Friday, August 3, 2012

ஆகஸ்டு 5, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 5, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு

Ex 16:2-4, 12-15
Ps 78:3-4, 23-25, 54
Eph 4:17, 20-24
John 6:24-35

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6

24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள்.26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.27அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார்.28அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள்.29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.

வாழ்வுதரும் உணவு
34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், "27அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். " என்று இயேசு சொல்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒவ்வொரு நாளும் உங்கள் ஆண்மாவை வளர்க்கும் ஒவ்வொரு செயலிற்கும் கடுமையாக உழைத்து, முடிவில்லா வாழ்வுக்கு தயார்படுத்துங்கள்.

' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்என்று இயேசு சொல்கிறார். ஏன் இதனை 'செயல்' என சொல்கிறார்?
முழுமையான விசுவாசம் கொள்ள, நம்மில் உள்ள சந்தேகங்களை, அவநம்பிக்கைகளை அதன் மூலம், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை தகர்த்துவிடுமோ என நாம் நினைத்தால், அதனையெல்லாம் போக்கி, இயேசுவின் வார்த்தைகள் மேல் நம்பிக்கை கொண்டு, அவரின் வழீயில் நாம் செல்வோம் என்பதை உறுதிபடுத்திகொள்ள வேண்டும்

இந்த செயல்
1) அவநன்ம்பிக்கையை தரும் விசயங்களை நாம் கண்டறிய வேண்டும்
2) நாம் கிறிஸ்துவை நம்பினால், நமக்கு என்ன தீங்கு நேருமோ என பயப்படும் விசயங்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.
3) உண்மையை முழுமையாக புரிந்து , இன்னும் மேலும் மேலும் உண்மையை அறிந்து  பரிசுத்த வாழ்வில் முன்னேற வேண்டும்.
நாம் பயப்படும் அத்தனையுமே உண்மைக்கு புறம்பானது ஆகும்.

"கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்று இயேசு கூறுகிறார். அவரையே திவ்ய நற்கருணையாக இருப்பதை, ஒவ்வொரு திருப்பலியிலும், நம்மில் வருவதை நமக்கு உணர்த்துகிறார். திவ்ய நற்கருணை மூலம், நீங்கள் முழுமையான பயனடைய, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? திவ்ய நற்கருணை பெற உங்களுக்குள் ஏதாவது தடை இருக்கிறதா? அந்த தடையை உடைக்க கடினமாக உழையுங்கள். உங்கள் நித்திய வாழ்விற்கு அது கண்டிப்பாக மிக பெரிய வித்தியாசத்தை கொடுக்கும். முழுமையான உள்ளத்துடன் கிறிஸ்துவுடன் இணைய முற்பட்டல்., கிறிஸ்துவும், எல்லா வழிகளிலும் உங்களை தயார் படுத்துவார்.


ஏனெனில், நற்கருணை தான் இயேசு. அது நம்மை குணமாக்கும், பரிசுத்தமாக்கும், கிறிஸ்துவை போல நம்மை மாற்றும். எனினும், இதற்கு நாம் முழு முயற்சி எடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். இதில் ஏன் சோம்பேறிதனம் ஏற்படுகிறது. நம் கடின உழைப்புதான் , நம் விசுவாசத்தை முன்னுறுத்தி நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்லும்.
.

© 2012 by Terry A. Modica

No comments: