Saturday, August 5, 2017

ஆகஸ்டு 5 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஆகஸ்டு   5 2017 ஞாயிறு  நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் உருமாற்ற விழா
Daniel 7:9-10, 13-14
Ps 97:1-2, 5-6, 9
2 Peter 1:16-19
Matthew 17:1-9 (2017) or Mark 9:2-10 (2015) or Luke 9:28b-36 (2013)

மத்தேயு  நற்செய்தி
இயேசு தோற்றம் மாறுதல்
(மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.

2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.

3இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
4பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்என்று ஒரு குரல் ஒலித்தது.

6அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.

7இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு
எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்
 என்றார்.

8அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.

9அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு
மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது
 என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
(THANKS TO WWW.ARULVAKKU.COM)
இஸ்ரேயலின் தபோர் மலையில் மேல் உச்சியில், கிறிஸ்து தூய வெளிச்சம், அந்த பேரொளியாக இருந்தார். -- இந்த வெளிச்சம் இதுவரை தோன்றியது இல்லை -- இன்று தான் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டது. கிறிஸ்து பிறந்த போது அல்ல, அவர் பிரசங்கம் செய்த போதும்  தெரியவில்லை, அந்த நேரங்களில் இந்த உலகின் இறைவனின் வெளிச்சம் அங்கே வந்தாலும்,  நமக்கு புரியும்படும்படி நமக்கு தெரியாமல் போனது. அதனால், பீட்டருக்கும், யோவானுக்கும், ஜேம்சுக்கும் இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல, அவர்கள் சாட்சி சொல்ல கூடியதாக பேரொளியில் கிறிஸ்து தோன்றினார்.
இந்த நிகழ்வில் நடந்த மிக பெரிய விசுவாசத்துக்கு உரிய விசயம் என்ன என்றால் தந்த கடவுள் , “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்  என்று கூறியது தான். ஒவ்வொரு முறை கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்கும் பொழுது இந்த மாறுதல் நடக்கிறது. அதன் மூலம் நமது விசுவாசம் இன்னும் வளர்கிறது. ஒன்றும் புலப்படாமல் ஒரு விஷயம் தெளிவு கிடைக்கும் பொழுதும்,  பாவத்திலிருந்து பரிசுத்த வாழ்விற்கு வரும்பொழுது , சந்தேகத்திலிருந்து நம்பிக்கை பெரும்பொழுது நாம் இயேசுவோடு உரு மாறுகிறோம்.
அவரின் பேரொளியை நம்மில் உள்ள  இருளுக்குள் அனுப்பி , அந்த வெளிச்சம் நம் இருளை அகற்ற நாம் அனுமதித்தால், கிறிஸ்துவை நம் அருகில் இருப்பவர்கள் நம் மூலம் பார்ப்பார்கள். கிறிஸ்துவின் ஒளி நம்மில் மிளிரும் .  அதனால்,இயேசுவிடம் நம் இருள் சூ ழ்ந்த பகுதிகளை நாம் இயேசுவிடம் சொல்லி , அவர் ஒளியின் மூலம் உண்மையை வெளிப்படுத்துவார். மனம் திரும்பி நாம் இயேசுவிடம் வரும்போது நம் உண்மையான அடையாளம் தெரியும். நமது உண்மையான அடையாளம் என்ன ?  நமது புனிதம் , கடவுளை போல , அவர் உருவம் போல நாம் படைக்கப்ட்டிருக்கிறோம். அது தான் நம் அடையாளம்!
கடவுள் இயேசுவை பற்றி தாபோர் மலையில் என்ன சொல்கிறார் என்பதை நிங்களும் கேட்பிர்கள். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். . இவருக்குச் செவிசாயுங்கள் "  மற்ற அனைவருக்கும் அதையே தான் கடவுள் சொல்கிறார்  , அவரின் இறைபணியை தொடர்ந்து செய்ய அழைக்கிறார். சிலர் அவர் சொல்வதை கேட்கலாம் , சிலர் கேட்காமல் போகலாம் , ஆனால், நாம் ஆம் என்று சொல்வதற்கு மற்றவர்கள் கேட்டார்களா , கேட்கவில்லையா என்பது தேவையில்லாத விஷயம். . நாம் உரு மாற்றம் பெற்றதால் நாம் கடவுளுக்கு இறைசேவை செய்கிறோம். நம்மில் இருக்கும் பரிசுத்தம் நம்மை கடவுளுக்காக நல்ல விசயங்களை செய்ய தூண்டுகிறது.
© 2017 by Terry A. Modica


No comments: