Friday, May 1, 2015

மே 3 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 3 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பாஸ்கா காலத்தின் 5ம் ஞாயிறு

Acts 9:26-31
Ps 22:26-28, 30-32
1 John 3:18-24
John 15:1-8

யோவான் நற்செய்தி

இயேசுவே உண்மையான திராட்சைச் செடி
1 உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.2என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.3நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.4நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.5நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.6என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.7நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.8நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது

(thanks to www.arulvakku.com)

கடவுள் எப்படி சாத்தானை தடுக்கிறார்
இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதை போல , கிறிஸ்துவோடு ஒன்றிணைந்த நாம் அனைவரும் மிகுந்த கனி தரும் கிறிஸ்துவின் திராட்சை கொடியின் கிளைகள் ஆவோம். இயேசு தான் திராட்சை செடி. நாமும் அதே செடியில் இணைந்து(tha உள்ளதால், நாமும் அவரை போல அழைக்க பட்டிருக்கிறோம். நாமும் நல்ல கனியை கொடுக்க வேண்டும். இயேசு கொடுப்பதை போல அதே மாதிரியான கனியை நாம் கொடுக்க வேண்டும்.

எனினும், நம்மில் பலர் இதனை குறைவாக மதிப்பிடுகிறோம், இது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் கவனத்தில் கொள்வதில்லை. உங்களுக்கு தெரிந்ததை விட நீங்கள் அதிக மதிப்பு உடையவர்கள். கிறிஸ்துவின் கனியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் - இன்னும் அதிகம் கிறிஸ்துவின் கனியை கொடுக்க ஆசைபடுகிறார். இன்றைய காலத்தில் அதிகம் கிறிஸ்தவர்கள் மிதமான போக்கை கடை பிடிக்கிறார்கள். கிறிஸ்தவனாக இருப்பதால், தமக்குள்ள நிறைவான திருப்தி அடைந்துவிட்டால், அந்த திருப்தியோடு நின்றுவிடுகின்றனர். சிலருக்கு இரக்கததுடன் நாம் உதவி செய்வதும், அன்பினை பகிர்வதும், கடவுள் நம் மேல் திருப்தி அடைவார் என நாமாக நினைத்து கொள்கிறோம்.

கடவுள் ஏன் ஒன்றும் செய்வதில்லை ?
உண்மையாக அவர் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். எப்படி திராட்சை வளர்கிறதோ அதே வழியில் கடவுள் கிறார். செடி வளர வேண்டிய சத்தாக (இயேசு) செடியின் தண்டு வழியே , நம் வழியாக (சிறு கிளை கொடியாக ) செல்கிறார். அதில் தான் திராட்சை கனியாக தொங்குகிறது. கிறிஸ்துவிடமிருந்து வரும் சத்துக்களை எவ்வளவு அதிகம் ஏற்று கொள்ள நாம் தயாராக இருக்கிறோமோ , இயேசு நம் மூலம் அதிக கனிகளை கொடுக்க தயாராய் உள்ளார். ஆனால் கனிகள் அங்கேயே இருக்க போவதில்லை.


நம்மை கிறிஸ்து ஊட்ட சத்து கொடுத்து வளர்த்து இந்த உலகிற்கு தாராளமாக கனிகளை கொடுக்க விரும்புகிறார். நாம் இன்னும் உறுதியுடனும், நலத்துடனும் வளர வேண்டும். மற்றவர்களுக்காக நாம் இன்னும் கிளைகள் வளர்த்து அவர்கள் பயன் பெற நாம் வளர்த்தல் வேண்டும்.

நாம் கிறிஸ்துவின் இறைசேவையை இந்த உலகில் தொடர , நாம் சாத்தானை ஒரு வழியில் நிறுத்துகிறோம. சாத்தானின் மேல் நாம் பெரும் வெற்றி கிறிஸ்துவின் மூலம் வருகிறது. பரிசத்த ஆவியின் மூலம் இந்த உலகம் பரிசுத்த மாக்க படுகிறது , அதுவும் நம் பரிசுத்ததினால் !



© 2015 by Terry A. Modica

No comments: