Friday, June 12, 2015

ஜுன் 14 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜுன் 14 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 11ம் ஞாயிறு

Ezekiel 17:22-24
Psalm 92:2-3,13-16
2 Corinthians 5:6-10
Mark 4:26-34

மாற்கு நற்செய்தி

முளைத்துத் தானாக வளரும் விதை உவமை
26தொடர்ந்து இயேசு,' இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:27நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.28முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.29பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது 'என்று கூறினார்.
கடுகு விதை உவமை
(
மத் 13:31 - 32; லூக் 13:18 - 19)
30மேலும் அவர்,' இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?31அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.32அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும் 'என்று கூறினார்.

(thanks to www.arulvakku.com) 

கடவுள் உங்களை அழைக்கிறார்

இந்த வாரத்தில், உங்களுக்கு ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும், அந்த நிகழ்வு கடவுளின் அன்பை மற்றவர்களுக்கு நீங்கள் காட்டும் வாய்ப்பாக அமையும். கவனமாக எதிர் பார்த்து கொண்டு இருங்கள்.

நீங்கள் ஒவ்வொரு நிகழ்வையும், மிகவும் கவனமாகவும் நீங்கள் உற்று கவனித்து நடந்து கொண்டால், உங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும், கொஞ்சம் நடுக்கத்துடனும், பதற்றமாக கூட இருக்கலாம், ஆனால், இறையரசிற்கு நாம் இந்த செயல், நமக்கு சந்தோசத்த கொடுக்கும். உங்களுக்கே இது மிக ஆச்சரியமாக இருக்கும், நாமா இதனை செய்தோம் என நாம் நினைப்போம்.

இந்த நிகழ்ச்சிக்காக கடவுள் உங்களை பல காலமாக தயாரித்து வந்திருக்கிறார் , உங்கள் சசோதனைகள் , உங்கள் நற்செய்தி வகுப்புகள், நீங்களே உங்களை புனிதப்படுத்தி கொண்டது, உங்கள் ஜெபங்களின் மூலம் நீங்கள் பெற்ற உள்ளார்ந்த அறிவு, கிறிஸ்துவை முன்னிறுத்தி நீங்கள் மற்றவர்களிடம் மேற்கொண்ட விவாதங்கள், - அனைத்தும், உங்களை தயார் படுத்தி வந்திருக்கிறது.

இன்றைய நற்செய்தியில் வரும் விதை போன்றவர்கள் நீங்கள். வாழ்க்கை சூழ்நிலைகள் உங்களுக்கு உரமாக இருந்துள்ளன . உங்களுக்கு அதுவே நீர் ஊற்றி , மண்ணை பதப்படுத்தி உள்ளது. சில காலங்களில், விதை முளைத்து , செடி வளர ஆரம்பிகிறது . பிறகு பூவாகி , நல்ல பழங்களை கொடுக்க ஆரம்பிக்கிறது


ஒவ்வொரு நாளும் நமக்கு சிறிதோ அல்லது பெரிய வாய்ப்பாக , இறையரசிற்கு பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது, கிறிஸ்துவின் இறைபணிக்காக நாம் முழு நேர சம்பள ஊழியராகவோ அல்லது சம்பளமில்லா முழு நேர பணியாளரகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு விருப்பமிருந்தால், கடவுள் இந்த உலகை நம் மூலம் தொடர்பு கொண்டு , நமது வீட்டில் , வேலை செய்யும் இடத்தில், பங்கு திருத்தலத்தில், கடைகளில், சாலைகளில் சென்று கொண்டிருக்கும்பொழுது , இணையத்தில் , நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் கடவுள் நம் மூலம் இந்த உலகை தொடுகிறார்.

உங்களால் வளர்க்கப்பட்ட மரம், வேறு யாராவது வெட்டினார்களா ? அல்லது அதனை யாராவது நிராகரித்து, வளர்க்காமல் விட்டு விட்டார்களா ? நம்மில் பலருக்கும் இது ஏற்படுகிறது . நல்ல விசயம் என்னவெனில், ஒவ்வொரு காய்ந்த மரத்திலும், ஒரு கனி உள்ளது, காய்ந்த கிளையில் தொங்கி கொண்டு உள்ளது. அதற்குள் மறைவாக ஒரு விதை உள்ளது.

அந்த அழுகிய பழத்தை எடுத்து, நாம் நல்ல தரமான மண்ணில் விதைத்தோமானால், புதிய மரம் ஒன்று வளரும், பழைய மரத்தை விட, புதிய மரம் இன்னும் ஆதிகமான பழங்களை கொடுக்கும், இன்னும் பெரிதாக வளரும், பழைய மரம், உத்து போய் இன்னொரு மரத்திற்கு உரமாக மாறிவிடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், உங்களால் நல்ல கனியை கொடுக்க முடியும், பகிர்ந்து கொள்ள முடியும். அந்த பழங்கள் வளர கடவுள் ஊட்டி வளர்த்திருக்கிறார். நீங்கள் தயார்!



© 2015 by Terry A. Modica

No comments: