Friday, October 16, 2015

அக்டோபர் 18 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 18 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Isaiah 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Hebrews 4:14-16
Mark 10:35-45
மாற்கு நற்செய்தி
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள்.
36 அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர்.
38 இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார்.
39 அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.
40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார்.
41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.
43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.
45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.
பணிவிடை செய்வது மட்டுமே , அடிமையாக அல்ல
இறையரசில் முக்கிய இடத்தை பெற, நாம் பணிவிடை செய்பவர்கள் ஆக இருக்க வேண்டும் என இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார். இறையரசின் நன்மைக்காக மற்றவர்களுக்கு உதவிட இயேசு நம்மை அழைக்கிறார்.
இதற்காக, நம் சொந்த விருப்பங்களை, சொந்த வேலைகளை விட்டு விட்டு இதனை செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. கடவுளுக்கு பணி விடை செய்வதால், அவரின் அடிமை அல்ல. இது நமக்கு மிக பெரிய கௌரமும், மரியாதை ஆகும். ஏனெனில் இது தான் நம்மை கிறிஸ்துவின் நம்மை மீட்கும் பணியோடு இணைக்கிறது
இயேசுவை போல நாமும் இறைபணி செய்தால், தந்தை கடவுள் இயேசுவை எப்படி நடத்துகிறாரோ அப்படியே நம்மையும் நடத்துவார். நமது தலைவர், நம்மை தாழ்த்த மாட்டார், அவர் மரியாதை செய்யமாட்டார், மேலும் அதிக வேலை கொடுக்க மாட்டார்.
இதற்கு மாறாக, இந்த உலக செல்வங்கள், இந்த உலக வாழ்வு நம்மை அடிமை தனத்திற்கு கொண்டு சென்று விடுகிறது. அவை நம்மை தாழ்த்தி . விடுகிறது. கடவுள் நம்மை எந்த உயர்விற்கு படைத்தாரோ ஆதனை விட கிழான நிலைக்கு நம்மை . தள்ளி . விடுகிறது.
கிறிஸ்து நம்மை அவரை போலவே இருக்கும் படி நமக்கு தேவையான ஆற்றலையும், ஆசியும் கொடுக்கிறார். இறையரசின் எல்லா பலனையும் முழுதுமாக சுதந்த்திரத்துடன் அனுபவியுங்கள். பரிசுத்த வாழ்வில் முழுமையாக ஈடுபட நம்மை அழைக்கிறார். இதன் மூலம் தந்தை கடவுளின் பார்வையில் நாம் பெரியவராக இருப்போம்.
இந்த சுதந்திரத்தில் மிகப்பெரிய இன்பம் சந்தோசம் இருக்கிறது. கிறிஸ்துவின் வாழிகள் மிகவும் கடினமாக இருந்தாலும், சில நேரங்களில் நாம் சிலுவையை சந்திக்க நேரிட்டாலும், இந்த துன்ப கிண்ணம், நம்மை பரிசுத்த வாழ்வுக்கு அழைத்து செல்லும், மேலும், மோட்சத்தில் நாம் மிக பெரியவராக இருப்போம். நாம் மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் பொழுது அது நம்மை பரிசுத்த வாழ்வில் வளர செய்கிறது. அந்த தியாகம் நம்மால் தாங்கி கொள்ள முடியும். நமக்கு துன்பமானது, நம்மை ஆசிர் வாதமாக மாற்றுகிறது.
உங்களுக்கு தெரிந்த யாராவது ஒருவருக்கு  கேட்ட வரம் கிடைக்கவில்ல ? கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொள்ளவில்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு அவர் உதவி செய்ய வில்லை என்றும் அர்த்தம் இல்லை. கடவுள் நம் மூலம் நம் சேவை மூலம் அவர்களின் ஜெபத்திற்கு உதவி செய்கிறார் - இயேசு நம் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்கிறார்.
நமது முன்னுரிமை எப்பொழுதுமே, கடவுளுடன் உள்ள உறவாக தான் இருக்க வேண்டும். அதனால், கடவுள் நமக்கு கொடுத்ததை அளவிற்கு அதிகமாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நமக்கு கடவுள் கொடுப்பார். நம்மிடம் இல்லாததை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. கிறிஸ்துவின் பிரசன்னமாக அங்கே நம்மால் இருக்க முடியாது. முதலில் கிறிஸ்து நமக்கு இறைசேவை  செய்தால் தான் , நம்மால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும்.

© 2015 by Terry A. Modica

Saturday, October 10, 2015

அக்டோபார் 11 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


அக்டோபார் 11 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு
Wisdom 7:7-11
Ps 90:12-17
Hebrews 4:12-13
Mark 10:17-30
கடவுளின் செல்வத்தை பகிர்ந்து கொள்ளுதல்
மாற்கு நற்செய்தி
க்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ``நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரைக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட'' என்றார்.
அவர் இயேசுவிடம், ``போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார்.
அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ``உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார்.
இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ``செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார்.
சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள்.
மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ``பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார்.
சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார்.


இன்றைய நற்செய்தியில் , இயேசு செல்வந்தரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே" என்று கூறுகிறார். இதில் இரண்டு செய்தி இருக்கிறது .
முதலில் அந்த இளையவர், உண்மையாகவே இயேசு மிகவும் நல்லவர் என்று நம்பி இருந்தால், அவரின் போதனை கண்டிப்பாக நல்லதாக இருக்கும் என்று நம்பி இருந்தால், இயேசுவின் அதிசய நிகழ்வை , பாவமில்லாத வாழ்வை பார்த்திருந்தால், அவர் இயேசு உண்மையாகவே கடவுள், மிகவும் நல்லவர் என்ற ஆதாரம் அவருக்கு கிடைத்திருக்கும்.
இரண்டாவதாக, கிறிஸ்துவின் கேள்வி அந்த இளைஞர் இன்னும் தாழ்மையுடன் நடந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இயேசு சொன்னதை அவர் உண்மையாகவே முழுமையாக நம்பி இருந்தால் , கடவுள் முழுமையாக நல்லவராக இருப்பதால், அவரை தவிர வேறு ஒருவரும் கட்டளைகளை முழுமையாக கிழ்படிந்து செய்வதில்லை என்று அவர் அறிந்திருக்கலாம், அப்படி அறிந்திருந்தால், இயேசு அடுத்து சொல்ல போகும் உண்மையை கேட்க அவரது இதயம் திறந்திருக்கும்.
கடவுளின் பரிசுத்த வாழ்வை போல நாமும் வாழ நம்மை தடுப்பது, இந்த உலக பற்றுதல் தான், இந்த உலகில் இருந்து விடுதலை பெற, நாம் இறையரசிற்கு தேவையான செல்வங்களை நாம் சேர்க்க வேண்டும்.
இதே செய்தியை இயேசு நாம் எல்லோருக்கும் சொல்கிறார், ஆனால், நாம் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் இருக்க சொல்லவில்லை. எல்லாவற்றையும் விட்டு விடு என்று சொல்வது, நாம் அனைத்தையும் துறந்து விட தயாராய் , ஆசையுடன் இருக்க வேண்டும் என்று அரத்தம் கொள்ள வேண்டும். நம்மை ஆசிர்வதிக்கும் எந்த ஒரு பொருளும், கடவுள் நம்மிடம் இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நாம் பயனடைய வேண்டும் என்றும் விரும்புகிறார்.அனால் உண்மையான சந்தோசம், கடவுள் நம் தோழராக இருந்து , அவரின் செல்வத்தை பலருக்கு பகிர்ந்து அளிக்கும் பொழுது வரும் சந்தோசம் தான் உண்மையானது. இது மாதிரி வாழ்வு வாழ தான் நாம் அழைக்கபட்டுள்ளோம், இது தான் முழுமையான வாழ்வு.
நாம் இந்த உலக செல்வங்கள் மேல் பற்றுதலுடன் இருந்தால், நாம் கடவுளிடமிருந்து நம்மை தள்ளி வைத்து கொள்கிறோம். மேலும், கடவுளிடமிருந்து நம் முலம் மற்றவர்களுக்கு செல்ல வேண்டியதை தடுத்து விடுகிறோம். எனினும், இந்த பற்றுதல் இடமிருந்து நாம் முழுமையாக விலக நம் முயற்சியை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது. இந்த பற்றுதல் இடமிருந்து நாம் வெளி வர மிகவும் கடினமாக இருக்கும், மேலும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் கஷ்டமாக இருக்கும்
இயேசு இதனையெல்லாம் நடக்க கூடிய விசயங்களாக , சிலுவை மரணத்தில் காட்டினார். மேலும் பரிசுத்த ஆவியை நம் எல்லோருக்கு பகிர்ந்து கொண்டார். இயேசு நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ, பரிசுத்த ஆவியின் மூலம் நாம் அந்த ஆற்றலை பெறுகிறோம். நாம் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளும் பொழுது, நமது வாழ்வு முழுமையான வாழ்வாக இருக்கிறது. அன்பினால், நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது, மோட்சத்தின் செல்வங்கள் நம்மை வந்து சேரும். மேலும், நாமே மோட்சத்தின் செல்வமாக மாறுவோம்

© 2015 by Terry A. Modica

Friday, October 2, 2015

அக்டோபர் 4 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


அக்டோபர் 4 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு
Gen 2:18-24
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16
மாற்கு நற்செய்தி
அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, ``கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?''என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?''என்று கேட்டார்.
அவர்கள், ``மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்''என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.'இனி அவர்கள் இருவர் அல்ல;ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்''என்றார்.
பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
இயேசு அவர்களை நோக்கி, ``தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்''என்றார்.
சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று,அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு,கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்''என்றார்.
பிறகு அவர் அவர்களை அரவணைத்து,தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.


திருமணத்தில் இயற்கையை தாண்டிய அன்பு
உங்கள் மேல் அன்பில்லாத ஒருவரை , நீங்கள் அன்பு செய்வீர்களா? கடவுளின் இறை அன்பை பெற்று , அதன் முலம் அவர்களை அன்பு செய்த அனுபவம் இருக்கிறதா ?
திருமணம் ஆனவர்கள் அனைவரும், நம்மை நம் கணவரோ மனைவியோ எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ ? அவ்வாரே நாமும் அன்பு செய்ய வேண்டும் இந்த ஒருவருக்கொருவர், கொடுப்பது ஆகும். நாம் எவ்வளவு ஆர்வத்துடனும், ஆசையுடனும் நமது துணைவரை அன்பு செய்கிறோமோ அதே அன்பும் அசையும் அவரிடமிருந்து நமக்கு கிடைக்கும்.
எனினும், நிறைய திருமணங்கள், கடினமான பிரச்சினையில் இருக்கிறது, அவர்களுக்கு இயற்கையை தாண்டிய அன்பும், இறைவனின் தொடர் உதவியும் தேவை படுகிறது. அதனால் தான், திருமன அருட் சாதனம் நமக்கு தேவை ஆக இருக்கிறது. வெறும் ரிஜிஸ்டர் ஆபிஸ் மட்டும் போதாது. திருமணத்திற்கு இறைவனின் அருள் நிரந்தரமாக தேவையாக இருக்கிறது.
இன்றைய நற்செய்தியில், இயேசு மோசேயின் சட்டத்தை பற்றி விளக்கம் சொல்கிறார். மக்களின் கடின இதயத்தால், மோசே அவ்வாறு சொன்னார். திருமண முறிவிற்கு அவர் ஆமோதிக்கவில்லை. இயேசு அவர் இதயத்தை போல நாமும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். யாரையும் அன்பு செய்வதை நிறுத்தாக அன்பு அவருடையது.
கடவுள் நம்மோடு கொண்டுள்ள விசுவாச இணைப்பை போன்றது திருமணம். இறுதி வரை ஒன்றித்திருப்பது , கடவுள் நமக்கு கொடுத்த கொடை. அதன் முலம் கடவுளை , அவரின் எல்லையில்லாத அன்பை இந்த உலகிற்கு எடுத்து காட்ட ஒரு வாய்ப்பு. இந்த திருமணத்தில் உள்ள நிரந்தரமான ஒன்றிணைப்பு, ஒரே அன்பை நாம் நம்பவில்ல என்றால், எப்படி கடவுளின் மாறாத அன்பை நம்ப போகிறோம் ? சில நேரங்களில், அவரின் அன்பிற்கு நாம் தகுதி இல்லாதவராக கூட இருக்கலாம். மேலும், நம்மை பின்பற்றும், குழ்ந்தைகள் எப்படி இதனை நம்பும்?
நினைவில் வைத்து கொள்ளுங்கள், சில நேரங்களில் , அன்பினால் ஒருவர் மற்றவருக்காக சிலுவைக்கு செல்ல நேரிட வேண்டும். திருமண அழைப்பும், அதே போல கிறிஸ்துவின் பாடுகளை பிரதிபலிக்க வேண்டும்.
கடவுள் அவரோடு நாம் எப்பொழுது "இணைந்து" இருக்க வேண்டும் என்று நம்மை பார்த்து கண்டிப்புடன் சொல்வதில் , அவரை விட்டு பிரிந்தாலும். அவர் தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருக்கிறார். அதே போல, கணவரோ மனைவியோ அன்பு செய்ய வில்லை என்றால், மற்றவர் அவரை தொடர்ந்து அன்பு செய்ய வேண்டும் என்று கடவுள் கேட்டு கொள்கிறார். அதே போல, கடவுள் தொண்டர்கள் ஆனா குருக்களுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும், சாதாரண மக்களுக்கும், அன்புடனும், ஒருவருக்கொருவர் உதவி செய்து இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
For building faith-filled marriages, subscribe to my Reflections for Couples at http://reflections-for-couples.org and see what else is available in the Good News website http://marriagevocation.net.

© 2015 by Terry A. Modica