Saturday, February 1, 2014

பிப்ரவரி 2 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 2 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் காணிக்கை பெருவிழா
Malachi 3:1-4
Ps 24:7-10
Hebrews 2:14-18
Luke 2:22-40


இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்
39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறில் ஆண்டவர் இயேசுவை காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்டதை கொண்டாடுகிறோம். குழ்ந்தை இயேசு கடவுளுக்கு அர்ப்பநிக்கப்பட்டதால், அவரின் முழு வாழ்வும் , அவரது இறப்பும் கூட கடவுளுக்கு ஒப்புகொடுக்கபட்டது – நமக்காக .

உங்கள் வாழ்வை கடவுளுக்கு ஒப்பு கொடுத்துள்ளீர்களா?

உங்கள் இறப்பையும் கடவுளுக்கு அர்ப்பணித்தால் என்ன? உங்கள் கடைசி மூச்சு கூட இறைவனுக்கு சேவை செய்ய நீங்கள் கடவுளிடம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் இவ்வுலகை விட்டு மோட்சத்திற்கு செல்லும்பொழுது எந்த மாதிரியான தேவ சாட்சியத்தை இங்கே விட்டு செல்ல இருக்கிறீர்கள்?

உங்கள் ஞானஸ்நாணத்தில் நீங்கள் கிறிஸ்துவின் வாழ்விலும், மரணத்திலும், அவரின் இரத்சிப்பிலும் மீண்டும் பிறக்கிறீர்கள், ஆனால், முழு மனதோடு, முழு இருதயத்தோடு  நீங்கள் உங்களை அவருக்கு அற்பணித்தீர்களா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணப்பொழுதும் இந்த  அர்ப்பணிபை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்  ஞானஸ்நாணத்தில் மட்டுமல்ல.

இதற்கு அர்த்தம் என்ன என்றால், தொடர்ந்து நம் ஜெபித்து கொண்டே இருக்க வேண்டும், எவ்வளவு வேலை இருந்தாலும்

இதன் அர்த்தம் என்ன என்றால், ஒவ்வொரு சூழ் நிலையிலும், அதற்கு தகுந்தார் போல நாம் நடந்து கொள்ளாமல், கடவுளின் விசுவாசத்தின் மூலம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இதற்கு அர்த்தம் என்ன என்றால், முழு இருதயத்தோடு எந்நேரமும் கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும் , அப்படியில்லாமல், நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்து விட்டு, நாம் நினைவுகளை வேறு இடத்தில் செலுத்தாமல் இருக்க வேண்டும்.
இதன் அர்த்தம் என்ன என்றால், இவ்வுலக ஆசைகளோடு , நாம் எப்படி ஒட்டி வாழ்கிறோம் என்பதை கண்டு பிடித்து , அதனை விட்டு விட்டால், நாம் கடவுளோடு இணைந்து வாழலாம்.

இதன் அர்த்தம் என்ன என்றால், எப்பொழுதுமே ஆவியில் விழிப்பாயிருப்பது .

இதன் அர்த்தம் என்ன என்றால், பரிசுத்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்வது.


இதன் அர்த்தம் என்ன என்றால் – தொடர்ந்து, நமக்குள்ளேயே, “கடவுளின் அன்பை நாம் முழுதுமாக இக்கணம் அனுபவிக்கிரோமோ? அப்படி இல்லையென்றால் , அவரின் அன்போடு இணைய நாம் என்ன செய்ய வேண்டும். “ என்ற கேள்விகளோடு, இன்னும் “அவரின் அன்பில் வாழ, மிகவும் கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு நம்மிடம் உள்ளதை கொடுக்கிறோமோ? அல்லது அன்போடு வாழ என்னை நானே உட்படுத்தி கொள்கிரேனா?” என்ற கேள்விகளையும் நாம் கேட்டு நாம் திருந்தி வாழவேண்டும்.

© 2014 by Terry A. Modica

Friday, January 24, 2014

ஜனவரி 26 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி    26 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Corinthians 1:10-13, 17
Matthew 4:12-23

மத்தேயு நற்செய்தி

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(
மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!16காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. '17அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

முதல் சீடர்களை அழைத்தல்
(
மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்றார்.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.21அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(
மாற் 3:7 - 12;லூக் 6:17 - 19)
23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
(thanks to www.arulvakku.com)
உங்களை யார் தொந்தரவு செய்கிறது? இன்றைய நற்செய்தியில், எசாயா கொடுத்த வாக்கு நிறைவேறியதை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். இருளில் வாழ்ந்த மக்கள், இயேசுவின் மூலம் ஒளியை பார்த்தார்கள், அதன் மூலம் அவர்கள் குணமடைவார்கள் என்று அறிந்தார்கள். பாவ வாழ்வினால், உண்டான, துக்க  பிடையான வாழ்வை துடைத்து எரிய யார் எந்த முயற்சியும் அடைவதில்லை.?  சாத்தானின் இறப்பையும், அழித்தலையும் தன்னுள்ளே வைத்து கொள்பவர்கள் யார்? யாருடைய பிடிவாதம் உங்களை வேதனை படுத்துகிறது?
உங்கள் ஜெபத்தினாலும், விசுவாசமான அன்பினாலும், இயேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த உண்மையை எதிர்த்து, அவர்கள் சண்டையிட்டாலும், இயேசுவிடமிருந்து அவர்கள் மறைந்து இருந்தாலும், கிறிஸ்துவின் மிக பெரிய வெள்ளமென உள்ள ஒளியை யாரும் மறைக்க முடியாது. மிக விரைவில், இந்த ஒளி சந்தோசத்தை கொடுக்கும், உங்களுக்கு மட்டுமல்ல, யாரையெல்லாம், மீட்க வேண்டுமோ அவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

லூக்கா நற்செய்தியில் (12:49-50), இயேசு இருளில் வாழும் மக்களை பற்றி கூறுகிறார்: “அது நிறைவேறுமளவும், நான் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்”. இதன் மூலம் உங்கள் வேதனையை அவர் அறிகிறார் , அவரும் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார். இன்னும் ஈடுபாட்டுடனும், மிகவும் ஆர்வத்துடன் உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறார். நீங்கள் அறிந்ததை விட, அவர் இன்னும் அதிகமாகவே செய்து கொண்டிருக்கிறார். எந்த வெற்றிக்காக வேண்டிகொள்கிறிர்களோ அதற்காக , அதனைசெய்து முடிக்க  எல்லா வகையிலும் – முடியாத காரியாமாக இருந்தாலும் – அதனை முழுமையுடன் செய்ய அயராமல் உழைத்து கொண்டிருக்கிறார்.
ஒவ்வொருவரின் கலகம் செய்யும் தன்மைகள், இறைவனிடம் வராமல் இருப்பதற்கான குணங்கள், அனைத்தும், உடைந்து போக, இறைவனின் அருளால், அவர்கள் கடவுளிடம் நெருங்க நாம் ஜெபிக்க வேண்டும். கடவுள் மற்றவர்கள் மூலம் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இறைவனிடம் நாம் வேண்டுவோம். அவர்கள் ஒளி பெற வேண்டுவோம் , கடவுள் அவர் வழியில் (இந்த வழி நாம் நினைக்கும் வழியாக இருக்காது) அவர்களின் கடினமான மறுப்பு கொள்கையை உடைத்தேரிக்க இறைவனிடம் நாம் ஜெபிப்போம். மனம் திரும்பியவுடன், அவர்கள் கிறிஸ்துவின் ஒளியை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல ஜெபிப்போம். அவர்கள் மனம் திரும்புதல், உறுதியான , என்றென்றும் நிலைத்திருக்கும் , ஆழமான மண மாற்றமாக இருக்க வேண்டும் என ஜெபிப்போம்.
நாம் கடவுளின் மனதை மாற்ற ஜெபிக்க வேண்டியதில்லை; அவர் ஏற்கனவே, கிறிஸ்துவின் ஒளியை இருளில் வாழ்வபவர்களுக்கு கொண்டு உழைத்து கொண்டிருக்கிறார். நாம் அவர்களை கடவுளின் கைகளுக்கு கொண்டு செல்ல ஜெபிப்போம். ஏனெனில், அதனை அவர்களாகவே செய்வதில்லை.
© 2014 by Terry A. Modica



Friday, January 17, 2014

ஜனவரி 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி 19, 2013  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் இரண்டாம் ஞாயிறு
Isaiah 49:3, 5-6
Ps 40:2, 4, 7-10

1 Corinthians 1:1-3
John 1:29-34

யோவான் நற்செய்தி

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
(thanks to www.arulvakku.com)
ஒவ்வொரு திருப்பலியிலும்,  யோவான் இன்றைய நற்செய்தியில் கூறுவதை, குருவானவர் கூறுவதை கேட்கிறோம்: “இவரே கடவுளின் செம்மறி, இவரே உலகின் பாவங்களை போக்குபவர்”, இதற்கு பதிலுரையாக, நாம் “ஆண்டவரே நாம் உன்னை பெறுவதற்கு தகுதியற்றவன் .. அனால் ஒரு வார்த்தை சொல்லியருளும், எனது ஆன்மா குணமடையும்”
திருப்பலியின் பாவமன்னிப்பு சடங்கில், நாம் உண்மையாக மனம் வருந்தி, பாவ மன்னிப்பு கோரினால், நமது குணப்படுத்துதல் ஆரம்பித்து விடும். நம் பாவங்கள் போக்கப்பட்டு, நாம் இயேசுவை முழு மனிதனாகவும, கடவுளாகவும், திவ்ய நற்கருணையில் பெறுவோம். அதே ஆற்றலோடு , கோவிலை விட்டு, நாம் வெளியே சென்று, யோவானை போல, நாமும், “இயேசுவை கண்டேன், கடவுளின் மகனை தரிசித்தேன்” என்று கூறலாம்.
ஒவ்வொரு திருப்பலியும், இந்த மாதிரி அனுபவத்தோடு தான் முடிகிறதா?
திருப்பலின் ஒவ்வொரு பகுதியின் இதனை நமக்கு வலியுறுத்துகிறது. இயேசு நம்மிடையே நாம் சமூகமாக ஒன்றாய் பாடும்போது இருக்கிறார். பாவ மன்னிப்பு சடங்கில் இயேசு பிரசன்னமாய் இருக்கிறார். நாம் உண்மையாக பாவமன்னிப்பு கேட்பதை உன்னிப்பாக கவனிக்கிறார். வாசகம் வாசிக்கும்பொழுது ஒவ்வொரு வார்த்தையிலும் இயேசு இருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் நம்மில் வந்து, நம் ஆன்ம வாழ்வு வளர உணவாக மாறுகிறது. பிரசங்கம் சில நேரங்களில். நன்றாக இல்லாத பொழுது, அவரின் ஆவி நமக்கு தனியாக நமக்கு சொல்லி தருகிறது. (சில நேரங்களில் தோன்றும் சில சிந்தனைகள், கடவுளின் செயலாகும்) இயேசு ஒவ்வொரு ஜெபத்திலும் இருக்கிறார். நம் ஜெபத்திலும், குருவானவர் சொல்லும் ஜெபத்திலும் இயேசு எங்கும் நிறைந்திருக்கிறார்.
ஒவ்வொரு திருப்பலியும், நம்மை மாற்றுவதற்காக உள்ளது, மேலும், கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னத்தை இவ்வுலகிற்கு அறிவிக்க நம்மை அனுப்ப்புகிறது.

யோவான் கூறியது போல: “அவரை எனக்கு தெரியாது”, அதனை மாற்றி சொன்னால், “நான் ரொட்டியும், திராட்சை ரசம் மட்டுமே பார்த்தேன்” மேலும், “நாம் பாவியாக இருந்தேன், நான் எவ்வளவு ஆபத்தை உண்டாக்கினேந என தெரியாது” , மற்றும், “நாம் காயமுற்று இருந்தேன் எப்படி குணமடைவது என தெரியாமல் இருந்தேன் “ என்றும் நாம் சொல்வோம்.

யோவானை போல நாமும்: “இப்பொழுது நான் அவரை கண்டுகொண்டேன், இவரை வெளிப்படுத்தும் பொருட்டே , இவர் தான் கடவுளின் மகன், பரிசுத்த ஆவியானவர் இவரை என்னில் வெளிப்படுத்தினார், இயேசு திவ்ய நற்கருணையில் இருப்பதை பரிசுத்த ஆவி என்னில் வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் தயை குணத்துடன், என் பாவங்களை சுட்டி காட்டி, அதனை விட்டு விலக உதவியாக இருந்தார். பரிசுத்த ஆவியானவர் என் காயங்களுக்கு குணமளிக்க கூடிய எல்லா உதவி உள்ள இடத்தையும் என்னை கூட்டி கொண்டு சென்றார்”

© 2014 by Terry A. Modica


Friday, January 10, 2014

டிசம்பர் 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா
Isaiah 42:1-4, 6-7
Ps 29:1-4, 9-10 (with 11b)
Acts 10:34-38
Matthew 3:13-17
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(
மாற் 1:9 - 11; லூக் 3:21 - 22)
13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார்.15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறில், இயேசு இறைசேவையை ஆரம்பித்ததை , அதற்காக தன்னை ஆயத்த படுத்தி கொண்டதை நாம் கொண்டாடுகிறோம். நாமும் அதே திருமுழுக்கு பெறுகிறோம், ஞானஸ்நானத்தில் நாம் இதே அனுபவத்தை அடைகிறோம். கிறிஸ்துவின் வாழ்வில் நாம் .முழுதும்  மூழ்கிறோம். மற்ற இரண்டு அருட்சாதனங்கள் – புது நன்மையையும் , உறுதிபூசுதல் – நம் பரிசுத்த வாழ்வை உறுதி செய்து, அந்த வாழ்வை நாம் தொடர நமக்கு அதிகாரத்தையும், ஆற்றலையும் கொடுக்கிறது. இதன் மூலம் கடவுள் சொல்கிறார்: இதோ என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்:

தந்தை கடவுள் பூரிப்படையும் அளவிற்கு பரிசுத்த ஆவி உன்னில் என்ன செய்கிறார்? உங்கள் முலமாக இறையரசிற்கு எப்படி சேவை செய்கிறார். நீங்கள் இன்றைய உலகிற்கு அதே பரிசுத்த ஆவிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, கிறிஸ்துவின் இறைசேவையை தொடர செய்வீர்களா?
எல்லா கிறிஸ்தவர்களுக்கும், ஞானஸ்நாணம கொடுக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்துவின் சேவையை தொடர அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இறை சேவையை தொடர நாம் ஆர்வத்தோடு செயல்பட நமக்கு கடினமாக இருக்கிறது. எடுத்து காட்டாக, தீவிர நோய்கள் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்  மருத்துவர்களாகவோ அல்லது நர்ஸாகவோ ஆகிறார்கள், சிறு வயதில் பல்வேறு துன்பத்திற்கு ஆளானவர்கள், பெரியவர்களின் குற்றங்களுக்கு ஆளானவர்கள், வளர்ந்த பிறகு, சமூக சேவை ஆற்றுபவர்களாகவும், பல குற்றங்களால் துன்பபடும் குழந்தைகளை காப்பவர்களாகவும், மாறுகிறார்கள். பல நிறுவனங்களில் வேலை செய்யும்பொழுது துன்பத்திற்கு உள்ளானவர்கள், தனியே ஒரு நிறுவனம் தொடங்கி, அதில் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களை நல்ல முறையில் நடத்துவார், எப்படி என்றால், கிறிஸ்துவை நாம் எப்படி நடத்த வேண்டுமோ அதே போல.
நாம் எதிலெல்லாம் ஆர்வத்துடன் செயல்பட முடிகிறதோ, அதற்கான ஆற்றலை, கிறிஸ்துவின் பாடுகளின் மூலமும்,  ஞானஸ்நாணத்தின் மூலமும் நாம் பெறுகிறோம்.
மேலும், திருப்பலியை தொடர்ந்து நாம் கொண்டாடும்பொழுது, திவ்ய நர்கருனையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, இறைசெவையை தொடர, நம் அழைத்தலை புதுப்பித்து கொள்கிறோம். திவ்ய நற்கருணை அருட் சாதனத்தின் முலம் நாம் புதுபிக்க படுகிறோம். கிறிஸ்து திவ்ய நற்கருணை முலம் இயேசு அவரின் இறைசேவையில் நம்மை இணைக்கிறார். அதன் முலம் நாம் இவ்வுலகை மாற்ற முடியும்.
இதனை செய்வதற்கு தந்தை கடவுள் உன்னை அழைத்துள்ளார். இந்த அழைப்பினால், தான், நீங்கள் எல்லாம் செய்கிறீர்கள், அதனால் தந்தை கடவுள் உங்களால் பூரிப்படைகிறார்.

© 2014 by Terry A. Modica

Friday, January 3, 2014

ஜனவரி 5,2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 5,2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருகாட்சி ஞாயிறு
 Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி
ஞானிகள் வருகை
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் விழா காலத்தில், ஞாணிகளின் வருகையும் நாம் கொண்டாடுகிறோம். குழ்ந்தை இயேசுவை அவர்கள் வீழ்ந்து வணங்கியதை நாமும் கவனமாக எடுத்து கொள்ள வேண்டும். கிரேக்க வார்த்தையான  ஞாணிக்கு அர்த்தம் என்ன என்றால், கிழ்த்த்திசை விஞ்ஞாணிகள் என்று அர்த்தம். சில நேரங்களில், நாம் அவர்களை “ஜோசியர்கள்” என்று மாற்றி சொன்னாலும், இயேசுவின் குடிலை அவர்கள் சென்று வணங்கியது, ஜோசியத்தால் அல்ல.
ஏனெனில், அவர்கள் யூதர்கள் அல்ல. யூத மீட்பரை ஆவலுடன் காண அவர்கள் உறுதியோடு இருந்தனர். இதன் மூலம் “ஆண்டவரின் திருக்காட்சி” என்று இத்திருவிழாவின் பெயருக்கு ஏற்றார் போல, அவர்கள் இயேசுவை காண வந்த்திருந்தனர். இயேசுவின் முக்கியத்துவத்தை அந்த ஞானிகள் நம்பினார்கள். உலகிற்கு அது புரியாவிட்டாலும், அவர்களுக்கும் அது புரியாவிட்டாலும், அவர்கள் இயேசுவை நம்பினார்கள்.
இயேசுவை அவர்கள் மேசியாகவும், அரசராகவும், ஆராதனை செய்தனர். அவர் எப்பட அராசராவர் என்று கூட தெரியாமல், எப்படி அவர் அரசாட்சி இவ்வுலகை மீட்க போகிறது என்று கூட தெரியாமல் ஞானிகள் இயேசுவை ஆராதித்தார்கள். அவர்கள் விஞ்ஞான அறிவியலாளர்கள், அவர்கள் மத போதனைகள் படித்து உள்ளார்கள், ஆண்டவரின் ஆவியின் தூண்டுதலோடு , அவர்கள் எல்லாம் செய்தார்கள். அதனால் அவர்கள் வாழ்வும் மாறியது.
தூய ஆவியார் ஒருவாரால் தான், ஒவ்வொருவரின் விசுவாசம் கொடுக்க முடியும். விசுவாசம், பரிசுத்த ஆவியின் கொடை. (கொரிந்தியர்கள் 1 12 பார்க்கவும்). ஆண்டவரின் திருக்காட்சி என்றால், “கண்டுபிடித்தல்”, “இரகசியத்தை வெளிப்படுத்தி நம் வாழ்வை மாற்றுதல்” என்று அர்த்தம் ஆகும்.  இந்த நாள் கடவுள் நமக்கு கொடுத்த அன்பளிப்பு ஆகும், இதன் மூலம் நாம் புது வாழ்வை வாழ ஆசை படுவதை தொடங்கி வைக்கிறது.

ஆண்டவரின் திருக்காட்சியின் மூலம் ஞானிகள் , கிறிஸ்துவின் பிரசன்னத்தில், எவ்வளவு சந்தோசத்துடன், இருந்த்திருப்பார்கள் என்பதை நம்மால் நாம் கற்பனை பண்ணி பார்க்கலாம். ஒரு ஏழையின் குடும்பத்தில் பிறந்த இந்த குழ்ந்தை எப்படி அரசராக போகிறார் என்று அவர்களுக்கு புரியாவிட்டாலும், அவரை பற்றிய ஏதாவது செய்தி இஸ்ரேலிலுருந்து வருகிறதா? என்று அவர்கள் வாழ்நாள் முழுதும் அவர் நினைவாகவே இருந்தனர். இயேசுவின் சிலுவை மரணத்தையும், அவர் சீடர்களின் போதனைகளையும் அவர்கள் கேட்டிருக்கலாம் . அதன முலம் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கலாம். அதன் மூலம் எஞ்சியுள்ள புனித சின்னங்கள் புனிதபடுத்தபட்டுள்ளது .

© 2013 by Terry A. Modica

Friday, December 20, 2013

டிசம்பர் 22, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 22, 2013  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு

Isaiah 7:10-14
Psalm 24:1-6 (with 7c & 10b)
Romans 1:1-7
Matthew 1:18-24

மத்தேயு நற்செய்தி

18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 22 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 
(thanks to www.arulvakku.com) 
திருவருகை கால நான்காவது ஞாயிறின் முக்கிய நோக்கம்/கருத்து அன்பு தான். அன்பின் விளக்கமான கருத்து என்ன என்று முதல் வாசகத்தில் நாம் பார்க்கலாம். பைபிளில் ஆருடம் கூறியதை நடந்துள்ளது”: இம்மானுவேல் என்றால், “கடவுள் நம்மோடு” . அன்புடன் இருப்பது என்பது “கடவுள் நம்மோடு “ இருப்பது என்பதாகும். அன்பினை கொடுப்பது என்பது கடவுள் நாம் நம்மோடு இருப்பவர்களுக்கு கொடுப்பது.

மற்றவர்களை அன்பு செய்ய உங்களால் முடியவில்லை என்று என்றாவது நீங்கள் நினைத்தது உண்டா? அது மாதிரி நாம் இருக்க முடியாது. நாம் சில நேரங்களில் பொறுமை இழ்ந்து விடுவோம். மற்றவர்களிடம் இருந்து வரும் அன்பை விட நாம் அதிகம் கொடுக்கும் அன்பினால் நாம் சோர்வடைந்து விடுகிறோம். அன்பே உருவான கடவுள் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார்.
நாம் எவ்வளவு தான் அன்பு செய்தாலும், மற்றவர்கள் அதற்கு பதிலாக நம்மிடம் அன்பு செலுத்தாமல் நம்மை நின்த்தித்தால், நாம் வெறுமையா நம் மனதில் எண்ணுவோம் . இது மாதிரியான நேரத்தில், நாம் கடவுளின் அன்பை நாம் கேட்டு அதன் முலம் நாம் அன்பு செய்ய வேண்டும். இது மாதிரியான வேண்டுதல் கண்டிப்பாக பலன் கொடுக்கும். இப்படிதான் நாம் கடவுளின் அன்பை பகிரும் இவாஞ்சளைசர் நாம் மாற முடியும்.

யாரெல்லாம் அன்பு செய்ய முடியாமல் இருக்கிறார்களோ , அவர்களிடம் நாம் அன்பு செய்தால், நம்மில் உள்ள கடவுளை நாம் அவர்களுக்கு தெரியபடுத்துகிறோம்.
நம்மில் பலர் கிறிஸ்துவாக நம்மிடம் இருப்பதில்லை. கடவுள் அவர்களிடம் கேட்டுள்ளது போல நாம் அவர்கள் நம்மை அன்பு செய்யாமல் இருக்கலாம். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், மற்றவர்களை சார்ந்து நாம் இருக்க வேண்டியதில்லை. கடவுள் நம்மோடு. அவரை தான் நாம் நாட வேண்டும். நம்மோடு இருக்கும் கடவுள் , நம்மை முழுவதுமாக அன்பு செய்கிறார். நிபந்தனையின்றி நம்மை கடவுள் அன்பு செய்கிறார். நாம் அதற்கு தகுதியானவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அன்பு செய்து கொண்டிருக்கிறார்.
மற்றவர்கள் நம்மை அதிகம் அன்பு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாம் இருந்தோமானால், நாம் அவர்கள் அன்பு செய்யவில்லை என்று தான் எண்ணுவோம். ஆனால் இயேசுவின் மேல் நாம் கண்களை திருப்பினால், அவர் எங்கெல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே இயேசுவின் அன்பால் முழுதும் நிறைத்துவிடுவர்.
இம்மானுவேல், கடவுள் நம்மோடு என்று எல்லா காலமும் நாம் அதன் நினைப்பிலே இருத்தல் வேண்டும.
இம்மானுவேல், அது தான் நமக்கு சின்னம். அதனை கடவுள் நாம் ஒவ்வொருவருக்கும் இந்த கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக நமக்கு தருகிறார்.

© 2013 by Terry A. Modica

Friday, December 13, 2013

டிசம்பர் 15, 2013 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 15, 2013 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால மூன்றாம் ஞாயிறு
Isaiah 35:1-6a, 10
Psalm 146:6-10
James 5:7-10
Matthew 11:2-11

மத்தேயு நற்செய்தி

விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(
லூக் 7:18 - 35)
யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.அதற்கு இயேசு மறுமொழியாக, ' நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் என்றார்.அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: ' நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையா?8இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.10 ' இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com )
சந்தோசம் தான் கிறிஸ்து வருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறின் முக்கிய கருத்தாகும். முதல் வாசகத்தில் சொல்வது போல, “உறுதி ஆக இருங்கள், பயப்பட வேண்டாம். உங்கள் கடவுள் இங்கே இருக்கிறார். உங்களை மீட்க உறுதி உடன் வந்துள்ளார். “ நாம் சந்தோசப்படுவதற்கு இது தான் காரணம். நாமெல்லாம் பாவத்தினால் அழிவின் முனையில் உள்ளோம். இயேசு சிலுவையின் முலம், மிக பெரிய தியாகத்தினால், நம் பாவங்களுக்கு பரிசளித்தார். இதற்காக தான், இயேசு இந்த புவியில் பிறந்தார். நம்மை மீட்கவே, கடவுளின் அன்பிலுருந்து பிரிந்து சென்ற நம்மை அவரிடம் அழைத்து செல்லவே வந்தார்.

நித்திய வாழ்வை ஒப்பிட்டு பார்க்கையில், இவ்வுலக பிரச்சினைகள் மிகவும் சிறியது.
இயேசுவினால், நமது பாவங்கள் , அதன் அழிவுகள் நம்மை ஒன்றும் செய்யாது என்று  நாம் புரிந்து கொள்ளும் பொழுது, நமக்கு சந்தோசம், மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் நமக்கு தேவையான எல்லாவற்றயும் செய்கிறார், சாத்தானை விரட்டி அடித்து நம்மை ஆசிவதிக்கிறார்.

மிகவும் மோசமான பிரச்சினைகள் கூட, அதனை இயேசுவோடு இணைத்தால்,  நமக்கு ஆசிர்வாதமாக மாறும்., கிறிஸ்து எப்படி சிலுவையில் துன்ப பட்டாரோ, அதனை போல , நாமும் மற்றவர்களுக்காக துன்பத்தை ஏற்று கொண்டு, இந்த துன்பங்கள் நமக்கு என்ன கற்று கொடுத்ததோ அதனை மற்றவர்களுக்காக அர்ப்பன்னித்து, நாம் செய்யும் பொழுது, அது இறைசெவையாக ஆகி விடுகிறது.  நமது துன்பங்களுக்கு, ஒரு மதிப்பு கிடைக்கிறது. அதன் அர்த்தம் என்ன என்றால்,  நமது மகிழ்ச்சி இரட்டிப்பாக, பல மடங்காகிறது.  
கிறிஸ்துவில்  நாம் மகிழ்ச்சியினால் அர்ச்சிக்கபடுகிறோம். அந்த சந்தோசம் என்றும் நிலையானது. நாமும் அந்த சந்தோசத்தை பெற்று மகிழ்ச்சியோடு, நல்லது நமக்கு நடக்க போகிறது என்ற எண்ணத்துடன் வாழ்கிறோம். கவலைகளும், பயமும், நம்மை விட்டு ஓடிவிடும். அதன் முலம், கிறிஸ்துவின் சேவையை நாம் மகிழ்ச்சி அடைகிறோம். விசுவாசத்தின், கருணையின் கடவுள் முலம், நாம் எழுகிறோம்.
இரண்டாவது வாசகத்தில் கூறப்பட்டது போல, நமது சோதனைகளை வெற்றியாக்க கடவுள் நேரம் எடுத்து கொள்ளும்பொழுது, நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்க, நாம் எப்பொழுதும் விசுவாசத்துடனும், கடவுள் நம் மேல் அக்கறை கொள்ளவில்லை என்ற தயக்கத்துடன் இல்லாமலும், இருக்க வேண்டும். மேலும், நாம் எந்த ஒரு குற்றம் கூறாமாலும் ,நாம் கடவுளை விட நம் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியும் என்ற மனப்பான்மையுடனும் இல்லாமல்   நாம் இருக்க வேண்டும்.
கடவுள் உண்மையாக நம் மேல் அக்கறை கொண்டு, நமது துன்பங்களிலிருந்து, நம்மை மீட்க, அதன் முலம் நாம் ஆசிர்வாதம் பெற, அவர் செயல் புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதனை நாம் புரிந்து கொண்டால், நமக்கு மகிழ்ச்சி தானாக வந்து விடும். இயேசு சொல்வது போல “என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்”
© 2013 by Terry A. Modica