Saturday, August 12, 2017

ஆகஸ்டு 13 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஆகஸ்டு 13 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:9a, 11-13a
Ps 85:8-14
Roman 9:1-5
Matthew 14:22-33

மத்தேயு நற்செய்தி

கடல்மீது நடத்தல்
(மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.

23மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.

24அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.

25இரவின் நான்காம் காவல்வேளையில்⁕ இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.

26அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்என அச்சத்தினால் அலறினர்.

27உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 
துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்
 என்றார்.
28பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்என்றார்.

29அவர்
வா
 என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.

30அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்என்று கத்தினார்.

31இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து
நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?”
 என்றார்.

32அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.

33படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்என்றனர்.
(Thanks to www.arulvakku.com)
சம நிலையான விசுவாசத்தை அடைவது எப்படி ?
இன்றைய நற்செய்தியில், இயேசு ரொட்டி துண்டுகளையும் மீன்களையும் பல மடங்காக பெருக்கி பல்லாயிரம் பேருக்கு உணவு கொடுத்து விட்டு, தனியே இறைவனிடம் வேண்டுவதற்கு இயேசு சென்றார், என்று பார்க்கிறோம்.
நீங்கள் மிக பெரிய விருந்து படைத்து விட்டு அல்லது மிக பெரிய  ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடித்து விட்டு, அல்லது மிக பெரிய  கஷ்டத்திலிருந்து தாண்டி வந்த பின்பு, நீங்கள்  கடவுளுக்கு நேரம் ஒதுக்கி அவர் உங்களுக்கு தேவையானதை செய்ய அனுமதிகிரீற்களா?  
 தந்தை கடவுளோடு நேரம் செலவழித்து , அதன் பின்பு இயேசு அந்த ஆணுபவத்தின் உறசாகத்தோடு , நீரில் மேல் நடக்க ஆரம்பிக்கிறார். !
இயேசு அடிக்கடி அதிக நேரம் ஜெபத்தில் செலவழித்தார். நற்செய்தியில் குறிப்பிட பட்டுள்ளதை விட  அதிக நேரம் ஜெபத்திற்கு  செலவழித்திருக்கலாம். அப்படி என்றால்,  மத்தேயு இங்கே ஏன் இந்த ஜெபத்தை பற்றி எழுதியுள்ளார்?  இந்த ஜெபத்தின் முக்கியத்துவம் என்ன ? 
மத்தேயு மூலமாக கடவுள் சம நிலையான விசுவாசத்தை நாம் எப்படி அடைவது என வழி காட்டுகிறார்.
தனிமையாக  நாம் அதிக நேரங்களில் ஜெபம் செய்து, நம் ஆற்றலை அடிக்கடி புதுபித்து கொள்ள வேண்டும், மேலும், கடவுள் நம்மை என்ன  மாதிரியான செயல்கள் , இறைசேவை செய்ய வேண்டும் என நாம்  அறிந்து கொள்வோம். கடவுளுக்காக நம் ஒருவோருக்கும் நம் குடும்பத்தில் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது, நம் வேலை செய்யும் இடத்தில், சமுக கூடும் இடங்களில், நாம் கடவுளுக்காக செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. நாம் மற்றவர்களுக்காக நம் ஆற்றலை, நேரத்தை செலவிடும்போது, நாம் மிகவும் சோர்வடைந்து விடுகிறோம்.; கடவுளுக்கு மிகுந்த உதவி உள்ளவனாக நாம் இருக்க அவ்வப்போது நம்மை கடவுள் புதிய ஆற்றலை நிரப்ப நாம் அனுமதிக்க வேண்டும்.
எதிர்காலம் நோக்கி நாம் செல்ல செல்ல அதனை எதிர்கொள்ள தயார் படுத்தி கொள்ள ஜெபம் நமக்கு உதவி செய்கிறது. நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் போது கூட ஜெபம் நமக்கு உதவி செய்யும். நாம் தனியாக கடவுளோடு நேரம் செலவிடும் பொழுது, அது நமக்கு அன்பளிப்பாக அவர் கொடுப்பது, நம் பயன்களுக்காகவும், மற்றவர்களின் பயன்களுக்காகவும் அவர் நமக்கு கொடுக்கிறார். நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்குகிறார். நீரில் எப்படி நடப்பது என்று சொல்லி கொடுக்கிறார். மேலும், அடுத்த கரைக்கு நம்மை அனுப்புகிறார். அங்கே கடவுளின் உதவி தேவைபடுவோர் காத்திருக்கின்றனர். கடவுள் நம் மூலம் அவர்களுக்கு இறைசேவை செய்ய ஆசைபடுகிறார். நீங்கள் ஜெபித்து அதற்கு தயாராய் இருக்கிறீர்களா ?


© 2017 by Terry A. Modica

Saturday, August 5, 2017

ஆகஸ்டு 5 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஆகஸ்டு   5 2017 ஞாயிறு  நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் உருமாற்ற விழா
Daniel 7:9-10, 13-14
Ps 97:1-2, 5-6, 9
2 Peter 1:16-19
Matthew 17:1-9 (2017) or Mark 9:2-10 (2015) or Luke 9:28b-36 (2013)

மத்தேயு  நற்செய்தி
இயேசு தோற்றம் மாறுதல்
(மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.

2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.

3இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
4பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்என்று ஒரு குரல் ஒலித்தது.

6அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.

7இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு
எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்
 என்றார்.

8அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.

9அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு
மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது
 என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
(THANKS TO WWW.ARULVAKKU.COM)
இஸ்ரேயலின் தபோர் மலையில் மேல் உச்சியில், கிறிஸ்து தூய வெளிச்சம், அந்த பேரொளியாக இருந்தார். -- இந்த வெளிச்சம் இதுவரை தோன்றியது இல்லை -- இன்று தான் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டது. கிறிஸ்து பிறந்த போது அல்ல, அவர் பிரசங்கம் செய்த போதும்  தெரியவில்லை, அந்த நேரங்களில் இந்த உலகின் இறைவனின் வெளிச்சம் அங்கே வந்தாலும்,  நமக்கு புரியும்படும்படி நமக்கு தெரியாமல் போனது. அதனால், பீட்டருக்கும், யோவானுக்கும், ஜேம்சுக்கும் இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல, அவர்கள் சாட்சி சொல்ல கூடியதாக பேரொளியில் கிறிஸ்து தோன்றினார்.
இந்த நிகழ்வில் நடந்த மிக பெரிய விசுவாசத்துக்கு உரிய விசயம் என்ன என்றால் தந்த கடவுள் , “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்  என்று கூறியது தான். ஒவ்வொரு முறை கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்கும் பொழுது இந்த மாறுதல் நடக்கிறது. அதன் மூலம் நமது விசுவாசம் இன்னும் வளர்கிறது. ஒன்றும் புலப்படாமல் ஒரு விஷயம் தெளிவு கிடைக்கும் பொழுதும்,  பாவத்திலிருந்து பரிசுத்த வாழ்விற்கு வரும்பொழுது , சந்தேகத்திலிருந்து நம்பிக்கை பெரும்பொழுது நாம் இயேசுவோடு உரு மாறுகிறோம்.
அவரின் பேரொளியை நம்மில் உள்ள  இருளுக்குள் அனுப்பி , அந்த வெளிச்சம் நம் இருளை அகற்ற நாம் அனுமதித்தால், கிறிஸ்துவை நம் அருகில் இருப்பவர்கள் நம் மூலம் பார்ப்பார்கள். கிறிஸ்துவின் ஒளி நம்மில் மிளிரும் .  அதனால்,இயேசுவிடம் நம் இருள் சூ ழ்ந்த பகுதிகளை நாம் இயேசுவிடம் சொல்லி , அவர் ஒளியின் மூலம் உண்மையை வெளிப்படுத்துவார். மனம் திரும்பி நாம் இயேசுவிடம் வரும்போது நம் உண்மையான அடையாளம் தெரியும். நமது உண்மையான அடையாளம் என்ன ?  நமது புனிதம் , கடவுளை போல , அவர் உருவம் போல நாம் படைக்கப்ட்டிருக்கிறோம். அது தான் நம் அடையாளம்!
கடவுள் இயேசுவை பற்றி தாபோர் மலையில் என்ன சொல்கிறார் என்பதை நிங்களும் கேட்பிர்கள். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். . இவருக்குச் செவிசாயுங்கள் "  மற்ற அனைவருக்கும் அதையே தான் கடவுள் சொல்கிறார்  , அவரின் இறைபணியை தொடர்ந்து செய்ய அழைக்கிறார். சிலர் அவர் சொல்வதை கேட்கலாம் , சிலர் கேட்காமல் போகலாம் , ஆனால், நாம் ஆம் என்று சொல்வதற்கு மற்றவர்கள் கேட்டார்களா , கேட்கவில்லையா என்பது தேவையில்லாத விஷயம். . நாம் உரு மாற்றம் பெற்றதால் நாம் கடவுளுக்கு இறைசேவை செய்கிறோம். நம்மில் இருக்கும் பரிசுத்தம் நம்மை கடவுளுக்காக நல்ல விசயங்களை செய்ய தூண்டுகிறது.
© 2017 by Terry A. Modica