Friday, February 15, 2013

பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Deut 26:4-10
Ps 91:1-2, 10-15
Rom 10:8-13
Luke 4:1-13

லூக்கா நற்செய்தி

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1 - 11; மாற் 1:12 - 13)
1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.3 அப்பொழுது அலகை அவரிடம், ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது.4 அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,6 அவரிடம், ' இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது.8 இயேசு அதனிடம் மறுமொழியாக, ″ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.9 பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;10 ' உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும்11 ' உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது.12 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ″ என்றும் சொல்லியுள்ளதே ' என்றார்.13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.
(thanks to www.arulvakku.com)

நாம் நமது விசுவாசத்தில், மனப்பூர்வமாக இருந்தால்,  இயேசுவின் வாழ்வு தான் நம் வாழ்வாக இருக்கும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெற்று கொண்டும், நாம் அவரோடு இனைகிறோம். நற்செய்தி வாசகம் மூலம், அவரை பார்த்து, அவரோடு மோட்சத்திற்கு செல்கிறோம்.

இந்த தவக்காலத்தில், திருச்சபை ஒவ்வொரு திருப்பலியிலும் கொடுக்கும் நற்செய்தி வாசகங்கள், நமது பயணத்தை செம்மை படுத்த உதவுகிறது. அதனை முழு மனதோடு கேட்டு, அதனை நம் வாழ்வோடு ஏற்று கொண்டால், நாம் கிறிஸ்துவோடு இனைகிறோம்.

இன்றைய நற்செய்தியில்,  நாம் இயேசுவோடு பாலைவனத்திற்கு செல்கிறோம். சோதனைக்குள்ளான உங்கள் ப்ரச்சினைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாவங்கள் உங்களை வாழ்வை எப்படி பாலைவனமாக்கியது என்று நினைத்து பாருங்கள்.

இயேசுவோடு நாம் இனைந்து நடக்கும்போது, அவரின் சாத்தானின் போராட்டத்தோடு,  துன்பத்தோடு நம்மை இனைத்து கொண்டு, சாத்தானை வெற்றி கொள்கிறோம். நமது சோதனைகள், தவறு செய்ய தூண்டும் உணர்வுகள், இயேசுவினுடையதாகிறது. மேலும் அவரோடு இனைந்து நாம் இருப்பதால், நமது சோதனைகள் அவருடையதாகவும் ஆகிறது. அவரோடு இனைந்து, நாம் சாத்தானை ஒதுக்கி, பரிசுத்த வாழ்வில் இருக்கிறோம். சுய கட்டுபாடுடனும் இருக்கவும், சுய நலத்தை விரட்டி அடிக்கவும், திருச்சபை இந்த தவக்காலத்தில் நமக்கு உதவுகிறது: விரதமிருத்தல், மற்றவர்களுக்கு உதவுவது, மனம் திரும்புதல், விசுவாச முனைப்பு,  பாவங்களை தவிர்த்து வாழ்தல், நற்செய்தி வாசகங்களை வாசித்தல், இன்னும் பல.

ஒவ்வொரு முறை நாம் உணவை தவிர்த்து, ஒவ்வொரு பாவத்தை நாம் பாவ சங்கீர்த்தனத்தில், கூறி மனம் திரும்புவதும், ஒவ்வொரு தியாகமும், அதிகரிக்கும் ஜெபங்களும், நற்செய்தி வாசகங்களும், நாம் அனுதின வாழ்வை சுய கட்டுபாடுடனும், அழைத்து சென்று இயேசுவோடு இந்த பாலைவனத்தில் நம்மை இனைக்கிறது.

சாத்தானோடு உண்டான சோதனையில் ,இயேசு உணவை தவிர்த்தார், உடல் அசதியின்றி ஜெபத்தில் ஈடுபட்டார். அதன் மூலம், இந்த தவக்காலத்தின் பின்பு வந்த இறைசேவையில், திடத்துடன் அவரால் ஈடுபட முடிந்தது. இதே போல தான் நமக்கும் இந்த தவக்காலம் இருக்க வேண்டும்.
சாத்தானை பார்த்து நாம் பயம் கொள்ள வேண்டியதில்லை. இயேசு ஏற்கனவே அவர்களை  நமக்காக தோற்கடித்துவிட்டார். முதலில் பாலைவனத்திலும், பிறகு சிலுவையிலும் சாத்தானை தோற்கடித்து விட்டார்.  நமது போராட்டமோ, நம்மை தவறு செய்ய தூண்டும். உணர்வுகளுடனும், நமது பலவீனங்களுடனும், பாவத்தில் விழாமல் இருப்பதற்கும் நாம் போராட வேண்டியுள்ளது  

எப்பொழுதுமே நாம் இயேசுவை பின் செல்ல விரும்புவதில்லை. இதனை தான் இயேசுவிடம் இந்த தவக்காலத்தில் அர்ப்பனித்து விட வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஈஸ்டர், நமக்கு அத்தமுள்ளதாய் இருக்கும். இந்த தவக்காலத்திலிருந்து நாம் ஆற்றலுடனும், உறுதியுடனும் நம் விசுவாசத்தோடு வருவோம்.
© 2013 by Terry A. Modica

Friday, February 8, 2013

பிப்ரவரி 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



பிப்ரவரி 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Cor 15:1-11
Luke 5:1-11

லூக்கா நற்செய்தி (5:1-11)

முதல் சீடரை அழைத்தல்
(மத் 4:18 - 22; மாற் 1:16 - 20)
1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் 'என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
(thanks to www.arulvakku.com)
அடிக்கடி, கடவுள் நாம் கேட்காததை கூட நமக்கு கொடுத்து உதவுகிறார். இன்றைய நற்செய்தியில், இராய்ப்பருக்கும்,ஜேம்சுக்கும், ஜானுக்கும்,  இயேசு அப்படிதான் செய்தார். அங்கே அதிக மீன்களை பிடிக்க உதவினார்.
இயேசுவின்  நோக்கம் என்ன? அவர்களின் படகை இயேசுவுக்கு கொடுத்ததால், இயேசு பதிலுக்கு அவர்களுக்கு நன்மை செய்தாரா? இயேசு உங்களுக்கும் சன்மானமாக கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா?

ஆம், இது சன்மானம் அல்ல. அது மிக பெரிய விசயம்.
நற்செய்தியில், உள்ள கதையை ஒவ்வொன்றாக பார்ப்போம்:
1.   முதலில், மீனவர்களுக்கு இயேசுவை முன்பே தெரியும்; அவர்கள் இயேசுவை “போதகரே” என்று அழைத்தனர். ஏனெனில், அவர்கள் இயேசுவின் சீடர்களாய் இருந்தனர்.
2.   இரண்டாவதாக, இயேசு அவர்கள் எதிர்பார்க்காமலேயே அவர்களுக்கு உதவி செய்தார்.
3.   மூன்றாவதாக, இயேசு அந்த அன்பளிப்பை, அவர்களின் அழைத்தலுக்கானதாக மாற்றினார்.
4.   நான்காவதாக, சீடர்கள் அவர்களுடைய  அனைத்தையும் விட்டு விட்டு, அந்த அழைத்தலுக்கு ஆயத்தமானார்கள்.

கடவுள் நம் வாழ்வில் தலையிடுகிறபொழுது, நம் நன்மைகளுக்காகவும், மற்றவர்களின் நமன்மைகளுக்காகவும் அவர் நமக்கு நல்லது செய்கிறார். நாம் சமூகத்தில் இனைந்து இருக்கிறோம். கடவுள் குடும்ப சமூகத்தில் இருக்கிறோம். தனியாக கடவுளோடு நாம் இனைந்து இருக்க முடியாது. கடவுளோடு ஜெபத்திலும், திவ்ய நற்கருணையிலும், வேண்டுதலிலும், நாம் கடவுளிடம் இருக்கும்பொழுது, மற்றவர்களோடு இனைந்து, , அவர்கள் மேல் அக்கறையோடும், அவர்களின் நலனுக்காகவும் நாம் ஜெபித்து இறையோடு இனைவோம்.
நமக்காக நாம் வேண்டும் ஜெபத்தை கடவுள் கொடுக்காமலிருப்பதும், நம் நன்மைக்கே.  கடவுள் எப்பொழுதுமே பெரிதாக தான் பார்ப்பார். எல்லோரையும் கவனித்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அவர் நன்மை செய்வார்.

உங்கள் மன்னிப்புக்கு கடவுள் செவி சாய்க்காத மாதிரி நமக்கு தோன்றும். ஏனெனில், அவர் மிக பெரிய திட்டத்திற்காக தயார் செய்து வருகிறார். மற்றவர்களுக்கும் சேர்த்து நீங்கள் கேட்ட உதவி எப்படி அவர்களுக்கும் பயன் தரும் என்று எல்லாவற்றையும் சேர்த்தே திட்டமிடுகிறார்.

உங்களின் தேவைகளையும், ஆசைகளையும் அறிந்து கடவுள் உங்கள் மேல் அக்கறை கொள்கிறார். அதே போல் மற்றவர்கள் மேலும் அக்கறை கொள்கிறார். அவர்கள் அனைவரும் கடவுளிடம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்கள் அனைவர் மேலும் அக்கறை கொள்கிறார். மேலும், உங்கள் தேவைகளை இறைசேவையின் அழைத்தலாக மாற்றுகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், உதவியாக கடவுளிடம் கேட்க ஆரம்பித்தவுடன், கடவுளின் உதவியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறார். நம்மை தாண்டி மற்றவர்களுக்காக நாம் யோசிக்க ஆரம்பித்த உடன், நமது ப்ரச்சினைகள் முடியும் மட்டும், அதனை தாங்கி கொண்டும், அதிலே, நாம் அமைதியையும், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கைவிடாமல் பெறுதல் வேண்டும். இது தான் நாம் அனுதினம் செய்ய வேண்டிய இறைசேவை ஆகும்.
© 2013 by Terry A. Modica


Friday, February 1, 2013

பிப்ரவரி 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Jer 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Cor 12:31 – 13:13
Luke 4:21-30


21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியை கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமானால், இயேசு போன  வாரம் உள்ள நற்செய்தியை வாசித்து முடித்து (' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்) , தொழுகை கூடத்தில் உள்ளவர்களிடம் , நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார். மேலும் அவர்கள் இயேசுவை பற்றி மிக உயர்வாக பேசினர். ஆனால், அந்த நற்செய்தியின் முடிவில்,  கடம் கோபம் கொண்டனர்.  எது அவர்களின் குணத்தை மாற்றியது?


அவர்களின் வியப்பு, அச்சம், “ஜோசப்பின் மகன் அல்லவர் இவர்? “ என்று பேசிகொண்டு இன்னும் குழம்பினர்.  புதிதாக இயேசுவை பார்த்தவர்களை விட, இயேசு குழந்தையாக இருந்தபோதே பார்த்து வந்த இவர்களுக்கு இயேசு வேறாக தெரிந்தார்.  தச்சு தொழில் செய்த போது, கையில் காயம்பட்டு இரத்தம் சிந்தின இளைஞன் இயேசுவையும், அவர் தந்தை சூசை இறந்தபோது அழுத இயேசுவையும் இவர்களுக்கு தெரியும்.


அவர்களது குணம், இயேசு சொல்வதை பரிசுத்த ஆவியின் துனையின்றி கேட்ட பொழுது, மாறியது. ஏனெனில், அவர்கள், ஏற்கனவே அறிந்த்திருந்த யேசுவின் மேல் ஒரு பிம்பத்தோடு அத்தனையும் கேட்டனர். அதனால் தெய்வீக உணர்வு அவர்களை விட்டு போய்விட்டது. அங்கே தெய்வத்துடன் உள்ள தொடர்பு அறுந்து விட்டது.


உங்களை ஒருவர் , அவர் எதிர்பார்ப்பது போல் நீங்கள் நடந்து கொள்ளாமல், வேறு மாதிரியாக நடந்து கொண்டால்,  நிச்சயம் அவர் குழம்பி விடுவார். உங்களை மிகவும் இளையவர் என்றோ, அல்லது, மிகவும் முதியவர் என்றோ, அவர்கள் நினைத்து அதற்கு மாறாக நீங்கள் நடந்து அல்லது, தகுதியான கல்வி அறிவை பெறாமல் இருந்து , அல்லது அவர்கள் என்ன கேட்க ஆசைபடுகிறார்களோ அதனை சொல்லாமல் இருப்பதும், அவர்களை குழப்பி மிகவும் உங்களுக்கு எதிராக கோபமடைய செய்கிறது.


நாம் அவர்கள், நம்மை நம்பவேண்டும் மற்றும், பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் நம்மை நம்பவில்லையெனில், நம்மை ஆச்சரியபடுத்தி, மேலும் நம்மை குழப்புகிறது, அதனால்,  நாம் உணர்ச்சி வயப்பட்டு அவர்கள் மேல் கோபம் கொள்கிறோம். ஆனால், இயேசுவை அவர்கள் இவ்வாறு நடத்தியபின்பு,  இயேசு எப்படி நடந்து கொண்டார்? பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால்,  பொறுமையாக இயேசு உண்மையை பேசினார். உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது செய்தாரா? கண்டிப்பாக, ஏனெனில், அவரும் மனிதனாக தான் இருந்தார். கடவுள் நம்மை படைக்கும்போது  உணர்வுகளுடன் தான் படைத்துள்ளார். நாம் பரிசுத்த ஆவியின் துனையில்லாமல் கேட்கும்பொழுது தான், நமக்கு ப்ரஸ்னை ஏற்படுகிறது.


© 2013 by Terry A. Modica


Friday, January 25, 2013

ஜனவரி 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஜனவரி 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Neh 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Cor 12:4-11
Luke 1:1-4; 4:14-21

லூக்கா நற்செய்தி
1. அர்ப்பணம்
1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: 2தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

4. கலிலேயப் பணி
கலிலேயப் பணியின் தொடக்கம்

(மத் 4:12 - 17; மாற் 1:14 - 15)
14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
(மத் 13:53 - 58; மாற் 6:1 - 6)
16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசுவே அவரது இறைபணியை பற்றி அறிவிப்பதை காண்கிறோம்:  ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று '


அவருடைய இறைசேவை, இயேசு மோட்சத்திற்கு எழுந்தருளி சென்ற பின் மறைந்துவிட்டதா? இவ்வுலகைவிட்டு அவர் சென்றவுடன் இறைசேவையும் சென்றுவிட்டதா?  கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் வாசகத்தில் எழுதப்பட்டுள்ளது போல, நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடலாக இப்பூமியில் இருக்கிறோம்.

நாம் அனைவரும் – ஒவ்வொருவரும் – இந்த உடலில் முக்கியமான அங்கமாக இருக்கிறோம்!. நீங்களே உங்களை தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கி, இந்த திருச்சபையோடு இனைத்துள்ளார். ஏனெனில், கன்டிப்பாக உங்களால் ஒரு முயற்சியை கான்பிக்க முடியும் என்ற நம்பிக்கையால் தான். உங்களால் செய்ய முடிந்ததை, இன்னொருவரால் செய்ய முடியாது. கடவுள் உங்கள் மூலம் ஒரு திட்டத்தை இவ்வுலகில் செய்ய முனைந்தாரானால், அதன் மூலம் இவ்வுலகை இன்னும் நல்ல நிலையில் கொண்டு செல்ல முடியும் என்று அவர் திட்டமிட்டால், அதனை உங்களால் மட்டுமே செய்ய முடியும். நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும், கிறிஸ்துவின் உடலாக இவ்வுலகில் ஒரு சமூக இனைப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும், திவ்ய நற்கருணையை நாம் பெறுகிறபொழுது, நாம் நம்மையே வாங்குகிறோம். , அதன் மூலம், நாம் கிறிஸ்துவின் இறைசேவையை, புதுபித்து கொள்கிறோம். அவரின் செயற் திட்டமே நம் திட்டமும் ஆகும்.

இயேசுவை திவ்ய நற்கருணையில் நாம் பெறுகிற பொழுது, அவரை மனிதனாகவும், தெய்வமாகவும் நாம் முழுதாக பெற்று கொள்கிறோம். அதே போல அவரது இறைசேவையையும் நாம் ஏற்று கொள்கிறோம். கடவுள் தூய ஆவி நம் மேல் வருகிறது. ஒவ்வொரு திருப்பலியில் நாம் நமது அழைப்பை புதுபித்து கொள்கிறோம். நற்செய்தியை ஏழைகளுக்கு அறிவிக்கவும், பார்வை இழந்தவர்களுக்கு பார்வை பெறவும், அடிமைதனத்திலிருந்து விடுதலை பெறவும், கடவுளுக்கு உகந்ததை மக்களுக்கு அறிவிக்கவும் நாம் அழைக்கபட்டுள்ளோம்.

இதையே வேறு மாறாக, சொல்வதென்றால், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது போல, ஒவ்வொரு முறையும் இயேசுவை திவ்ய நற்கருணையில் வாங்கும்பொழுது, நாம் இயேசுவை பின்பற்ற வேண்டும்.

பாவங்கள் இதனை எல்லாம் செய்ய தடையாக இருக்கின்றன.

நாம் கேட்கும் ஜெபங்களுக்கு  நமக்கு சரியான வரம் கிடைக்க வில்லையென்றாலும், சாத்தான் வெற்றி பெறும் தருவாயிலும், இயேசுவின் மீட்பை, அதன் செய்தியை கேட்காமல் ஆன்மா துயறுரும்போதும், நாம் யோசித்தோமானால், கிறிஸ்துவின் இவ்வுலக உடல் செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கிறது என்று அர்த்தம்.  கடவுள் இவ்வுலகிற்கு தேவையான அனைத்தும் நம் மூலமாக் கொடுத்தருளுகிறார். இயேசு அவரது இறைசேவையை நம் மூலம் இவ்வுலகில் தொடர்கிறார்.

© 2013 by Terry A. Modica

Friday, January 18, 2013

ஜனவரி 20, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஜனவரி 20, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் இரண்டாவது ஞாயிறு
Isaiah 62:1-5
Ps 96:1-3, 7-10
1 Cor 12:4-11
John 2:1-11 

யோவான் (அருளப்பர்) நற்செய்தி,
அதிகாரம் 2
கானாவில் திருமணம்
1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″ திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ″ என்றார்.4 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார்.http://www.arulvakku.com/images/footnote.jpg5 இயேசுவின் தாய் பணியாளரிடம், ' அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார்.6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.7 இயேசு அவர்களிடம், ' இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.8 பின்பு அவர், ' இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,10 ' எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார்.11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ப்ரச்சினையுள்ள நேரத்தில் பாவத்தில் விழாமல், எப்படி அதனை கையாள்வது என்று நமக்கு எடுத்து காட்டாய் விளக்குகிறது. அங்கே ஒரு தேவை இருக்கிறது என்பதை அறிந்து அன்னை மரியாள், இயேசு அதற்காக ஏதாவது செய்ய வேண்டுமமென விரும்பினார். தெய்வீக அனுமதியில்லாமல், அங்கே ஒரு அருஞ்செயல் நடக்காது என்பது அன்னை மரியாள் முழுதும் அறிந்திருந்தாள். தெய்வத்தால் தான் அந்த அதிசய நிகழ்வு நடக்கும் என்பதை அறிந்து, இயேசுவிடம் கேட்கிறார். முதலில் இயேசுவின் மனிதத்தன்மை தான் பதில் கூறியது. இயேசு அவருடைய தெய்வீக தன்மையை  அப்போது காட்ட விரும்பவில்லை. இயேசு ஆண்மாவின் புண்களை ஆற்றதான் ஆர்வமாக இருந்தார், காலியான ஜாடியில் திராட்சை இரத்தை நிரப்ப அல்ல.

 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். இது எப்படி இருக்கிறதென்றால், “நான் உங்கள் கோரிக்கையை ஏற்று கொள்கிறேன், ஆனால், இப்படி ஒரு அதிசய நிகழ்வு இங்கே நடந்த்தால், மீட்பை கொடுக்க வேண்டிய இறைசேவையை செய்யவே விரும்புகிறேன், ஆனால், இங்குள்ள மக்களோ விருந்திற்காக மட்டுமே என்னிடம் வரும்படி இந்த அதிசய நிகழ்வு செய்து விடும்” என்று இயேசு கூறுவது போல் உள்ளது.

அன்னை மரியாள் நமக்கு உதவி செய்பவர் என்று கத்தோலிக்கர்கள் அனைவரும் இந்த திருவசனங்கள் மூலம் நம்புகிறோம். ஒரு தாயாக நமக்கு வேண்டியதை, இயேசுவிடமிருந்து நமக்கு பெற்று தருவார் என பார்க்கிறோம். ஏனெனில் இயேசுவின் மனதை அன்னை மரியாள் மாற்றி விடுவார். இயேசு முடியாது என்று சொல்லிவிட்டார், ஆனால் இந்த குழப்பம், அன்னை மரியாளின் வழிக்கே வந்தது, அவரே இறுதியில் வெற்றி பெற்றார். யேசு இந்த குழப்பத்தில் தோற்றே போனார்.

குழப்பமான நிலையில், இப்படி தான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவர் வெற்றி பெற்றவராகவும், இன்னொருவர் தோற்றவராகவும் ஆன பின்புதான், குழப்பமோ, இழுபறியோ முடிவடைந்ததாகும். அதனால், கடவுளிடம் நாம் வேண்டுகோள் வைக்கும்பொழுது நாம் என்ன கேட்டோமோ, அதனை கொடுப்பதில்லை. நாம் தான் தோற்றுவிட்டோம் என நாம்  நினைக்கிறோம். அதனால், இன்னும் கடுமையாக முயற்சி செய்து, இன்னும் அவரிடம் வேண்டுகிறோம். கடவுளை தோற்றவராக முயற்சி செய்கிறோம். மேலும் இது  நடைபெறாமல் போகும்பொழுது, நாம் அன்னை மரியிடம் சென்று, நமக்காக அவரின் மகனிடம் சிபாரிசு செய்ய சொல்கிறோம்.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே, கடவுள் நம்மை தான் வெற்றியாளராக்க விரும்புகிறார். 
நமக்கு எது நல்லதோ அதுவே நமக்கு கிடைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். இதனையே அன்னை மரியாளுக்கு தெரிந்து, அந்த வேலையாட்களிடம் “என் மகன் சொல்வதை நீங்கள் செய்யுங்கள்” என்று கூறினார்.

குழப்பங்கள் ஒன்று தப்பானதல்லை. நம்மிடையே  குழப்பம் உண்டாகும் பொழுது, நமக்கு கிடைத்த புனித வாய்ப்பாக, நாம் கடவுளை நம்புவது  நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அந்த கல்யாண விருந்தில், உள்ள அனைவர் மேலும் இயேசுவுக்கு அக்கறை உண்டு என்று அன்னை மரியாளுக்கு தெரியும், அதனை நம்பிதான் இயேசுவிடம் அதிசய நிகழ்வு செய்ய சொன்னர். இயேசு கடவுளை நம்பினார், மேலும், கடவுள் அந்த மக்களையும், இயேசுவின் மீட்பு பணியையும் காப்பார் என இயேசு நம்பினார். இது இரண்டு பேருக்கும் வெற்றி தரும் நிகழ்வாகும்.

© 2013 by Terry A. Modica

Friday, January 11, 2013

ஜனவரி 13, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஜனவரி 13, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழா
Isaiah 42:1-4, 6-7 (or Isaiah 40:1-5, 9-11)
Ps 29:1-4, 9-11 (or Ps 104:1-4, 24-25, 27-30)
Acts 10:34-38 (or Titus 2:11-14; 3:4-7)
Luke 3:15-16, 21-22 

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 3
3. திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்
(மத் 3:1 - 12; மாற் 1:1 - 8, யோவா 1:19 - 28)
5 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; மாற் 1:9 - 11)
21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி எல்லா எதிர்பார்ப்பையும் ப்ரதி பலிக்கிறது. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? அநீதிக்கு எதிராக உங்களை கடவுள் எப்படி வந்து காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அல்லது சாத்தானிடமிருந்து உங்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிரீர்கள்? அல்லது உங்களின் அன்பானவர் கடவுளிடம் திரும்ப வேண்டும் என காத்திருக்கும் நேரத்தில் உங்களி அனுசரனையாக ஆறுதல் அளிக்க கடவுளிடம் எதிர்பார்க்கிறீர்களா? குழப்பத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் என்ன வழிகாட்டுதலை கடவுளிடம் எதிர்பார்க்கிறீர்கள்? இதனையெல்லாம் எதிர்பார்த்து காத்திருக்கும்போது, கிறிஸ்துவின் அன்பளிப்பான அமைதியை உங்களில் இருப்பதை உங்களால் அறிய முடிகிறதா? அல்லது கவலையுடனும், செயல்குழைந்தும், பொறுமையிழந்தும் இருக்கின்றீர்களா?


இன்றைய நற்செய்தியில், யோவானை சுற்றியிருந்த அனைவரும், எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர், யோவான் தான் மெசியா என்றும், பூமிக்கு வந்தே விட்டார் எனவும் நினைத்தனர். அநீதிக்கு எதிராகவும், வேற்று நாட்டின் அடிமைதனத்திற்கு எதிராகவும், பாவங்களுக்கு எதிராகவும் கடவுள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே, யோவானின் மனந்திரும்பும் ஞானஸ்நாணத்தில் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். அவர்களது உற்சாகம், அவரவரின் சொந்த தேவைகளை பொறுத்து இருந்தது. இறைவனின் வழிகாட்டுதலால் அவர்கள் உற்சாகமடையவில்லை.

இருந்தாலும், கடவுள் இதைவிட மேலானதை அவரின் மனதில் இருத்தி வைத்திருந்தார். உண்மையான மெசியாவோ, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நாணம்
 பெறுவார். மேலும், யோவான், மக்களை மனம் திரும்ப அழைக்க மட்டுமே முடியும். உண்மையான மெசியாவோ, பரிசுத்த ஆவியினால், அவர்களுக்கு ஆற்றல் கொடுத்து பரிசுத்த வாழ்வில் வாழ்ச் செய்தார்.

யேசு யோவானிடம் ஞாணஸ் நாணம் பெற தன்னை ஒப்படைத்தது எதற்காக என்றால், அவர் மனம் திரும்ப இல்லை, ஏனெனில், அவர் பாவமில்லாதவர். நாம் அனைவரும் மனம் திரும்ப வேண்டிய செயலில் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டார். அங்கேயிருந்தே அவரின் மீட்பு சேவையை , நமது பாவங்களையெல்லாம், சிலுவைக்கு எடுத்து செல்லும் சேவையை துவங்கி விட்டார்.

கிறிஸ்துவ ஞாணஸ் நாணத்தில்,  யேசுவின் பரிசுத்தத்திலும், அவரின் இறைசேவையிலும் நாம் முழுகப்படுகிறோம். மேலும், அவரின் குருத்துவத்திலும், நற்செய்தி அறிவித்தலிலும், பிறருக்கு சேவை செய்து முன்மாதிரியாக இருப்பதிலும், மீட்புக்காக அவர் பட்ட வேதனையிலும், நாம் முழ்கடிக்கபடுகிறோம். யேசு செய்ததை போல நாமும் செய்ய பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆற்றல் தருகிறார். மேலும், கடவுள் சொல்கிறார்: “' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் '”

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் ஞாணஸ் நானத்தால் உங்கள் அனுதின வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?  எதிர்பார்ப்பது என்பது ஒரு நல்ல குணம் தான், ஆனால், இது பொறுமையிழந்து  நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நல்லதல்ல, அது ஏமாற்றத்தை தான் கொடுக்கும். கடவுள் நல்ல செயல்களினால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு, , மேலும், அவர் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறாரோ அதில் நடந்தால், நமக்கு சந்தோசமும், உறுதியான விசுவாசமும், தெய்வீக அற்புதங்களும் நடக்கும்.

© 2013 by Terry A. Modica

Saturday, January 5, 2013

ஜனவரி 6, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி  6, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகாட்சி திருவிழா
Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 2
ஞானிகள் வருகை
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் கால கட்டம், ஞாணிகள், குழந்தை யேசுவை காணச் சென்றதோடு முடிவிற்கு வருகிறது. கிரேக்கத்தில் “ஞாணிகள்” என்பதற்கு கீழ்திசை அறிவியலாளர்கள் என்று அர்த்தம். இதே வார்த்தையை “ஜோசியர்கள்” என்று சிலர் கூறுவதுண்டு, ஆனால், குழந்தை யேசுவின் குடிலில் அவர்கள் வந்து நின்றதை பார்க்கும்பொழுது, அவர்கள் “ஜோசியர்கள்” இல்லை என்பது தெரியும். மத்தேயு அவர்களை நற்செய்தியில் காட்டுவதன் நோக்கம், இயேசு யூதர்களையும் மற்றும் யூதர்கள் அல்லாதவர்களுக்கும் மீட்பை வழங்கவே வந்தார் என்பதை நமக்கு சுட்டி காட்டுகிறார்.

திருச்சபை, இந்த ஆண்டவரின் திருகாட்சி விழாவில், இதனை கொண்டாடும்  நேரத்தில், இயேசுவின் முன், அவரின் இறை ப்ரசன்னத்தோடும், மனித உருவோடும், அவரை தாழ்பணிந்து ஏற்று கொள்வபவர்களுக்கு, இறையரசில் கண்டிப்பாக இடமுண்டு என்று சொல்கிறது. கிறிஸ்துவே வழி, உண்மையும் வாழ்வும் ஆவார். அவரில்லாமல், யாருக்கும் விண்ணக வாழ்வு இல்லை. எல்லோரும் அதற்கு அழைக்கபடுகின்றனர்.

மிக பிரபலமானவர்கள் இருந்த அந்த காலத்தில், ஞாணிகள் ஒன்றும் அரசர்களில்லை. ஆனால், சில பைபிள் வசணங்களில், அவர்களை அரசர்கள் என்று குறிப்பிடபட்டுள்ளது. ஏனெனில், அவர்கள் அரசர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளை கொண்டு வந்தார்கள். அவர்களுடைய அரச குணத்தை அங்கே காட்டவில்லை, ஆனால் இயேசு அரசன் என்பது அந்த அன்பளிப்புகளால் காட்டினார்கள். தீர்க்க தரிசனமாக இயேசு இறையரசர், நமக்காக அவர் இறப்பார் என்பதை சாட்சியமாக இருந்தார்கள்.

திருக்காட்சி” என்ற வார்த்தைக்கு அர்த்தம், “தெரியப்படுத்தும் தருணம்” ஆகும்.  இது இரகசியம் வெளிபடுத்தபட்டு, நமது வாழ்வை மாற்றும் தருணம் ஆகும். அந்த ஞாணிகள் குழந்தை யேசு தான் இவ்வுலகின் மீட்பர் என்று அறிந்து கொண்டார்களா? அந்த காலத்தில், அரசர்கள் எல்லாம் தெய்வீக இடத்தில் வைத்து பார்க்கபட்டனர்.  “அவர்கள் கடவுளாக இறக்கும் வரையில் நம்மில் வாழ்கிறார்கள்” என்று அந்த காலத்தில் ஒரு எண்ணம் இருந்து வந்தது. அந்த ஞாணிகளுக்கு இயேசு தான்  நிரந்தர அரசர் என்று அவர்களுக்கு தெரிய வந்ததா?

இந்த யாத்திரைக்கு பிறகு, இயேசுவை பற்றி அவர்கள் என்றுமே மறந்ததில்லை, ஜெருசலேத்திலிருந்து அவரை பற்றி ஏதாவது செய்தி வராதா? என்று அவர்கள் காதை தீட்டி வைத்திருந்தனர். யூதர்களின் அரசன் சிலுவையை அறையபட்டார் என்பதை அறிந்தனர். நாம் இதனை அறிவோம். ஏனெனில், ஒரு நேரத்தில், அவர்கள் புனித கிறிஸ்தவர்களாக மாறினர். அவர்களின் உடல் இன்னும் இருக்கிறது, அவைகள் புனிதபடுத்தப்பட்டுள்ளன.

© 2012 by Terry A. Modica