Friday, January 30, 2015

பிப்ரவரி 1, 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 1, 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் பொதுகால4ம் வாரம்
Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28

மாற்கு நற்செய்தி
தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்
(
லூக் 4:31 - 37)
21அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ 'என்று இயேசு அதனை அதட்டினார்.26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி இயேசுவின் அதிகாரத்தை நமக்கு எடுத்து காட்டுகிறது. நாமும் நமது வாழ்வில், ஏசுவின் அதிகாரம் உள்ளது என்று அறிந்து அதனை ஏற்று கொண்டால் , கடவுளோடு நாமும் சந்தோசமாய் நமது வாழ்வை கொண்டாட முடியும் , நமது கடினமான காலங்களில் கூட .

ஏன்? ஏனெனில் கிறிஸ்துவின் அதிகாராம் தான் முதன்மையானது, எல்லாவற்றிற்கும் மேலானது. இதன் அர்த்தம் என்னவெனில், கிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ் நாம் வைத்த அனைத்தும் கண்டிப்பாக வெற்றியையே தரும். தவறான சூழ்நிலை கூட, தவறானதாக கருதப்படும் நிகழ்ச்சிகள் கூட ஆசிர்வாதமாக மாறும். ஆபத்தானவை கூட வெற்றியை கொடுக்கும். கவலைகள் சந்தோசமாக மாறும். பயன்கள் புதிய வளர்ச்சிக்கு வித்திடும், புதிய அறிவை புதிய அனுபவத்தை கொடுக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறமையை நமக்கு கொடுக்கும்.

எனினும், நாம் கிறிஸ்துவின் அதிகாரத்தை நிராகரித்து, நாமே நமது பிரச்சினைகளுக்கு முடிவேடுப்பதோ , அல்லது நாமாகவே நமது பிரச்சினைகளை விட்டு வெளியே வர துணிந்தால், இன்னும் பிரச்சினைகள் மோசமாக மாறும். போப் பிரான்சிஸ் அவருடைய கட்டுரையில் (64) நாமே அதிகாரத்தை எடுத்து கொண்டால், சந்தோசத்திற்கு பதில், எல்லாமே பல குழப்பங்களை கொடுக்கும். அவர் இவ்வாறு "நாம் இவ்வுலகில், தற்போது, எல்லா செய்திகளும், ஗஗஗இன்டர்நெட் , தொலைகாட்சி முலம் நமக்கு கிடைக்கிறது. - எல்லாமே ஒன்றாக தான் எடுத்து கொள்ளபடுகிறது - அதனால் பல விசயங்களில் எல்லா முடிவுகளும் எடுக்க நமக்கு துணை யாக இருக்கிறது. ஆனால் , நாம் இதற்கு , இந்த சூழ் நிலைகளுக்கு ஏற்ப முதிர்ச்சியான முறையில் நாம் முடிவெடுக்கும் திறனை பதிலாக எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

மகிழ்ச்சியின் பாதை, இயேசுவின் பாத அடிகளை தொடர்வதில் இருக்கிறது. அவரது அதிகாரத்தில் இருந்து நாம் பயன் பெற, சாத்தானின் சோதனையிலிருந்து வெற்றி பெற , மனித வாழ்வில் துன்பத்திலிருந்து வெளியே வர, இயேசுவின் எடுத்து காட்டான வாழ்வை நாமும் பின் தொடர வேண்டும், அவரது போதனைகளுக்கு கீழ் படிதல் வேண்டும். இயேசுவை முழுதும் நம்ப வேண்டும். அவர் வழி தான் சரியான வழி என்று நாம் புரிந்து கொண்டு அதனை தொடர வேண்டும். அந்த வழி மிகவும் கடினமாக இருந்தால் கூட . இதன் அர்த்தம் என்னவெனில், மீட்பின் வெற்றியை , இயேசுவின் சிலுவை மூலம் நாமும் அடைய தயாராக இருக்கிறோம் .

வெற்றிக்கு குறுக்கு வழி ஒன்று கிடையாது, சாத்தானை வெல்ல சுலபமான வழி கிடையாது. இது உண்மையில்லை எனில், இயேசு சிலுவையில் மரணமடைய தேவை இல்லை.
நல்ல செய்தி - நாம் சந்தோசப்பட காரணம் - மிகவும் அன்புள்ள , எல்லா ஆற்றலும் , எல்லா அறிவும் உடைய கடவுள் இயேசுவின் அதிகாரம் நமக்காக வேலை செய்கிறது . இங்கே கேள்வி நாம் வைப்பது : நாம் நம்மை இந்த இயேசுவின் அதிகாரத்திற்கு அர்ப்பணிப்போமா ?


© 2014 by Terry A. Modica

Friday, January 16, 2015

ஜனவரி 18, 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 18, 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொது காலம் இரண்டாம் ஞாயிறு
1 Sam 3:3b-10, 19
Ps 40:2, 4, 7-10
1 Cor 6:13c-15a, 17-20
John 1:35-42


யோவான் நற்செய்தி

முதல் சீடர்களை அழைத்தல்

35மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு,'என்ன தேடுகிறீர்கள்?'என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். 39அவர் அவர்களிடம்,' வந்து பாருங்கள் 'என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.40யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து,'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்'என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் இயேசு சிமோன் இராயப்பரிடம், “என்ன தேடுகிறீர்கள்? “ என்றும் கேட்பது போல நம் அனைவரையும் பார்த்து கேட்கிறார் :
நீங்கள் ஜெபம் செய்யும் பொழுதும், சிலுவையை நோக்கி பார்க்கும் போதும், இயேசுவின் படத்தை பார்க்கும்போதும், நம்மை பார்த்து இயேசு கேட்கிறார்.
"என்ன தேடுகிறீர்கள்? “


இயேசு "வந்து பாருங்கள்!” என்று கூறுகிறார். எதற்காக இப்படி கூறுகிறார்? அவரின் அன்பினால் ? நோயை குனமாக்குவதால்? தெய்வீக ஆற்றலால் நமது ஜெபங்களுக்கு செவி சாய்த்து, நமக்கு வேண்டியதை கொடுப்பதால்? , நாம் என்ன கேட்டாலும், அது நம்மிடத்தில் இல்லாதது தான், ஆனால் அவரிடத்தில் இருக்கிறது.




தந்தை கடவுளின் வாக்குறுதிகள் அனைத்தையும் இயேசு முழுமையாக நிறைவேற்றுகிறார். இயேசு முழுமையான அன்பாக இருக்கிறார், இரக்கத்தை நம்பக்கு தருபராக இருக்கிறார்., நோய்களை குணமாக்கும் இருக்கிறார். நமக்கு தேவையான அனைத்தையும் பெற்று தருபவராக , நமது கவலைகள் அனைத்து போக்குபவராக இருக்கிறார் . அப்புறம்
ஏன் நமக்கு இன்னும் குறைகள் இருக்கிறது ? நம்மிடம் இல்லாதது எது ? ஏன் நம் வாழ்வில் இன்னும் எதையோ இழந்தது மாதிரி இருக்கிறோம் ? ஏன் நமது வேண்டுதல் பதில் கிடைப்பதில்லை

இரயப்பார் இயேசுவை பின் சென்றதற்கு பிறகு , அவரின் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. இதனை கடவுளின் அழைப்பிற்கு சாமுவேலின் பதில்களில் பார்க்கிறோம். பதிலுரை பாடலில் "என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது " என்று பாடுகிறோம்

இயேசுவின் முதன்மையான புதுமைகளை இராயப்பர் நேராக பார்த்தவர், கடவுளின் முழுமையான அன்பை இயேசுவின் கனிவான கண்கள் மூலமாக அனுபவித்தவர், இயேசுவின் குரலில் உள்ள இரக்கத்தையும், இயேசுவின் புன்னகையில் உள்ள மன்னிப்பையும் நேராகவே பார்த்தவர்.


இப்படியெல்லாம் இருந்தும் இராயப்பர் அவருக்கு என்ன தேவையோ , அது கிடைக்கவில்லை, (சில நேரங்களில் எப்படி குழப்பத்துடனும், பயத்துடனும் அவர் இருந்தார் என்பதை நாம் பார்க்கிறோம்) , இறுதியாக, இராயப்பார் , இயேசுவின் அன்பை பகிர , கொடுக்கும் கரங்களாக மாறிய பின்பு , அவருக்கு தேவையானதை கண்டுபிடித்தார் . இயேசுவின் முழுமையை , இயேசு உடலை விட்டு அகன்ற பிறகு தான் கண்டு கொண்டார் . அதன் பிறகு தான் , இயேசுவின் அழைப்பை கிரிசுதுவின் இறைசேவையை தொடர்ந்தார்.

அதே போல தான் நாமும் இருக்கிறோம், இயேசுவின் உண்மையாங்க கண்களை பார்க்கவில்லை, அவரின் குரலை கேட்கவில்லை. நம்மிடம் உள்ளதை பிறரிடம் கொடுக்கும் பொழுது , நமக்கு தேவையானதை கண்டு நாம் பெற்று கொள்கிறோம், ஏன்? ஏனெனில் நமக்கு தேவையானது நம்மிடம் ஏற்கனவே இருக்கிறது என்பதை நாம் கண்டு கொள்கிறோம் !. இது தான் புதுமை " என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;

© 2014 by Terry A. Modica


Friday, January 9, 2015

ஜனவரி 11, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி 11, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா

Isaiah 42:1-4,6-7 or Isaiah 55:1-11
Ps 29:1-4,9-10 or Isaiah 12:2-6
Acts 10:34-38 or 1 John 5:1-9
Mark 1:7-11

மாற்கு நற்செய்தி

 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(
மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)


ஏன் இயேசு ஞானஸ்நானம் பெற்று கொண்டார்? அவர் பாவங்கள் இல்லாதவர். அதற்காக இயேசு ஏதாவது பண்ண வேண்டுமா ? சிலுவையில் மரணமடைந்து நாம் பாவங்களை வென்று நம்மை நிலை வாழ்விற்கு அழைத்து சென்றிருக்கலாமே ? அதனையும் தாண்டி இயேசுவிற்கு இன்னும் இருந்தது ?

இயேசு பாவிகளோடு தன்னை இணைத்து கொண்டார். முதலில் அவர் தன்னை தாழ்மை படுத்தி கொண்டு , நம்மில் ஒருவரானார். மனிதனாக இருந்தார், நமக்கு ஒவ்வொரு நாளும் என்ன தேவையோ அதே தேவைகளோடு வாழ்ந்தார். பிறகு, நாம் ஞானஸ்நானம் பெறுவது போல , இயேசுவும் தன்னை அதற்கு உட்படுத்தினார் அந்த தண்ணீரில் நம்மை போலவே வந்து நின்றார். அதிலிருந்து நம்மை புதிய வாழ்விற்கு, பரிசுத்த வாழ்விற்கு , நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார்.

இயேசு செய்யும் ஒவ்வொரு செயலும், நமக்கு முன்மாதிரியாக செய்கிறார். நாம் யார் என்பதை நமக்கு காட்டுகிறார்: தந்தை கடவுள் நம்மை அவரின் குழந்தைகளாக உருவாக்கினார். இயேசு ஞானஸ்நானம் பெற்ற பொழுது , பரிசுத்த ஆவின் அவர் மேல் இறங்கி , தந்தை கடவுள் , "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் " என்று கூறுகிறார் .


பரிசுத்த ஆவி உங்கள் மேலும் இறங்கினார், தந்தை கடவுள் : “
, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் " என்று கூறுகிறார் .

திருமுழுக்கு தண்ணீர் கடவுளின் கருவறையாக இருக்கிறது, அதிலிருந்து நாம் மீண்டும் தந்தை கடவுளின் குடும்பத்தில் பிறக்கிறோம். அவரின் இறையர்சிற்காக இறைசேவை செய்ய பிறக்கிறோம். தீர்த்த தண்ணீரின் முலம் நாம் ஒவ்வொரு முறையும் சிலுவை நம் நெற்றியில் இட்டு கொள்ளும்பொழுது நமது ஞானஸ்நானத்தை புதுபித்து கொள்கிறோம் .

யோர்தான் ஆற்றில், இயேசு சாதாராண மனிதனாக வளர்ந்த அவர்,இறையரசின் இறைசேவைக்காக மீண்டும் இறைவாழ்க்காக பிறந்தார். திருமுழுக்கு நமக்கும் இதனையே செய்கிறது. நீங்கள் அதற்கு முன்னர் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டுமா , அதன் மூலம் நாமும் தந்தை கடவுள் எப்படி பரிசுத்தமாக படைத்தாரோ அதே போல தெய்வீக பரிசுத்தமாக , இறைசேவைக்காக மீண்டும் பிறக்கிறோம்.


திருச்சபையின் சாதாராண காலத்தை, நம் திருமுழுக்கை மீண்டும் புதுபித்து கொண்டு தொடங்குவோம். அதன் முலம் நாம் கிறிஸ்துவின் பரிசுத்த வாழ்வை பின் தொடர்ந்து , அவரின் இறைசேவையை தொடர மீண்டும் பிறக்கிறோம்.

சாத்தானை விட்டு விடுகிறீர்களா?
சாத்தானின் செயல்களை புறந் தள்ளுவீர்களா?
சாத்தானின் பொய் வாக்குறுதிகளை ஒதுக்கி தள்ளுவீர்களா ?

கடவுளை நம்புகிறீர்களா ?
தந்தை கடவுள், இந்த உலகை படைத்தவரை நம்புகிறீர்களா


இயேசு கிறிஸ்துவை நம்புகிறிர்களா? கடவுளின் ஒரே மகன், நம் கடவுள், கன்னி மரியாளிடமிரிந்து பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார் , கல்லறையில் அடக்கம் செய்யபட்டார், மரணத்திலிருந்து உயிர்த்து எழுந்தார். தந்தையின் வலது பக்கத்தில் அமர்ந்து இருக்கிறார்.
பரிசுத்த ஆவியை நம்புகிறிர்களா ? பரிசத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறிர்களா? புனிதர்களை , பாவ மன்னிப்பை, சரீர உத்தானத்தை , நித்தியவாழ்வை நம்புகிறிர்களா?

அன்பு தந்தை கடவுளே, நான் பாவி, சில நேரங்களில் உங்களை என் வாழ்வின் முதல்வனாக வைப்பதில்லை, என்னை மன்னியும். என்னை மாற்றும், என்னை புதுபித்து உன் பிள்ளையாக மாற்றும். இதனை என் வாழ்வில் காட்ட, எனது வாழ்வு முழுதும் நியே என் கடவுளாக இருக்க வேண்டும். இயேசு எவ்வாறு அவரின் வாழ்வை தந்தை கடவுளின் கைகளில் ஒப்படைத்தாரோ, அதே போல, நானும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். யோவானிடம் இயேசு எப்படி தன்னை புதுபித்து கொண்டாரோ , அதே போல என்னையும் புதுபித்து, இறைசேவை செய்ய என்னை ஆசிர்வதியும்.
இவ்வாறு கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்.

மேலும் கடவுள் உங்களை நோக்கி இவ்வாறு சொல்வார்:
"என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் "

© 2014 by Terry A. Modica