Saturday, November 26, 2016

நவம்பர் 27, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர்   27, 2016 ஞாயிறு   நற்செய்தி மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Isaiah 2:1-5
Ps 122:1-9
Romans 13:11-14
Matthew 24:37-44
மத்தேயு நற்செய்தி
37நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.

38வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.

39வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும்.

40இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.

41இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

42விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.

43இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

44எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்
(thanks to www.arulvakku.com)

விண்ணகத்திலிருந்து வரும் நம்பிக்கை
இந்த திருவருகை கால முதல் ஞாயிறின் முக்கிய குறிக்கோள் நம்பிக்கை ஆகும். முதல் வாசகத்தில் இசையாஸ் வாசகத்தில் வரும் காலங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும், ஏனெனில், 1) கடவுள் தான் எல்லாவறிற்கும் மேலான அதிகாரம் படைத்தவர் என அங்கீகரிக்கபட்டார் 2) ஆனடவருக்கு கீழ் படிதலே எல்லாவற்றிற்கும் மேலானது.

இந்த எதிர்கால பார்வை இஸ்ரேயலர்களுக்கு நம்பிக்கை தந்தது. இன்று இதனை விண்ணகத்தின் விளக்கமாக பார்த்தால், நமக்கும் மிக பெரிய நம்பிக்கையை தருகிறது. நாம் இறந்த பிறகு, நம் மேல் தண்டனைகள் கிடைக்க கூடும். ஏனெனில் நாம் எப்பொழுதுமே கடவுளின் பாதையில் சென்று கொண்டிருக்கவில்லை.  (உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு செல்ல காரணம் ) , ஆனால், நாம் கடவுளின் ஒளியில் வாழ்வோம் , அங்கே போர் இருக்காது.
இது தான் நம் எதிர்காலம் என்று நமக்கு தெரியும் பொழுது, இங்கு நமக்கு நடக்கும் சோதனைகள், விண்ணகத்திற்கு நாம் செல்ல நம்மை தயார்படுத்தும் வழிகள் ஆகும்.  நிலத்தை உழுது மண்ணை நன்றாக ஆக்கும் கலப்பையை போல இந்த பூமியில் நாம் இருளுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை ஒப்பிடலாம், இந்த போராட்டத்தின் மூலம் நாம் இறையரசிற்கு தேவையான அறுவடையை நாம் மிகுதியாக பெறுவோம். மற்றவர்களுக்காக நாம் துன்பம் ஏற்று கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும்பொழுதும், அந்த இறை சேவை மிக பெரிய மதிப்பை பெறுகிறது .

மெசியா எருசலேமிலிருந்து வருவார் என்று இசையாஸ் சொல்லியிருந்தாலும், நாம் கடவுளின் அதிகாரத்தை ஏற்று கொண்டும், கிறிஸ்துவை போல வாழ நாம் முனைந்தால், எல்லாமே நல்லது நடக்கும் என்று இசையாஸ் கூறுகிறார். ஆனால், சாத்தானுடன் நம் போராட்டாம் இன்னும் முடியவில்லை, இயேசு சாத்தானுடன் மோதி நமக்காக ஜெயித்து விட்டார். நமது நம்பிக்கை , அமைதிக்காக மட்டும் இல்லை, இயேசு நமக்கு என்ன செய்தார் இன்னும் என்ன செய்ய போகிறார் என்பதில் இருக்கிறது. அதனால்,  "அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்"
நற்செய்தி வாசகம், நாம் விழிப்பாயிருக்க  வேண்டும் என்றும் கிறிஸ்துவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது என்றும் ,  அவர் என்று வருவார் நமக்கு தெரியாது என்றும் சொல்கிறது. உங்களில் நிராசையானது எது ? நிராசையும் கவலையும் நாம் கிறிஸ்துவை விட்டு வெளியே வர செய்யும். கிறிஸ்துவை மறக்க செய்யும். மேலும் கிறிஸ்து இந்த வெற்றியை நமக்காக ஏற்கனவே ஜெயித்து விட்டார். என்பதை நம்மை விட்டு மறக்கடிக்க செய்து விடும். கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் எப்போதும் அறிந்து விழிப்போடு இருந்தால் , மேலும் அவரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவரின் வழி சென்றால், நாம் நம்பிக்கையோடு வாழ்வோம். வெறும் ஆசையோடு இல்லாமல்,  உண்மையாகவே வாழ்ந்து காட்டுவோம்.
© 2016 by Terry A. Modica


Friday, November 18, 2016

நவம்பர் 20 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 20 2016  ஞாயிறு  நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசர் பெருவிழா
2 Samuel 5:1-3
Ps 122:1-5
Colossians 1:12-20
Luke 23:35-43
லூக்கா நற்செய்தி
35மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்என்று கேலிசெய்தார்கள்.

36-37படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்என்று எள்ளி நகையாடினர்.
38இவன் யூதரின் அரசன்என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று என்று அவரைப் பழித்துரைத்தான்.
40ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.

41நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!என்று பதிலுரைத்தான்.

42பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்என்றான்.
43அதற்கு இயேசு அவனிடம்
நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசுவோடு சிலுவையில் தொங்கிய இன்னொரு குற்றவாளி நம்மை பிரதிபலிக்கிறார். இயேசு நமது அரசர், மேலும், நித்திய வாழ்வை இரையரசில் அவரோடு நாம் நமது நேரத்தை செலவழிக்க விரும்புகிறோம். இந்த எண்ணத்தோடு நாம் இருந்தால், நாம் இறந்த வுடன் , இயேசுவோடு நாம் இணைவோம் என்பதில் எந்த ஐயம் இல்லை.
இறையரசின் அரசராக  இயேசுவிற்கு யாரை அவரது இறையரசிற்குள் அனுமதிக்க வேண்டும். என்ற அதிகாரம் அவருக்கு . மேலும் இந்த பெரிய வெள்ளி அன்று அவரோடு சிலுவையில் தொங்கிய திருடன் மூலம் , இயேசு "இன்றிலிருந்து என்னோடு வின்னகத்தில் இருப்பாய்!"  என்று சொல்லி, இயேசுவின் அதிகாரத்தை புரிந்து கொண்டவனை ஏற்று கொள்கிறார்.
இயேசுவின் அதிகாரம் என்ன என்பதை பார்ப்போம்: கடைசி இரவு உணவில், இயேசு ஒவ்வொரு சீதர்களின் பாதங்களை கழுவினார், இதன் மூலம் வின்னகத்தின் அரசர், அவரின் அதிகாரத்தை , அந்த விண்ணை சார்ந்தவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் காண்பிப்பார். என்று பார்க்கிறோம்.

அதற்கு அடுத்த நாள், அவர் தங்கத்தினால் ஆன கிரீடம் அணியாமல், முற்களால் ஆனா தலை முடியை அணிந்து கொண்டார்.  ஏனெனில் அவரின் மன்னருக்கான மகிமை இந்த உலகில் இல்லை ஆனால், அவரின் தியாகத்தால், அவரின் அன்பு , தகுதியில்லாதவர்களுக்கு கூட கொடுக்கப்பட்டது.
இயேசுவின் உய்ர்ப்பிற்கு பிறகு, மரணத்தின் அழிவிலிருந்து அவர் மீண்டு வந்தாலும், அவரின் ஐந்து காயங்கள் அப்படியே இருந்தன. இன்று வரைக்கும் இயேசு அந்த காயங்களோடு தான் இருக்கிறார். இது எதை காண்பிக்கிறது என்றால், இயேசு அவர் அதிகாரத்தை , அவரின் சுய நலன்களுக்காக உபயோகித்து கொள்ள வில்லை என்பதை காட்டுகிறது. ஆனால் நமக்காக அவர் அதிகாரத்தை பயன் படுத்தினார். ஆனால் இந்த உலக அரசர்களோ, மிகவும் விலை உயர்ந்த மோதிரத்தை அவர்களின் கையில் அணிந்துள்ளனர்.; அனால் நம் விண்ணக அரசரோ , தியாகத்தின் சின்னங்களை  அணிந்துள்ளார்.

நாம் கிறிஸ்துவோடு இணைந்து, அன்புடன் இறை சேவை செய்யும்பொழுது, நாம் கடவுளின் விண்ணக அரசை சேர்ந்தவர்களாக ஆகிறோம். தாராளாமாக மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பண்பை , அதன் மதிப்பை நாம் புரிந்து கொள்ளும் பொழுது, நம் அன்பிற்கு தகுதி அல்லாதவர்களுக்கு நாம் அன்பினை காட்டும் பொழுதும், தியாகம் செய்யும் பொழுதும், நாம் விண்ணக அரசை சார்ந்தவர்களாக இருக்கிறோம்.

நமது கஷ்டங்களை, சோதனைகளை , தியாகத்தை நாம் இயேசுவிடம் அர்ப்பனிக்கும்  பொழுது , அதற்கு கண்டிப்பாக மதிப்பு கிடைக்கும். இயேசுவின் ஐந்து காயங்களை நாமும் நம் ஆன்மாவில் கொண்டிருப்போம். கண்டிப்பாக இயேசுவோடு விண்ணக அரசில் இணைவோம். ஏற்கனவே நாம் அவரோடு இணைந்துள்ளோம்.

© 2016 by Terry A. Modica