(Thanks
to WWW.ARULVAKKU.COM)
இன்றைய நற்செய்தி,
கடவுள் தொலைந்து போனவற்றை, கண்டிப்பாக திரும்ப பெற ஆசையுடன் உள்ளார் என்பதை நமக்கு
உறுதியாக காட்டுகிறது. நம் கடவுள், மணம் மாறுதலுக்கு உகந்த கடவுள் ஆவார்.
உண்மையின் வழியிலிருந்து விலகியவர்களை திரும்ப கொண்டுவர ஆசிக்கிறார். ஏனெனில்,
கடவுள் ஒவ்வொருவர் மேலும் மிகுந்த அக்கறை கொள்கிறார். நாம் நமக்கு தெரிந்தவர்கள்
மேல் அக்கறை கொள்வதை விட கடவுள் அவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொள்கிறார். காணாமல்
போன ஆடுகளை போலவும், காணாமல் போன காசை போலவும் , கடவுள் எல்லோரையும் அவரிடத்தில்
கொண்டு வர செய்கிறார்.
உங்களை யாராவது
ஒதுக்கியவர்களை, நினைவு கொள்ளூங்கள். கடவுள் அவர்களை பின் தொடர்ந்து, பாதிக்கபட்ட
உறவை , நேராக்க முயற்சிக்கிறார். இதனை அவர்கள் மாறாவிட்டாலும், அவர்களின் கடைசி
மூச்சு வரை, தொடர்ந்து முயற்சி செய்கிறார். (சில நேரங்களில், இந்த முயற்சி, இறந்த
பிறகு கூட நடக்கிறது).
சிலர் அவர்கள்
விசுவாசத்தையும் ஒதுக்கி வைத்தவர்களை பற்றி நினையுங்கள். நல்லாயன் இயேசு அவர்களை
பின் சென்று உண்மையின் வாழ்விற்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.
ஏன்? அவர்கள் உங்கள் குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் முக்கியமானவர்கள்!, நமது
சமுக குழுவிற்கு அவர்கள் வராதது ஒர் இழப்பாகும். கடவுள், தான் இந்த சமூக
கூட்டமைப்பிற்கு ஆற்றலை கொடுப்பவர், அவருக்கும் இது ஒரு இழப்பாகும். அதனால் தான்
கடவுள், எல்லா வகையிலும், அவர்களை மனமாற செய்து, -- முடியாத வழிகழிலெல்லாம் கூட –
அவர்களை நம்மிடம்/அவரிடமும் கொண்டு வர வைப்பார்.
எனினும், இவை
எல்லாவற்றையும் கடவுளிடம் மட்டுமே விட்டு விட கூடாது. நம் மூலமாக கடவுள் இதனை
நிறைவேற்றுகிறார். நாம் முயற்சி செய்து, அதிலிருந்து எந்த பலனும் வரவில்லையெனில்,
கட்வுள் “நீங்கள் தொடரவேண்டியதில்லை, நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்,
நீங்கள் நம்பிக்கையுடன் அடுத்த வேலையை தொடருங்கள், “ என்று கூறுகிறார். யேசு
இன்னும் தொடர்ந்து அவர்கள் பின் சென்று கொண்டிருக்கிறார் என்று நாம் நம்பலாம்.
அவர்கள் இயேசுவை ஒதுக்கி தள்ளீனாலும், அவர்கள் பின்னே அவர் சென்று
கொண்டிருக்கிறார்.
ஒரு வேளை, அவர்களை நாம்
இயேசுவிடம் அழைக்க வாய்ப்பிருந்தும், நாம் அதனை செய்ய வில்லை என்றால், நாம் ஒரு
நாள், இயேசுவிற்கு நாம் விளக்கமளிக்க வேண்டும். ஏன் நாம் இயேசு அவர்களை அன்பு
செய்வது போல, நம்மால் அன்பு செய்ய முடியவில்லை. எவ்வாறு அவர்களுக்கு உதவி
செய்வது என்று யோசிக்காமல் , நாம் ஒதுங்கி
கொள்கிறோம். நாம் அவர்களை ஒதுக்கி தள்ளி
விட்டு விட்டோமோ?
கிறிஸ்துவோடு நாம்
இனைந்து, எவ்வளவு கஷ்டபட்டு, மற்றவர்களை நாம் திருச்சபைக்கு கொண்டுவர முயற்சி
செய்தாலும், நாம் அவர்களை தொடர்ந்து நிபந்தனையற்ற அன்பு செய்தல் வேண்டும்.
கண்டிப்பாக, இயேசுவின் அன்பை நம் மூலம் அவர்கள் கானலாம்.
© 2013 by Terry A.
Modica