Friday, April 15, 2011

ஏப்ரல் 17, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 17, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
குருத்து ஞாயிறு

Procession: Matt. 21:1-11
Isaiah 50:4-7
Ps 22:8-9,17-20,23-24
Philippians 2:6-11
Matthew 26:14--27:66

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 26


காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்
(மாற் 14:10 - 11; லூக் 22:3 - 6)
14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,15 ' இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்
(மாற் 14:12 - 16; லூக் 22:7 - 14)
17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.18இயேசு அவர்களிடம், ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ' எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ' என்றார்.19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல்
(மாற் 14:17 - 21; லூக் 22:21 - 23; யோவா 13:21 - 30)
20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ' ஆண்டவரே, அது நானோ? ' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.23 அதற்கு அவர், ' என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும் ' என்றார்.25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் ' ரபி, நானோ? ' என அவரிடம் கேட்க இயேசு, ' நீயே சொல்லிவிட்டாய் ' என்றார்.
ஆண்டவரின் திருவிருந்து
(மாற் 14:22 - 26; லூக் 22:15 - 20; 1கொரி 11:23 - 25)
26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ' இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் ' என்றார்.27பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ' இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.30 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.
பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்
(மாற் 14:27 - 31; லூக் 22:31 - 34; யோவா 13:36 - 38)
31 அதன்பின்பு இயேசு அவர்களிடம், ' இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ' ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது.32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார்.33 அதற்குப் பேதுரு அவரிடம், ' எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன் ' என்றார்.34 இயேசு அவரிடம், ' இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் 'என்றார்.35 பேதுரு அவரிடம், ' நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ' என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.
கெத்சமனித் தோட்டத்தில் இயேசு
(மாற் 14:32 - 42; லூக் 22:39 - 46)
36 பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ' நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறி,37 பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.38 அவர், ' எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.39பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, ' என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ' என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.40 அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ' ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?41 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார்.42 மீண்டும் சென்று, ' என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் ' என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.43 அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன.44 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.45 பிறகு சீடர்களிடம் வந்து, ' இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார்.46 எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ' என்று கூறினார்.
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்
(மாற் 14:43 - 50; லூக் 22:47 - 53; யோவா 18:3 - 12)
47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.48 அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.49 அவன் நேராக இயேசுவிடம் சென்று, ' ரபி வாழ்க ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.50 இயேசு அவனிடம், ' தோழா, எதற்காக வந்தாய்? ' என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.51 உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.52அப்பொழுது இயேசு அவரிடம், ' உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.53 நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. 54 அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ' என்றார்.55 அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே;56 இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன 'என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு
(மாற் 14:53 - 65; லூக் 22:54 - 55, 63 - 71; யோவா 18:13 - 14, 19 - 24)
57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள்.58 பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.59 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.60 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர்.61அவர்கள், ' இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ' என்று கூறினார்கள்.62 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ' என்று கேட்டார்.63 ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ' நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ' என்றார்.64 அதற்கு இயேசு, ' நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் 'என்றார்.65 உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ' இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே.66 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இவன் சாக வேண்டியவன் ' எனப் பதிலளித்தார்கள்.67 பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,68 ' இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல் ' என்று கேட்டனர்.
பேதுரு மறுதலித்தல்
(மாற் 14:66 - 72; லூக் 22:56 - 62; யோவா 18:15 - 18, 25 - 27)
69 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே ' என்றார்.70 அவரோ, ' நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை ' என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார்.71 அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, ' இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் ' என்று அங்கிருந்தோரிடம் சொன்னார்.72 ஆனால் பேதுரு, ' இம்மனிதனை எனக்குத் தெரியாது ' என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.73 சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ' உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ' என்று கூறினார்கள்.74 அப்பொழுது அவர், ' இந்த மனிதனை எனக்குத் தெரியாது ' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று.75 அப்பொழுது, ' சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

அதிகாரம் 27

இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்
(மாற் 15:1; லூக் 23:1 - 2; யோவா 18:28 - 32)
1 பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.2 அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
யூதாசின் தற்கொலை
(திப 1:18 - 19)
3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி,7கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ' இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.
இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்
(மாற் 15:2 - 5; லூக் 23:3 - 5; யோவா 18:33 - 38)
11 இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்டான். அதற்கு இயேசு, ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று கூறினார்.12மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.13 பின்பு பிலாத்து அவரிடம், ' உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா? ' என்றான்.14 அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.
இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்
(மாற் 15:6 - 15; லூக் 23:13 - 25; யோவா 18:39 - 19:16)
15 மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம்.16 அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். 17 மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், 'நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?' என்று கேட்டான். 18ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.19 பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ' அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன் ' என்று கூறினார்.20 ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள்.21 ஆளுநன் அவர்களைப் பார்த்து, ' இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன? ' எனக் கேட்டான். அதற்கு அவர்கள் ' பரபாவை ' என்றார்கள்.22 பிலாத்து அவர்களிடம், ' அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டான். அனைவரும், ' சிலுவையில் அறையும் ' என்று பதிலளித்தனர்.23 அதற்கு அவன், ' இவன் செய்த குற்றம் என்ன? ' என்று கேட்டான். அவர்களோ, ' சிலுவையில் அறையும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.24 பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, ' இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் ' என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.25 அதற்கு மக்கள் அனைவரும், ' இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ' என்று பதில் கூறினர்.26 அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்
(மாற் 15:16 - 20; யோவா 19:2 - 3)
27 ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்;28 அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர்.29 அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ' யூதரின் அரசரே, வாழ்க! ' என்று சொல்லி ஏளனம் செய்தனர்;30 அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்;31 அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.
இயேசுவை சிலுவையில் அறைதல்
(மாற் 15:21 - 32; லூக் 23:26 - 43; யோவா 19:17 - 27)
32 அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.33 ' ' மண்டையோட்டு இடம் ' என்று பொருள்படும் ' கொல்கொதா ' வுக்கு வந்தார்கள்;34 இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.35 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;36 பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்;37 அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் ' இவன் யூதரின் அரசனாகிய இயேசு ' என்று எழுதப்பட்டிருந்தது.38 அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.39 அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ' கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள்.40 நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.41 அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர்.42 அவர்கள், ' பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்.43 கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ' நான் இறைமகன் ' என்றானே! ' என்று கூறினார்கள்.44 அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
இயேசு உயிர் விடுதல்
(மாற் 15:33 - 41; லூக் 23:44 - 49; யோவா 19:28 - 30)
45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.46 மூன்று மணியளவில் இயேசு, ' ஏலி, ஏலி லெமா சபக்தானி? ' அதாவது, ' என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்று உரத்த குரலில் கத்தினார்.47 அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ' இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர்.48உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.49 மற்றவர்களோ, 'பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்' என்றார்கள். 50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.51 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன.52 கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.54 நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்.55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.56 அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.
இயேசுவின் அடக்கம்
(மாற் 15:42 - 47; லூக் 23:50 - 56; யோவா 19:38 - 42)
57 மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார்.58 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.59 யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி,60 தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.61 அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.
கல்லறைக்குக் காவல்
62 மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். 63 அவர்கள், ' ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ' மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் ' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.64ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ' இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ' என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் ″ என்றனர்.65 அதற்குப் பிலாத்து அவர்களிடம், ' உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள் ' என்றார்.66 அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

(thanks to www.arulvakku.com)


‘Passion’ என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. கிறிஸ்துவ மதத்தில், 'passion' என்றால், இயேசு நம் பாவங்களுக்காக அதற்கு பரிகாரமாக, சிலுவை துன்பத்தை ஏற்று கொண்டு, அவர்களிடம் அடி வாங்கியும், எல்லையில்லா துன்பத்தை ஏற்று கொண்டும் நமக்காக மரணமடைந்து உயிர்த்தெழுந்ததும், தான் ஆகும்.


அதிக ஆழ்ந்த அன்பையும், கவர்ச்சியையும், ஏன் இன்னும் காம உணர்வுகளையும் கூட இந்த உலகம், '' என்று சொல்கிறது.
நாமும், இந்த வார்த்தையை (passion), அதிக ஊக்கத்திற்கும் , உற்சாகத்திற்கும் பயன்படுத்துகிறோம். மேலும், இயேசு, அவர் கல்வாரி பாதையில் நமக்காக மிகவும் ஆர்வத்துடன் சிலுவை சுமந்தார் என்று கூறிகொள்கிறோம். இயேசு அந்த பெரிய வெள்ளியில் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும், காட்டிய ஆழ்ந்த அன்பை நாம் 'compassion' என்று கூறுகிறோம். '' என்றால் கருணையுள்ள அன்பாகும். நாம் மற்றவர்களுக்காக அவர்களோடு அவர்களின் துன்பத்தில் இனைந்து நடக்கும்பொழுது, அவர்கள் வேதனையும், நாமும் அனுபவிக்கிறோம். இது தான் அழ்ந்த அன்பாகவும், பரிசுத்த அன்பாகவும் இருக்கிறது.


இன்றைய குருத்து ஞாயிறின் நற்செய்தி மற்றும் வாசகங்களை கூர்ந்து கவனித்து வாசித்தீர்களானால், இயேசு நம் மேல் எவ்வளவு ஆழ்ந்த அன்பு வைத்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இயேசுவை முழு மனதோடும், ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் ஏற்று கொள்ளும் மக்களையும், அவரை உதாசீனப்படுத்துவர்களாகவும் உங்களை வைத்து பாருங்கள்.

இயேசுவின் கடைசி நேரத்தில், எவ்வளவு வலியையும் வேதனையையும் உங்கள் மேல் உள்ள ஆழமான அன்பினாலும், கருணையினாலும் தாங்கி கொண்டிருப்பார் என்று பாருங்கள். நீங்கள் அவரை எவ்வளவு துன்புறுத்தினாலும், , இயேசு உங்கள் மேல் மாறாத அன்பு கொண்டுள்ளார். நீங்கள் மற்றவகள் மேல் அக்கறையும், இரக்கமும் காட்டாமல் இருக்கும்போழுது இயேசு துன்பப்படுகிறார். அவர் உங்கள் மேல் அன்பு கொண்டுள்ளார் என்பதை நினைத்து சந்தோசப்படுங்கள், இந்த சந்தோசமே உங்களை பரிசுத்த வாழ்வில் வாழவும், மற்றவர்களுக்கு இறையன்பை தெரிவிக்கவும் உங்களை மென்மேலும் வளர்க்கும்.


© 2011 by Terry A. Modica

Friday, April 8, 2011

ஏப்ரல் 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு


Ezekiel 37:12-14
Ps 130:1-8
Romans 8:8-11
John 11:1-45

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 11


இலாசர் இறத்தல்
1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். 2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, ' ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான் ' என்று தெரிவித்தார்கள்.4 அவர் இதைக் கேட்டு, ' இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார் ' என்றார்.5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.7 பின்னர் தம் சீடரிடம், ' மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள் ' என்று கூறினார்.8 அவருடைய சீடர்கள் அவரிடம், ' ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா? ' என்று கேட்டார்கள்.9 இயேசு மறுமொழியாக, ' பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை' என்றார். 11 இவ்வாறு கூறியபின், ' நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் ' என்றார்.12 அவருடைய சீடர் அவரிடம், ' ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார் ' என்றனர்.13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.14 அப்போது இயேசு அவர்களிடம், ' இலாசர் இறந்து விட்டான் ' என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,15 ' நான் அங்கு இல்லாமல் போனது பற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள் ' என்றார்.16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ' நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் ' என்றார்.
நம்புவோர் வாழ்வர்
17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. 19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.21 மார்த்தா இயேசவை நோக்கி, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் ' என்றார்.23 இயேசு அவரிடம், ' உன் சகோதரன் உயிர்த்தெழுவான் ' என்றார்.24 மார்த்தா அவரிடம், ' இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும் ' என்றார்.25 இயேசு அவரிடம், ' உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா? ' என்று கேட்டார்.27 மார்த்தா அவரிடம், ' ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன் ' என்றார்.
இயேசு கண்ணீர் விடுதல்
28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ' போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார் ' என்று காதோடு காதாய்ச் சொன்னார்.29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் ' என்றார்.33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,34 ' அவனை எங்கே வைத்தீர்கள்? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' ஆண்டவரே, வந்து பாரும் ' என்றார்கள்.35அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.36 அதைக் கண்ட யூதர்கள், ' பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு! ' என்று பேசிக் கொண்டார்கள்.37 ஆனால் அவர்களுள் சிலர், ' பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா? ' என்று கேட்டனர்.
இலாசர் உயிர்பெறுதல்
38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.39 ' கல்லை அகற்றி விடுங்கள் ' என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ' ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! ' என்றார்.40 இயேசு அவரிடம், ' நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா? 'என்று கேட்டார்.41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ' தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன் ' என்று கூறினார்.43இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், ' இலாசரே, வெளியே வா ' என்று கூப்பிட்டார்.44இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ' கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள் ' என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்
Thanks to www.arulvakku.com



தவக்காலம் ஒன்றும், தியாகம் செய்வதும், துன்புறுவதும் மட்டும் இல்லை. தவக்கால்ம் புதிய வாழ்விற்கு வழிநடையாக இருக்கிறது. பெரிய வெள்ளி ஒன்றும் , சாத்தானும் , வலியும், மரணம் மட்டும் இல்லை. பெரிய வெள்ளி தான், இயேசு நமக்கு புதிய வாழ்வினை நமக்கு திறந்து காட்டுகிறார்.


துன்புறுவதும், மரணமும் தவக்காலத்தில் நடக்கும் ஒரு செயல் தான் (இது வருடத்தில் எல்லா காலங்களிலும் நடக்கலாம்). மேலும், விரதம் இருப்பதாலும், நமது சுய விருப்பங்களை தள்ளி வைப்பதும் தவக்காலத்தில், நாம் தியாகம் செய்கிறோம். பிறருக்கு உதவுவதிலும், கோவிலில் அதிக நேரம் செலவிடுவது தவக்காலத்தில் தான், ஆனால் இதுவெல்லாம், நம் விண்ணக பயனத்தின் பேருந்துகளாகும்.

நமது கஸ்டத்தையும், தினமும் நாம் அடையும் மரணத்தையும் (நாம் கடவுளை அனுமதித்தால்), கடவுள் எடுத்துகொண்டு, நாம் இரக்கத்திலும், விடா முயற்சியுடனும், திருச்சபையின் சேவையிலும் நம்மை வளர உதவி செய்கிறார். நாம் நமது தியாகத்தின் மூலம், கடவுளின் சீடராய் இருக்க கற்று கொள்கிறோம். கட்டுபாடுடன் இருக்க கற்று கொள்கிறோம். இதன் மூலம், நமது கொள்கைகளையும், இலட்சியங்களையும் இன்னும் கூர்மையாக்கி கொள்கிறோம். பரிசுத்த வாழ்வில் இன்னும் உறுதியாக இருப்போம். ஆனால் பயனம் செய்வது மட்டுமே நாம் செல்ல வேண்டிய இடமாக இருக்காது.



மீட்பின் வாழ்வை அடைவது தான் தவக்காலத்தின் குறிக்கோளாகும்: விசுவாசத்தை புதுபித்து கொள்வதும், பாவங்களை கழுவி புது வாழ்விற்கு அடியெடுத்து வைப்பதும், ப்ரச்னையான உறவுகளை மீண்டும் புதுப்பித்து கொள்வதும், மேலும் கடவுளின் ஆவியின் அதிகமாக வாழ்வதும் ஆகும்.


உங்களுக்கு , உங்கள் விசுவாசத்திற்கான முக்கியமான நாள் எது? ஈஸ்டர் ஞாயிறு அல்லது பெரிய வெள்ளியா? அந்த துயரமான , கோரமான கல்வாரி மலையில் நடந்த பெரிய வெள்ளி , ஈஸ்டர் ஞாயிறுக்கு முக்கியமான நாள் தான், ஆனால், நாம் இப்பொழுது மிட்பின் காலத்தில் இருக்கிறோம், கத்தோலிக்கர்கள் எல்லோரும் ஈஸ்டர் மக்கள் ஆவர். இதற்கு அர்த்தம் என்ன என்றால், எந்தவொரு தீங்கும் நமக்கு ஏற்படாது, ஏனெனில், இயேசு கிறிஸ்து தான் நமது வாழ்வின் கடவுள் ஆவார்.

இயேசுவே அவர் தான் மீட்பர் என்றும், வாழ்விற்கும், மரணத்தையும் வென்றே அவர் நீருபீத்துவிட்டார். இப்பொழுது உங்களிடமும், இன்னும் அவரை கவனித்து கொண்டிருப்பவர்களுக்கும் மீன்டும் அவர் தான் மீட்பு என்பதை நிருபீக்க ஆசைபடுகிறார்.


© 2011 by Terry A. Modica

Saturday, April 2, 2011

3, ஏப்ரல்,2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

3, ஏப்ரல் 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
1 Samuel 16:1b,6-7,10-13a
Psalm 23:1-6
Ephesians 5:8-14
John 9:1-4


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 9


பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல்
1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.2 ' ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா? ' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.3 அவர் மறுமொழியாக, ' இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.

(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவிடம் நாம் மணம் மாறுவது என்பது ஒரு தொடர் செயலாகும். இன்றைய நற்செய்தியில் வரும் குருடனின் வாழ்வு இந்த விசுவாச பயனத்தை பிரதிபலிக்கிறது.

அந்த குருடர் இயேசுவிடம் அவராக செல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு தான் அவனிடம் சென்றார். அவருக்கு என்ன கிடைக்க போகிறது என்பதனை அறிந்து அந்த குருடர், இயேசுவிற்கு கீழ்படிந்தார். மணம் மாறுதல், இயேசு நம்மை நோக்கி வந்து நிற்கும்பொழுது, நாம் அவரை தொட அனுமதித்தால், தான் நமக்கு உண்மையான மண மாறுதல் ஆரம்பமாகும். பிறகு இயெசு நமது கண்களை திறந்து உண்மையை காண செய்கிறார். ஆனால் நாம் உடனே அதனை புரிந்து கொள்வதில்லை.


அந்த குருடனின் அருல் இருப்பவர்கள், அவருக்கு எப்படி குணமானது என்று கேட்ட பொழுது, அந்த குருடருக்கு இயேசுவை யார் என்று தெரியவில்லை, இயேசு ஒரு சாதாரன மனிதன் என்று தான் நினைத்து கொண்டிருந்தார்.
பிறகு, பரிசேயர்கள் ,இயேசுவோடு விவாதித்து கொண்டு இருக்கும்பொழுது, பார்த்த அந்த் குணமடைந்த குருடர், இயேசு சாதாரண மனிதருக்கு மேலானவர் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. இயேசு ஒரு இறைவாக்கினர் என்று முடிவு செய்தார்.யூதர்கள் இறைவாக்கினர்களை பரிசுத்தமும், நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் அவர்களை போற்றி வாழ்த்தினார்கள்.


அடுத்ததாக, பரிசேயர்கள் இயேசுவை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாலும், யூத சபையிலும், தேவாலயத்திலும்,கிறிஸ்து தான் நான் என்று இயேசு கூறி கொள்வதால், யுதர்கள், இயேசுவை விரட்ட காத்திருந்தலாலும், குருடனாக இருந்தவர், இயேசு உண்மையாகவே மெசியாகவா தான் இருப்பார் என்று நினைக்க தொடங்கினார். குருடரின் மணக்குருடையும் இயேசு திறந்த்தினால், அவருக்கு எல்லா உணமைகளும் விளங்கியது


கடைசியாக , பரிசேயர்கள் அந்த குருடரை, மிகவும் கீழ்தரமாக நடத்தயதால், இயேசு அவரை வெளியே அனுப்பி, பரிசேயரின் நடத்தைகளுக்கு பதிலடி கொடுத்தார். இவ்வளவு அக்கறையுடன் இயேசு அவரை நடத்திய விதத்தினால் , அவர்தான் இயேசு என்று கண்டு கொண்டார்.
மணம் மாறுதல், - நமது மண கண்களை சுத்தபடுத்துவதும் ஆகும். - இது நமது துன்ப நேரத்தில் நடக்கும் பொழுது,கடவுள் நம் மேல் எவ்வளவு அக்கறையும், அன்பும் வைத்த்துள்ளார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.


© 2011 by Terry A. Modica

Friday, March 25, 2011

மார்ச் 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு

Exodus 17:3-7
Ps 95:1-2, 6-9
Romans 5:1-2, 5-8
John 4:5-42


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 4


சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும்

.5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். 7அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.8 இயேசு அவரிடம், ' குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் ' என்று கேட்டார்.9அச்சமாரியப் பெண் அவரிடம், 'நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. 10 இயேசு அவரைப் பார்த்து, ' கடவுளுடைய கொடை எது என்பதையும் ' குடிக்கத் தண்ணீர் கொடும் ' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார் ' என்றார்.11 அவர் இயேசுவிடம், ' ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம் ' என்றார்.13 இயேசு அவரைப் பாhத்து, ' இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் ' என்றார்.15 அப்பெண் அவரை நோக்கி, ' ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது ' என்றார்.16 இயேசு அவரிடம், ' நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும் 'என்று கூறினார்.17 அப்பெண் அவரைப் பார்த்து, ' எனக்குக் கணவர் இல்லையே ' என்றார். இயேசு அவரிடம், ' எனக்குக் கணவர் இல்லை ' என நீர் சொல்வது சரியே.18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே ' என்றார்.19 அப்பெண் அவரிடம், ' ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே ' என்றார்.21 இயேசு அவரிடம், ' அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். 24கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும் ' என்றார்.25 அப்பெண் அவரிடம், ' கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார் ' என்றார்.26 இயேசு அவரிடம், ' உம்மோடு பேசும் நானே அவர் ' என்றார்.27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ' என்ன வேண்டும்? ' என்றோ, ' அவரோடு என்ன பேசுகிறீர்? ' என்றோ எவரும் கேட்கவில்லை.28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,29 ' நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ! ' என்றார்.30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.31 அதற்கிடையில் சீடர், ' ரபி, உண்ணும் ' என்று வேண்டினர்.32 இயேசு அவர்களிடம், ' நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது ' என்றார்.33 ' யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ ' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.34 இயேசு அவர்களிடம், ' என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.35 ″ நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை ″ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.36 அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். 37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.38 இவ்வாறு ' விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர் ' என்னும் கூற்று உண்மையாயிற்று ' என்றார்.39 \'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்\' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வவூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். 40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.42 அவர்கள் அப்பெண்ணிடம், ' இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம் ' என்றார்கள்.

(thanks to www.arulvakku.com)


நீங்கள் எதற்கு தாகமாக இருக்கிறீர்கள்? நம்மில் எது குறையாக இருக்கிறதோ அப்பொழுது தான் நமக்கு தாகம் ஏற்படும். நமது உடலுக்கு தண்ணீர் தேவை. நமது உடலுக்கு தண்ணீர் தேவைபடும்போது, நமக்கு தாகம் ஏற்படுகிறது, அப்போது தான் நமது உடல் முழு சக்தியுடனும் நலமாகவும் இருக்கும்.


எப்படி நம் உடலுக்கு தண்ணீர் தேவையோ, அதே போல நமது பரிசுத்த வாழ்விற்கும், நீர் தேவைபடுகிறது. ஆனால், இது வேறு மாதிரியான நீர், வாழும் தண்ணீர், ஞானஸ்நாண தண்ணீர், அது நம் நித்திய வாழ்விற்கு நம்மை சுத்தப்படுத்த்தும் தண்ணீர். இந்த தீர்த்தத்தால் தான், நமக்கு கிறிஸ்துவின் அபரிதமான அன்பும், செல்வமும் நம் வாழ்வில் இருக்கும்.


பரிசுத்த ஆவி நமக்கு வாழ்வை தருபவர். கடவுளின் ஆவியின் ப்ரசன்னத்தை பைபிளில் குறியீடு காட்டும்பொழுது, அந்த குறியீடுகளில் வாழ்வு தரும் நீரும் ஒன்று. இதிலிருந்து, இயேசு அந்த சமாரிய பெண்ணிற்கு, பரிசுத்த ஆவியை தான் கொடுப்பதாக கூறினார் என்பதை நாம் அனுமானிக்க முடியும். ஏன்? இன்னும் சில நாட்களில், பரிசுத்த ஆவியானவர் எல்லோருக்கும், பெந்தகோஸ்தே நாளில் இறங்கி வர இருக்கிறார்.


அந்த பெண் உண்மையை அறிய விரும்பினாள்; பரிசுத்த ஆவியானவர் உண்மை. இயேசு அந்த பெண் விரும்பியதை கொடுக்க விரும்பினார். அந்த பெண் அதன் முலம் மனந்திருந்தி, மீட்பை அவள் பெற்று , அந்த புதிய வாழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என் இயேசு விரும்பினார்.



போதிய அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் தான், நமக்கு தாகும் எடுக்கும். அதே பரிசுத்த வாழ்வின் தாகம், நமக்கு வேறு வடிவங்களில் ஏற்படும்: மனசஞ்சலம், பயம், நாமே பாவத்திற்கு இடமளித்தல், அல்லது ஏதாவது ஒரு உணர்வு எதையோ நாம் இழந்து விட்டதை போல இருக்கும்.


ஏன், நாம் பரிசுத்த வாழ்வில் , நமக்கு பலதும் இல்லாமல் இருக்கிறது? ஏனெனில், அந்த கிணற்றடியில் இருந்த பெண்ணை போல, நாமும் பாவியாய் இருக்கிறோம், கடவுள் நம்மை குணப்படுத்தவேண்டும். கடவுள் நம்மை குணப்படுத்துகிறார்? போதுமான அளவிற்கு கடவுள் நமது அன்பை கொடுத்து, நம்மை குணப்படுத்துகிறார். ஆனால், அதனை முழுமையாய் நாம் பெறுவதற்கு, நாம் அவர் வார்த்தைகளை முழுமையாக கேட்டு, உண்மையுடன் மாறவேண்டும்.

© 2011 by Terry A. Modica

Friday, March 18, 2011

மார்ச் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Ps 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9



மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 17


இயேசு தோற்றம் மாறுதல்
(மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.4 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார்.5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது.6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் ' என்றார்.8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது ' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்

(thanks www.arulvakku.com)


அந்த உயர்ந்த மலையில், இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது, உண்மையான இயேசுவின் ஒளி எல்லோருக்கும் தெரிந்தது. கடவுள் தந்தை " என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று சொன்னார்.


நாம் இயேசுவின் வார்த்தைகளை, ஒவ்வொரு முறை கேட்கும்போதும், நமது விசுவாசத்தை இன்னும் தெளிவும், ஞாணமும் தெரிய இயேசுவிடம் நம்மை அளிக்கும்போது , இந்த தோற்ற மாறுதல் நடக்கிறது. எனினும், இப்போது, நமது தோற்றமும் மாறுகின்றது.



இந்த தவக்காலத்தில், நாம் கிறிஸ்துவை போல இருக்கிறோமோ என்று பார்த்து, நமது பாவ வாழ்வை விட்டு, மனந்திரும்பொழுது, நம்மில் இருக்கும் இருளை இயேசுவின் ஒளியால் நிரப்ப அனுமதிக்கிறோம். அதனால், மற்றவர்கள் நம் மூலம் இயேசுவை பார்க்கிறார்கள். இயேசுவும், நம்மில் அவரது ஒளியை ஒளிரச்செய்கிறார்.
இயேசுவின் தோற்றம் மாற்றத்தினால், நாமும் நமது அடையாளத்தை காட்டுகிறது. நமது உண்மையான அடையாளம் என்ன? கடவுளின் உருவத்தினால் நாம் உருவாக்கபட்ட்டிருப்பதும், நம்மில் கடவுள் இருப்பதும் ஆகும்.

இயேசு இந்த மலையில் நடந்த தோற்றம் மாறுதல் அனுபவத்திற்கு பிறகு, சிலுவையின் வேதனைகளை ஏற்று கொள்ள தயாரானார். நாமும், கிறிஸ்துவின் ஒளியால், மாற்றபட்ட பிறகு, , நாமும்,மலையை விட்டு இறங்கி, இயேசுவை இவ்வுலகிற்கு காட்ட வேண்டும். எனினும், திமோத்தியின் வாசகத்தில் கூறியுள்ளது போல, நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்பொழுது, நிச்சயம், கடினமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு கல்வாரி சிலுவைக்கு பிறகு, ஒரு ஈஸ்டர் இருக்கும் என்பது நமக்கு ஆறுதலை தரும்.



முதலில், நாம் மலையில், நமது நேரத்தை செலவிட வேண்டும். நிறைய நேரம் அங்கே இருந்து, கடவுளின் ஆற்றல் நம்மில் வரும் வரை ஜெபம் செய்திடல் வேண்டும். பிறகு, நாம் தயாராகிவிட்டோம், உற்சாகபடுத்த படுவோம், நாம் மீட்கப்பட்டுவிட்டோம். அதன் மூலம், நமது பாதையில் ஏற்படும் கஷ்டங்களை நம்மால் தாங்கி கொள்ள முடியும்.


நன்றாக கேளுங்கள். கடவுள் உங்களை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? அந்த தபோர் மலையில் கடவுள் இயேசுவை பற்றி என்ன சொன்னாரோ, அதையே தான் உங்களை பற்றியும் சொல்கிறார். : "இவர் என் அன்பார்ந்த மகன், இவருக்கு செவி சாயுங்கள்" சிலர் உங்க்ளிடம் கேட்பர், சிலர் கேட்க மாட்டார்கள். ஆனால் நாம் எப்படி கடவுளின் ஒளியுடன் ஒளிர்கிறோம் என்பது, எத்தனை பேர் நம்மிடம் கேட்கிறார்கள் என்பது பொறுத்து அல்ல. நமது தோற்ற மாற்றம், இயேசு நம் மேல் அன்பு கொண்டு , நம்மை பரிசுத்த வாழ்விற்கு வாழ அழைப்பதல் ஏற்படுகிறது.


© 2011 by Terry A. Modica

Friday, March 11, 2011

மார்ச் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Genesis 2:7-9; 3:1-7
Ps 51:3-6, 12-13, 17
Romans 5:12-19
Matthew 4:1-11

________________________________________
மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 4


இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.3 சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான்.4 அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,6 ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது.7 இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார்.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

(thanks to www.arulvakku.com)

சோதனைகளை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்? தவக்காலத்தின் முதல் ஞாயிறு நற்செய்தியில், நமக்கு தனியாக சவால் விடப்படுகிறது. அதன் மூலம், நாம் நமது பயனத்தை இயேசுவோடு சேர்ந்து துவக்குகிறோம். இவ்வுலக வாழ்வில், அவரோடு இனைந்து பரிசுத்த இடத்திற்கு செல்வோம்.


இந்த தவக்காலம் மற்ற தவக்காலத்தை போல அல்ல. போன வருடம், உங்களுடைய தேவைகள் வேறாக இருந்தது, வேறு வளர்ச்சியை , முன்னேற்றத்தையும் எதிர்பார்த்தோம்., நமது புரிதலும், உள்நோக்கமும் வேறாக இருந்தது. கடந்த வருடத்திற்கு பிறகு, நிறைய மாற்றங்கள் நடந்து விட்டது. இதுவெல்லாம் , கடவுள் இப்பொழுது நம் வாழ்வில் என்ன செய்ய போகிறார் என்பதற்கு தயார் படுத்துவது ஆகும்.


உங்களுக்கு எந்த வெற்றியை இந்த வருடம் எதிர்பார்க்கிறீர்கள்? எதிலெல்லாம் மீண்டு எழ விழைகிறீர்கள்? அதனை பெற இயேசு உங்களை சிலுவையின் மூலம் அழைத்து செல்வார், அவருடைய கல்லறைக்கும், அதன் பிறகு கடவுளின் ஒளியில் உங்களை அழைத்து சென்று, புதிய வாழ்விற்கு கடவுளின் அன்பை கொடுத்து உங்கள் குறைகளை போக்குவார்.



தவக்காலத்தில் - மெலும் ஒவொரு முறையும், நாம் தியாகம் செய்து நமது துன்பத்தை யேசுவின் பாடுகளோடு இனைக்கும்பொழுது, நாம் இயேசுவை பின் சென்Dரு , அவரின் மீட்போடும் நாமும் சேருகிறோம். இதற்கு நமது சிலுவைகளை நாம் ஏற்று கொண்டு, அந்த துன்பத்தை தழுவிகொள்ள வேண்டும் , கலவாரிமலை பாதையில்தான், நமது வெற்றி வாழ்வையும், புதிய அனுபவத்தையும் நாம் அடைய முடியும்.


இந்த ஈஸ்டர் நமக்கு சாதாரண விடுமுறையாக இல்லாமல், இந்த 40 நாட்களையும், எரிச்சலை கட்டுபடுத்துவதும், தியாகங்களும், புலால் உணவு கட்டுபாடும், அடிக்கடி கோவிலுக்கு சென்றும், ஜெபங்களில் ஈடுபடுவதும், இப்படி, நமது தின வாழ்வில் ஈடுபட்டு நமது தவ நாட்களை கழித்தோமானால் நாம் மீட்பின் வெற்றியை , அதனுடைய ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். நமது பாவ வாழ்க்கையை நினைத்து, மனம் வருந்தை, நாம் மணம் திரும்பும்போது, அதன் ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். மாற்றாக சொல்வதானால், மரணத்தின் மீது உள்ள வெறும் பயத்தை நாம் அனுபவிக்க வேண்டும். - நமது சுய ஆசைகளை சாகடிக்க வேண்டும், இவ்வுலக வாழ்வின் மேல் உள்ள ஆசைகளை சாகடிக்க வேண்டும். கிறிஸ்துவிற்கு எதிரான நமது தின நடவடிக்கைகளை நாம் சாகடிக்க வேண்டும்.


© 2011 by Terry A. Modica

Friday, March 4, 2011

மார்ச் 6, 2011 ஞாயிறு நற்செய்தி

மார்ச் 6, 2011 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 9ம் ஞாயிறு

Deut 11:18, 26-28, 32
Ps 31:2-4, 17, 25
Rom 3:21-25, 28
Matt 7:21-27


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 7


சொல்லும் செயலும்
(லூக் 13:25 - 27)
21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர்.23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன்.
இருவகை அடித்தளங்கள்
(லூக் 6:47 - 49)
24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.27மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் உண்மையான சீடராக எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிரார்: தந்தையின் திருவுளப்படி நடக்க வேண்டும். இயேசுவிடமிருந்து கற்று கொண்டததை உங்கள் தினசரி நடவடிக்கையாக கொள்ளுங்கள்.


இயேசு கிறிஸ்து நற்செய்தி மூலமாகவும், திருச்சபையின் போதனைகள் மூலமும் நம்மிடம் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் அந்த வார்த்தைகளை கேட்பது மட்டும் செய்கிறோம் என்பதோடு இருந்து விட கூடாது. நமது மீட்பு, எப்படி அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்கிறோம் என்பதில் தான் நமது மீட்பு இருக்கிறது. நாம் இயெசுவின் மேல் விசுவாசம் வைத்துள்ளோம் என்று சொல்லி கொண்டு, அவரின் போதனைகளை நாம் செய்யாமல் இருந்தால், நாம் வெறுமனே "கடவுளே, கடவுளே" என்று சொல்பவர்களாக மட்டும் தான் இருப்போம். நாம் கடவுளை பின் தொடர்ந்து மோட்சத்திற்கு செல்வதில்லை.


இயேசு குறிப்பிட்டு சொல்வதை போல, இறையரசோடு நமது தின வாழ்வில் ஒன்றித்து, இவ்வுலக வாழ்வில் இறையரசின் தூதுவராய் இருப்போம், மேலும், நாமும் நமக்கு வரும் சோதனைகளையும், கேளியையும், இம்சையையும் நம்மால் தாங்க்கொள்ள முடியும். நமது நடவடிக்கைகளினால், பெரிய ப்ரச்னை உண்டானால் கூட நம்மால் அதனை எதிர்கொள்ள முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் மரணத்திற்கும், மீட்பிற்கும் இடையிலான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் கடவுளின் அருளாலும், அவரது ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவரது பலம், இவ்வுலக வாழ்வை வெற்றி கொள்ளும்.


இயேசுவின் போதனைகள் நமது வாழ்வை மாற்ற நாம் அனுமதிக்காமல் இருக்கும்பொழுது, நமக்கு சோதனைகள், ப்ரச்னைகள் வந்தால், அவைகள் நம்மை அழித்து விடும், நம் அமைதி குலைந்து விடும். நமது சந்தோசம் போய்விடும். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதையும் நாம் மறந்து விடுவோம். கிறிஸ்துவோடு நாம் ஒன்றித்து இந்த சோதனைகளை எதிர் கொண்டோமானால், நம்மால் இந்த சோதனைகளை எதிர்கொள்ள முடியும். இந்த ப்ரசனைகள் முடிய , கிறிஸ்துவின் ஆற்றலை நாம் அனுமதிக்க வில்லையென்றால், இந்த ப்ரச்னைகள் முடிய இன்னும் கால் தாமதம் ஆகும்.

கிறிஸ்துவின் போதனைகளை இவ்வுலகிற்கு எடுத்து செல்ல வில்லையென்றால், அநியாயங்களும், அநீதியும் மற்றவர்களை அழித்து விடும். அவர்களின் அழிவிற்கு நாம் உடந்தையாகிவிடுகிறோம். அக்கறையின்மை ஒரு பாவமாகும், இது மோட்சத்திற்கு செல்லும் வழியில்லை.


நமது இறப்பிற்கு பிறகு, மோட்சத்திற்கு செல்வதற்கு, நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து, அவரது சிலுவையோடு நம்மையும் இனைத்து,மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு, சாத்தானிற்கு எதிராக இருந்தோமானால், நாம் கடவுளின் சாட்சியாக இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இருப்பதால், பல ப்ரச்னைகள் நம்மை வந்து சேரும், ஆனால் நாம் வீழ்ந்து விடமாட்டொம். ஆனால், இன்னும் நாம் உறுதியாகவும், பரிசுத்தமாகவும் ஆவோம்.



© 2011 by Terry A. Modica