Wednesday, May 1, 2019

மே 5 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே 5 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 3ம் ஞாயிறு

Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Revelation 5:11-14
John 21:1-19
யோவான் நற்செய்தி
8. பிற்சேர்க்கை
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்
1பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:
2சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

3அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

5இயேசு அவர்களிடம்
பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?”
 என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லைஎன்றார்கள்.

6அவர்
படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்
 என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

7இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

8மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகுதொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
9படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

10இயேசு அவர்களிடம்
நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்
 என்றார்.

11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

12இயேசு அவர்களிடம்
உணவருந்த வாருங்கள்
 என்றார். சீடர்களுள் எவரும், ‘நீர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

13இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

14இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
இயேசுவும் பேதுருவும்
15அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம்
யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிடமிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
 என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!என்றார். இயேசு அவரிடம்
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்
 என்றார்.
16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம்
யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!என்றார். இயேசு அவரிடம்
என் ஆடுகளை மேய்
 என்றார்.
17மூன்றாம் முறையாக இயேசு அவரிடம்
யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?”
என்று கேட்டார். உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம்
என் ஆடுகளைப் பேணிவளர்.
18
நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்
 என்றார்.

19பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம்
என்னைப் பின்தொடர்
 என்றார்.

 (thanks to www.arulvakku.com)
நமது அழைப்பின் இயல்புகள்
எப்பொழுதெல்லாம் இன்றைய ஞாயிறின் நற்செய்தியை நான் படிக்கிறேனோ , அப்பொழுதெல்லாம், இயேசு, அவர் சுட்டு கொண்டிருந்த மீனை எங்கிருந்து பிடித்தார் ? என்ற ஆர்ர்சரிய கேள்வி என்னுள் எழும். அவரிடம் மீன் வலை இருந்ததா? அல்லது ரொட்டி வாங்கும் பொழுது மீனையும் சேர்த்து வாங்கினாரா? அப்படி இருந்தால், இயேசுவை யாரும் அந்த கடை வீதியில் கண்டு பிடிக்கவில்லையா? அல்லது, மீன் தானே துள்ளி குதித்து கரைக்கு வந்ததா? மேலும், சாத்தான் அவரை சோதித்தது போல, கல்லை ரொட்டி துண்டுகளாக இயேசு மாற்றினாரா  ?
ரொட்டிகளையு, மீன்களையும் பல மடங்காக மாற்றிய அதிசயத்தை மீண்டும் நினைத்து பார்த்தோமானால்,  இப்பொழுதும் அதே உணவு தான், மீனும் ரொட்டி துண்டுகளும். இங்கேயும் அதே அதிசயம். எவ்வளவு சிறியதாக இருந்தாலும், கடவுள் இந்த உலகை உருவாக்கியவர், பல மடங்காக ஆக்க கூடியவர் கடவுள். எல்லாவற்றையும் பல மடங்காக செய்ய கூடியவர். நம்மில் என்ன இருக்கிறது என்பது பெரிய விசயமில்லை, கடவுள் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதே முக்கியம்.
கடவுள் நமக்கு கொடுத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் விருப்பமாய் இருக்கிறோம் என்பதை தான் கடவுள் கேட்கிறார். ரொட்டி துண்டுகளை பல மடங்காக பெருக்கிய அதிசயத்தில் சீடர்கள் அதனை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க சொன்னார். அதே போல , இங்கே மீன் பிடிக்க சொல்லி நிறைய மீன்கள் பெற்ற அதிசயத்தில், "பிடித்த மீன்களில் சிலவற்றை இங்கே கொண்டு வாருங்கள்" எண்று சொல்லப்பட்டு, இயேசு ஏற்கனவே சமைத்து கொண்டிருந்த உணவோடு அதனையும் சேர்த்தனர்.
அதன் பிறகு, இயேசுவின் மேல் இராயப்பர் கொண்ட அன்பினை, "ஆடுகளுடன்" பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லபடுகிறது. இந்த அன்பு எங்கிருந்து வந்தது? ராயப்பர், அவராகவே , சொந்த முயற்சியினால், யாரிடமும் அன்பு செலுத்தவில்லை. நாமும் அதே போல் தான்.  கடவுளால், அவரின் அன்பினை வைத்து தான் ராயப்பார் படைக்கபட்டார். நாமும், கடவுளின் உருவத்தை போல, அவரின் அன்போடு தான் படைக்கப்பட்டோம்.
கடவுளின் எல்லையில்லா அன்பை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள இராயப்பர் அழைக்கபட்டார். அதனால், கடவுளின் இறையரசை இந்த உலகிற்கு தொடர்ந்து பரவலாக்கப்பட வேண்டும். கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? இதற்கு பதில், உங்களிடம் என்ன பகரிந்து கொள்ள இருக்கிறது என்பது அல்ல, மாறாக, எந்த அளவிற்கு பகிர்ந்து கொள்ள தயாராய் ஆவலாய் இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். கடவுளின் அழைப்பிற்கு, "ஆமாம்" என்ற உங்கள் பதில் தான் முக்கியம்.

© 2019 by Terry A. Modica


Saturday, April 27, 2019

ஏப்ரல் 28 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஏப்ரல் 28 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 2ம் ஞாயிறு
Acts 5:12-16
Ps 118:1-4, 13-15, 22-24
Revelation 1:9-13, 17-19
John 20:19-31
யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
 என்றார்.

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா
 என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.

25மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்என்றார்.
26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
 என்று வாழ்த்தினார்.
27பின்னர் அவர் தோமாவிடம்
இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்
 என்றார்.
28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!என்றார்.
29இயேசு அவரிடம்
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்
 என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.

31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)
இரக்கத்தின் ஆவியில் வாழ்வோம்
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், பரிசுத்த ஆவியின் விழாவிற்கு அடித்தளம் இடபடுகிறது. ஆவியின் முழுமையை கொடுக்கும் முன்பு, இயேசு அமைதியை அன்பளிப்பாக கொடுக்கிறார். அவரின் இதயத்திலிருந்து வரும் அன்பளிப்பு அது. இயற்கையை தாண்டிய தெய்வீக அன்பளிப்பு, நமது இருதயத்துக்குள் அது ஊடுருவி செல்கிறது. நாம் சோதனைகளையும் கஷ்டபடும்பொழுது அமைதியான கிறிஸ்துவின் பிரசன்னம் நம் இதியத்திற்குள் இருக்கிறது.
இயேசு அவரின் உயிர்த்தேழுந்த பின்பு, இரண்டுமுறை 12 சீடர்களுக்கும் அதே சந்திப்பில் இந்த அன்பளிப்பை கொடுத்தார். அதன் பிறகு கடவுளின் உயிரின் மூச்சை அந்த சீடர்களிடம் கொடுத்தார். மேலும் அவர்களை குருக்களாக ஆசிர்வதித்து, மற்றவர்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்தார். (இதுவும் அமைதியை கொடுக்கும் அன்பளிப்பாகும்)

அமைதியின் அன்பளிப்பு, இயேசு காலத்திலிருந்து அர்சிக்கப்பட்ட குருக்கள் மூலம் நாம் இன்னும் பாவசங்கிர்த்தனம் அருட்சாதனம் மூலம் பெறுகிறோம். மேலும், பரிசுத்த வாழ்வில் நாம் நிலைத்திருக்க கடவுளின் ஆவியை நமக்கு கொடுத்து கொண்டிருக்கிறார். கடவுளின் ஆவி, வாழ் நாள் முழுக்க நம்மை காத்து கொண்டுகிருக்கிறது. அந்த ஆவி தான், இந்த உலகை உருவாக்கியது. நாம் பரிசுத்த வாழ்வில் வாழ அது தான் துணை நிற்கிறது. கடவுளின் பரிசுத்தம் நம்மில் ஒளிர , பரிசுத்த ஆவி தான் துணை நிற்கிறது
எதுவெல்லாம் பரிசுத்தம் இல்லையோ - ஆவிக்குரியதாக இல்லையோ -- அதெல்லாம் அழிவிற்குரியது , , பாவங்கள் ஆகும். தெய்வீக இரக்கத்தின் வடிவான இயேசு, சிலுவையில் மரணம் எய்து, நமக்கு ஆவியை கொடுத்தார், அதன் மூலம் , கடவுளின் மன்னிப்பை பெற்று , நாம் வாழ வழி செய்தார்.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்று ஜெபிக்கும் பொழுதெல்லாம், மெதுவாக சொல்லுங்கள், மேலும், "நாம் மற்றவர்களின் பாவங்களை மன்னிப்பது போல, எங்களை மன்னியும்  " என்ற வாக்கியங்களுக்கு இன்னும் கூர்ந்து கவனியுங்கள், மேலும். உங்களை எரிச்சல் படுத்தியவர்களையும், தொடர்ந்து வேதனை தருபவர்களையும் நினைத்து பாருங்கள். முழு மனதோடு அவர்களை மன்னியும்.
மாறாக, நீங்கள் அவர்களை மன்னிக்காவிடில், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள் துன்பபடலாம், உங்கள் ஆன்மாவும் துன்ப படலாம், ஏனெனில், கடவுள் கொடுத்த மன்னிப்பை நீங்கள் நிராகரிக்கீறீர்கள்  அதனால், கடவுளும் உங்கள் பாவங்களை மன்னிக்க ஒரு வாய்ப்பை தடையாக இருக்கிறீர்கள்.
பாவங்களை ஏற்பதும்,அல்லது அதனை மறப்பதும், மன்னிப்பது இல்லை. நமக்கு எதிராக பாவம் செய்தவர்களை எதிர்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன நிலையை தூக்கி எறிவதே ஆகும்.  அதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள் மேல் நாம் அன்பு செலுத்துவது, அதன் முலம் கிறிஸ்துவின் அன்பளிப்பான அமைதியில் பங்கேற்பது ஆகும்.
© 2019 by Terry A. Modica


Sunday, April 14, 2019

இயேசுவின் கல்லறை ஜெபம்



ஓ! மிகவும் வந்திக்க தக்க கர்த்தாவும் இரச்சகருமாகிய யேசு கிறிஸ்துவே! எங்கள் பெரும் பாவத்திற்காகக் கொலை களத்தில் உண்மையாகவே இறந்தீர். கிறிஸ்து இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே! எங்களுடைய நினைவுகளை கவனியும். ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே! எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களை தப்புவியும். கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்களை சகல துன்பங்களின்றும் காப்பாற்றும். இயேசு இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் பகைவரிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும். எங்கள் கருத்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் அபாய மரணத்தினின்றும் எங்களை காப்பாற்றி நித்திய ஜீவனை தந்தருளும். சிலுவையில்  அறையுண்ட நசரேனின் இயேசு நாதரே! எப்போதும் எங்கள் மீது இரக்கம் வையும்.  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நாதருடைய மகிமையாலும், அவருடைய பாடுகளாலும், உயிர்த்தெழுதலினாலும் தெய்வத் தனைக்குரிய மோட்ச ஆரோகநித்தினாலும், எங்களை பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே அந்த நாளில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தீர். மெய்யாகவே நீர் பிறந்த மூன்றாம் நாள் மூன்று இராஜாக்களால் தூபம் பொன் வெள்ளி போளம் முதலிய காணிக்கைகள் அளிக்கப் பட்டீர். பெரிய வெள்ளி கிழமையில் கல்வாரி மலையின் மேல் சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டு நிக்காதேமு, சூசை என்னும் பக்தர்களால் சிலுவையினின்று இறக்கி அடைக்கம் செய்ய்பட்டீர். மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய மகிமையானது எங்களை  சத்துருக்களுடைய வஞ்சனைகளின்று     இப்போதும் எப்போதும் காப்பாற்றும். ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மீது கிருபையாயிரும். புனித மரியே , புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். (தங்களுக்கு வேண்டியதை கேட்கவும்) கர்த்தராகிய இயேசுவே, உம்ம்டைய பாடுகளின் வழியாய் இந்த பாவ உலகத்தினின்று உம்முடைய ஆத்துமம் பிரிந்தது உண்மையே  அப்படியே நாங்களும் எங்கள் வாழ்வின் இறுதி வேளையில் படும் துன்பங்களை உமது இரக்கத்தின் கண் கொண்டு பாரும். உமது பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா இடையுறுகளிலும் இப்போதும் எப்போதும் எங்களை தப்புவியும்.
ஆமென்.