Friday, February 29, 2008

மார்ச் 2 2008 நற்செய்தி , ஞாயிறு மறையுரை

மார்ச் 2 2008 நற்செய்தி , ஞாயிறு மறையுரை:
தவக்கால் 4வது ஞாயிறு


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 9

1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். 2 ' ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா? ' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். 3 அவர் மறுமொழியாக, ' இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். 4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. 5 நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி ' என்றார். 6 இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, 7 ' நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும் ' என்றார். சிலோவாம் என்பதற்கு ' அனுப்பப்பட்டவர் ' என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். 8 அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், ' இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா? ' என்று பேசிக்கொண்டனர். 9 சிலர், ' அவரே ' என்றனர்; வேறு சிலர் ' அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார் ' என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், ' நான்தான் அவன் ' என்றார். 10 அவர்கள், ' உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது? ' என்று அவரிடம் கேட்டார்கள். 11 அவர் அவர்களைப் பார்த்து, ' இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, ' சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும் ' என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது ' என்றார். 12 ' அவர் எங்கே? ' என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், ' எனக்குத் தெரியாது ' என்றார். 13 முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள். 14 இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள். 15 எனவே, ' எப்படிப் பார்வை பெற்றாய்? ' என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், ″ இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது ″ என்றார். 16 பரிசேயருள் சிலர், ' ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது ' என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், ' பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா? ' என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. 17 அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், ' உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்? ' என்று மீண்டும் கேட்டனர். ' அவர் ஓர் இறைவாக்கினர் ' என்றார் பார்வை பெற்றவர். 18 அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை. 19 ' பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது? ' என்று கேட்டார்கள். 20 அவருடைய பெற்றோர் மறுமொழியாக, ' இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான். 21 ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும் ' என்றனர். 22 யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். 23 அதனால் அவருடைய பெற்றோர், ' அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள் ' என்றனர். 24 பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், ' உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும் ' என்றனர். 25 பார்வை பெற்றவர் மறுமொழியாக, ' அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன் ' என்றார். 26 அவர்கள் அவரிடம், ' அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்? ' என்று கேட்டார்கள். 27 அவர் மறுமொழியாக, ' ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ? ' என்று கேட்டார். 28 அவர்கள் அவரைப் பழித்து, ' நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். 29 மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது ' என்றார்கள். 30 அதற்கு அவர் ' இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! 31 பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். 32 பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! 33 இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது ' என்றார். 34 அவர்கள் அவரைப் பார்த்து, ' பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்? ' என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர். 35 யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, ' மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா? ' என்று கேட்டார். 36 அவர் மறுமொழியாக, ' ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன் ' என்றார். 37 இயேசு அவரிடம், ' நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர் ' என்றார். 38 அவர், ' ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன் ' என்று கூறி அவரை வணங்கினார். 39 அப்போது இயேசு, ' தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன் ' என்றார். 40 அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, ' நாங்களுமா பார்வையற்றோர்? ' என்று கேட்டனர். 41 இயேசு அவர்களிடம், ' நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ″ எங்களுக்குக் கண் தெரிகிறது ″ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள் ' என்றார்.

(www.arulvakku.com)

கிறிஸ்துவுக்குள் சென்று, அவரோடு நாம் சேர்ந்து வாழ்வது என்பது ஒரு தொடர் செயலாகும். இன்றைய நற்செய்தியில் வரும் குருடர் வாழ்க்கை. கிறிஸ்துவோடு சேர்ந்த விசுவாச பயணத்திற்கு ஓர் உதாரணமாகும். அந்த குருடர் ஒன்றும் கிறிஸ்துவிடம் செல்லவில்லை, யேசு தான் அவனிடம் வந்தார் என்பதை இந்நற்செய்தி கூறுகிறது. அந்த மனிதனும் உடனே கிறிஸ்துவை பின் செல்லவில்லை. என்ன நடக்கும் என்று பார்த்து விட்டு அதன் பிறகு தான் யேசுவிற்கு கீழ்படிந்தார்.

யேசு நம்மை தேடி வந்த பின் தான், நாம் மணம் மாறுதலுக்கான முயற்சியை ஆரம்பிக்கிறோம். மேலும், அவரை நாம் தொட அனுமதிக்கிறோம். பிறகு, உண்மையை கண்டறிய நம் கண்களை திறக்கிறார். ஆனால், உடனே நாம் இதனை புரிந்து கொள்வதில்லை.

அந்த மனிதரின் அருகில் உள்ளவர்கள், எப்படி உனக்கு பார்வை கிடைத்தது என்று கேட்டார்கள், ஆனால், அவருக்கு யேசு யாரென்றே தெரியவில்லை. அவர் யேசுவை சாதாரன மனிதர் என்றே நினைத்தான். பிறகு, பரிசேயர்கள் அவரை பற்றி பேசியதை கேட்டுதான், யேசுவை பற்றி அதிகம் யோசிக்க ஆரம்பித்தார். மேலும், அதன் பிறகு தான் யூதர்களின் படி அவர் ஒரு இறைவாக்கினர், கடவுளின் தூதர் என்றும் ஒரு முடிவிற்கு அந்த குருடர் வந்தார்.

யேசுவை மெசியாவாக ஏற்று கொள்ளும் எவரையும், யூதர்களின் தொழுகை கூடத்தில் சேர்க்க கூடாது என்று யூதர்கள் பேசிய பிறகும், அவரை மிகவும் கீழ்தரமாக கடிந்து கொண்டபிறகும், அந்த குருடர்க்கு, யூதர்கள் பயப்படுவது போல், யேசுதான் மெசியா என்று எண்ணதொடங்கினார். யூதர்கள் யேசுவை வெறுத்ததால், அந்த கண் தெரியாத மனிதருக்கு, இந்த நிகழ்ச்சியே அவருடைய தெய்வீக கண் திறப்பதற்கு உதவியாக இருந்தது.

இறுதியாக, யேசு அவரை யூதர்களால் பட்ட அவமானத்தையும், பயத்தையும் போக்க அந்த கண் குண்மாக்க பட்ட மனிதரை தேடி போனார். யேசு இப்படி அந்த மனிதர் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகிறாரே என்று அறிந்த பின் தான், அவருக்கு யேசு யாரென்று உண்மையாக தெரிந்து கொள்ள முடிந்தது. மணம் மாறுதல் - நமது தெய்வீக பார்வையை சுத்தபடுத்துதல்- நாம் துண்பபடும்போது நமக்கு கிடைக்கும் அன்பின் மூலம், கடவுள் நமக்கு துணையாக இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் போது மணம் மாறுதல் நடக்கிறது.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
http://www.gnm.org

Friday, February 22, 2008

பிப்ரவரி 24 2008 தவக்கால 3வது ஞாயிறு

பிப்ரவரி 24 2008 தவக்கால 3வது ஞாயிறு
நற்செய்தி& மறையுரை

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 4

5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. 6 அவ்வு+ரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். 7 அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். 8 இயேசு அவரிடம், ' குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் ' என்று கேட்டார். 9 அச்சமாரியப் பெண் அவரிடம், ' நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி? ' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. 10 இயேசு அவரைப் பார்த்து, ' கடவுளுடைய கொடை எது என்பதையும் ' குடிக்கத் தண்ணீர் கொடும் ' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார் ' என்றார். 11 அவர் இயேசுவிடம், ' ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? 12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம் ' என்றார். 13 இயேசு அவரைப் பாhத்து, ' இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். 14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் ' என்றார். 15 அப்பெண் அவரை நோக்கி, ' ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது ' என்றார். 16 இயேசு அவரிடம், ' நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும் ' என்று கூறினார். 17 அப்பெண் அவரைப் பார்த்து, ' எனக்குக் கணவர் இல்லையே ' என்றார். இயேசு அவரிடம், ' எனக்குக் கணவர் இல்லை ' என நீர் சொல்வது சரியே. 18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே ' என்றார். 19 அப்பெண் அவரிடம், ' ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். 20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே ' என்றார். 21 இயேசு அவரிடம், ' அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். 22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. 23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். 24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும் ' என்றார். 25 அப்பெண் அவரிடம், ' கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார் ' என்றார். 26 இயேசு அவரிடம், ' உம்மோடு பேசும் நானே அவர் ' என்றார். 27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ' என்ன வேண்டும்? ' என்றோ, ' அவரோடு என்ன பேசுகிறீர்? ' என்றோ எவரும் கேட்கவில்லை. 28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், 29 ' நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ! ' என்றார். 30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். 31 அதற்கிடையில் சீடர், ' ரபி, உண்ணும் ' என்று வேண்டினர். 32 இயேசு அவர்களிடம், ' நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது ' என்றார். 33 ' யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ ' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 34 இயேசு அவர்களிடம், ' என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. 35 ″ நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை ″ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. 36 அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். 37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். 38 இவ்வாறு ' விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர் ' என்னும் கூற்று உண்மையாயிற்று ' என்றார். 39 ' நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார் ' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வு+ரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். 40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். 41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். 42 அவர்கள் அப்பெண்ணிடம், ' இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம் ' என்றார்கள்.


www.arulvakku.com


நீ எதற்கு தாகமாயிருக்கிறாய்? நமக்கு ஏதாவது முக்கியமானது இல்லாதபோது தாகம் ஏற்படுகிறது. தண்ணீர் நமது உடலுக்கு முக்கிய தேவையானது. நமது உயிர் வாழ்விற்கு இன்றியமையாதது. நமது உடல் நமக்கு தண்ணீர் தேவைபடும்போது நமக்கு தாகத்தை ஏற்படுத்துகிறது.

ஆயினும், நமது பரிசுத்த வாழ்வில் தொடர்ந்து வாழ, நமக்கு தண்ணீர் தேவைபடுகிறது. அது வேறு தண்ணீர். உயிருள்ள நீர். ஞான்ஸ்நாண தண்ணீர், அதுதான், நமது நித்திய வாழ்விற்கு நம்மை தூய்மைபடுத்துகிறது. இந்த தீர்த்தம், நம்மை கிறிஸ்துவில் அபரிதமான வாழ்க்கை வாழ வழி செய்கிறது.

பரிசுத்த ஆவிதான் வாழ்வு கொடுப்பவர். பைபிளில் பரிசுத்த ஆவிக்காக கொடுக்கப்பட்டிருக்கும் அடயாளங்களில் உயிர் கொடுக்கும் நீரும் அடங்கும். அதனால், யேசு அந்த சமாரிய பெண்ணுக்கு, பரிசுத்த ஆவியை அன்பளிப்பாக கொடுக்க விருப்பமுற்றார் என்று நாம் அனுமானிக்கலாம். ஏனெனில் இன்னும் கொஞ்ச நாளில் பரிசுத்த ஆவி இறங்கி வரும் பெந்தகோஸ்தே நெருங்குகிறது.

அந்த பெண்ணுக்கு உண்மை தேவையாயிருந்தது. பரிசுத்த ஆவி தான் உண்மை. மேலும் யேசு அவளுக்கு என்ன தேவையோ அதை கொடுக்க விரும்பினார். அதனால், அவள் மணம் திருந்தி, மீட்பை பெற்று அதனை அவளை சுற்றியுள்ள அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.

நமக்கு தேவையான நீரை குடிக்காத போது, நமக்கு தாகம் எடுக்கிறது. பரிசுத்த ஆன்மீக தாகம் வேறு வேறான நிலைகளில் ஏற்படுகிறது.: தணிமை, நம்பிக்கையின்மை, செயல்குழைந்து போகுதல், பச்சாதப நிலை. இந்த மாதிரியான உணர்வுகள் ஏற்படும்போது, நமக்கு ஆன்மீக தாகம் உண்டாகிறது.

ஏன் நமது தெய்வீக வாழ்வில், ஆன்மீக வாழ்வில் குறையுள்ளது.? ஏனெனில், அந்த சமாரிய பெண்ணை போல, நாமும் பாவிகள் மற்றும், யேசுவின் முழுமையான அன்பு நம் மீது பொழிந்து நாமும் மீட்பு பெற வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, February 16, 2008

பிப்ரவரி 17 2008, நற்செய்தி மறையுரை:

பிப்ரவரி 17 2008, நற்செய்தி & மறையுரை:
தவக்கால 2 வது ஞாயிறு

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 17

1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். 2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். 4 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார். 5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது. 6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். 7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் ' என்றார். 8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. 9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது ' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

thanks to www.arulvakku.com
மறையுரை


இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து கதிரவனை போல ஒளி வெள்ளத்தில் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது. கடவுள் "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று கூறுகிறார். இதனை கேட்கும்போது, இந்த உறுமாறுதல், ஒவ்வொரு முறையும் திருப்பி நடக்கிறது. இதன மூலம் நம் விசுவாசம் இன்னும் அதிகமடைகிறது. எப்படியிருந்தாலும், இப்போது, நாம் தான் உருமாறப்படுகிறோம்.

இந்த தவக்காலத்தில், நமது பாவங்களுக்காக வருத்தப்பட்டு திருந்தும் நேரத்தில், யேசுவின் ஒளி, நமது பாவ இருட்டில், முழுமையாக ஒளிரச் செய்து அவரை நம் உள்ளத்தில் ஏற்று கொள்ளும்போது, நம்மை சுற்றி இருக்கும் நம் சகோதரர்கள் நம்மில் யேசுவை காண்பர். நாமும் யேசுவோடு சேர்ந்து ஒளிர்வோம்.

கிறிஸ்துவின் உருமாறுதலால், நாம் நமது உண்மையான அடையாளத்திற்கு மாற்றபடுகிறோம். நமது உண்மையான அடையாளம் என்ன? நமது உள்ளே உள்ள உண்மையான இருப்பிடம். கடவுளின் பிம்பம் போல உருவாக்கப்பட்டுள்ளது!

மலை உச்சியில் நடந்த அனுபவித்திற்கு பிறகு, யேசு தான் துண்பமும் வேதனையும் உள்ள சேவைக்கு தயாராகிறார். நாம் கிறிஸ்துவின் ஒளியால், உருமாறப்படும்போது, நாமும் நமது மலை உச்சியிலிருந்து வெளியில் வந்து, யேசுவை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். திமோத்தி கூறுவது போல ஒவ்வொரு முறையும் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்போது, நமக்கு பல துன்பங்கள நடக்கலாம், கஷ்டப்படலாம், ஆனால், ஒவ்வொரு கல்வாரிக்கு பிறகும் , ஒரு ஈஸ்டர் உள்ளது என்பது நமக்கு பெரும் பலமாகும்.

முதலில் நாம், மலையில் நம் நேரத்தை செலவிட வேண்டும், அங்கேயே நாம் இருந்து, வேண்டி, "நமக்கு தேவையான சக்தி கடவுளிடமிருந்து வரவேண்டும்" அந்த சக்தியை பெற வேண்டும். அதன் பிறகு, நாம் தயாராகி விட்டொம், நாம் ஊக்குவிக்கபட்டு, நமது சேவையை தொடங்கலாம், அப்போது நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மால் தாங்கிகொள்ள முடியும்.

கடவுள் உன்னை பற்றி என்ன சொல்கிறார் என்று தெரியுமா? கேள். யேசுவை பற்றி என்ன சொன்னார அதையே தான் உனக்கும் சொல்கிறார். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " சில பேர் கேட்கலாம், சிலர் கேடகாமல் போகலாம். ஆனால், நாம் யேசுவோடு சேர்ந்து ஒளிர்வது, இவைகளால் தடைபடாது. யேசு நம்மை அழைத்ததால், அவரின் பரிசுத்த வாழ்வில் சேர்ந்து, நாமும் அவரோடு சேர்ந்து ஒளிர்வோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, February 8, 2008

பிப்ரவரி 10 ஞாயிறு 2007 : நற்செய்தி - மறையுரை

பிப்ரவரி 10 ஞாயிறு 2007 : நற்செய்தி
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 4

1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். 2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். 3 சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான். 4 அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார். 5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 6 ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது. 7 இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார். 8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, 9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது. 10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார். 11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

(thanks to www.arulvakku.com)







- மறையுரை:




நீ சோதனைகளை எப்படி எதிர் கொள்கிறாய்? உங்களுக்கு விடபட்ட தனிப்பட்ட சவாலாக,தவகாலத்தின் முதல் வாரத்தின் நற்செய்தியில் கொடுக்கபடுகிறது. அதனால், நாம் நமது பயனத்தை யேசுவோடு சேர்ந்து ஆரம்பிக்கிறோம். அந்த பயணம், மிக புனிதமான, பரிசுத்தமான இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.

இந்த தவகாலம் முன்னைய தவகாலம் போல அல்ல. கடந்த வருடங்களில், உனக்கு வேறு தேவைகள் இருந்தன, வேறு விதமான புரிதல் இருந்தது. தவக்காலத்தின் பார்வை வேறாக இருந்தது. கடந்த காலங்களிலிருந்து,எவ்வளவோ நடந்திருக்கிறது. இவையெல்லாமே, கடவுள் உனது வாழ்க்கையில் நடத்த போகும் விசயங்களுக்கு தயாரிப்புகளாகும்.

இந்த வருடம் எதில் வெற்றியடைய வேண்டும் என நிணைக்கிறாய்? எதிலிருந்து மீண்டு வர ஆசைபடுகிறாய்? அதையெல்லாம் அடைய, உனது பாதை சிலுவையின் வழி செலுத்தபட்டு, கல்லறைக்குள் சென்று, கடவுளின் ஒளியால் வெளி வந்தால், அவரது அன்பினால், நீ குணமடைந்து, புதிய வாழ்வை பெறுவாய்.

இந்த தவக்காலத்தில், ஒவ்வொரு முறை, நாம் தியாகங்கள் செய்யும்போது, மேலும் நமது துயரங்களை, துன்பங்களை யேசுவின் ஆர்வத்தோடு இணைத்தோமானால், நாம் யேசுவை அவரது சிலுவையோடு பின் செல்கிறோம். மீண்டும் உயிர்த்தெழுகிறோம். இதற்கு, நமது சிலுவைகளை ஏற்று, நாம் அனைத்து செல்ல வேண்டும். கல்வாரி பாதை தான், நம் புதிய வாழ்விற்கு ஒரே வழி அதுதான், வெற்றி வாழ்விற்கும், நீங்கள் ஏங்கி கொண்டிருக்கும் புது அனுபவத்திற்கும் அதுவே சரியான வழி.

உனக்கு ஈஸ்டர், விடுமுறையாகவோ அல்லது, பெரிய விருந்து நாளாகவோ இல்லாமல், அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், நாம் இந்த தவகாலத்தை, 40 நாளும், செய்ய வேண்டிய தியாகத்தையும், விரதம் இருப்பதையும், கோவிலுக்கு செல்வதையும் செய்துவிட்டு இருந்து விட கூடாது. நாம் உயிர்த்தெழுதலின் வெற்றியை, ஆற்றலை அனுபவிக்க வேண்டுமெனில், துக்கத்தின் வலிமையை நாம் உணர்ந்து, நமது பாவங்களிலிருந்து மீண்டு வர வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதனால், நாம் வலிமையற்ற இறப்பை ஒதுக்கி, சுயநலங்களை சாகடிக்கவேண்டும், நமது உலக ஆசைகளுக்க் சாவு மணி அடிக்க வேண்டும். கிறிஸ்துவை போல இல்லாத எதையும் துறக்கவேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm