Saturday, December 27, 2008

டிசம்பர் 28, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 28, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகுடும்ப விழா (யேசு, மரியாள், சூசையப்பர்)
Sirach 3:2-6, 12-14 or Gen 15:1-6; 21:1-3
Ps 128:1-5 or Ps 105:1-6, 8-9
Col 3:12-21 or Heb 11:8, 11-12, 17-19
Luke 2:22-40


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 2
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
(thanks to www.arulvakku.com)


போப் இரண்டாம் ஜான்பால், ஆயர்களுக்கு எழுதிய திரு நூலில் ("Rosarium Virginis Mariae) , (20 வது பத்தியில்), இன்றைய நற்செய்தியை குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறார். "ஜெபமாலையின் 5வது சந்தோச தேவ ரகசியங்கள் "யேசு கோவிலில் காணமல் போய் கண்டுபிடிக்கப்பட்டார்" மூலம், சந்தோசமும், அங்கு நடந்த நிகழ்வுகளும் கலந்தே இருந்தன. அங்கே, யேசு தெய்வ உருவாக, தெய்வ ஞானத்துடனும், பல கேள்விகளுக்கு பதிலும் எடுத்துரைத்து, அவரே பல கேள்விகளையும் கேட்டார். அவரே ஒரு ஆசிரியராக அனைவருக்கும் தோன்றினார். யேசுதான் கடவுளின் மகன் என்ற தேவ ரகசியத்தை இங்கே வெளிப்படுத்துவது, கடவுளின் நற்செய்தி மூலமாக வெளிப்படுத்தபடுகிறது. அந்த நற்செய்தியில், எல்லா நெருங்கிய உறவுகளும், கடவுளரசின் தேவைகளுக்காக சவால் விடப்படுகின்றன. மரியாளும், சூசையப்பரும் பயத்துடனும், கவலையுடனும் இருந்தனர். யேசுவின் வார்த்தைகளை "புரிந்து கொள்ளவில்லை" " என்ரு போப் கூறுகிறார்.

நாமும் தான், அடிக்கடி யேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில் தோற்றுவிடுகிறோம். அவருடைய வாசகங்கள் நம்மை மிகபும் கடினமான வாழ்க்கையை ஏற்றுகொள்ள வேண்டும் என நமக்கு சவால் விடுகிறது. அந்த வாழ்வு என்னவெனில், நமது எதிரிகளுக்கே நல்லது செய்வது, நமது இன்னொரு கன்னத்தையும் அவர்களுக்கு கான்பிப்பது போல. உண்மைக்காக நாம் உறுதியுடன் வாழ்வது, மேலும் நிலையாக கடவுளின் கோட்படுகளுடன் அவற்றிர்காக நல்ல முறையில் வாழ்வது.

நமக்கு சரிப்பட்டு வராத, மனதிற்கு ஒப்பாத காரியங்களினால் தான் கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்றால், நமது உலக வாழ்விற்காக நாமே நம்மை சமாதானம் செய்து கொண்டு, விலகியே நிற்கிறோம். ஆனால், கடவுளரசின், உண்மையான தேவைகளை புரிந்து கொண்டால், அதனுடைய பயன்களை அறிந்து, கடவுளரசிற்கு கீழ்படிவோம்.

சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றாலும், நாம் யேசுவின் வார்த்தைகளை அப்படியே நம்பி , அவை யாவுமே, சரியானதென்றும், உண்மையானதென்றும் விசுவாசம் கொள்ளவேண்டும். அன்னை மரியாளும், சூசையப்பரும் அவர்கள் மனதில் ஆழமாக யோசித்தது போன்று, அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாவிட்டாலும், யேசு நம்மிடம் என்ன கேட்ட்கிறாரோ அதை செய்தது போல நாமும் செய்ய வேண்டும்.


இவ்வாறு விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்தால், கிறிஸ்துவிற்காக முழுதுமாய் வாழும் வாழ்வினால் உண்டாகும் பயனை, சந்தோசத்தை நம்மல் உணர முடியும்.

இன்றைய திருகுடும்ப திருவிழாவில், மரியாளும், சூசையப்பரும் நமக்கு யேசுவை புரிந்து கொள்ளவும், அவரின் வார்த்தைகளை கேட்கவும் உதவ வேண்டும் என நாம் வேண்டிகொள்வோம். நமக்கு சோதனைகளும், ப்ரச்னைகளும் ஏற்படும்போது, அவரின் பார்வையிலிறிந்து விலகி நிற்கும்போது, மரியாளும், சூசையப்பரும் நமக்கு உதவ வேண்டும் என்று ஜெபம் செய்வோம். யேசு எப்போதுமே நம்மிடையே இருக்கின்றார் என்பதை தெரிந்து கொள்ள நாம் கற்க வேன்டும். யேசுதான் நமக்கு உதவி வருகிறார், வழி காட்டுகிறார், கருனையுடன் அன்பு கூர்கிறார், நமது சவால்களின் போது நமக்கு உதவி வருகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: