Friday, July 24, 2009

ஜூலை 26, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 26, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17வது ஞாயிறு

2 Kings 4:42-44
Ps 145:10-11, 15-18
Eph 4:1-6
John 6:1-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு.2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்.4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார்.6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார்.8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார்.10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார்.13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே ' என்றார்கள்.15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

(thanks www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் நடந்தது எவையும், தெய்வீகமானது இல்லை என்று பலர் கூற நானே கேள்விபட்டிருக்கிறேன், அது என்னவெனில், "உண்மையான அற்புதம் என்னவென்றால், யேசு, எல்லாரும் கொண்டு வந்த உணவை, ஒன்றாக உட்காரவைத்து, அவர்களை பகிர்ந்து உண்ண வைத்தார் " என்று கூறுவது உண்டு. அதோடு,"அவர்கள் கொண்டு வந்த உணவு எல்லோருக்கும் பத்தவில்லை என்றும், எல்லோரு அதனை பகிர்ந்து கொள்ளவும், மக்கள் அவரவர்கள் தியாகம் செய்து தங்கள் உணவை மற்றவர்களுக்கு கொடுத்தனர். அதனால் தான், நிறைய உணவு மிஞ்சியது" என்று கூறுபவர்களும் உண்டு.

இது மிக சரியாகத்தான் இருக்குமோ?! கடவுளால் உணவை பல மடங்காக பெருக்க முடியாதது போல.

ரொட்டி துண்டுகளையும், மீன்களையும் பல மடங்காக ஆக்கியதற்காக எல்லோரும் திருப்தி அடைந்துவிடவில்லை, அவர்களுக்கு என்ன தேவையாக இருந்தது என்றால், திவ்ய நற்கருணை விருந்தை முன் கூட்டியே ஒத்திகை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். திருப்பலியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நன்றாக கவனித்து, அதனை நம் இதயத்தில் ஏற்றுகொண்டால், யேசு நமது பசியை போக்குவார், மேலும், நமக்கு தேவையானதைவிட அதிகமாகவே கொடுப்பார். கோவிலுக்கு செல்வதற்கு முன்பே, உங்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது? அதனை அதிகமாகவே கொடுக்க முயற்சி செய்கிறார்.


யேசு அற்புதமாக , பல மடங்காக கொடுக்கும் அனைத்தையும் நாம் பெற, நாம் அவரை விசுவசிக்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும். அவர் தேர்ந்தெடுக்கும் சரியான நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயமாக, நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே அவர் கொடுக்க விரும்புகிறார் என்பது நிச்சயம்.

அந்த மலையில் இருந்த சிலருக்கு, மீனை விட ஸிடீக்கை விரும்பியிருக்கலாம், ஆனால், அவர்கள் பெற்றது என்ன என்றால் அவர்களுடைய இதயத்தை, முழு விசுவாசத்தாலும், பரிசுத்த ஆவியில் அவர்கள் வளர தேவையானவற்றை கொடுக்கும் மெசியாவை பெற்றார்கள். அவர்களுடைய சோதனையில் இன்னும் சக்தியுடன் அதனை ஏற்று கொள்ள ஆற்றல் பெற்றார்கள். மேலும், கிறிஸ்துவை இன்னும் பலருக்கு வெளிப்படுத்த செல்லும்போது, அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்ளும் அன்பை பெற்றார்கள்.

நமது திவ்ய நற்கருணை சடங்குகளில், சின்ன நன்மையும், திராட்சை இரசத்தையும் விட, நாம் பெறுவதற்கு அதிகமான் பொருட்கள், விசயங்கள், அன்பளிப்புகள் உள்ளது. , யேசுவிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை? அதிக விசுவாசம்? அதிக நம்பிக்கை? அதிக அன்பு? நீங்கள் திருப்பலிக்கு செல்லும்போது உங்களுக்கு என்ன தேவை என்று யோசித்து செல்லுங்கள், அப்போது, திருப்பலியில் அதனை எதிர்பார்த்து முழுவதுமாக நாம் பங்கு கொள்ளலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 17, 2009

ஜுலை 19, 2009 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜுலை 19, 2009 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 16வது ஞாயிறு

Jer 23:1-6
Ps 23:1-6
Eph 2:13-18
Mark 6:30-34

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
30 திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.31 அவர் அவர்களிடம், ' நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.32 அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.33 அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

(thanks to www.arulvakku.com)

இறைசேவையில் உள்ள ஒவ்வொருவரும், அவர்கள் அழைப்பினால், பல நேரங்களில், களைப்படைந்து விடுகின்றனர். எல்லா நேரங்களும், அவர்களின் சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அது குழந்தைகளின் பராமரிப்பாக இருக்கட்டும், வயதானவர்களை பராமரிப்பதாக இருக்கட்டும், நோயுற்ற கணவனோ அல்லது மனைவியை பார்த்து கொள்வதாகட்டும், அல்லது, கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தும் இறைசேவையாக இருக்கட்டும், அல்லது கோவிலில் ஒரு பொருப்பாளராக இருப்பது, அல்லது குருவாக இருப்பது, இப்படி எந்த சேவையில் இருந்தாலும், ஒவ்வொருவரும், அவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி கொள்வது , ஓய்வெடுப்பது முக்கியம். விடுமுறை, அல்லது வெளியிடங்களுக்கு செல்வது என்று இருக்க வேன்டும். அது தான் நீங்கள் இழந்த ஆற்றலை, சக்தியை மீன்டும் பெற்று கொடுக்கும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
இந்த கட்டளையை நாம் ஒழுங்காக கடைபிடிக்காவிட்டால், நாம் ஒரு தனி மனிதனாக, எல்லோரையும் போல் இல்லாமல் ஆகிவிடுவோம். நமது சுய ஆசைகளுக்காகவும், சரியானபடியும் இல்லாமல் முடிவெடுப்பவர் ஆகிவிடுவோம். முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல தவறான செயல்களை செய்யும், ஆயனாக இருப்போம். இறைசேவைக்கு அழைக்கப்பட்டவர்களை, தவறான வழியில் வழி நடத்தி சென்று பல பிரிவாக அவர்கள் ப்ரிய காரணமாயிருப்போம்.
தொடர்ந்து சேவை செய்யும்போது, நாம் கிறிஸ்துவை போல இல்லாமால், இருப்பதற்கு காரணம், நாம் நம்மிடம் இல்லாததை கொடுக்க முடிவதில்லை.கடவுளின் அன்பை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த, நிறைய சகதி தேவைபடுகிறது. இறையரசிற்கு உற்சாகமாக சேவை செய்வதற்கு நமக்கு நிறைய ஆற்றல் தேவைபடுகிறது. ஆனால், மீன்டும் , நாம் இழந்த ஆற்றலை திரும்ப பெற, ஓய்வெடுத்து, யேசுவிடம் வேண்டி ஜெபம் செய்தால் தான், மீண்டும் நாம் உற்சாகத்துடனும், ஆற்றலுடனும், இறையரசை வெளிப்படுத்த முடியும்.
நாம் நம் மேல் அக்கறை கொள்ளாமல், நம்மை ஒழுங்காக வைத்து கொள்ளாமல், மற்றவர்கள் மேல் எப்படி அக்கறை கொள்ள முடியும்? யேசு நம்மில் வாழ்கிறார். ஆனால், அவர் நம்மை மாற்ற நாம் அனுமதித்தால் தான், அவரை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும், நாம் ஆயனில்லா ஆடுகள் போல் உள்ள மனிதர்களை சந்திக்கிறோம்.அவர்கள் யேசுவை தேடுகின்றனார்,அவர்கள் அதனை புரிந்து கொள்ளாமலேயே. அவர்களுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவைபடுகிறது. யேசுவிடமிருந்து, குணப்படுத்தலையும், அமைதியும் வரவேன்டும் என ஆசைபடுகின்றனர். யேசு அவர்கள் மேல் இரக்கப்படுகிறார் மேலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கின்றார். ஆனால், நாம் யேசுவின் கைகளாகவும், கால்களாகவும் , அவரின் குரலாகவும் இருக்க வேண்டிய நாம், கடினமான வேலைகளால், சோர்வுற்று இருந்தால், பிறகு எப்படி சேவை செய்ய போகிறோம்.?

நமது காயங்கள் கொஞ்சமாக குணப்படுத்தப்பட்டால், மேலும், கிறிஸ்துவின் அமைதியை நாம் பெறாமலும், மற்றவர்களை குனப்படுத்தும், ஆயனாக, அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் கிறிஸ்துவின் கருவியாக இருக்க முடியும்?

நாம், தனியான இடத்திற்கு சென்று யேசுவின் ப்ரசன்னத்துடன், நாம் ஓய்வெடுத்தால் , அவரின் சக்தியூட்டும் அன்போடு திளைத்திருந்து ஓய்வெடுக்க வேன்டும். நாம் தியானத்திற்கோ, அல்லது விடுமுறைக்கோ சென்று விட்டு வந்து, நமது சேவையை தொடரும்போது, மக்கள் நம்மை இன்னும் சாதாரனமாக பார்க்க வில்லை என்றால், நாம் இன்னும் அதிகம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அர்த்தம். நம்மை மீன்டும் புதுப்பிக்கிம், ஆற்றல் பெறும் நேரத்தை குறைத்து விட்டொம். அதிக வேலை சுமையை பற்றி கவலை படாதீர்கள். யேசு நம்மை அழைக்கிறார், "நீங்கள் கொஞசம் என்னோடு ஓய்வெடுங்கள், என்னை போல மாறுவது வரை என்னோடு இருங்கள்" என்று கூறுகிறார்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 10, 2009

ஜூலை 12, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 12, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15வது ஞாயிறு

Amos 7:12-15
Ps 85:9-14
Eph 1:3-14
Mark 6:7-13

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
7 அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.8 மேலும், ' பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 மேலும் அவர், ' நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ' என்று அவர்களுக்குக் கூறினார்;12 அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;13 பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு விசுவாசத்தை பற்றி நமக்கு போதிக்கிறார். கடவுளின் அன்பின் கருவியாக இவ்வுலகில் நாம் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த அழைப்பிற்கு நாம் முழு முயற்சி எடுத்து, அதனை நிறைவேற்ற வேண்டுமானால், கடவுளின் நற்செய்தியை அறிவிப்பவராக நாம் இருக்க வேண்டுமானால், நாம் கடவுளை நம்ப வேண்டும், மேலும் அவர் நமக்கு கொடுத்த ஞானத்தையும்,பல ஆற்றல்களையும் நாம் நம்ப வேண்டும்.


மேலும், நமக்கு என்ன தேவையோ அதனை எல்லாம், கடவுள் எப்பொழுதுமே கொடுத்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். அவர் கொடுப்பதெல்லாம் நமக்கு போதுமானதாக இல்லாதது போலவே நமக்கு தோன்றுகிறது. ஆனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவர் கொடுப்பதெல்லாம், நம்முடைய சுய ஆசைகளுக்காக அதிகம் அவரிடம் எதிர்பார்க்க கூடாது.

இந்த அழைப்பு ஒவ்வொரு திருப்பலியின் முடிவில் மீன்டும் மீன்டும் புதுப்பிக்கபடுகிறது. யேசுவுடன் நமக்கு உள்ள தொடர்பானது, கடவுளின் வார்த்தையாலும், திவ்ய நற்கருணையிலும், கோவில் குழுக்களோடும் சேர்ந்து , மீன்டும் புதுப்பிக்கப்படுகிறோம். அவர் நம்மோடு இருப்பது, நமக்கு அதிக ஆற்றல் தந்து, வெளியே சென்று நம்ம என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை செய்ய முடியும். குருக்களின் மூலம், யேசு, நம்மை இந்த உலகிற்கு அனுப்புவது, யேசு நம்முடனே இருக்கிறார், நம் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு கானத்தகுந்த சாட்சியாகும். திவிய நற்கருணையின் மூலமும், திருப்பலியில் கடைசியில் கொடுக்கப்படும் ஆசிர்வாதத்தின் மூலம், யேசு நமக்கு அதிகாரம் கொடுத்து, கடவுளின் நற்செய்தியை நாம் சந்திக்கும் அனைவரிடமும் அறிவிக்க ஆனையிடுகிறார். அதனால், நாமெல்லாம், மனமாற்றம் செய்பவர்களாக , இந்த உலகத்தில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவருபவர்களாக இருக்க வேண்டும்.

ஆம் , நாம் எல்லாருமே - திவ்ய நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கு கொண்டு, முழுமையாக ஒவ்வொரு செபத்தையும், புரிந்து விழிப்புணர்வுடன், அந்த இறையேசுவை வாங்கும் அனைவரும், ஆண்டவரின் அழைப்பிற்கு உள்ளாகிறோம். அதனால், நம்பிக்கையுடன் செல்லுங்கள், யேசு உங்களை கோவிலிலுருந்து வெளியே சென்று பரிசுத்த ஆவியுடன் துனையுடன் அவரது இறையரசை பரப்ப செய்கிறார்.


எனினும், நாம் நமது பைகளை கட்டும்பொழுது, நமது இறைசேவக்காக என்ன எடுத்து செல்ல வேண்டுமோ , அதனை விட அதிகமாக எடுக்கிறோம். இதன் மூலம் கடவுள் நம்பிக்கையை நாம் வெளியே சொல்ல முடிவதில்லை. அதில் தோற்றுவிடுகிறோம்.

ஆக்கப்பூர்வமான மணமாற்றம் செய்ய கூடிய மத போதகராக இருக்க வேண்டுமானால், நாம் கடவுளிடம் நம் சுய ஆசைகளை துறந்கு அதனை ஆண்டவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சமர்ப்பிப்பு, இனிமேலும், நமது சேவையில் இடர் கொடுக்காமல் இருக்க வேண்டுவோம். அப்போதுதான், அது உண்மையான அர்ப்பணிப்பாகும். இனிமேலும், அதனை நாடாமல் இருக்க வேண்டும். அதுவே உண்மையான சரனடைதல் ஆகும். இன்னும், நாம் அவைகள் மேல் சின்ன ஆசையுடன் இருந்தால், ஒரு கயிறால் கட்டப்பட்டு, நாம் இன்னும் அதன் மேல் இழுக்கப்படுவதற்கு ஒப்பாகும். நம் வாழ்வின் உண்மையான நோக்கத்திலிருந்து வெளியே இருக்கிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 3, 2009

ஜூலை 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14வது ஞாயிறு
Ezek 2:2-5
Ps 123:1-4
2 Cor 12:7-10
Mark 6:1-6


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.2 ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ' இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ' என்றார்.5 அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.6 அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் சொல்வது போல, நமக்கு முன்பே தெரிந்தவர்களிடம், நமது விசுவாசத்தை பகிர்ந்து கொண்டால், நாம் இன்னும் அதிக விசுவாசம் கொள்வோம் , ஆனால் , அவர்களிடம் நாம் பகிர்ந்து கொண்ட பிறகு, நமக்கு அது ஒரு திருப்தியற்ற அனுபவம் ஆகவே இருக்கும்.
யேசுவை போல, நாம் நிராகரிக்கபடுகிறோம், தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம், நம்பிக்கையின்மையுடன், நாம் ஏன் மாறினோம் என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நம்மை முன்மாதிரியாக எடுத்து கொள்ள அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களின் சொந்த தேவைகளுக்காக அவர்கள் மாற வேண்டும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. நாம் அளவு கடந்த சமய வெறி பற்றோடு இருப்பது போல் அவர்களுக்கு தெரியும். இதனையே அவர்கள் சாக்காக எடுத்து கொண்டு, நமது சாட்சியை ஒதுக்கி வாழ முற்படுகிறார்கள்.


யேசு கிறிஸ்து, சாதாரன வாழ்வை விட்டு, சாதாரன நகரிலிருந்து மாறி, அவர் மக்கள் சேவையை ஆரம்பித்த பொழுது, அவருக்கு கொடுமை செய்ய பலர் தூன்டுவர் என தெரிந்திருந்தும், அனைவரும், அவரை போல வாழ வேண்டும், அவர் பின் செல்ல வேன்டும் என விரும்பினார். இது எப்படி பைத்திய தனமாக இருக்கிறது?

இன்னும் நிலைமையை மோசமாக்க, யேசுவுடைய எல்லா நேரங்களையும் செலவிட்டு, ஒவ்வொருத்தரின் சாதாரண வாழ்வையு, மற்றவர்களோடு சாதாரனமாக மற்றவர்களோடு தொடர்பில் இருப்பதையும் , அவர்களின் சாதாரன குணத்தையும், மாற்ற வேண்டும் என உழைக்கிறார், மேலும் அவர் பின செல்லாதவர்களும், அவரை போல மாறவேன்டாம் என விரும்புகிறவர்கள், அவரவரின் சாதாரன வாழ்வை விட்டு மாற வேண்டும் என விரும்புகிறார்.

மனிதர்கள் சவால்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதில்லை. மேலும், தற்போது எப்படி இருக்கிறார்களோ, அப்படியே இருக்க விரும்புகிறார்கள், அவர்களுக்கு தெரிந்த இடம், பழகிய முகங்கள், தெரிந்த வாழ்வு, அப்படியே இருக்க விரும்புகிறார்கள். எனினும், இந்த காரனங்களுக்காக் நாம் அமைதியாக இருந்து விட கூடாது. கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிறிகு அறிவிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். மணமாற்றம், மிக முக்கியமானது என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்த வேன்டும். அப்படிய் செய்ய வில்லை என்றால், நாம் கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்கிறோம். மேலும், யேசுவை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம்.
இந்த இறைசேவையை நாம், நம்முடைய சொந்த மாற்றத்தையும், நம் ஆன்ம வழிகாட்டுதலையும் கொண்டு அவர்களுக்கு சொல்லி நாம் தொடரவேண்டும். இந்த சேவை அவர்கள் விரும்பி கேட்டு, நாம் செய்வது உகந்தது. அவர்களை கட்டாயப்படுத்தி மாற்ற கூடாது.

நீங்கள் நிராகரிக்கபட்டால், , யேசு உங்களை புரிந்து கொள்வார், உங்கள் துயர எண்ணங்கள் அவருக்கு புரியும். இந்த நிராகரிப்பு எல்லாம், கடவுள் உங்களால் சந்தோசமடைந்துள்ளார் என்று நினைத்தாலே நம் துயரமெல்லாம் பரந்து போகும்.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, June 26, 2009

ஜூன் 28, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 28, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 13 வது ஞாயிறு
Wisdom 1:13-15; 2:23-24
Ps 30:2, 4-6, 11-13
2 Cor 8:7, 9, 13-15
Mark 5:21-43

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 5
21 இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.22 தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,23 ' என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் ' என்று அவரை வருந்தி வேண்டினார்.24 இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.25 அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.26 அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.27 அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.28 ஏனெனில், ' நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ' என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.29 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ' என் மேலுடையைத் தொட்டவர் யார்? ' என்று கேட்டார்.31 அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ' இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டவர் யார்? ' என்கிறீரே! ' என்றார்கள்.32 ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.33 அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.34 இயேசு அவரிடம், ' மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ' என்றார்.35 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ' உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ' என்றார்கள்.36 அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ' அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ' என்று கூறினார்.37 அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.38 அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.39 அவர் உள்ளே சென்று, ' ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ' என்றார்.40 அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.41 சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ' தலித்தா கூம் ' என்றார். அதற்கு, ' சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ' என்பது பொருள்.42 உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள்.43 ' இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.



(thanks to www.arulvakku.com)

நாமும் யேசுவின் ஆடையை தொட்டு அதை உணர்ந்தால், நமக்கு எப்படியிருக்கும். மிகவும் பெரிதான விசயமாகும். யேசுவின் அருகில் இருந்தாலே, நாம் உடலாலும், உள்ளத்திலும், மனதளவிலும் நாம் குணமடைவோம். நாம் எப்படி அவரின் ஆடையை தொடமுடியும்? அதுவும் 2000 வருடங்களுக்கு பிறகு?

அவரை தொட நம்மால் முடியும். அதனை தான் யேசுவும் விரும்புகிறார். யார் யேசு, அவர் எந்தளவிற்கு நம்மை அன்பு செய்கிறார் என்பது நமக்கு புரிந்தால், நாம் அவரை நெருங்க முடியும். தொழுகை கூட தலைவருக்கு அது தெரிந்ததினால் தான், அவர் விசுவாசத்தோடு, யேசுவிடம், ". நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் " என்று கூறினார். அவர் கண் முன் தெரிந்த விசயங்களை தான்டி அவர் யேசுவை அறிந்து கொண்டதாலேயே அப்படி கூறினார்.

யேசுவை தெரிந்து கொள்வதற்கு, நாம் தெய்வீக வாழ்வை தெரிந்திருக்க வேண்டும். அந்த தெய்வீக வாழ்வுதான், நம்மை இவ்வுலக வாழ்விலிருந்து மாற்றி யேசுவின் வாழ்க்கை போல மாற்றி, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லும். இன்றைய முதல் வாசகம்: இறப்பு என்பது, கடவுளின் திட்டத்தில் கன்டிப்பாக இல்லை என்று கூறுகிறது. இதனையே தான், யேசு இன்றைய நற்செய்தியில் , அந்த பென்னை இறந்த பின் தான் அவள் வீட்டிற்கே செல்கிறார். கண்டிப்பாக, கடவுள் யேசு அவர் அந்த வீடு செல்லும் வரை உயிரோடயே வைத்திருக்கலாம், ஆனால், இறப்பிலிருந்து அவரால் உயிர்த்தெழ வைக்க முடியும் என்பதை இந்த உலகத்திற்கு காட்டவே யேசு இவ்வாறு செய்தார்.
நாம் மரணத்திற்கு பயந்தால், கிறிஸ்துவின் அருகாமையை ஏற்றுகொள்ளவில்லை என்று அர்த்தம். அவருடைய துனியை நம்மால் தொடமுடியும். ஆனால் நாம் அதனை பார்ப்பதில்லை, அதனால் அதன் மீது நாம் நம்பிக்கை கொள்ளவில்லை. இந்த மாதிரியான நிலைமையில், நாம் கூவி அழும் மக்களை போன்றவர்கள் . யேசு நம்மையெல்லாம் விரட்டி விட்டு, அவர் அற்புதத்தை தொடர்வார்.
நம்முடைய சோதனைகளினால், நம் வாழ்வு மிக மோசமான முடிவை நோக்கி செல்கிறது என்று நாம் பயப்பட்டால், கடவுள் எவ்வளவு ஆற்றல் உள்ளவர் என்பதை நாம் மறந்து விட்டோம். மேலும், நம்மை மீட்க நம் மீது அக்கறையுடன் உள்ளார் என்பதை மறந்துவிட்டொம். நாம் யேசுவின் அருகில் செல்ல வேண்டும். நம் கவனத்தை திசை திருப்பாமலும், எந்த ஒரு சந்தேகம் இல்லாமலும், எவ்வளவு தூரமிருந்தாலும், நாம் யேசுவை நோக்கி செல்ல வேன்டும். நமது கண்கள் யேசுவை மட்டுமே பார்த்து, நமது கைகள் அவரை தொட வேண்டும். இதனையெல்லாம், நமது ஜெபத்தில் செய்ய வேண்டும்.

கடவுள் நம் மேல் தேவையான அளவு அக்கறைபடவில்லை, நமக்கு தேவையான உதவியை செய்ய வில்லை என்று நாம் பயந்தால், யேசு எதற்காக அவரது வாழ்வை நமக்காக தந்தார், தந்தை அவரை அனுப்பினார் என்று இன்னும் நிறைய நேரம் செலவழித்து, நாம் கற்றுகொள்ள வேண்டும்.
(www.gnm.org)

Friday, June 19, 2009

ஜூன் 21, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 21, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Job 38:1, 8-11
Ps 107:23-26, 28-31
2 Cor 5:14-17
Mark 4:35-41

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 4
35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ' என்றார்.36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.40 பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

(thanks to www.arulvakku.com)

நான் வாழும் ப்ளோரிடாவில், தற்போது சூறாவளி காற்று வீசும் காலமாகும். இங்கே சிலர் இந்த புயலை, கடவுள் நமக்கு கொடுக்கும் தண்டனை என நினைக்கின்றனர். மனிதர்களின் தவறுகளுக்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில், எல்லோரும் சரியெனவே கூறுவர். யேசு கடவுளின் கோபக்கணையை தன் உடல் மேல் ஏற்றுகொண்டு, அதன் துன்பங்களை, வலியை ஏற்று, நம் பாவங்களுக்காக, அவரது இரத்தத்தை சிந்தி, மரணமடைந்தார். இதன் மூலம், நாம் நமது பாவங்களினால் கிடைக்க வேண்டிய நீதியிலிருந்து விடுபட்டோம்.
யேசு நம்மில் உள்ள சூறாவளியை அமைதியாக்க விரும்பினார், சூறாவளியை உண்டாக்க அல்ல.
கஷ்டம், துன்பம் எல்லாம் நமக்கு தண்டனை இல்லை. அவைகள் தான் நம்மை கடவுளுக்கு இன்னும் நெருக்கத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பு ஆகும். நாம் எல்லாரும்,நமது வாழ்வில் சூறாவளி காலத்தை சந்திக்கிறோம். ஒவ்வொரு சூறாவளியும், யேசு நம்முடன் ஒவ்வொரு நிமிடமும் நடந்து வருகிறார் என்பதை நமக்கு புரிய வைக்கிறது. மேலும் நமக்கு உதவி தேவைபட்டாலும், இல்லாவிட்டலும் கூட நம்முடனே யேசு கிறிஸ்து இருக்கிறார். இந்த துன்ப காலங்களில் தான், நாம் இன்னும் அதிக அறிவினை பெறுகிறோம், நமது ஞாணம் இன்னும் விரிவடையும், விசுவாசத்தில் இன்னும் உறுதியடைவோம். இன்னும் பனிவும், தாழ்மையும் நமக்கு வரும். மேலும், நாம் கடவுளை நம்பியே இருப்பதால், அந்த துன்ப வேளையில், அவரின் முழு அன்பை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கடவுள் ஒரு மேஜிக் நிபுணர் போல வந்து, நம் ப்ரச்னையை நாம் நினைப்பது போல முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்காமல் இருக்க வேன்டும்.

இன்னும் சில சூறாவளிகள் இவ்வுலகில் தொடர்ந்து வந்து கொண்டிருப்ப்பது, ஏனென்றால், நாம் இன்னும் கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை அவர்களுக்குள் கொண்டு வரவில்லை. நாம் நமது அனுபவங்களின் மூலம் பலனடைந்த பின், நாம், மற்றவர்களும், அவர்களின் துன்பங்களை தாங்கி கொள்ள நாம் உதவ வேன்டும். யேசு இந்த உலகில் உபயோக்கும் கரங்களாக நாம் ஆகவேன்டும். அதன் மூலம், நமது துன்பங்கள், வீனாகவில்லை என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் நம் துன்பங்களினால் ஏற்பட்ட மன் சஞ்சலங்கள்,வருத்தங்கள் எல்லாம் மறைந்து நம்மில் அமைதி ஏற்படும்.

சில நேரங்களில், நாமெ நம்முடைய தவறான முடிவால்(பாவங்களால்), சூறாவளியை , துன்பத்தை ஏற்படுத்தி கொள்கிறோம். ஆனால், கடவுள் நமக்கு தன்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்பவில்லை. கடவுள் அதிகமான சிவப்பு கொடி எச்சரிக்கை செய்கிறார். இருந்தும், நாம் துன்ப சூறாவளியில் மாட்டிவிட்டல், நாம் நமது கொந்தளிப்பை அமைதிபடுத்தி, அவரோடு இனக்கம் கொண்டு, அவரோடு சேரவேண்டும் என அழைக்கின்றார்.
சூறாவளி நம்மால் உண்டானதோ அல்லது, இயற்கையை உண்டானதோ, இன்றைய நற்செய்தியில் சீடர்கள் கூறுவது போல "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? " என்று அவர்கள் போல் நாமும் கூவி அழுதால், யேசு " ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு குறைவான விசுவாசமே உள்ளது!, எனது அமைதி ஏற்கனவே இங்கு இருக்கிறது" என்று கூறுகிறார்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, June 12, 2009

ஜூன் 14 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 14 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
Exodus 24:3-8
Ps 116:12-13, 15-18
Heb 9:11-15
Mark 14:12-16, 22-26


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 14
12 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும்
அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.13 அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.14 அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ' நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ' என்று போதகர் கேட்கச் சொன்னார் ' எனக் கூறுங்கள்.15 அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ' 16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
22 அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் ' என்றார்.23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.24 அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். 25 இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.26 அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் நற்கருணை மற்றும் யேசுவின் திரு இரத்தத்தை பற்றியும், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்' மற்றும், 'மீட்பின் கிண்ணம்' என்று குறிப்பிடுகிறது. உங்களுக்கு திவ்ய நற்கருணை எந்த அளவிற்கு முக்கியம்?



கிறிஸ்து நமது தலைமை குருவாக பணி செய்யவே இந்த உலகிற்கு வந்தார். பழைய ஏற்பாட்டில் உள்ள யூத குருக்கள், மக்களின் பாவத்திற்கு பரிகாரமாக , ஆட்டின் , கன்று குட்டியின் இரத்தத்தை கொடுக்க சொன்னது போல் இல்லாமல், யேசு நமது பாவங்களுக்காக .அவரின் சொந்த இரத்தத்தால், நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். யேசு "'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்." என்று கூறினார்.. இது தான் புதிய உடன்படிக்கை. மற்ற எந்த குருக்களும் இல்லாமல், நமக்காக நித்திய வாழ்வை பெற்று தந்தார்.

கடவுளின் இரத்தத்தால் மட்டுமே இந்த வெற்றியை கொடுக்க முடியும். ஏனெனில், எவ்வளவு தான், நாம் நல்ல எண்ணங்களை கொண்டிருந்தாலும், குருக்கள் எவ்வளவு பரிசுத்தமாக இருந்தாலும், மீன்டும் , மீன்டும் நாம் பாவத்தைல் விழுந்துவிடுகிறோம். யேசு மட்டும்தான், பரிசுத்தமான மனிதனாக இருந்து, அவரது தெய்வீகம் சாவை வென்றது, அவரால் தான், நித்த்ய வாழ்வின் கதவுகளை திருக்க முடியும்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக, யேசு மிகப்பெரிய விலையை கொடுத்தார். மணம் திருந்தாத பாவத்துடன், திருப்பலிக்கு செல்வதால் என்ன ஆகும்.? நாம் தவறு செய்து விட்டொம் என்று தெரிந்தும், கஷ்டப்பட்டு , அதனை மாற்றி கொள்வது என்பது, யேசு நம்மை மாற்ற வேண்டும் என்று நாம் விரும்புவது சுலபமாக இருக்கலாம். இதில் எது பெரியது? இதனை விட பெரியது எது என்றால், திவ்ய நற்கருணையில் அனைத்து பலன்களையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்று நாம் விரும்புவது ஆகும்.

நம் பாவங்களை நாம் தூர எறிந்து, அதற்கு பரிகாரம் செய்யாமல், நாம் கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் பெறுவது, யேசு, நமக்காக அவர் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசை (அவர் நமக்காக இறந்தார்) நாம் நிராகரிப்பதற்கு சமமாகும். அவர் நமக்காக ஏற்றுகொண்ட , பெருந்துயரை நினைத்து, நாம் அவரின் ப்ரசன்னத்தை, அவரின் இருப்பை, நற்கருணை அருட்சாதனத்தில் இல்லாமல் இருந்தால் நமக்கு நலமாய் இருக்கும் என நாம் நினைப்பது அவர் கொடுத்த அன்பளிப்பை ஏற்று கொள்ளாததற்கு சமம்.

தொடர்ந்து, நமக்கு அளிக்கப்படும் பாவ மன்னிப்பை பெறுவதற்கு , நாம் மனந்திருந்தியிருக்க வேண்டும், நமது பாவங்களை நினைத்து வருந்தி பிறகு நாம் யேசுவை, திருப்பலி அருட்சாதனத்தில், ஏற்று கொள்ள வேண்டும், அப்படி மனம் திரும்பாமல் அவரை ஏற்று கொள்வது, அவரை அவமதிப்பது போல ஆகும். அதே போல யேசுவை கொண்டு நமது பாவங்களை கழுவ நாம் அனுமதிக்காமல் இருப்பதும், அவரை இழிவுபடுத்துவது போல ஆகும்.

பரிசுத்த கடவுளின் திரு உடலும், திரு இரத்தமும், நம்மை அவரை போல ஆக்குவதற்கு , உள்ள ஆற்றல் உள்ளது. திருப்பலியை விட்டு நாம் வெளியேறும்போது, வேறு மனிதராக , திருப்பலிக்கு முன் வந்தது போல இல்லாமல் வெளியேறவேண்டும். இது கடவுளின் திட்டம். முதன்மை குருவாக அவர் தொடர்ந்து பனியாற்றி கொன்டிருக்கிறார். இன்னும் அவர் பனி இன்னும் முடியடையவில்லை.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm