Saturday, May 9, 2015

மே 10 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 10 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு

Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17



யோவான் நற்செய்தி

.9என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)


பணிவிடை செய்வதே உண்மையான கிறிஸ்தவனின் அடையாளம் ஆகும். கடைசி இரவு உணவின் பொது இயேசு இதனை குறிப்பிட்டு சொன்னார். பணி செய்யவே இவ்வுலகிற்கு வந்தேன் என்று சொன்னார் அதே போல நாமும் ஒருவருக்கொருவர் பணி செய்து வாழ்தல் வேண்டும். இயேசுவின் உவமைகளில் , அடிக்கடி இறையரசின் சேவை செய்பவர் என்று குறிப்பிடுவதை நாம் காண முடியும், ஆனால், இன்றைய நர்செய்தியில் , நம்மோடு நண்பர்களாக இருக்க விரும்புகிறார். அவரது அடிமைகளாக அல்ல, அவரே அவர் கருத்தை மாற்றி சொல்கிறாரா ?


அப்படியெல்லாம் இல்லை!, நண்பர்களும் பணிவிடை செய்கிறார்கள், ஏனெனில், அவர்கள் நம் மேல் அக்கறை கொண்டுள்ளார்கள். அடிமைகளும், பணிவிடை செய்கிறார்கள் ஆனால், அவர்களின் கடமை அது மேலும், தண்டிக்கபடுவோம் என்ற பயம் அவர்களிடம் .இருக்கிறது.
இயேசு "நீங்கள் என் கட்டளையை கடைபிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" என்று சொல்கிறார். இதனை நண்பனாக அல்லது அடிமையாக எடுத்து கொள்கிறீர்களா ?


அடிமைகள் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்காவிட்டால், என்ன ஆகுமோ என்று பயப்படுவார்கள். தன்னையே பாதுகாத்து கொள்பவர்கள். ஆனால் நண்பர்களோ கடவுளின் கட்டளைகள் என்ன ஆர்வத்த்துடன் கண்டரிந்து அதனை பின்பற்ற செய்வார்கள், ஏனெனில், அவர்கள் அன்பினால் கட்டளைகளை ஏற்று கொண்டார்கள், பணிவிடை செய்வதை ஒரு வாய்ப்பாக எடுத்து கொண்டார்கள். ஆனால் அடிமைகளோ வேறு மாதிரியான நோக்கத்துடன் பணி செய்தார்கள்


இதுவே என் கட்டளை, நான் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் " என்று இயேசு கூறுகிறார். இதுவே எல்லா கட்டளைக்கும் மேலான கட்டளை, நண்பர்களுக்கான கட்டளை என இதனை கூறுங்கள்.
.9என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.”
என்று இயேசு கூறுகிறார். ஒவ்வொரு கட்டளைகளும் அன்பின் அடித்தளத்தை கொண்டு உள்ளதை அவர்கள் நண்பர்களாக புரிந்து கொண்டுள்ளார்கள். திருச்சபையின் போதனைகளும் , நமக்கு எப்படி மற்றும் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லி தருகிறது.

நாம் இந்த கட்டளைகளை கடைபிடிக்கா விட்டால், கடவுளின் அன்பு நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ ? கண்டிப்பாக இல்லை அவரது அன்பிற்குண்டான நமக்கு உள்ள இடம் போய்விடுமோ , ஆம், அவரின் கட்டளைகளை விட்டு ஆம் விலகி இருக்கும் பொழுது, கடவுள் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருந்தாலும், அவரின் அன்பில்லாத ஒரு வெறுமையை நாம் உணர்கிறோம்.

இது தான் அடிமை , நம் தவறான நம்பிக்கையினால், அல்லது துன்பத்தினால் (நம்மால் ஏற்பட்ட) காயங்களால், நாம் நமக்கு தேவையான அன்பு கிடைப்பதில்லை என்று நினைக்கிறோம். மேலும் இதிலிருந்து நாம் விலகாமல் , தொடர்ந்து கட்டளைகளை கடைபிடிக்காமல் இருக்கிறோம். ஆனால் கடவுளின் அன்பை மீண்டும் பெறுவதற்கு கட்டளைகளை மீண்டும் கடைபிடிக்கிறோம், அது அடிமை போல ஆகி விடுகிறது.


நண்பர்களோ, கடவுள் நம்மை முழுதும் அன்பு செய்கிறார், என்று தெரிந்து கொண்டு, அந்த அன்பில் திளைத்து , ஒருவருக்கொருவர் பணி செய்து சந்தோசமாய் இருக்கிறார்கள்.


© 2015 by Terry A. Modica

No comments: