Friday, August 10, 2012

ஆகஸ்டு 12, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 12, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:4-8
Ps 34:2-9
Eph 4:30–5:2
John 6:41-51

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6.
41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.42 ' இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்? ' என்று பேசிக்கொண்டார்கள்.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.45 ″ கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் ″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, கிறிஸ்துவே, நற்கருணையை பற்றிய ஒரு விளக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது: "என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே" என்று இயேசு கூறுகிறார்.

"வாழ்வு தரும் உணவு நானே!" என்று ஏன் இயேசு கூறினார்? திவ்ய நற்கருணை எப்படி நமக்கு வாழ்வு தரும்?" இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்." என்று இயேசு பதில் சொல்கிறார். மாறாக சொல்வதானால், அவரை முழுமையாக நமக்காக கொடுத்தார். அவரின் வாழ்வை நமக்காக கொடுத்தார். சிலுவையில் கொடுத்தார். நமது பாவ வாழ்வு நம்மை சாவிற்கு இட்டு செல்கிறது. ஆனால், பாவமில்லாத இயேசு, நமக்கு பதிலாக, நம் சாவை அவர் எடுத்து கொண்டு, நமக்கு நித்திய வாழ்வை கொடுத்துள்ளார்.

உயிர்த்தெழுந்த அவரது உடல், சாவை வென்று வந்தது. அவரது உடல், சிலுவை அறைபட்டு, உயிர்ந்தெழுந்த அவரது உடல் தான் நம் வாழ்வின் சக்தியாகும். இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம், சிலர் இதனை தவறாக, 'கிறிஸ்துவோடு இணைகிறோம்' என்று புரிந்து கொள்கிறார்கள்.

"கோவில் பீடத்தில் நடக்கும் தியாகம்" நாமும் கிறிஸ்துவோடு கலந்து கொள்கிறோம் என்பதை குறிக்கிறது. அவரது வாழ்வில், அவரது இறைசேவையில், நமது பாவங்களுக்கான சிலுவை மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும், மோட்சத்திற்கு செல்வதிலும் நாம் கிறிஸ்துவோடு கலந்து கொள்கிறோம். நமது வாழ்வை அவருக்கு அர்ப்பனித்து, இயேசுவோடு நாம் இனைகிறோம். நம் மூலம இறைவார்த்தையை அவர் பரப்புகிறார். கிறிஸ்துவின் விருப்பத்திற்காக, நம் விருப்பங்களை தியாகம் செய்கிறோம். இதனால் கிறிஸ்துவோடு சேர்ந்து மோட்சத்திற்கு, அவரை பின் செல்கிறோம்.
ஒவ்வொரு கத்தோலிக்க திருப்பலியிலும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும், உணவாக நமக்கு நன்மை வடிவில் கொடுக்கபடுகிறது: வாழ்வின் உணவாக. போப் ஜான் பால், அவருடைய மறைகல்வி குறிப்பேடுகளில் குறிப்பிட்டு உள்ளது போல, "திவ்ய நற்கருணை தான் , கிறிஸ்தவ வாழ்விற்கு ஆதாராமாயி இருக்கிறது " என்பதை போப் இது சரியான வார்த்தை என்று முன் மொழிந்துள்ளார்.
கிறிஸ்துவின் கடைசி இரவு உணவின் போது ஆரம்பிக்கப்பட்டு நற்கருணை நமக்கு கிடைக்கபெறுகிறது. அப்போஸ்தலர்கள் மூலமும், தொடர்ந்து குருக்கள் மூலமும் நமக்கு கிடைக்க பெறுகிறது. கிறிஸ்துவின் திருவழிபாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும், திவ்ய நற்கருணையை , திருப்பலியில் அதன் ப்ரசன்னத்தை நாம் போற்றி ஏற்றுகொள்ள வேண்டும். ஆனால் அதனை ஏற்று கொள்ள நம்மில் உள்ள தடையை முதலில் போக்க வேண்டும்.
கிறிஸ்து நற்கருணையில் முழுதுமாக இருக்கிறார். கடைசி இரா உணவில் எப்படி அப்போஸ்தலர்களுடன் இருந்தாரோ, அவ்வாறே திருப்பலியிலும் முழுதுமாக நற்கருணையில் வீற்றிருக்கிறார்.

கடைசி இரவு உணவில், அப்போஸ்தலர்களிடம் அமர்ந்து என்ன சொன்னாரோ அதனையே, "இதோ என் உடல், இதோ என் இரத்தம்" என்று அவரை ஆராதித்து வணங்கும் ஒவ்வொருவருக்கும்   இவ்வாறு சொல்கிறார். இயேசு தான் நம்மை காப்பவர் என்று நம்பு ஒவ்வொருவருக்கும் , அவரின் திவ்ய நற்கருனைதான் , நிலையில்லா வாழ்வின் ஊற்றாக, ஆதாரமாக இருக்கும்.

© 2012 by Terry A. Modica

Friday, August 3, 2012

ஆகஸ்டு 5, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 5, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு

Ex 16:2-4, 12-15
Ps 78:3-4, 23-25, 54
Eph 4:17, 20-24
John 6:24-35

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6

24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள்.26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.27அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார்.28அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள்.29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.

வாழ்வுதரும் உணவு
34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், "27அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். " என்று இயேசு சொல்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒவ்வொரு நாளும் உங்கள் ஆண்மாவை வளர்க்கும் ஒவ்வொரு செயலிற்கும் கடுமையாக உழைத்து, முடிவில்லா வாழ்வுக்கு தயார்படுத்துங்கள்.

' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்என்று இயேசு சொல்கிறார். ஏன் இதனை 'செயல்' என சொல்கிறார்?
முழுமையான விசுவாசம் கொள்ள, நம்மில் உள்ள சந்தேகங்களை, அவநம்பிக்கைகளை அதன் மூலம், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை தகர்த்துவிடுமோ என நாம் நினைத்தால், அதனையெல்லாம் போக்கி, இயேசுவின் வார்த்தைகள் மேல் நம்பிக்கை கொண்டு, அவரின் வழீயில் நாம் செல்வோம் என்பதை உறுதிபடுத்திகொள்ள வேண்டும்

இந்த செயல்
1) அவநன்ம்பிக்கையை தரும் விசயங்களை நாம் கண்டறிய வேண்டும்
2) நாம் கிறிஸ்துவை நம்பினால், நமக்கு என்ன தீங்கு நேருமோ என பயப்படும் விசயங்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.
3) உண்மையை முழுமையாக புரிந்து , இன்னும் மேலும் மேலும் உண்மையை அறிந்து  பரிசுத்த வாழ்வில் முன்னேற வேண்டும்.
நாம் பயப்படும் அத்தனையுமே உண்மைக்கு புறம்பானது ஆகும்.

"கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்று இயேசு கூறுகிறார். அவரையே திவ்ய நற்கருணையாக இருப்பதை, ஒவ்வொரு திருப்பலியிலும், நம்மில் வருவதை நமக்கு உணர்த்துகிறார். திவ்ய நற்கருணை மூலம், நீங்கள் முழுமையான பயனடைய, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? திவ்ய நற்கருணை பெற உங்களுக்குள் ஏதாவது தடை இருக்கிறதா? அந்த தடையை உடைக்க கடினமாக உழையுங்கள். உங்கள் நித்திய வாழ்விற்கு அது கண்டிப்பாக மிக பெரிய வித்தியாசத்தை கொடுக்கும். முழுமையான உள்ளத்துடன் கிறிஸ்துவுடன் இணைய முற்பட்டல்., கிறிஸ்துவும், எல்லா வழிகளிலும் உங்களை தயார் படுத்துவார்.


ஏனெனில், நற்கருணை தான் இயேசு. அது நம்மை குணமாக்கும், பரிசுத்தமாக்கும், கிறிஸ்துவை போல நம்மை மாற்றும். எனினும், இதற்கு நாம் முழு முயற்சி எடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். இதில் ஏன் சோம்பேறிதனம் ஏற்படுகிறது. நம் கடின உழைப்புதான் , நம் விசுவாசத்தை முன்னுறுத்தி நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்லும்.
.

© 2012 by Terry A. Modica

Friday, June 1, 2012


ஜூன் 3 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த திரித்துவ திருவிழா

மத்தேயு நற்செய்தி             

Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20

அதிகாரம் 28
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.18 இயேசு அவர்களை அணுகி, ' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)


நீங்கள் கடவுளுக்கு மிகவும் முக்கியமானவர். நீங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள்: தந்தை கடவுள், மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவராக இருக்கிற கடவுளுக்கு சொந்த மானவர்கள்.

அதனால் தான், நமக்கு ஞானஸ்நாணம் கொடுக்கும் பொழுது, திரித்துவ கடவுள் பெயரால் கொடுப்பது மிகவும் முக்கியமானது. அதனால் தான் இயேசு இன்றைய நற்செய்தியில், "தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்",  என்று கூறினார். கடவுள் மூவொரு கடவுளாக முழுதுமாக உள்ளார். மூவொரு கடவுளும், உங்களோடு  தனிப்பட்ட நட்பு வைத்து கொள்ள ஆசைபடுகின்றார்.

மூவொரு கடவுளின் ஒவ்வொருவரோடும், நீங்கள் அன்பான நட்பை கொண்டு வாழ்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தந்தை கடவுளோடு நீங்கள் பேசியதுண்டா? மீட்பராகிய மகனோடு தனியாக அமர்ந்து பேசியதுன்டா? பரிசுத்த ஆவியோடு தனியாக உரையாடியதுன்டா? நீங்கள் மனதளவில் காயப்படும்பொழுது, தந்தை கடவுளின் மடியில் அமர்ந்து, அவரது ஆறுதலை பெற்று கொண்டீர்களா? சோதனைகளை வெல்ல முற்படும்பொழுது, இயேசுவின் ஆற்றலை பெற்று சோதனைகளை வென்றதுன்டா? விசுவாசத்தில், குழுப்பமடைந்து, போராடி கொண்டிருக்கும்பொழுது, பரிசுத்த ஆவியின் ஆலோசனைகள் உங்களுக்காக தயாராக இருப்பது தெரியுமா?

இயேசுவின் தந்தை கடவுள், நமக்கும் தந்தைதான் . அவர் நமக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தில் இருந்து கொண்டு, நம்மை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறா என்ற பயத்தோடு இருக்கிறோமோஉங்கள் ஞானஸ்நாணத்தில், உங்களை சந்தோசமாக தத்தெடுது உள்ளார், ஏனெனில், அவர் உங்கள் அன்பான , நமது தேவைகளை கவனித்து கொள்ளும் அப்பாவாக இருக்கிறார்.
பரிசுத்த ஆவி இதனை உறுதிபடுத்துகிறார். கடவுளின் ஆவியானவர், நமக்கு ஆறுதலாக இருந்து, அரவனைத்து, அனைத்து பரிந்துரைகளையும் நமக்கு போதித்து, நமது வாழ்வில் முழு அன்போடும், வாழ்வில் சந்தோசத்தோடும் நம்மை வழி நடத்துகிறார்அந்த அன்பில், இயேசு தன்னையே தியாகம் செய்து, நமது பாவத்தின் தண்டனையிலிருந்து  நம்மை மீட்டு, பரிசுத்த ஆவியின் உதவியால், பரிசுத்த வாழ்வு வாழ உதவிடுகிறார்.

சக்தி தருபவராகவும், நோய் தீர்ப்பவராகவும், உதவி செய்பவராகவும் மூவொரு கடவுளாக கடவுள் இருக்கிறார். அவரது தெய்வீகத்தின் முழுமையுடன் நீங்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்! அவரிடமிருந்து, எல்லாவற்றையும் பெற்று பயனடைய வேண்டும் என்று ஆசைபடுகிறார்.

ஞானஸ்நாணம் பெற்ற கிறிஸ்தவர்களாக, அர்ச்சிக்கபட்ட கத்தோலிக்கர்களாக கடவுளின் முழு ப்ரசன்னமும் நற்கருணையில் வீற்றிருக்கும் கடவுள் நமக்கு முழுமையாக உள்ளதுநமக்கு எதுவும் குறைவில்லை.! எல்லாமே நமக்கு கிடைக்கிறது!

© 2012 by Terry A. Modica

Friday, May 25, 2012

மே 27, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 27, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 20

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவின் ஆவியான பரிசுத்த ஆவி நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பரிசுத்தமாகவும், கிறிஸ்துவின் இறை சேவையை தொடர முடியும்நாம் தனியாக இயேசுவை போல ஆக முடியாது. ஆனால், அவரின் ஆவி நம்மில் வாழ்ந்தால், சுறுசுறுப்பாக அதன் வேலையை செய்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை பெறுவோம், அவரின் விசுவாசம், எல்லையில்லாத அன்பு, அமைதி, நம்பிக்கை, இடைவிடா ஆற்றலும், மேலும் இயேசுவிடம் நாம் கானும் அத்தனையும் நாம் பெறுவோம்.


பரிசுத்த ஆவியை உங்கள் ஞானஸ்நாணத்தில் பெற்றீர்கள். உறுதி பூசுதலில், பரிசுத்த ஆவியின் ஆற்றலையும், இருப்பையும் , இது நமக்கு உறுதி படுத்தபடுகிறது. மேலும் பரிசுத்த ஆவியின் ஆற்றல் உங்களில் அதிகபடுத்தப்படுகிறது. பெந்தகோஸ்தே நாளிலிருந்து, பரிசுத்த ஆவியை கடவுள் இவ்வுலகிற்கு கொடுத்ததிலிருந்து,   அவரின் இறையரசிற்கு சேவை செய்பவர்கள் மூலமாக  இவ்வுலகை கடவுள் மாற்றுகிறார். அவரின் ஆவியை தாராளாமாக அதிகமாகவே நமக்கு அள்ளி தந்து , அவர் கேட்பதையெல்லாம் நாம் செய்து வெற்றி பெற துணையாக இருக்கிறார்ஆனால் அவரின் பரிசுத்தமும், இறை சேவையும், நாம் எவ்வளவு வெளியே தருகிறோமோ அவ்வளவு தான் இவ்வுலகிற்கு கிடைக்கும்.

என்னோடு சேர்ந்து இந்த பரிசுத்த ஆவியின் ஜெபத்தை சொல்லுங்கள்:

அன்பு இயேசுவே, பரிசுத்த ஆவியின் முழுமையும் என்னுள் வர செய்யும், உமது பரிசுத்த ஆற்றலில் என்னை வாழச் செய்யும், உமது உண்மைகளை முழுதும் புரிந்து கொள்ள  உதவி செய்யும்.உங்கள் உண்மையை ஏற்று கொள்ள  எனது இதயத்தை திறந்தருளும், நான் அந்த உணமையை புரிந்து கொள்வதற்கு முன் என் இதயத்தை திறந்தருளும்.
பரிசுத்த ஆவியே, மற்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்வதை விட, இறையரசை புரிந்து கொள்ள உதவும். உன்னோடு என்னை இனைத்து , எதற்காக நான் அனுப்பபட்டேன் என்பதை புரிந்து கொள்ள உதவும், மண உறுதியையும், உடல் ஆற்றலையும் கொடுத்து , என்னை இவ்வுலகில் இறையரசின் சேவை செய்ய உதவும். எனக்கு நீ மட்டுமே தேவை.

பரிசுத்த ஆவியே, எனது பாவத்தை நினைத்து , அதற்காக உண்மையாக வருத்தபட்டு, அதனை கழுவி நீக்கிட உதவி செய்யும். எனது மன்னிப்பிற்காக நான் வேதனை அடையும் பொழுது எனக்கு ஆறுதலாக இருந்தருளும் , புதிய வாழ்விற்கு உமது சந்தோசத்தை கொடுத்தருளும். இந்த புதிய மகிழ்ச்சியை , இரக்கத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு துனை புரியும்.

இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டார், " இவ்வுலகிற்கு சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" என்னுடைய கொடைகளையும், திறமைகளையும் உபயோகித்து  இவ்வுலகை மாற்றுங்கள். எனக்கென்று எதை செய்ய வேண்டும், எதனை செய்ய கூடாது  என்று ஒரு வரையரை இருக்கிறது. என்னுடைய எண்ணங்களையும், முன்னுரிமைகளையும் , குறைகளையும் உங்களிடம் சரணடைய செய்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கவே விரும்புகிறேன். நீங்கள் எங்கே அழைத்து செல்கிறீர்களோ அங்கே செல்லவே விரும்புகிறேன். பரிசுத்த ஆவியே, இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த , வெற்றியின் அன்பை இவ்வுலகிற்கு பரப்ப, என்னை கொடைகளோடும், ஆற்றலோடும் அனுப்பி வையும்.!
பரிசுத்த ஆவியே என்னில் வாரும், என்னை புதுபித்தருளும். !ஆமென்.
© 2012 by Terry A. Modica