான் படைக்கப்பட்டோம்.
கடவுளின் எல்லையில்லா அன்பை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள இராயப்பர் அழைக்கபட்டார். அதனால், கடவுளின் இறையரசை இந்த உலகிற்கு தொடர்ந்து பரவலாக்கப்பட வேண்டும். கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? இதற்கு பதில், உங்களிடம் என்ன பகரிந்து கொள்ள இருக்கிறது என்பது அல்ல, மாறாக, எந்த அளவிற்கு பகிர்ந்து கொள்ள தயாராய் ஆவலாய் இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். கடவுளின் அழைப்பிற்கு, "ஆமாம்" என்ற உங்கள் பதில் தான் முக்கியம்.

© 2019 by Terry A. Modica


No comments: