Friday, March 17, 2017

மார்ச் 19, 2017 ஞாயிறு நற்செய்தி

மார்ச் 19, 2017   ஞாயிறு நற்செய்தி
தவக்காலத்தின்  3ம் ஞாயிறு
Exodus 17:3-7
Psalm 95:1-2, 6-9
Romans 5:1-2, 5-8
John 4:5-42
யோவான் நற்செய்தி
5அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.

6அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.
7-8அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம்
குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்
 என்று கேட்டார்.
9அச் சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.
10இயேசு அவரைப் பார்த்து
கடவுளுடைய கொடை எது என்பதையும் குடிக்கத் தண்ணீர் கொடும்எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்
 என்றார்.
11அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?

12எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்என்றார்.
13இயேசு அவரைப் பார்த்து
இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.

14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்
 என்றார்.
15அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காதுஎன்றார்.

16இயேசு அவரிடம்
நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்
 என்று கூறினார்.
17அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையேஎன்றார். இயேசு அவரிடம்
“‘எனக்குக் கணவர் இல்லைஎன நீர் சொல்வது சரியே.

18
உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே
 என்றார்.
19அப்பெண் அவரிடம், “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.

20எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களேஎன்றார்.
21இயேசு அவரிடம்
அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.

22யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.

23காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில்⁕ வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார்.

24
கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்
 என்றார்.
25அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்என்றார்.

26இயேசு அவரிடம்
உம்மோடு பேசும் நானே அவர்
 என்றார்.
27அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் என்ன வேண்டும்?” என்றோ, “அவரோடு என்ன பேசுகிறீர்?” என்றோ எவரும் கேட்கவில்லை.
28அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,

29“நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!என்றார்.

30அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.
31அதற்கிடையில் சீடர், “ரபி, உண்ணும்என்று வேண்டினர்.
32இயேசு அவர்களிடம்
நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது
 என்றார்.
33“யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோஎன்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

34இயேசு அவர்களிடம்
என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.

35‘நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடைஎன்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.

36அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக்⁕ கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.

37-38
நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்என்னும் கூற்று உண்மையாயிற்று
 என்றார்.
39“நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

40சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.

41அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.

42அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்என்றார்கள்.
(Thanks to www.arulvakku.com)
உங்களின் ஆண்மீக தாகம் என்ன ?
எதற்கு தாகமாக இருக்கிறீர்கள்? நம்மில் உள்ள முக்கிய தேவையான ஒன்று இல்லாத போது, நமக்கு தாகம் வரும். நம் உடல் தொடர்ந்து வாழ நமக்கு தண்ணீர் தேவை, நம் உடலில் தண்ணீர் குறையும் போது , நமது உடல் தண்ணீர் தேவை என்று தாகம் முலம் நமக்கு சொல்கிறது.
அதே போல , நம் ஆண்மீக வாழ்விற்கு, நமக்கு வேறு மாதிரியான  தண்ணீர் தேவை படுகிறது. உயிருள்ள தண்ணீர் தேவை படுகிறது. நமது ஞானஸ்நானத்தில் நமக்கு முதன் முதலாய் கொடுக்கப்பட்டது, அதன் மூலம் நாம் நித்திய வாழ்வை அடைய, நாம் சுத்த படுத்தபட்டோம். இந்த வாழ்வின் நீர் பரிசுத்தமான நீர், நாம் கிறிஸ்துவில் அபரிதமான நல் வாழ்வை பெற நமக்கு துணையாக . இருக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் வாழ்வை  கொடுப்பவர், கடவுளின் ஆவி , நமக்கு வாழ்வை கொடுப்பத்திற்கான அடையாளங்களில் ஒன்று வாழ்வு கொடுக்கும் நீர் ஆகும். அதனால் , இயேசு அந்த சமாரிய பெண்ணிற்கு, பரிசுத்த ஆவியை அன்பளிப்பாக கொடுக்க விரும்பினார் என்று நாம் யூகிக்கலாம். ஏன் ? இன்னும் சிறிது காலாத்திற்குள், பெந்தகொஸ்தே அன்று பரிசுத்த ஆவியானவர் எல்லோர் மேலும் இறங்கி வர இருக்கிறார்.

அந்த பெண்ணுக்கு உண்மை தெரிய வேண்டியிருந்தது: பரிசுத்த ஆவி தான் உண்மை, இயேசு அந்த பெண்ணுக்கு தேவையான அனைத்தும் கொடுக்க விரும்பினார். அதன் மூலம், அந்த பெண் மனம் திரும்பி, மீட்பை பெற்று, அந்த புதிய வாழ்வை , அவரை சுற்றியுள்ளவர்களுக்கு , பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார்.
போதுமான நீர் நமக்கு கிடைக்காத பொழுது, நமக்கு தாகம் எடுக்கிறது.  ஆண்மிக தாகம் நமக்கு வெவ்வேறு வடிவங்களில் தெரிகிறது: அடிமைத்தனம், தனிமை, சோகம், வெறுப்பு, தன்னையே அழித்து கொள்தல், வேறு மாதிரியான எண்ணங்கள் அனைத்தும், நமக்கு  ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது , நம்மில் ஏதோ ஒரு குறை உள்ளது என்றும் நமக்கு காட்டுகிறது.
நாம் ஏன் ஆண்மீகத்தில் தேவையான அளவிற்கு இல்லாமல் இருக்கிறோம். ?  ஏனெனில், அந்த பெண்ணை போல, நாமும் கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். அதனால், நாம் ஆண்மீக குனமாக்குதலை பெற வேண்டும்.
இந்த குணமாக்குதலை கடவுள் எப்படி கொடுக்கிறார்? அவரின் அன்பை போதும் போதும் என்கிற அளவிற்கு அள்ளி கொடுக்கிறார், ஆனால் அதனை நாம் பருக, திறந்த மனதுடன் அவருடைய சொல்லை கேட்க வேண்டும் , உண்மைக்காக நாம் மாற தயாராய் இருக்க வேண்டும்.

© 2017 by Terry A. Modica

Saturday, March 11, 2017

மார்ச் 12 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச் 12 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Psalm 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9

மத்தேயு நற்செய்தி

இயேசு தோற்றம் மாறுதல்
(
மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.

2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.

3இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
4பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்என்று ஒரு குரல் ஒலித்தது.

6அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.

7இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு
எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்
 என்றார்.

8அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.

9அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு
மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது
 என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
(Thanks to www.arulvakku.com)

உங்கள் வாழ்வின் மாற்றம் இன்று
தாபோர் மலையின் மேல் , கிறிஸ்துவின்  ஒளி  வெளிப்படுத்தப்பட்டது. நற்செய்தியை கேட்பது போல, என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் என்று கடவுள் கூறுகிறார்.
உருவம் மாறுதல், ஒவ்வொரு முறையும், நாம் இயேசுவின் போதனைகளை கேட்கும் பொழுதும், அதன் பிறகு விசுவாசம் கொள்ளும் பொழுது நமக்கு உருவம் மாறுதல் நடைபெறுகிறது. அது நேற்றைய விட இன்று இன்னும் ஒளி அதிகமாக இருக்கும் நாம் தான் தற்போது மாற்றம் அடைகிறோம்! நமது உண்மையான அடையாளத்தை பெறுகிறோம். நமது அடையாளம் என்ன ? உள்ளார்ந்த நாம், கடவுளை போலவே , நாமும் படைக்கப்பட்டோம், ஞானஸ்நாணத்தில் கடவுளின் குணங்கள் நமக்கு கொடுக்கப்பட்டன.
நமது உண்மையான அடையாளத்துடன் நாம் வாழும்பொழுது, நமது வாழ்வு சந்தோசமாக செல்கிறது. உங்களில் அமைதியற்று இருக்கும் போது, நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? கண்டிப்பாக நன்றாக இருந்திருக்க மாட்டீர்கள், ? அப்படிதானே?  கடவுள் அமைதியானவர், (1 கொரிந்தியர் 13: 4-7 உங்களின் அடையாளமும், கடவுளின் அடையாளமும் கொடுக்க பட்டுள்ளது ). நாம் அமைதியாக இருக்கும் பொழுது, நாமும் சந்தோசத்துடன் இருக்கிறோம்.
இந்த தவக்காலத்தில், நாம் கிறிஸ்துவை போல இருக்கிறோமா என்று ஆராய்ந்து, பாவங்களுக்கு மனம் திரும்பி , கிறிஸ்துவின் ஒளி நம்மில் முழுமையாக ஆக்கிரமிக்க , நம்மில் உள்ள இருளை அகற்ற, இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம்.
இயேசு தன்னுடைய அழைத்தலை நிறைவேற்ற அந்த மலை மேலிலுருந்து சென்றார், நாமும் கிறிஸ்துவை பின் பற்றி, நம் அழைத்தலை நிறைவேற்ற, மலை உச்சியிலிருந்து விலகி செல்ல வேண்டும், கடவுள் நமக்கு கொடுத்த ஆற்றலை கொண்டு நம் அழைத்தலை நிறைவேற்ற செல்வோம். திமோத்தி சொல்வது போல பரிசுத்த வாழ்வு கடினமானது தான், அனால் , ஒவ்வொரு சிலுவைக்கு பின்பு ஒரு ஈஸ்டர் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  கடவுளிடமிருந்து வரும் சக்தியைக் நம்பி நாம் செல்வோம்.

© 2017 by Terry A. Modica

Friday, March 3, 2017

மார்ச் 5 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச்  5 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு
Genesis 2:7-9; 3:1-7
Psalm 51:3-6, 12-13, 17
Romans 5:12-19
Matthew 4:1-11

மத்தேயு நற்செய்தி

இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
1அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.

2அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.

3சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்என்றான்.

4அவர் மறுமொழியாக,
“‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்
என மறைநூலில் எழுதியுள்ளதே
 என்றார்.

5பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,

6நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்;
கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்
என்று மறைநூலில் எழுதியுள்ளதுஎன்று அலகை அவரிடம் சொன்னது.

7இயேசு அதனிடம்,
“‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்
எனவும் எழுதியுள்ளதே
 என்று சொன்னார்.

8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,

9அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்என்றது.

10அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, 
அகன்று போ, சாத்தானே,
உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்
என்றும் மறைநூலில் எழுதியுள்ளது
 என்றார்.

11பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
(thanks to www.arulvakku.com)
இந்த தவ காலத்தில் பெற வேண்டிய வெற்றி என்ன ?  
சோதனைகளில் எப்படி கையாள்கிறீர்கள் ?  இதனை தான் நமக்கு ஒரு சவாலாக வார்த்தைகளின் கடவுள் இந்த முதல் தவ ஞாயிறில் கொடுக்கிறார். மேலும், நமது பயணத்தை இயேசுவோடு தொடங்கி, மிகவும் பரிசுத்தமான இடத்திற்கு , நாம் செல்கிறோம்.
இந்த தவ காலம் வேறு தவ காலாம் போல கிடையாது. போன வருடம், உங்கள் தேவைகள் வேறாக இருந்தது, உங்கள் வளர்ச்சி வேறாக இருந்தது, புரிதலும், உள்ளார்ந்த பார்வைகளும் வேறாக இருந்தது. அதற்கு பிறகு பல் வேறு விசையங்கள் நடந்து விட்டன. அவைகள் அனைத்தும் தயாரிப்புகள் ஆகும், அந்த தயாரிப்பின் மூலம் கடவுள் உங்களுக்கு இதோ இப்பொழுது கொடுக்க இருக்கிறார்.
இந்த வருடம் உங்களுக்கு தேவையாக வெற்றி என்ன? எதனை மீட்க வேண்டும்? அந்த வெற்றி அடைய இயேசு உங்களை,  சிலுவையின் வழியில், தன்னையே துறந்து, கல்லறையின் வழியில் சென்று, கடவுளின் ஒளியில் உங்களை அழைத்து சென்று , அவரின் அன்பின் மூலம் உங்களுக்கு புது வாழ்வையும் , அன்பையும் கொடுக்கிறார்.

இந்த தவக்காலத்தில் -- ஒவ்வொரு முறை, நாம் தியாகம் செய்யும்பொழுது, அதனை இயேசுவின் பாடுகளோடு இணைத்து, -- நாம் இயேசுவை அவரின் சிலுவையை பின் சென்று , கிறிஸ்துவின் மீட்பில் பின் செல்கிறோம். புதிய ஒளியில், நாம் நம் சிலுவைகளை பார்க்கிறோம், கல்வாரி மலை தான் ஒரே வழி, வெற்றியை அடைவதற்கு நாம் செல்லும் வழியாகும்.
இந்த ஈஸ்டர் நாள் , மிகவும் முக்கியத்துவம் அடைய வேண்டும் என்றால், (வண்ண முட்டைகள் , சாக்கலேட் பன்னாகவும், பெரிய விருந்தாகவும் மட்டுமே இல்லாமல்), இந்த 40 நாட்களும், நம்முள் ஏற்பாடு எரிச்சல்களையும், கோபத்தையும், பொருட்படுத்தாமல், தேவையான தியாகங்களை செய்தும், வெள்ளி கிழமைகளில் சைவ உணவு உண்டு, இன்னும் அதிக நேரம் கோவிலில்  செலவிட்டு , இந்த தவ கால வாழ்வை இன்னும் அதிகம் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
மீட்பின் ஆற்றலை நாம் அனுபவிக்க வேண்டுமெனில், துக்கத்தின் ஆற்றலை நாம் முதலில் அனுபவிக்க வேண்டும், அதன் மூலம் , நம் பாவத்திற்கு மனம் திரும்ப வேண்டும். வேறு விதமாக சொல்ல வேண்டுமெனில், ஆற்றல் இல்லாத மரணத்தை நாம் அனுபவிக்க வேண்டும் -- சுய நலத்தின் மரணத்தை, இவ்வுலக ஆசைகளை விட்டு விலகுதல், கிறிஸ்துவிற்கு ஒத்து வராத பழக்க வழக்கங்களை விட்டு விலகுதல்.

© 2017 by Terry A. Modica