Friday, August 7, 2015

ஆகஸ்டு 9 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை



ஆகஸ்டு 9 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு


1 Kings 19:4-8
Ps 34:2-9
Ephesians 4:30--5:2
John 6:41-51


யோவான் நற்செய்தி
அக்காலத்தில் ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே'' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.
``இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, `நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படிச் சொல்லலாம்?'' என்று பேசிக் கொண்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ``உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். `கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.''



"என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே" என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
ஏன் திவ்ய நற்கருணை யை வாழ்வு தரும் உணவு என்று கூறுகிறார் ? இது எப்படி நமக்கு வாழ்வை கொடுக்கும். ?
அவரே பதிலும் கூறுகிறார் "இந்த உணவை உண்பவர் என்றுமே வாழ்வார், எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.'' இதனயே மாற்றாக சொல்வதானால், இயேசு அவரையே நமக்காக கொடுத்தார் – சிலுவையில். நமது பாவங்கள் நம்மை மரணத்தின் பாதைக்கு அழைத்து சென்றனர் . ஆனால், பாவமில்லாத இயேசு , தெய்விக இயேசு நமக்காக நம் மரணத்தை அவர் ஏற்று கொண்டு, மரணத்தை தழுவி உயிர்த்தெழுந்தார். அதன் மூலம் நாம் நித்திய வாழ்வு பெறுகிறோம்.


மீண்டும் உயிர்த்தெழுந்த அவரது உடல் மரணத்தை வெற்றி கொண்டது. அவரது உடல், சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்ந்த்தெழுன்தது , நமது வாழ்விற்கு உணவாக வருகிறது . இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம் . ஒரு சிலர் , திருப்பலியில் பலி பிடத்தில் , நாம் அவரது மரணத்தை மிண்டும் செய்து பார்க்கிறோம் என்று நினைக்கின்றனர். அது தவறு. நம் நம்மையே , அவரது வாழ்வோடு இணைக்கிறோம்.

ஒவ்வொரு கத்தோலிக்க திருப்பலியிலும், , நமது மிட்பரின் உடலும் இரத்தத்தையும் நமக்கு வழங்கி , அவரோடு இணைவது நடக்கிறது. அதன் முலம் நமக்கு வாழ்வின் உணவு கிடைக்கிறது. . போப் ஜான் பால் " திருப்பலியில் நடைபெறும் திவ்ய நற்கருணை விருந்து , கிறிஸ்துவ வாழ்விற்கு ஊற்றாக உள்ளது " என கூறுகிறார்


திவ்ய நற்கருணை நமக்கு கிறிஸ்துவின் கடைசி இரா உணவிலிருந்து வருகிறது அப்போஸ்தலர்களின் தலைமுறை தலைமுறையாக வருகிறது . தற்போது குருவின் முலம் நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொருவரும் திருப்பலியில் கலந்து கொள்ளும்பொழுது இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை அறிந்து , நாம் திருப்பலியை கொண்டாடுதல் வேண்டும். நாம் பாவிகளாக இருந்தாலும், அதனை போக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும், அதே நேரத்தில் நாம் தொடர்ந்து திருப்பலியில் இயேசுவோடு நாம் இணைதல் வேண்டும்.

கிறிஸ்து, உண்மையாக வே முழுமையாக அப்ப்போச்தலர்களோடு இருந்தது போல இங்கும் இருக்கிறார். “இது என் உடல் என் இரத்தம் " இதற்கு மரியாதையும் , ஆராதனையும் கொடுப்பவர்கள் , மீட்பர் அங்கே இருப்பதை நம்புகின்றனர் , மேலும் நித்திய வாழ்வை கொண்டாடு பவர்கள்.

NOTE: Let me walk you through Pope John Paul II's wonderful encyclical Ecclesia de Eucharistia ("The Church of the Eucharist"). Take my easy online course at http://catholicdr.com/e-Classroom/Eucharistia

© 2015 by Terry A. Modica


No comments: