Saturday, May 9, 2015

மே 10 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 10 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு

Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17



யோவான் நற்செய்தி

.9என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)


பணிவிடை செய்வதே உண்மையான கிறிஸ்தவனின் அடையாளம் ஆகும். கடைசி இரவு உணவின் பொது இயேசு இதனை குறிப்பிட்டு சொன்னார். பணி செய்யவே இவ்வுலகிற்கு வந்தேன் என்று சொன்னார் அதே போல நாமும் ஒருவருக்கொருவர் பணி செய்து வாழ்தல் வேண்டும். இயேசுவின் உவமைகளில் , அடிக்கடி இறையரசின் சேவை செய்பவர் என்று குறிப்பிடுவதை நாம் காண முடியும், ஆனால், இன்றைய நர்செய்தியில் , நம்மோடு நண்பர்களாக இருக்க விரும்புகிறார். அவரது அடிமைகளாக அல்ல, அவரே அவர் கருத்தை மாற்றி சொல்கிறாரா ?


அப்படியெல்லாம் இல்லை!, நண்பர்களும் பணிவிடை செய்கிறார்கள், ஏனெனில், அவர்கள் நம் மேல் அக்கறை கொண்டுள்ளார்கள். அடிமைகளும், பணிவிடை செய்கிறார்கள் ஆனால், அவர்களின் கடமை அது மேலும், தண்டிக்கபடுவோம் என்ற பயம் அவர்களிடம் .இருக்கிறது.
இயேசு "நீங்கள் என் கட்டளையை கடைபிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" என்று சொல்கிறார். இதனை நண்பனாக அல்லது அடிமையாக எடுத்து கொள்கிறீர்களா ?


அடிமைகள் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்காவிட்டால், என்ன ஆகுமோ என்று பயப்படுவார்கள். தன்னையே பாதுகாத்து கொள்பவர்கள். ஆனால் நண்பர்களோ கடவுளின் கட்டளைகள் என்ன ஆர்வத்த்துடன் கண்டரிந்து அதனை பின்பற்ற செய்வார்கள், ஏனெனில், அவர்கள் அன்பினால் கட்டளைகளை ஏற்று கொண்டார்கள், பணிவிடை செய்வதை ஒரு வாய்ப்பாக எடுத்து கொண்டார்கள். ஆனால் அடிமைகளோ வேறு மாதிரியான நோக்கத்துடன் பணி செய்தார்கள்


இதுவே என் கட்டளை, நான் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் " என்று இயேசு கூறுகிறார். இதுவே எல்லா கட்டளைக்கும் மேலான கட்டளை, நண்பர்களுக்கான கட்டளை என இதனை கூறுங்கள்.
.9என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.”
என்று இயேசு கூறுகிறார். ஒவ்வொரு கட்டளைகளும் அன்பின் அடித்தளத்தை கொண்டு உள்ளதை அவர்கள் நண்பர்களாக புரிந்து கொண்டுள்ளார்கள். திருச்சபையின் போதனைகளும் , நமக்கு எப்படி மற்றும் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லி தருகிறது.

நாம் இந்த கட்டளைகளை கடைபிடிக்கா விட்டால், கடவுளின் அன்பு நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ ? கண்டிப்பாக இல்லை அவரது அன்பிற்குண்டான நமக்கு உள்ள இடம் போய்விடுமோ , ஆம், அவரின் கட்டளைகளை விட்டு ஆம் விலகி இருக்கும் பொழுது, கடவுள் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருந்தாலும், அவரின் அன்பில்லாத ஒரு வெறுமையை நாம் உணர்கிறோம்.

இது தான் அடிமை , நம் தவறான நம்பிக்கையினால், அல்லது துன்பத்தினால் (நம்மால் ஏற்பட்ட) காயங்களால், நாம் நமக்கு தேவையான அன்பு கிடைப்பதில்லை என்று நினைக்கிறோம். மேலும் இதிலிருந்து நாம் விலகாமல் , தொடர்ந்து கட்டளைகளை கடைபிடிக்காமல் இருக்கிறோம். ஆனால் கடவுளின் அன்பை மீண்டும் பெறுவதற்கு கட்டளைகளை மீண்டும் கடைபிடிக்கிறோம், அது அடிமை போல ஆகி விடுகிறது.


நண்பர்களோ, கடவுள் நம்மை முழுதும் அன்பு செய்கிறார், என்று தெரிந்து கொண்டு, அந்த அன்பில் திளைத்து , ஒருவருக்கொருவர் பணி செய்து சந்தோசமாய் இருக்கிறார்கள்.


© 2015 by Terry A. Modica

Friday, May 1, 2015

மே 3 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 3 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பாஸ்கா காலத்தின் 5ம் ஞாயிறு

Acts 9:26-31
Ps 22:26-28, 30-32
1 John 3:18-24
John 15:1-8

யோவான் நற்செய்தி

இயேசுவே உண்மையான திராட்சைச் செடி
1 உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.2என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.3நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.4நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.5நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.6என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.7நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.8நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது

(thanks to www.arulvakku.com)

கடவுள் எப்படி சாத்தானை தடுக்கிறார்
இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதை போல , கிறிஸ்துவோடு ஒன்றிணைந்த நாம் அனைவரும் மிகுந்த கனி தரும் கிறிஸ்துவின் திராட்சை கொடியின் கிளைகள் ஆவோம். இயேசு தான் திராட்சை செடி. நாமும் அதே செடியில் இணைந்து(tha உள்ளதால், நாமும் அவரை போல அழைக்க பட்டிருக்கிறோம். நாமும் நல்ல கனியை கொடுக்க வேண்டும். இயேசு கொடுப்பதை போல அதே மாதிரியான கனியை நாம் கொடுக்க வேண்டும்.

எனினும், நம்மில் பலர் இதனை குறைவாக மதிப்பிடுகிறோம், இது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் கவனத்தில் கொள்வதில்லை. உங்களுக்கு தெரிந்ததை விட நீங்கள் அதிக மதிப்பு உடையவர்கள். கிறிஸ்துவின் கனியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் - இன்னும் அதிகம் கிறிஸ்துவின் கனியை கொடுக்க ஆசைபடுகிறார். இன்றைய காலத்தில் அதிகம் கிறிஸ்தவர்கள் மிதமான போக்கை கடை பிடிக்கிறார்கள். கிறிஸ்தவனாக இருப்பதால், தமக்குள்ள நிறைவான திருப்தி அடைந்துவிட்டால், அந்த திருப்தியோடு நின்றுவிடுகின்றனர். சிலருக்கு இரக்கததுடன் நாம் உதவி செய்வதும், அன்பினை பகிர்வதும், கடவுள் நம் மேல் திருப்தி அடைவார் என நாமாக நினைத்து கொள்கிறோம்.

கடவுள் ஏன் ஒன்றும் செய்வதில்லை ?
உண்மையாக அவர் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். எப்படி திராட்சை வளர்கிறதோ அதே வழியில் கடவுள் கிறார். செடி வளர வேண்டிய சத்தாக (இயேசு) செடியின் தண்டு வழியே , நம் வழியாக (சிறு கிளை கொடியாக ) செல்கிறார். அதில் தான் திராட்சை கனியாக தொங்குகிறது. கிறிஸ்துவிடமிருந்து வரும் சத்துக்களை எவ்வளவு அதிகம் ஏற்று கொள்ள நாம் தயாராக இருக்கிறோமோ , இயேசு நம் மூலம் அதிக கனிகளை கொடுக்க தயாராய் உள்ளார். ஆனால் கனிகள் அங்கேயே இருக்க போவதில்லை.


நம்மை கிறிஸ்து ஊட்ட சத்து கொடுத்து வளர்த்து இந்த உலகிற்கு தாராளமாக கனிகளை கொடுக்க விரும்புகிறார். நாம் இன்னும் உறுதியுடனும், நலத்துடனும் வளர வேண்டும். மற்றவர்களுக்காக நாம் இன்னும் கிளைகள் வளர்த்து அவர்கள் பயன் பெற நாம் வளர்த்தல் வேண்டும்.

நாம் கிறிஸ்துவின் இறைசேவையை இந்த உலகில் தொடர , நாம் சாத்தானை ஒரு வழியில் நிறுத்துகிறோம. சாத்தானின் மேல் நாம் பெரும் வெற்றி கிறிஸ்துவின் மூலம் வருகிறது. பரிசத்த ஆவியின் மூலம் இந்த உலகம் பரிசுத்த மாக்க படுகிறது , அதுவும் நம் பரிசுத்ததினால் !



© 2015 by Terry A. Modica

Saturday, April 18, 2015

ஏப்ரல் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 3ம் ஞாயிறு

Acts 3:13-15, 17-19
Ps 4:2, 4, 7-9
1 John 2:1-5a
Luke 24:35-48

லூக்கா நற்செய்தி

35அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இயேசு சீடருக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
36சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று அவர்களை வாழ்த்தினார்.37அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38அதற்கு அவர்,' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே 'என்று அவர்களிடம் கூறினார்;40இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம்,' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? 'என்று கேட்டார்.42அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44பின்பு அவர் அவர்களைப் பார்த்து,' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே 'என்றார்;45அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46அவர் அவர்களிடம்,' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.49இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் 'என்றார்.
(thanks to www.arulvakku.com) 

நாம் இப்போது, புதுபிக்கபட்ட மக்கள், - ஈஸ்டர் மக்கள் - இன்றைய நற்செய்திகள் மீட்பின் வாழ்வு வாழ்வதற்கும் , பாவ வாழ்வு வாழ்வதற்கும் உள்ள வித்தியாசங்களை நமக்கு நினைவுறுத்துகிறது. . முதல் வாசகம். மனம் திரும்புங்கள் , அதன் மூலம் உங்கள் பாவங்கள் கழுவப்படும். என்று சொல்கிறது. இரண்டாவது வாசகமோ, “யாரெல்லாம் அவரை தெரியும் " என்று சொல்லிக்கொண்டு , அவரது கட்டளைகள் படி நடக்காதவர்கள் , பொய்யர்கள் , உண்மை அவர்களிடம் இல்லை என்று சொல்கிறது.

நற்செய்தி வாசகமோ , “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என்று எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.”

ஒவ்வொரு நாளும் நாம் எதோ ஒரு வழியில் பொய் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். நம் உதடுகளால், விசுவாசத்தை அறிக்கை செய்து விட்டு, , நாம் வாழ்க்கை நடைமுறையில் அதனை கடைபிடிப்பதில்லை.கிறிஸ்துவின் அன்பை பற்றி நாம் சொல்வதை , நமது செயல்கள் காமிப்பதில்லை. நமது கவலைகளே , நாம் கடவுளை உண்மையாக நம்புவதில்லை என்று ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு சொல்கின்றன.

நமது முடிவுகள், உண்மையாக கிறிஸ்துவை நம்புவதில்லை என்று சொல்லும், இயேசுவுக்கு உன் பகைவர்களையும் அன்பு செய்தல் வேண்டும், நம்மை காயபடுத்தியவர்களை நாம் அன்பு செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னாலும், அவர் நம்மை விட அறிவானவறாக இந்த அறிக்கையில் நாம் நம்புவதில்லை.

எவ்வளவு அதிகமாக இயேசுவை பற்றி நீங்கள் பறை சாற்றுகிரோம் ?

நம்மில் பலர் , இயேசு நமக்காக செய்ததை , குறைத்து மதிப்பிடுகிறோம். அவரின் மரணமும், உயிர்ப்பும், நம்மை மோட்சத்த்திற்கு அழைத்து செல்லும் என்று நாமாக நினைத்து விடுகிறோம் , நாம் ஒவ்வொரு நாளும் நம்மை மனம் மாற்றி , நம்மையே தாழ்த்தி கொண்டு , நம்மை மீட்புக்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதை ஒதுக்கி விடுகிறோம்.

கடவுள் நம்மை ஒன்றும் அப்படியே புனிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால், நாம் கிறிஸ்துவை போல ஒவ்வவொரு நாளும் மாற வேண்டும் என்ற ஆவலோடு இருக்க வேண்டும். என்று விரும்புகிறார். தொடர்ந்து நாம் ஒவ்வொரு நாளும், நாம் நம்மையே அறிந்து, நமது வாழ்வில் உள்ள தீமைகளை களைந்து , கிறிஸ்துவை நோக்கி முன்னேற வேண்டும் . இந்த மாற்றத்திற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து அதில் கொஞ்சம் முன்னேற்றம் காண்பித்தாலே , கடவுள் நம் மேல் பெருமிதம் அடைவார்.



© 2015 by Terry A. Modica

Saturday, April 11, 2015

ஏப்ரல் 12, 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை


ஏப்ரல் 12, 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

பாஸ்கா காலத்தின் 2ம் ஞாயிறு
Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31

யோவான் நற்செய்தி


இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா 'என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று வாழ்த்தினார்.27பின்னர் அவர் தோமாவிடம்,' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் 'என்றார்.28தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29இயேசு அவரிடம்,' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் 'என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

(thanks to www.arulvakku.com)







"என் ஆண்டவரே! என் கடவுளே! “ என்று தோமையார் சொல்வதை நாமும் ஒவ்வொரு திருப்பளியிலும் இயேசுவின் நற்கருணை எழுந்து அருளும்பொழுது நாம் சொல்கிறோம். ஒவ்வொரு முறையும் இதனை புதுபித்து கொள்வது நல்ல பயிற்சியாகும். நம் நெஞ்சம் நிறைந்த, சந்தோசத்துடன் நாம் கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்து , அவர் தான் கடவுள், அப்பத்திலும் திராட்சை ரசத்திலும் இருக்கிறார் என்று நாம் பறை சாற்றுகிறோம்.


இரண்டாம் ஜான் பால் அவர் கடிதத்தில், திவ்ய நற்கருணை பற்றி : கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் பல இடங்களில் கண்டு உணர்ந்தாலும், பல் வேறு மாதிரியான உருவங்களில் அவர் வந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் திவ்ய நற்கருணையில் உடலும் இரத்த்தமும் ஆக இருக்கிறார்.


இயேசு எவ்வாறு சீடர்களை , தாம் உண்மையாகவே உடலுடன் திரும்பி வந்ததை எப்படி காட்டி அவர்களை சமாதனாபடுத்தினார் என்பதை பாருங்கள். முதலில் அவரை ஆவி என்று நினைத்தனர் , எப்படி முடிவெடுப்பது என்று கூட தெரியவில்லை. உய்ரிதேழுந்தா புனிதத்தை உண்மையாக ஏற்று கொள்ளள , ஆளுக்கு அது மிக பெரியகாக , ஆச்சரியமான செயலாக இருந்தது.


இயேசு அவர்களின் ஞான கண்களை திறந்து, அவரின் காயங்களை காட்டினர் . ஒவ்வொரு திருப்பலியிலும், நமக்கும் இதையே தான் செய்கிறார்.

நம் சொற்ப அறிவில், அதனை தெரிந்து கொள்ள, நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது திவ்ய நறுகருனையில் புனிதமான செயலால், இயேசுவின் உடலும், இரத்தமும் , 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு எபபடி இரத்தமும் சதையுமாக இறந்தாரோ அதே உடல் தான் அங்கே திருப்பலியில் இருக்கிறது. அங்கே உயிர்த்த இயேசுவும் இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அல்லது நமக்கு புரிவதில்லை.
திருப்பலியில் நித்திய வாழ்விற்கு நாம் நுழைய , வாழும் கிறிஸ்துவிடமிருந்து நாம் பயனடைகிறோம் . பெரிய வெள்ளி அன்று , இயேசு செய்த தியாகங்களால் நாம் ஒவ்வொருவரும் பயனடைகிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளும்பொழுது , நம் பாவத்திற்காக அவர் தியாகம் செய்தார் என்று அறிகிற பொழுது , நாம் அவரின் காயங்களை பார்க்க ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு தான் திவ்ய நர்கருனையின் உண்மையை நாம் அறிந்து கொள்கிறோம்.

அற்புத செயலாக திவ்ய நற்கருணை இருக்கிறதை நாம் நம்புவதற்கு , இயேசுவின் இறப்பும், நம் பாவங்களை போக்க அவர் இறந்து உயிர்த்தெழுந்தார் , அதன் முலம் நாம் மோட்சம் செல்வோம் என்பதனை நாம் நம்ப ஆரம்பிக்க வேண்டும். கடைசி முயற்சியாக , நாம் இயேசுவோடு இணைந்து செல்ல நாம் ஆசைப்பட்டு , அவரின் பிரசன்னம், நம்மில் முழுமையாக இறங்கி நம்மில் ஒன்றாக வேண்டும். அன்பு இயேசு நம்மில் சரீரத்தோடு இறங்கி வர நாம் ஆசைபடுகிறோம். எந்த மாதிரியாக அவர் வந்தாலும், அதனை ஏற்று கொள்ள , அதன் மூலம் நம்மை அவர் போல மாற்ற , நாம் விரும்புதல் வேண்டும்.
இந்த ஆசைதான் , நாம் அவரை திவ்ய நற்கருணையில் பார்க்கும் பொழுது, நாம் ஆவலுடனும், ஆர்ப்பரிப்போடும், “என் ஆண்டவரே, என் கடவுளே !” என்று .சொல்ல வைக்கிறது

Terry Modica