Friday, May 4, 2012

மே 6, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 6, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 5ம் ஞாயிறு

Acts 9:26-31
Ps 22:26-28, 30-32
1 John 3:18-24
John 15:1-8

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 15

இயேசுவே உண்மையான திராட்சைச் செடி
1 ' உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் பார்ப்பது போல், நல்ல கணி கொடுக்கும் திராட்சை செடியாக, கிறிஸ்துவோடு இனைந்து இருக்கிறோம். இயேசுவும் ஒரு திராட்சை கொடி, அவரோடு நாமும் இனைந்து இருப்பதால், நாமும் அவரை போலவே அழைக்க பட்டிருக்கிறோம். நாமும் நல்ல கனிகளை தரவேண்டும். இயேசு கொடுத்த அதே கனிகளை தரவேண்டும்.


எனினும், நம்மில் பலர், இது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்து கொள்வதில்லை! கிறிஸ்துவின் கனிகளை கொடுப்பதை  நிதர்சனம் செய்யாமல் அதனை முக்கிய கடமையாக எடுத்து கொள்ள வேண்டும். தற்காலத்தில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள், சாதாரண கிறிஸ்தவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். கிறிஸ்தவர்களாக இருப்பதால் நமக்கு ஒரு நிறைவு இருக்கிறது. சில மனிதர்களுக்கு மட்டும், இரக்கத்தையும், தாராள குணத்தையும், அன்பையும் கொடுப்பதால், கடவுள் நம் செயல்களினால் திருப்தி அடைந்துவிட்டார் என நாம் நினைக்கிறோம்.
ஏன் இவ்வுலகில் அதிக கெட்டதும்  , தீமைகளும் நடக்கின்றன? என்ற கேள்வியை கேட்டதுண்டா? போரை அடக்கியும், ஊழலை ஒழித்தும், மிகப்பெரிய பனக்காரர்களின் கொட்டங்களை அடக்கியும், கடவுள் இவ்வுலகில் அமைதியை நாட்டவில்லை? என்ற கேள்வி நமக்கு எழலாம். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிரான சட்டங்களையும், கிரிமினல் குற்றங்களையும், ஏன் கடவுள் நிறுத்துவதில்லை என்ற கேள்வியும் நமக்கு எழுகின்றது
ஏன் கடவுள் ஏதாவது செய்வதில்லை?
கண்டிப்பாக அவர் செய்கிறார்! எனினும், திராட்சை செடிகளை வளர்ப்பது போலவே செய்கிறார். திராட்சை கொடிகள் ஒவ்வொரு கொடியாக சென்று கிளை கிளையாக கனிகள் கொடுப்பது போல நாமும் மற்ற கிறிஸ்தவர்களும் கனிகளை கொடுக்க வேண்டும். கிறிஸ்துவின் கொடியிலிருந்து நாம் சக்தியை பெற்று நாம் கனிகளை கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கனிகள் அந்த கொடியிலேயே இருக்க கூடாது.


இவ்வுலகிற்கு கொடுப்பதற்காக கிறிஸ்து பல பழங்களை உங்கள் மூலம் கொடுக்கிறார். இன்னும் பலத்துடனும், சக்தியுடனும், நமது கிளைகளை படர விட்டு, கிற்ஸ்துவிடம்  நாம் பெற்ற அத்தனையையும் மற்றாவர்களிடம் பகிர வேண்டும்.
ஓரளவிற்கு கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் இவ்வுலக இறைசேவையை செய்தால், தீமைகளை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர முடியும். தீமையின் மேல் வெற்றியை கிறிஸ்து கொண்டு வருவார். இவ்வுலகில் புனிததன்மை, கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியின் மூலம்  நாம் பெற்று , நம் புனித தன்மை மூலம் இவ்வுலகை புனிதமாக்குவோம்.

© 2012 by Terry A. Modica

Friday, April 27, 2012

ஏப்ரல் 29, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 29, 2012  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 4ம் ஞாயிறு
Acts 4:8-12
Ps 118:1, 8-9, 21-23, 26, 28-29
1 John 3:1-2
John 10:11-18
நற்செய்தி வாசகம்
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18
அக்காலத்தில் இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்லஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டுஅதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்'' என்றார்.

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு தன்னை நல்லாயன் என்று சொல்கிறார். ஆடுகளாகிய நமக்காக அவர் உயிறை துறந்தார். அவரின் எல்லா விருப்பங்களையும் நமக்காக ஒதுக்கி வைத்தார். - மனிதனாக அவருக்கு இருந்த ஆசைகள், ஆவல்கள், அவரின் இருப்பிடமான , பாதுகாப்பான மோட்சத்தை விட்டு, இப்பூமிக்கு வந்தார். அவருடைய நேரத்தை நமக்காக செலவழித்தார். அவருடைய தூக்கத்தை விட்டு கொடுத்தார், மற்றவர்களிடம் கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆட்பட்டு , அவரின் கொடுமைகளை தாங்கி கொண்டு நமக்காக இறந்தார்.

நாம் ஆடுகளாக இருந்து ஆயனின் குரலை கேட்டு , நல்ல மேய்ச்சல் நிலத்திற்கு அவரை பின் செல்வோம். நமக்கு அவர் நல்லாயனாக இருக்க வேண்டும் , நமக்கு அவரின் பாதுகாப்பும், வழிகாட்டுதலும், அன்பும் தேவை.


எனினும், சில நேரங்களில் இயேசுவின் குரலை கேட்பதை மறந்து விடுகிறோம். நமது வாழ்வு திட்டமிட்டபடி நடக்க வில்லையென்றால், அடிக்கடி நாம் இயேசுவை குரலை கேட்க மறக்கிறோம். நாம் செயல் குழந்து போகும்போதே, பயத்தில் இருக்கும்போதே, இயேசு ஆட்டின் மந்தையை விட்டு வெளியே சென்று விட்டதாக,னாம் அனுமானித்து கொள்கிறோம்அவர் நம்மை விட்டு விட்டுஅவர் காணாமற் போன ஆட்டை தேடி சென்று விட்டார், என்று நினைத்து விடுகிறோம். ஓநாய்கள் தாக்கும் போது அவர் அங்கே இருப்பதில்லை. ! ஏன் அவருக்கு இது தெரியவில்லையா??  நம் மேல் உண்மையான அக்கறை உள்ள அவர், நாம் தாக்கப்படும்போது, எங்கே சென்றார்? கானமற் போன ஆட்டின் மேல் அவ்வளவு அக்கறை கொண்டார்? நாம் நல்ல ஆடாக இருந்து நம்மை விட்டு ஏன் போனார்?

எனினும், இயேசு எவ்வளவு வேலையில் இருந்தாலும், கானாமற் போன ஆட்டை கண்டு பிடிக்க எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்றாலும், , அவர் நம்முடனும் இருப்பார். நமது வாழ்வின் பாதை சாவின் இறுதிக்கு சென்றாலும், மலையின் உச்சிக்கு சென்றாலும், இயேசு நம்மை கைவிட்டதால் அல்ல. நல்லாயனின் ஊழியர்கள் நம்மை வேறு திசைக்கு அழைத்து செல்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.
மற்ற திசைக்கும் நாம் செல்ல விரும்பவில்லை. நாம் ஏற்கனவே சென்ற மேய்ச்சல் நிலத்தில் தான் இருக்க ஆசைபடுகிறோம். ஆடு மேய்ப்பவர்கள், டக் டக்  என்று அவர்கள் தட்டும்போது நமக்கு பிடிப்பதில்லை. இந்த கட்டுபாடுகள் நமக்கு பிடிக்காமல் , இதனை ஆசிர்வாதமாக எடுத்து கொள்வதில்லை. ஆனால், நாம் நம்பிக்கையுடன் இயேசுவை நாம் பார்த்தும் , அவரின் சொல்லை கேட்டும் இருந்தால், நமக்கு இதெல்லாம் புரியும். சில நேரங்களில், முதல் தடவை கூட இயேசு சொல்வதை நமக்கு பிடிப்பதில்லை.
© 2012 by Terry A. Modica

Friday, April 20, 2012

ஏப்ரல் 22 , 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 22 , 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
 பாஸ்கா காலத்தின் 3ம் ஞாயிறு
 Acts 3:13-15, 17-19 Ps 4:2, 4, 7-9 1 John 2:1-5a Luke 24:35-48
 லூக்கா நற்செய்தி
 அதிகாரம் 24
 .35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இயேசு சீடருக்குத் தோன்றுதல் (மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; யோவா 20:19 - 23; திப 1:6 - 8) 36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார்.37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38அதற்கு அவர், ' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்;40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார்.42அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்;45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46அவர் அவர்களிடம், ' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் 'என்றார்.
 (thanks to www.arulvakku.com)
 இப்பொழுது, நாம் புதுபிக்கபட்ட மக்கள் - ஈஸ்டர் மக்கள்- இன்றைய வாசகங்கள், மீட்பின் வாழ்வை வாழ்வதற்கும், பாவத்துடன் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்களை நமக்கு எடுத்து காட்டுகிறது. "எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்." என்று முதல் வாசகம் கூறுகிறது. இரண்டாவது வாசகம்: " ``அவரை எனக்குத் தெரியும்'' எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது." என்று கூறுகிறது. மேலும் நற்செய்தி வாசகமோ: "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் " என்று கூறுகிறது. நாமெல்லாம் தினமும் ஏதோ ஒரு வகையில் பொய் சொல்லி கொண்டிருக்கிறோம். விசுவாச ப்ரமானத்தை வாயில் சொல்லி கொண்டு , தமது வாழ்வில் கடைபிடிப்பதில்லை. கிறிஸ்துவின் அன்பை உண்மையாக நம்பும் நாம் நமது வாழ்வில் நடப்பவை அதனை ப்ரதிபலிப்பதில்லை. கடவுள் நம்மை ஒவ்வொரு தருணத்திலும், ப்ரச்னையில் அக்கறை காட்டுவதில்லை என்பதை நமது கவலையின் மூலம் , நாம் கடவுள் மேல் நம்பிக்கையின்றி இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இயேசு நம் எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் பொழுது, நாம் அவர் என்ன சொன்னாரோ அதனை நாம் நம்பவில்லை. நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுது நம்மை விட புத்திசாலியாக இயேசு தெரியவில்லை. உங்கள் செயல்கள் எவ்வளவு அதிகமாக அழுத்தமாக இயேசுவை பற்றி உண்மையை எடுத்துரைக்கிறது? இயேசு நமக்கு என்ன செய்தோரோ அதை நம்மில் பலர் மிகவும் குறைந்து மதிப்பிடுகிறோம். அவரது மரணமும், மீட்பும் நாம் மோட்சத்திற்கு போக போதுமானதாக இல்லை. என நாம் நினைக்கிறோம். தினமும் நாம் மீட்படைய வேண்டும் என்று நினைத்து நம்மையே அதற்கு தயார் செய்வதில்லை. கடவுள் இவ்வுலகில் மிகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை, மாறாக, கிறிஸ்துவை போல இன்னும் இன்னும் மாற வேண்டும் என்ற நமது ஆவலை எதிர்பார்க்கிறார். நமது வாழ்வை ஒவ்வொரு முறையும் சுய பரிசோதனை செய்து, நம்மையே இன்னும் முன்னேற வேன்டும். நம்மில் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை செய்ய வேண்டும். கடவுள் நம் மேல் மிகவும் அன்பு கூர்வார்.
 © 2012 by Terry A. Modica

Friday, April 13, 2012

ஏப்ரல் 15, 2012 ஞாயிறு நற்செய்தி

ஏப்ரல் 15, 2012 ஞாயிறு நற்செய்தி
பாஸ்கா 2ம் ஞாயிறு
Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் 'என்றார்.

முடிவுரை: நூலின் நோக்கம்
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
(www.arulvakku.com)

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' தோமா இன்றைய நற்செய்தியில் சொன்னதை போல, நாமும் திருப்பலியில் திவ்ய நற்கருணையை உயர்த்தும் போது சொல்ல வேண்டும்.இந்த பழக்க வழக்கத்தை சில வருடங்களாக கத்தோலிக்கர்கள் மறந்து விட்டோம். இப்பழக்கத்தை மீண்டும் புதுபித்து கொண்டால் நல்லது. இது ஒரு பயபக்தியுடன் கூடிய , கிறிஸ்துவின் தலைமையை , நற்கருணையில் அவர் இருக்கிறார் என்பதையும் நாம் தாழ்மையுடன் ஏற்றுகொள்வதே ஆகும்.

போப் இரண்டாம் ஜான் பால் , திவ்ய நற்கருணையை பற்றிய அவரது நூலில்: "கிறிஸ்து எங்கெல்லாம் அவரை வெளிபடுத்துகிறாரோ, அதையெல்லாம் நாம் அங்கீகரிக்க வேண்டும், ஆனால் அதற்கு மேலாக, திவ்ய நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் நாம் ஏற்று கொண்டு அதனை ஆராதிக்க வேண்டும். " என்று மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார்.

இயேசு எப்படி அவரது சீடர்களுக்கு அவரது உடலை காட்டி நிருபீத்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சீடர்கள் அவரை ஆவியென்று நினைத்தார்கள். அல்லது எப்படி அவரை எடுத்து கொள்வது என்றே அவர்களால் நினைக்க முடியவில்லை. உயிர்த்தெழுதலை, மீட்பை அவர்களால் இன்னும் நம்ப முடியாமல் இருந்தார்கள்.
இயேசு அவரது காயத்தின் மூலமாக இந்த ஆச்சரியத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அதையே தான் ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்கும் இயேசு செய்கிறார்.
நமது பொது அறிவு , புத்தி கூர்மையை பயன்படுத்தி, சாதாரண ரொட்டி துண்டையும், திராட்சை ரசத்தையும் , உண்மையான கிறிஸ்துவின் உடலும், இரத்தமும் என்று எண்ணி பார்ப்பது கொஞசம் கஸ்டமான காரியம் தான். அது அப்படியே 2000 வருடத்திற்கும் முன்பு இரத்தமும் சதையுமான உடல் தான் திவ்ய நற்கருணை. மேலும், உயிர்த்த இயேசுவும் அங்கே இருக்கிறார் என்பதை நாம் கிரகித்து கொள்ள இன்னும் கஷ்டம்.

வாழ்வும் கிறிஸ்துவின் மூலம் பயனைடைய , ஒவ்வொரு திருப்பலிக்கும் செல்கிறோம். பெரிய வெள்ளியன்று அவர் செய்த தியாகங்கள் நாம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று நாம் அறியும்போது, அவரின் காயங்களை பார்க்கிறோம். அதன் பிறகு, திவ்ய நற்கருணையின் உண்மையை நாம் அறிய ஆரம்பிக்கிறோம்.
கிறிஸ்துவின் இறப்பு நம்மை நம் பாவங்களிலிருந்து மீட்க தேவை என்று நாம் நினைக்கும்போது, நற்கருணையின் ஆச்சரியத்தை நாம் நம்ப தயாராகிறோம். மேலும் அவரின் உயிர்த்தெழுதலும், மீட்பும் நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லும். அடுத்த முயற்சியாக, இயேசு நம்மை ஆக்கிரமித்து , அவரின் இருப்பை நம்மில் ஏற்க வேண்டும். அவர் நம்மில் எவ்விதத்திலாவது வந்து நம்மை அவரை போல மாற்ற் வேண்டும்.
இந்த ஆவலோடு நாம் இயேசுவை திவய நற்கருணையில் பார்க்கும்போது " நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று சொல்வோம்.

© 2012 by Terry A. Modica

Friday, April 6, 2012

ஏப்ரல் 8, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 8, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

இயேசு உயிர்த் தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.10பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)

கொண்டாடுங்கள்! எதிர்பாராத ஆச்சரியத்தின் நிகழ்வான இயேசுவின் உயிர்த்தெழுதலின் நினைவு நாள். முதல் சீடர்கள் காலியாய் இருந்த கல்லறையை பார்த்து ஆச்சர்யபட்டதை போல் உங்களுக்காகவும், கடவுள் சில் ஆச்சரியங்களை வைத்துள்ளார். இன்றைய நற்செய்தியில், நிறைய விசயங்கள் திகைப்பும், வியப்படைய செய்யும் செய்தியும் இருந்தது, ஆனால் யாரும் அதனை புரிந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களுக்கு முன்னரே சொல்லியிருந்தார், இறப்பிற்கு பிறகு நாம் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியிருக்கிறார். இருந்தும், கடவுளின் திட்டங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தன. உயிர்த்தெழுதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மெசியாவின் இறைபனியில் உயிர்த்தெழுதல் முக்கிய பங்கு என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை.

கடவுளின் திட்டங்கள் நமக்கு பல நேரங்களில் ஆச்ச்சரியமாகவே இருக்கிறது. நமது வாழ்வின் பல தருணங்களில், கஸ்டமான நேரங்களில் , அது முடிந்து பெரும் அழகான வெற்றியை கொடுக்க போகிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். நம் வாழ்வில் உள்ள காலியான கல்லறைகள் (நமது இழப்பை நினைத்து வருந்துவது) புது வாழ்விற்கான ஆரம்பம் என்பதை நாம் புரியாமல் விட்டு விடுகிறோம். யேசு நமது கஷ்டமான நேரங்களை வாழ்வை மிக பெரிய ஆசிர்வாதமாக மாற்ற போகிறார் என்பதை நாம் நினைப்பதில்லை.


துயரமான நேரங்களில், நாம் துன்பப்படுகிறோம், நமது சிலுவைகளிலிருந்து விலகி எப்போ வெளியே வருவோம் என்று காத்திருக்கிறோம். அதற்கிடையே இயேசு சிலுவையினால், உண்டான ஈஸ்டர் வெற்றியை உங்களுக்கு தருகிறார். நாம் துயரமான நேரத்தில் இருக்கும்போது, கடவுளின் புகழொளியை நாம் எப்படி அறிந்து கொள்வது, நாம் நமது சிலுவையை நினைத்து மணம் உருகும் போது, அதன் வெற்றியை நாம் எப்படி அறிந்து கொள்வது. அது ஒன்றும் சாத்தியமில்லை.

ஈஸ்டர் மக்களாகிய நாம், சிலுவையின் வெற்றியை நாம் எப்படி பார்ப்பது , அறிந்து கொள்வது என்பதை நாம் கற்று கொள்ள வேண்டும். இயேசு எப்போதும் இருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். தியதை விலக்கி நல்லதாக மாற்ற இயேசு இருக்கிறார். கடவுளின் ஆச்சரியங்களை ஏற்று கொள்ள நாம் மாறவேண்டும்.

© 2012 by Terry A. Modica

Saturday, March 31, 2012

ஏப்ரல் 1, 2012 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 1, 2012 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
குருத்து ஞாயிறு
For the Entrance Procession:
Mark 11:1-10 or John 12:12-16
Psalm 24 & Psalm 47
For Mass:
Isaiah 50:4-7
Ps 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11
Mark 14:1–15:47



மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1-15: 47
பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்; ஆயினும், `விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்' என்று நினைத்தனர்.
இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார்.
ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ``இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,'' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண்மீதும் சீறி எழுந்தனர்.
இயேசு அவர்களிடம், ``அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்;இவரும் நினைவுகூரப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது.
பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள்.
அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.
அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், `` `நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.
அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு, ``என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்''என்றார்.
அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக ``நானோ? நானோ?'' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.
அதற்கு அவர், ``அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்'' என்றார்.
அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு,அவர்களுக்குக் கொடுத்து, ``இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார்.
பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், ``இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், `ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்'' என்றார்.
பேதுரு அவரிடம், ``எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்'' என்றார். இயேசு அவரிடம், ``இன்றிரவில் சேவல் இரு முறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.
அவரோ, ``நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்'' என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.
பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ``நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்''என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார்.
அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ``எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். ``அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்'' என்று கூறினார்.
அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ``சீமோனே,உறங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒரு மணி நேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்'' என்றார்.
அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ``இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும்,நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள்,போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்'' என்று கூறினார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ``நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு. அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டுபோங்கள்'' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ``ரபி'' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். அருகில் நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
இயேசு அவர்களைப் பார்த்து, ``கள்வனைப் பிடிக்க வருவதுபோல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக்கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்'' என்றார்.
அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.
அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்றுகூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.
தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.
சிலர் எழுந்து, ``மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்'' என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர்.
அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.
அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, ``இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூறமாட்டாயா?'' என்று இயேசுவைக் கேட்டார்.
ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை.
மீண்டும் தலைமைக் குரு, ``போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?'' என்று அவரைக் கேட்டார்.
அதற்கு இயேசு, ``நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்'' என்றார்.
தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, ``இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?'' என்று கேட்க, அவர்கள் அனைவரும், ``இவன் சாகவேண்டியவன்'' என்று தீர்மானித்தார்கள்.
பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ``இறைவாக்கினனே,யார் எனச் சொல்'' என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.
அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப்பெண் ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்துகொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ``நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே'' என்றார்.
அவரோ, ``நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை'' என்று மறுதலித்து,வெளிமுற்றத்திற்குச் சென்றார்.
அப்பொழுது சேவல் கூவிற்று. அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழஇருந்தவர்களிடம், ``இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்'' என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ``உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்'' என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ``நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது'' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.
உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ``சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்'' என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவுகூர்ந்து மனம் உடைந்து அழுதார்.
பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று, பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
பிலாத்து அவரை நோக்கி, ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்க அவர், ``அவ்வாறு நீர் சொல்கிறீர்''என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, ``நீ பதில் ஒன்றும் சொல்லமாட்டாயா? உன்மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!'' என்று அவரிடம் கேட்டான்.
இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான். விழாவின்போது மக்கள் கேட்டுக்கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு.
பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, ``யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?'' என்று கேட்டான்.
ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள்.
பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ``அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான், அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்'' என்று மீண்டும் கத்தினார்கள்.
அதற்குப் பிலாத்து. ``இவன் செய்த குற்றம் என்ன?'' என்று கேட்க, அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டுபோய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள்முடி பின்னி அவருக்குச் சூட்டி, ``யூதரின் அரசே வாழ்க!'' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்; அவரை ஏளனம் செய்தபின் செந்நிற ஆடையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.
அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படை வீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.
அவர்கள் `மண்டை ஓட்டு இடம்' எனப் பொருள்படும் `கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அங்கே அவருக்கு வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை.
பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க``யூதரின் அரசன்'' என்று அவர்கள் எழுதி வைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். இவ்வாறு `கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்ற மறைநூல் வாக்கு நிறைவேறிற்று.
அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ``ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்'' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ``பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை'' என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.
அவர்கள், ``இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்;அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்'' என்றார்கள்.
அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.
பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ``எலோயி, எலோயி, லெமா சபக்தானி?'' என்று உரக்கக் கத்தினார்.``என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்பது அதற்குப் பொருள். சூழ நின்றுகொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ``இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்'' என்றனர்.
அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ``பொறுங்கள் ள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்'' என்றார்.
இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். ( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )
அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ``இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்'' என்றார்.
பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும்,சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்தபோது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள். அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறு பல பெண்களும் அங்கே இருந்தார்கள். இதற்குள் மாலை வேளையாகிவிட்டது.
அன்று ஓய்வு நாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ``அவன் இதற்குள் இறந்துவிட்டானா?'' என்று கேட்டான்.
நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.


குருத்து ஞாயிறன்று , சிலுவையின் பாடுகளை பார்க்கும் முன்பு, இயேசுவின் பாடுகளையும், சிலுவையின் வலியையும் , அவ்வளவு வேதனையையும், துன்பத்தையும், நம் மேல் உள்ள அபரிதமான அன்பினால், இயேசு தாங்கி கொண்டார். இன்றைய நற்செய்தியில், ஒரு பெண்ணின் ஆழ்ந்த அன்பையும், அவள் இயேவின் மேல் வாசனை தைலைத்தை கொண்டு அபிசேகம் செய்து அவளின் அன்பை வெளிப்படுத்தியதை நாம் பார்ப்போம்.
அந்த காலத்தில், டியோடரன்டோ, வீட்டுகுள்ளேயே பாத்ரூம் இருந்ததில்லை. அதனால், வாசனை திரவியத்தை தயாரித்து, அதனை உபயோகித்தனர். வாசனை என்னெய் மற்றும், மூலிகைகளையும் பாட்டிலில் போட்டு அதனை புளிக்க செய்து, உபயோகித்தனர். அதிக நாட்கள் அந்த பாட்டிலில் இருந்தால், அதன் மதிப்பு கூடி இன்னும் நல்ல வாசனையை கொடுக்கும்.
இன்றைய நற்செய்தியில், வாசனை திரவியம் மிகவும் விலை மதிப்புள்ள அன்பளிப்பாக இயேசுவிற்கு கொடுக்கபடுகிறது. அதனை அதிக நாட்கள் வைத்திருத்திருக்க வேண்டும்.

நாம் ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு கடைக்கு போய், புதிதாக ஒரு பொருளை வாங்குகிறோம். நாம் பல வருடங்களாக பாதுகாத்து வைத்திருக்கும் பொருளை தான் நாம் மிகவும் மதிக்கிறோம். அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது நாம் மிக பெரிய தியாகம் செய்கிறோம்.
உங்களுக்கு மிகவும் முக்கியமான பொருளோ அல்லது முக்கியமான விசயம் இன்னும் வைத்திருக்கிறீர்கள்? அதிக நாட்களாக நீங்கள் காத்து வைத்திருக்கும் பொருள் என்ன ?

அதனை நீங்கள் கொடுப்பதாக யோசித்து பாருங்கள்? நீங்கள் யாருக்கு கொடுக்கிறீர்களோ அவர் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டிருப்பீர்கள். கொடுப்பதில் தான் அதிக மதிப்பு!, அதனை வைத்திருப்பதைவிட. இது அன்பினால் தான் முடியும்.

இயேசுவின் மேல் உங்கள் ஆழ்ந்த அன்பு எவ்வளவு? அவர் உங்களிடமிருந்து பெறக்கூடிய மிகவும் மதிக்க கூடிய பொருள் எது? அதனை கொடுக்க மிகவும் யோசிப்பது எது? இயேசுவின் மேல் உள்ள அன்பினால் நீங்கள் அதனை கொடுக்க ஆமோதிப்பீர்களா? அவரின் மேல் உள்ள அன்பினால் நீங்கள் கொடுக்க தயாரா?
இதனை மாற்றாக சொல்ல வேண்டுமானால், உங்கள் ஜாடியினுள் உள்ளவற்றை தாராளாமாக இயேசுவிற்கு மனமுவந்து கொடுப்பீர்களா?
இயேசு உங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதனை நினைத்து பாருங்கள். இப்புனித வாரம் முழுவதும் அதனை நினைத்து பாருங்கள். புனித வியாழன்றும், பெரிய வெள்ளியன்றும், புனித சனியன்றும் இயேசு உங்களுக்கு கொடுத்தது நினைத்து பாருங்கள்.
மேலும், உங்களையே கேட்டு கொள்ளுங்கள்: உங்களுள் மதிப்புள்ள பொருள் அதனை கொடுக்க மனமுவந்து தயாராய் இருக்கிறீகளா?

© 2012 by Terry A. Modica

Friday, March 23, 2012

மார்ச் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
Jer 31:31-34
Ps 51:3-4, 12-15
Heb 5:7-9
John 12:20-33

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 12

கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்
20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.21 இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22 பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.23 இயேசு அவர்களைப் பார்த்து, ' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார்.

மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும்
27 மேலும் இயேசு, ' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது.29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர்.30 இயேசு அவர்களைப் பார்த்து, ' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார்.33 தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)


இயேசு நம்மை எவ்வழியில் அழைத்து செல்கிறாரோ அந்த வழியில் செல்ல நமக்கு கஸ்டமாக இருந்தாலும் நாம் அவரை நம்பி, விசுவாசித்தோமானால் , நாம் அதனை செய்வோம்.

நாம் , நமது வாழ்வையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். (அது என்னவெனில், நமது சொந்த விருப்பங்கள், நிகழ்ச்சிகள், எண்ணங்கள், மற்ற நேரங்களில் நாம் செய்யும் வேலைகள் ) அனைத்தையும் விட தயாராக இருக்க வேண்டும். அப்பொழுது, நாம் கிறிஸ்துவோடு இனைந்து, இறைசேவையாற்ற முடியும். எனினும், நாம் இழப்பை விருப்ப வேண்டும் என்பதில்லை.

இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் தியாகத்தை/சிலுவையில் மரணத்தை நினைத்து பதட்டப்பட்டார் என்று சொல்கிறது. ஆமாம், இயேசுவும் சங்கடமாக நினைத்தார், கடவுளோ அவரை மகிமைபடுத்தினார்.
கடவுளின் வழியையும், கடவுளின் அன்பையும் நமக்கு வெளிப்படுத்தி நம்மையெல்லாம் மோட்சத்திற்கு அழைத்து செல்லவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இப்போது, நாம் அவரை பின்செல்வதால், நாமும், கடவுளின் அன்பை நம்மை சுற்று உள்ளவர்களிடத்தில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளால் தயார்படுத்த பட்டிருக்கிறோம். நாம் கடவுளின் அன்பை வெளிப்படுத்தி, அதன் மூலம் இயேசு அவர்களை மோட்சத்திற்கு அழைத்து செல்ல்கிரார். இது தான் நமது கடமை, இறைசேவை, திருச்சபையில் உள்ள ஒவ்வொருவரும், குருக்களும், நாமும் செய்ய வேண்டும்.
ஞாணஸ்நாண அருட்சாதனம் நம்மை இந்த அழைப்பிற்கு தொடங்கி வைக்கிறது. உறுதிபுசுதல் அருட்சாதனம், இச்சேவையை நம்மிடம் ஒப்படைக்கிறது. பாவசங்கீர்த்தனம், இறைசேவையை இன்னும் நன்றாக செய்ய நம்மை இன்னும் சுத்தபடுத்தி நம்மை இன்னும் பலமாக்குகிறது. திருமணச்சடங்குகளும், கடவுளின் அன்பு கட்டளைகளும், நமக்கு இன்னும் இறைசேவையை பிழையற்று செய்ய நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நோயாளிகளை அர்ச்சிப்பது, அவர்களை குணமாக்குவது, கிறிஸ்துவின் இறைசேவையை செய்ய சாட்சியாக இருக்கிறது. திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் முழு பயணத்தில் நம்மை இணையவைத்து, நம் இறைசேவயை தொடர செய்கிறது.
மணம் திருந்த வைப்பது நம் ஒவ்வொரு நாளின் இறைசேவையாகும்: இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்கிறோம், இயேசு அவர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே நாம் செய்கிறோம். நற்செய்தியை அவர்களுக்கு பரப்பி, நாம் இயேசுவைன் இறைசேவயை தொடர்கிறோம்.



இறைசேவையை செய்யும்பொழுது, நாம் தியாகம் செய்ய வேண்டும். நம்மை ஒதுக்கி வைப்பவர்கள், துன்பபடுத்துபவர்கள், மோசம் செய்தவர்கள் மேல் நாம் நல்லது செய்ய வேண்டும்.
இது தான் நாம் கிறிஸ்துவோடு இனைந்து இருப்பது. நம் நோக்கமும் கூட. நாம் இதனை செய்ய ஆசைபட தேவையில்லை ஆனால் நாம் செய்ய வேண்டிய கடமை.
கடவுள் இதற்காக நம்மை மகிமைபடுத்துகிறார். இயேசுவை மகிமைபடுத்துவதை போல, நம்மையும், கடவுள் அவரது முழு இரக்கத்தினாலும், அன்பினாலும், நம்மை மகிபடுத்துகிறார். அன்பளிப்பும், வெகுமதியும் நமக்கு தருகிறார்.

நமது இறைசேவையில் பல தொந்தரவுகளை , கஷ்டங்களை சந்திப்பது சாதாரண விசயம் ஆகும். கடவுள் தான் நம்மை ஒவ்வொரு முறையும் எழுப்பி தாங்கி கொள்கிறார். துன்பத்திற்கு பிறகு சந்தோசமும், வெற்றியும் உண்டு.
© 2012 by Terry A. Modica