Friday, October 25, 2013

அக்டோபர் 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14


லூக்கா நற்செய்தி
அதிகாரம் 18: 9-14

பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நம் முக்கிய நோக்கம், நாம் எதை நோக்கி நம் செயல்களை செய்கிறோமோ, அவைகள் அன்பினால் அல்ல, மாறாக, நம் சுய நலத்திற்காக என்பதை எடுத்து காட்டபடுகிறது. “தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்
மிகவும் விரைவாகவோ அல்லது சில காலம் தாழ்த்தியோ, அவர்கள் அவர்களது சொந்த பழக்க வழத்தினாலே, தாழ்த்தபட்டுவிடுவார்கள். அவர்களை அருகில் அடிக்கடி பார்ப்பவர்கள் அவர்களை பற்றி உயர்வாக பார்ப்பதில்லை. அதே போல், கண்டிப்பாக கடவுளும் அவர்களை உயர்வாக பார்ப்பதில்லை
இதற்கு மாற்று வழி, நமது அன்பு மற்றவர்களுக்காக காட்டும்பொழுது, நாம் நம்மையே தாழ்த்திகொள்கிறோம். அன்பில்லாத எந்த ஒரு செயலும், நமக்காக நாமே செய்து கொள்ளும் முயற்சியாகும். நாம் செய்வது சரி என்று நாம் நினைத்து கொள்கிறோம். ஆனால் அது சரியல்ல. மற்றவர்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டு , அவர்களுக்காக நல்லது செய்யும்பொழுது, நமது கர்வம், எல்லாம் போய், நாம் தாழ்ச்சி அடைகிறோம். அதன் மூலம் பரிசுத்தமாகிறோம்.

நாம் மற்றவர்கள் மேல் கொண்டுள்ள அன்பினால், நாம் நல்லவர்களாக மாற்றபடுகிறோம்.  நாமாகவே நம்மை நியாயமாக மாற்றிகொள்வது – நம்மை நல்லவனாக மாற்றும். ஆனால், நாம் விரும்பும் செயல்கள் செய்கிற பொழுது, கடவுளுக்காகவும், அல்லது நம் சொந்த நலங்களுக்காகவும், செய்கிறோம். அன்பு தான் எல்லாவற்றிற்கும் முதன்மையானது, அது தான் நல்லதும் கூட, அது தான் மற்றவர்களுக்காக நாம் நல்லது செய்ய தூண்டும். இயேசுவின் உவமையில் உள்ள அர்த்த்த்தை பாருங்கள். நாமும் அவர்களை போலவே சில நேரங்களில்  நடந்து கொள்கிறோம். நீங்கள் பரிசுத்தமாக இருப்பதை விட, சிலர் குறைவாக இருப்பவரை பற்றி நினைத்து கொள்ளுங்கள், அவர் நீங்கள் கோவிலுக்கு செல்வதை விட, குறைவாக செல்பவராக இருக்கலாம், நீங்கள் ஜெபிப்பது போல், அவர்கள் ஜெபிக்காமல் இருக்கலாம். உங்களோட அக்கறைக்கு தகுதியில்லாதவர் ஒருவரை பற்றி நினைத்து கொள்ளுங்கள். யாரை அன்பு செய்ய மிகவும் கஷ்டமோ, அவர்களை பற்றி நினைத்துகொள்ளுங்கள்.


இதற்கு மருந்து, கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்று நாம் நினைத்து அவர்கள் மேல் நாம் அன்பு கொள்ள வேண்டும். அவர்கள் மேல் உள்ள  கடவுளின் அன்போடு, நம் இதையத்தை இனைத்து, அவர்கள் மேல் அக்கறை கொள்ள வேண்டும். கடவுளோடு நாம் இனைவதற்கு மிகவும் உதவிடும் செயல், பாவசங்கீர்த்தனம். அதன் மூலம், நம் பாவங்கள் அனைத்தும் எடுக்கபட்டு, கிறிஸ்துவின்  நல்லவை அனைத்தும், நமக்கு கிடைக்க பெற்று, தேவனின் அருள் நம்மில் நிறைந்து, அவரை போல நாமும் மற்றவர்கள் மேல் அன்பும், அக்கறையும் கொள்வோம்.


© 2013 by Terry A. Modica

Saturday, October 19, 2013

அக்டோபர் 20, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 20, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 – 4:2
Luke 18:1-8

லூக்கா நற்செய்தி

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை

1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
“தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”  என்று இன்றைய நற்செய்தியில் நமக்கு உறுதியளிக்கிறார்.
நம்மை யாராவது நிராகரித்தாலோ, துன்புறுத்தபட்டாலோ, தவறாக நம் மேல் குறை சொன்னாலோ, கடவுள் நம்மை காப்பாற்ற வருவார். மிகவும் விரைவாக வருவார். அவர் விரைவாக வரவில்லையா? அவர் கொடுத்த வாக்குறுதியை மீறினாரா? கடவுள் சில நேரங்களில் மெதுவாக நம் வேண்டுதல்களுக்கு பதில் கூறுவது போல் தோன்றுகிறதா? உங்கள் ப்ரச்சினை முடிய சில  நேரங்களில், பல மாதங்கள் , வருடங்களாக கூட இருக்கும். நீங்கள் எப்பொழுது இயேசுவிடம் கேட்க ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுதே இயேசு உங்கள் அருகில் வந்து , சாத்தானிடமிருந்து உங்களை மீட்க வருகிறார்.

உண்மையான கேள்வி என்ன என்றால் “யேசு எங்கே? “ அல்லது முழுமையாக என்னை ஏன் காப்பாற்றவில்லை? சீக்கிரமே என்னை விடுவிக்கவில்லை? என்றும் நாம் கேட்கலாம். ஆயினும், அதற்கான பதில், இன்றைய நற்செய்தியின் கடைசி வரியில் உள்ளது “ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” அல்லது பயம் நம் மனத்தில் சுத்தி சுத்தி வருகிறதா? அவர் அருகே உள்ளதை பார்க்காமல், அவர் நமக்கு உதவ காத்திருப்பதை அறியாமல்,  நாம் துன்பம் நேர்ந்து விடுமோ என்று பயப்படுகிறோம்

விசுவாசத்துடன் நாம் வாழ்வில்லையென்றால், கவனமில்லாமல், நாமே, நம் பிரச்சினையை பெரிசாக்குகிறோம். கடவுளிடம் உதவி கேட்டு விட்டு, நாம் கவலையோடு இருக்கிறோமோ? கவனமாக இருங்கள், இயேசு உங்கள் அருகில் இருந்து கொண்டு, நம்பிக்கையோடு , விசுவாசத்தோடு இருங்கள் என்று நம்மிடம் கெஞ்சுகிறார்.  நீங்கள் எதிர்கொள்ளூம் தடையை இயேசு எடுக்க வில்லை என்று செயல்குழுந்து இருக்கிறீர்களா? நன்றாக கவனியுங்கள், இயேசு நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் திசையை விட்டு, வேறு திசையில் அவர் பின்னே செல்ல அழைக்கிறார்.

நம் எல்லோருக்குமே, துன்பம் கஷ்டம் உள்ளது. இயேசு உங்களுக்கு எதிராக வேலை செய்யும் சாத்தானை தன் கத்தி கொண்டு சுழற்றுகிறார். இருளை , சாத்தானை உங்களை விட்டு துரத்துகிறார். ஆனால் அவர் கூறும் உண்மையை நாம் ஒதுக்கிவிட்டால், அவர் நமக்கு கொடுக்கும் பாதுகாப்பு வீனாகிவிடும்.

உங்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்கிறார்களா? இயேசுவிடம் நம் கண்களை கொண்டு செல்லாமல், அவர்களையே பார்த்து கொண்டிருந்தால், இயேசு நம்மை 
,  நமக்கு நியாயம் கொடுக்க வரும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம்.
விசுவாசத்தோடு நாம் வாழ்கிற பொழுது, கடவுளின் நியாய தர்மங்களை, ஒவ்வொரு நாளும் நாம் பெறுகிறோம், நமக்கு எதிராக நிகழும் ஒவ்வொரு அநியாயத்திற்கும், நமக்கு பதில் தருவதை நாம் பெற முடியும். அவர் கொடுக்கும் அமைதியையும், சமாதானத்தையும், கஷ்டத்தை தாங்கும் ஆற்றலையும் நம்மால் பெற முடியும்

© 2013 by Terry A. Modica