Friday, July 14, 2017

ஜுலை 16 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜுலை 16 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Isaiah 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Romans 8:18-23
Matthew 13:1-23

மத்தேயு  நற்செய்தி

உவமைப் பொழிவு
விதைப்பவர் உவமை
(மாற் 4:1 - 9; லூக் 8:4 - 8)
1அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.

2மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.

3அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: 
விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

4அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.

5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;

6ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.

7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.

8ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.

9
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”  என்றார்.
உவமைகளின் நோக்கம்
(மாற் 4:10 - 12; லூக் 8:9 - 10)
10சீடர்கள் அவரருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள்.

11அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: 
விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.

12உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.

13அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.

14இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:
நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும்
கருத்தில் கொள்வதில்லை.
உங்கள் கண்களால் பார்த்துக்
கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.
15இம்மக்களின் நெஞ்சம்
கொழுத்துப்போய்விட்டது;
காதும் மந்தமாகிவிட்டது.
இவர்கள் தம் கண்களை
மூடிக்கொண்டார்கள்; எனவே
கண்ணால் காணாமலும் காதால்
கேளாமலும் உள்ளத்தால் உணராமலும்
மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்.
நானும் அவர்களைக்
குணமாக்காமல் இருக்கிறேன்.
16உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.

17நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
விதைப்பவர் உவமையின் விளக்கம்
(மாற் 4:13 - 20; லூக் 8:12 - 15)
18“எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்:

19வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.
20பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.

21ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.

22முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.

23நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.

(THANKS to www.arulvakku.com)

நல்ல மண்ணில் விதைக்கப்படும் விதை
இன்றைய ஞாயிறின் நற்செய்தி விதை விதைப்பதை பற்றி சொல்கிறது. சரியான நிலத்தில் விதைக்கபடாத விதை , அதன் தன்மை மாறா விட்டால், அதற்காக செய்த முயற்சி வீனாகிவிடும். ஒவ்வொரு விதையும் அதன் சுயத்தை இழந்து விட வேண்டும். அந்த மண்ணில் அழிந்து , புதிய செடியாக / வாழ்வை அதே விதையிலிருந்து உண்டாக்கும். அதிலிருந்து தான் , முதல் தண்டாக , செடியாக, வேறாக மாறி, பல மடங்காக பெருகும்,  அதன் வேர் எவ்வளவு ஆழமாக கீழே   செல்கிறதோ அந்த  அளவிற்கு பூமியின் மேல் நன்றாக வளரும். அப்படியிருந்தும், அதற்கு தேவையான உரமும் நீரும் எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.
இவையெல்லாம் நடந்தால், இறுதியாக ஒரு செடி வளரும், அது விதையை போலவே இருக்காது. விதை வளர்ந்து இந்த உலக இயற்கை வளம் பெற அது செடியாக மரமாக வளர்ந்து பல்வேறு பலனை கொடுக்கும்.
இயேசுவின் உவமையை நாம் கேட்கும்பொழுது, நாம் நல்ல விதையாக இருந்து, நல்ல பலனுள்ள வாழக்கையை கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் நாம் ஆசைபட்டால் மட்டும் பலன் தராது, நமது வாழ்வை நல்ல நிலமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?
இசையாஸ் வாசகத்தில், கடவுள் ஒரு நல்ல வளமான மண் - கடவுளும் அவர் வார்த்தைகளும் - என்று சொல்லப்பட்டுள்ளது. புனித பவுல் இரண்டாவது வாசகத்தில் துன்பபடுவது படைத்தலின் ஒரு அங்கம் என்று சொல்லபடுகிறது (விதை மண்ணில் விழுந்து, மடிந்து புதிய வாழ்வை கொடுக்கும்) . துன்பத்திலிருந்தும், இறப்பிலயும் இருந்து தான் மீட்பு கிடைக்கிறது.
நாம் இந்த நிலத்தில் முழுதுமாய கொடுத்து, கடவுள் நம்ம ஊட்ட சத்துடேன் வளர்க்க அனுமதித்தால் மட்டுமே நாம் இந்த கடவுளின் அழைப்பை முழுதுமாக ஏற்று கொண்டோம் என்று அர்த்தம்

© 2017 by Terry A. Modica

Saturday, July 8, 2017

ஜூலை 9 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை  9 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  14ம் ஞாயிறு

Zechariah 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Romans 8:9, 11-13
Matthew 11:25-30
மத்தேயு நற்செய்தி

தந்தையும் மகனும்
(லூக் 10:21 - 22)
25அவ்வேளையில் இயேசு
தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

26ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

27
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்
 என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28மேலும் அவர்
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30
ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது
 என்றார்
(Thanks to www.arulvakku.com)
உங்கள் சுமையை எப்படி எளிதாக்குவது
இயேசுவின் நுகம் உங்களை கிழே தள்ளுகிறதா ? அல்லது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கிறதா?  அவரின் நுகம் -- அவர் வாழ்க்கையின் எடுத்து காட்டாக வாழ்ந்தது -- இறை பணியாளன், இந்த இறைசேவை மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளும், மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் அன்பு ஆகும்.

நமது சொந்த போராட்டங்களால், நாம் சுமையை தூக்க முடியாமல் கிழே விழுந்து விடுகிறோம். இதன் சுமை அதிகம் என்று நம்முள் ஒரு எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. நம் சிலுவைகளினால் நாம் அதிகம் சோர்வடைந்துவிடுகிறோம், மேலும் பலர் நம்மிடம் இருந்து உதவி கேட்கிறார்கள் அதனாலும், நாம் மிகவும் சோர்வடைந்து விடுகிறோம். நமக்கு ஒரு ஒய்வு தேவைபடுகிறது.  இந்த பிரச்சினைகளிளுருந்து ஒரு விடுதலை தேவைபடுகிறது. ஒரு ப்ரேக்.! ஏன் இயேசு அவரின் நுகம் மிகவும் எளிது என்று சொல்கிறார் ?  இறைபணி செய்பவர்களின் சுமை எளிது என்று ஏன் சொல்கிறார்?
இயேசுவின் இறை சேவையை நாம் பகிர்ந்து கொண்டால், எப்படி நமக்கு ஒய்வு கிடைக்கும் ?
நமது வாழ்வின் பிரச்சினைகள் கஷ்டங்கள் நம்மை நோகடித்து, சோர்வடையசெய்கின்றன. ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட நாம் அதிக பொறுப்புகளை எடுத்து கொண்டோம்.

அல்லது இயேசு அவரது நுகத்தை நம்மிடம் கொடுத்த பின்பு,  நாம் நமது ஆற்றலை அதிகம் செலவழித்து அந்த சிலுவைகளை களைய முற்பட்டதால், நாம் அதிகம் சோர்வடைந்து விட்டோமோ? அந்த சுமை உங்களை ஆற்றல் இழக்க செய்துவிட்டால் , கடவுள் உங்களை அயர்ச்சி அடைய செய்கிறார், ஏனெனில், அவர் நம்மை எச்சரிக்கிறார்: "உங்கள் வாழ்வை மெதுவாக செலுத்துங்கள், இன்னும் மெதுவாக! " என்றும், உங்கள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வாருங்கள் என்று சொல்லி , ஜெபத்தில் அதிக நேரம் செலவிடுங்கள் ! என்று சொல்கிறார்.

இதனால் கோபமும் சீற்றமும் ஏற்படுமானால் , நம் சுய நல வாழ்வு தான் , சுலபமாக எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நம் எண்ணம் தான் நம்மை இதெற்கெல்லாம் கொண்டு செல்கிறது என்று கடவுள் நமக்கு காட்டுகிறார்.
மாறாக சொல்வது என்றால், நாம் நுகத்திற்கு எதிராக அதன் போக்கில் விடாமல், இழுத்து செல்வதனால் -- கிறிஸ்துவுக்கு எதிராக -- நாம் துன்பம் அடைகிறோம். நம் சொந்த தவறுகளால் நாம் கஷ்டபடுகிறோம். இந்த நேரத்தில் தான் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இயற்கையை தாண்டிய சக்தி படைத்த இறைவன் நுகம் நமக்காக இருக்கிறது அவரோடு இணைந்து இருப்போம் என்று நாம் அடிக்கடி நினைவில் கொள்ளவேண்டும். இந்த நுகம் தான் நமக்கு மிக பெரிய சந்தோசத்தின் ஊற்றாக இருக்கும்
கடவுள் நமக்கு கொடுத்த இறைசேவை செய்வதற்கு தேவையான அனைத்தும் இயேசு நமக்கு கொடுக்கிறார். நாம் அவரோடு இணைந்து செய்யும்பொழுது நமது சுமை எளிதாகிறது. இயேசுவில் நாம் ஒய்வு கொள்வோம். மேலும், அவரிடமிருந்து வேண்டிய ஆற்றலை பெறுகிறோம். நமது கோபம், சீற்றம் மற்றும் அயர்வு அப்படியே மறைந்து விடும். பரிசுத்த சந்தோசத்தை நாம் அனுபவிப்போம், ஏனெனில் நாம் இயேசுவின் நல்ல நுகத்தோடு இணைந்துள்ளோம் மற்றும் அவரின் ஆற்றலோடு இணைந்துள்ளோம்.


© 2017 by Terry A. Modica

Saturday, July 1, 2017

ஜூலை 2, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை  2, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  13ம் ஞாயிறு
2 Kings 4:8-11, 14-16a
Ps 89:2-3, 16-19
Romans 6:3-4, 8-11
Matthew 10:37-42

மத்தேயு நற்செய்தி
37என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

38தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

39தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
கைம்மாறு பெறுதல்
(மாற் 9:41)
40உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.

41இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.

42இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)

எந்த விஷயம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது?
 இன்றைய ஞாயிறு நார்செய்தியில், இயேசுவின் மேல் நம் கண் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார், அது தான் நமக்கு மிகவும் முக்கியம் என்றும், மேலும் இயேசுவே நமது முன்னுரிமை ஆக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கடவுளோடு நமக்கு இருக்கும் உறவு தான் மிகவும் முக்கியம், அதனை விட்டு வேறுதுவும் நமக்கு முக்கியம் இல்லை.  இதன் அர்த்தம் என்ன என்றால், அவர் அழைத்து செல்லும் இடத்திற்கு நாம் அவர் பின்பு செல்ல வேண்டும், ஒவ்வொரு நாளும் 1௦௦% சதவிதம் நாம் கடவுளுக்காக கொடுக்க வேண்டும். (விசுவாசத்தில் சாதாரணமாக இருந்து விட முடியாது), இயேசு தன வாழ்வை கொடுத்து மற்றவர்களுக்காக உழைத்தாரோ அதே போல நாமும் இருக்க வேண்டும்.
நமது வாழ்வை விட்டு கொடுப்பது என்பது தொடர்ந்து தியாகம் செய்வது ஆகும்    நம்மிடம் உள்ள குளிர்ந்த நீரை , தாகம் உள்ள மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். நமது பிசி வேளைகளில் மத்தியில், ஒருவரை வரவேற்று அவர் மூலம் கடவுள் சொல்வதை நாம் கேட்க வேண்டும்.

மற்றவர்களுக்காக நம் வாழ்வை கொடுக்க நாம் தாயாராக இல்லை என்றால், கிறிஸ்துவின் சிலுவையை, நமக்காக அவர் பட்ட வேதனைகளை நாம் நிராகரிக்கிறோம் என்று அர்த்தம். நம்மிடம் நல்ல மாதிரியாக நடந்து கொள்ளாமல் இருப்பவர்களிடம் , அவர்களை விட்டு விலக ஒன்றும் தடையில்லை ,  அவர்களிடமிருந்து இயேசு உங்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து கொண்டு வருவார். இது மாதிரியாக உங்களை நிராகரிக்கிரவர்களை , உங்கள் மேல் துன்பம் கொடுப்பவர்களை விட்டு விலகி செல்வதும் , சிலுவையின் ஒரு வழி தான்.

நாம் உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றி செல்லும் பொழுது, அவரை நாம் முழுமையாக பெற்று கொள்ளலாம், அவரிடமிருந்து அனைத்தும் நாம் பெற்றுகொள்வோம். நமது பயத்தை , சொந்த கொள்கைகளை விட்டு விடும்பொழுது, இயேசு நம்மை புதிய இடத்திற்கு அழைத்து செல்கிறார், மேலும், பிரசினைகளை கையாள புதிய வழிகளை காண்பிக்கிறார். புதிய வாழ்வில் கிறிஸ்துவில் கண்டுகொள்கிறோம். கிறிஸ்துவின் வழிகள் எப்பொழுமே நாம் பயபடுவதை விட நல்ல வழிகள் தான்.
மிதமான விசுவாசத்திற்கும், கிறிஸ்துவில் முழுதும் இணைந்து , சாகசங்கள் நிறைந்த, அற்புதங்கள், எதிர்பாராத தீர்வுகள், சிகிச்சைகள், வெற்றிகளுடன் உள்ள கிறிஸ்த வாழ்விற்கும் , கடவுளுக்கு நாம் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நாம் அறிந்து கொள்வதிலும் வித்தியாசம் இருக்கிறது.

© 2017 by Terry A. Modica