Saturday, June 6, 2015

ஜூன் 7 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 7 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
இயேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழா


மாற்கு நற்செய்தி

Exodus 24:3-8
Ps 116:12-13, 15-18
Heb 9:11-15
Mark 14:12-16, 22-26

பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்
(
மத் 26:17 - 19; லூக் 22:7 - 14, 21 - 23)
12புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.13அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்:' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.14அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ' நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ' என்று போதகர் கேட்கச் சொன்னார் ' எனக் கூறுங்கள்.15அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். '16சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

ஆண்டவரின் திருவிருந்து
(
மத் 26:26 - 30; லூக் 22:15 - 20; 1கொரி 11:23 - 25)
22அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து,' இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் 'என்றார்.23பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.24அப்பொழுது அவர் அவர்களிடம்,'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்.25இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் 'என்றார்.26அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

(thanks to www.arulvakku.com)


திவ்ய நற்கருணையின் சக்தி

இன்றைய நற்செய்தியில் நற்கருணையை பற்றி இவ்வாறு கூறப்படுகிறது: "இது எனது உடன்படிக்கையின் இரத்தம், "மீட் பின் கிண்ணம் " , உங்களுக்கு திவ்ய நற்கருணை எவ்வளவு முக்கியத்துவம் ?

கிறிஸ்து இந்த உலகிற்கு நமக்கு பணிவிடை செய்ய முதன்மை குருவாக வந்தார். பழைய ஏற்பாட்டில் உள்ள குருக்களை போல அல்லாமல், அவர்கள் உங்கள் பாவங்களை மன்னிக்க, ஆட்டின் இரத்தத்தை கொடுக்க சொல்பவர்கள். ஆனால் இயேசுவோ, நம் பாவங்களை கழுவ, தம் இரத்தத்தையே கொடுத்தார். இயேசு " உடன்படிக்கையின் இரத்தம், பலருக்காக சிந்தப்படும் இரத்தம்" என்று கூறுகிறார். இது புதிய உடன்படிக்கை , இதனால் , மற்ற எல்லா முதன்மை குருக்கள் செய்ய முடியாததை , இயேசு செய்தார். நம்மை நித்தியா வாழ்விற்கு மீட்டு எடுத்தார்


கடவுளின் இரத்தம் மட்டும் தான் இதனை செய்ய முடியும். ஒரு குருவானவர், எவ்வளவு பரிசுத்தமாக இருந்தாலும், நாம் எவ்வளவு நல்ல மனதுடன் இருந்தாலும், நாம் பாவத்தில் மீண்டும் மீண்டும் விழுந்து எழுகிறோம் . இயேசு மட்டும் தான், முழுமையான பரிசுத்தமான மனிதனாக இருந்தார், அவரது தெய்விகம் , சாவை வென்றது, அதன் மூலம் நித்திய வாழ்விற்கு கதவை திறந்தார்


இயேசு நமக்காக நம் பாவங்களுக்காக பெரிய வெகுமதி கொடுத்தார். நம் பாவங்களுக்காக மனம் திருந்தாமல், வருந்தாமல், நாம் திருப்பலிக்கு சென்றால் என்னவாகும்? நாம் தவறு செய்து விட்டோம் என்று நமக்கு தெரியும். இருந்தாலும், அதனை மாற்றி கொள்ள, அதற்குண்டான முயற்சியில் நாம் ஈடுபடுவதில்லை, இயேசு விடமும் நம்மை மாற்ற நாம் அனுமதிக்கவில்லை. நறுகருனையின் நண்மைகள் நாம் நினைப்பதை விட பெரிதானது


நம் பாவங்களுக்காக, இயேசுவின் இரத்தம் மூலம் கழுவ நாம் அனுமதிக்கவில்லை என்றால், அவர் சிந்திய வெகுமதியான விலையை , அவர் மரணத்தை நாம் ஒதுக்கி தள்ளுகிறோம்.பாவ சங்கிர்த்தனத்தில் இயேசுவின் பிரசன்னத்தை நாம் ஒதுக்குவது , அவர் மேற்கொண்ட , ஏற்றுகொண்ட துன்பங்களை பாடுகளை, நாம் அவமதிக்கிறோம்.

நாம் பாவ வாழ்வை விட்டு மனம் திருந்தி , நற்கருணை பெறுவது , இயேசு நமக்கு கொடுத்த வாய்ப்பை , நம் பாவங்களை கழுவ உள்ள வாய்ப்பை நாம் தவற விடுகிறோம், மேலும் நாம் இயேசுவை அவமதிக்கிறோம் .

இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் , நம்மை கிறிஸ்துவாக மாற்றும் சக்தி இருக்கிறது. நாம் திருப்பலிக்கு நுழையும் முன் உள்ள நிலையில் இருந்து, திருப்பலி விட்டு செல்லும்பொழுது நாம் கிறிஸ்துவை போல மாறி செல்தல் வேண்டும். இது தான் கடவுளின் திட்டம் !. இயேசுவின் முதன்மை குருவின் இறைபணி இன்னும் முடியவில்லை.

© 2015 by Terry A. Modica

No comments: