Friday, June 24, 2011

ஜூன் 26, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 26, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
இயேசுவின் திரு உடல் , திரு இரத்த பெருவிழா

Deut 8:2-3, 14b-16a
Psalm 147:12-15, 19-20
1 Cor 10:16-17
John 6:51-58


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 6



மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறில், நாம் கடவுளின் திரு உடலும், திரு இரத்தமும் திருவிழாவை கொண்டாடுகிறோம். ஏனெனில் இயேசு கிறிஸ்து உண்மையாகவே திவ்ய நற்கருணையில் இருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோம், விசுவசிக்கிறோம்.


முதல் வாசகத்தில், தந்தை கடவுள் எப்பொழுதுமே, நமது கடினமான காலங்களில் , பாலைவனத்தில், அவர் தண்ணீரும், உணவும் தந்தது போல, நமக்கும் கொடுப்பார் என்பதை பார்க்கிறோம். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும், சோதனை காலங்களிலும் கூட , இஸ்ரேயலருக்கு செய்தது போல, கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னம் மூலம், நமக்கு தேவையானவற்றை தந்தை கடவுள் கொடுக்கிறார். கிறிஸ்து நற்கருணையில் மட்டுமல்ல, பரிசுத்த ஆவியின் மூலமும் நம்மிடம் வருகிறார். பரிசுத்த ஆவியானவர், நமது ஞானஸ்நாணத்தின் மூலம் நம்மில் வந்து தங்கி நம்மை வழி நடத்தியும், நமது பரிசுத்த வாழ்வையும் வளரச் செய்கிறார்.


நற்செய்தி வாசகம், திவ்ய நற்கருணை வெறும் உணவும், திராட்சை ரசமும் அல்ல, உண்மையாகவே கிறிஸ்து தான் என்று சொல்கிறது. இந்த உணவும், இரசமும் நமக்கு எப்படி பாம்பும், தேளும், நீரும் இல்லாத பாலைவனத்தில் நமக்கு உதவப்போகிறது. இயேசு உண்மையாகவே நமது தாகத்தை தீர்க்கிறார் மேலும், நமது பசியை நீக்குகிறார். நாம் அவரை முழுமையாகவே ஏற்றுகொள்வதை போல, அவரும் நம்மை முழுதுமாக எற்றுகொள்கிறார். நாம் அவரை உள்ளிழுப்பது போல, அவரும் நம்மை அவருள் இழுத்து கொள்கிறார். இந்த இனைப்பில், நமது சோதனைகளில் வெற்றியடைகிறோம்.


இரண்டாவது வாசகம், திவ்ய நற்கருணை நாம் இயேசுவோடு இனைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு ,இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்கு தேவையானதை இறைவன் கொடுக்கிறார். இந்த இனைப்பில், எதுவெல்லாம் உயிர்ப்புள்ளதோ, அதெல்லாம் உயிர்ப்புடன் இருக்கும், எல்லா திறமைகளும், அன்பளிப்புகளும், பகிர்ந்து கொள்ளப்படுகிற பொழுது , யாரும் குறையுடன் இருப்பதில்லை. மேலும், இந்த இனைப்பில், இயேசு நமக்கு உறுதியளித்தது போல, நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாக கிடைக்க விருக்கிறது.


© 2011 by Terry A. Modica

Friday, June 17, 2011

ஜூன் 19, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 19, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா

Ex 34:4b-6, 8-9
Dan 3:52-56
2 Cor 13:11-13
John 3:16-18

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 3




16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)

பெந்தகொஸ்தே ஞாயிறில் நாம் பரிசுத்த ஆவி விழ கொண்டாடுகிறோம், அதன் அடுத்த ஞாயிறில், நாம் மூவொரு கடவுள் விழவை கொண்டாடுகிறோம்.

முதல் வாசகம் தந்தை இறைவன் இரக்கமும் பரிவும் கொண்டவர் என்றும், எப்படி அவர் இஸ்ரேயல் நாட்டை தந்தை போல காத்தார் என்பதையும் நமக்கு எடுத்து காட்டுகிறது. அவர் "இரக்கமும், பரிவும், கோபம் கொள்ள மிக அதிக நேரமும், நம்பிக்கையும் " கொண்டவர் என்பதை பார்க்கிறோம். -- மிகச் சரியான தந்தை -- . அவரை இப்படி பார்ப்பதில் நமக்கு மிகவும் கடினமாக இருந்தால், நமது ஆண்மாவிற்கு மருந்திட வேண்டும். நமது இவ்வுலக தந்தையிடமிருந்து, கடவுள் தந்தையை முழுமனதுடன் பிரித்து பார்க்க வேண்டும்.



இரண்டாவது வாசகம் மூன்று கடவுளையும் நமக்கு காட்டுகிறது:, இயேசுவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் நட்புறவும் நம்மோடு இருப்பதாக. இதோடு, இதனாலும், மகிழ்ச்சியாகவும், நல்ல நடத்தையோடும், மன ஒற்றுமையோடும், அமைதியோடும் நாம் வாழவேண்டும்.



இதையே மாறாக சொல்வதானால், நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து மரணத்தை வெற்றி கொண்டார். நாம் பாவங்களை எதிர்த்து செல்ல நமக்கு தேவையான அருளை கொடுக்கிறார், மேலும் தந்தை கடவுளின் அன்பையும் கொடுத்து, நாம் ஒருவரையொருவர் அன்பு செய்ய உதவி செய்கிறார். மேலும் தூய ஆவியை கொடுத்து, நாம் பரிசுத்த கிறிஸ்தவர்களாக தொடர்ந்து வாழ உதவி செய்கிறார்.


நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பின் ஆழத்தை நமக்கு சொல்கிறது. அவர் நமது பாவங்களுக்காக தீர்ப்பளிக்க வரவில்லை, மாறாக, அவர் தமது மகனை கொடுத்து தீர்ப்பிலிருந்து நம்மை காப்பாற்றுகிறார். நமது பாவங்கள் நம்மை இவ்வுலக மரணத்திற்கு இட்டு செல்கிறது, ஆனால், இயேசு, நம் பாவங்களை எடுத்து கொண்டு, நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார். ஆனால், நாம் அதற்கு விருப்ப பட வேண்டும். !


© 2011 by Terry A. Modica

Saturday, June 11, 2011

ஜுன் 12, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜுன் 12, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு

Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13
John 20:19-23

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 20




இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


"தந்தையே உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பித்தருளும்." என்று இன்றைய வாசகத்தின் பதிலுரையில், நாம் ஜெபிக்கிறோம். இதனால் தான், திருச்சபை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

பரிசுத்த ஆவியின் துனையின்றி, கிறிஸ்தவம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தழைத்து வளர்ந்திருக்க வாய்ப்பில்லை.

கிறிஸ்துவின் ஆவியின் துனையின்றி, நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும் இவ்வுலகில் இப்போது கிறிஸ்துவாக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மை என்ன செய்ய சொன்னாரோ அதனை செய்ய நம்மால் முடியாது.


பரிசுத்த ஆவியின் ஞாயிறு திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறது, அதே போல, நமக்கு இது நமது ஆண்மீக வாழ்விற்கு பிறந்த நாளாகும். அது என்னவெனில், இந்த திருச்சபையின் உறுப்பினாராக, நாம் குழுவாக எல்லோரும் இனைந்து , நமது ஞானஸ்நாணம் நமது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை குறித்தும், உறுதிபூசுதலில், ஆயர், ஞானஸ்நாணத்தில், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கியதை உறுதி படுத்தியும் இவ்விழாவை கொண்டாடுகிறோம்.


ஞான்ஸநாணத்தின் மூலமும்,உறுதி பூசுதலின் மூலமும், நாம் பெற்ற பரிசுத்த ஆவியின் திருவிழா, நாம் கடவுளின் ஆற்றலை பெற்று , பாவங்களை விட்டு நம்மால் வெளியே வரமுடியும் என்பதை இந்த பெந்த கோஸ்தே திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நம்மை சுற்றியுள்ள உலகை நம்மால் மாற்ற முடியும் என்பதையும் இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது. கடவுள் எப்படி இவ்வுலகின் முகத்தை மாற்ற போகிறார்? . நம் மூலமாக!, முதலில், தந்தை கடவுள், இயேசுவிற்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, இவ்வுலகில் இயேசுவிற்கு கொடுக்க பட்ட அழைப்பை அவர் செய்து முடிக்க உதவினார். இப்போது, தந்தை கடவுள், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கி, யேசு விட்ட இடத்திலிருந்து, இப்பூமியை புதுபிக்க, நம்மை தொடர செய்துள்ளார்.

இறைசேவை செய்யவோ, அல்லது தீங்கிற்கு எதிராக , நியாயத்தை பேசவோ, உங்களுக்கு தகுதி குறைவாக உள்ளது என நீங்கள் நினைத்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருப்பதே போதுமானது. பரிசுத்த ஆவியோடு உள்ள தொடர்பில், முன்னேறி செல்லுங்கள். !

© 2011 by Terry A. Modica

Saturday, June 4, 2011

ஜூன் 5 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 5 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறின் 7ம் ஞாயிறு



யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 17


இயேசுவின் வேண்டல்
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.


(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் எல்லா வாசகங்களும் நமக்கு சந்தோசத்தை கொடுப்பவை, ஆனால் இன்றைய பதிலுரை பாடல், வாசகங்களின் ஒருமித்த கருத்தை நமக்கு கூறுகிறது. "
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் ."
இந்த வசனத்தை நமது சுவரில் மாட்டி வைத்திருக்கலாம், நமது மேஜையில் இருக்கலாம், எல்லோருக்கும் பிடித்தமான ஒரு வசனம். ஏனெனில், நாம் இருளிலிலும், நம்பிக்கையில்லாமலும் இருக்கும்பொழுது, நம்மை இந்த வசனம் தான் தூக்கிவிடுகிறது. அல்லேலூயா!.



பல வருடங்களுக்கு முன்பு, என்னோடு வாழ்வின் முக்கியமான வசனமாக ஆனது. அதனை ஒரு போட்டாவாக தயார் செய்து எனது மேஜையில் வைத்துள்ளேன். http://gnm.org/RandomQuotes/inspire102.htm .எனக்கு மன சோர்வாக இருக்கும்பொழுது அதனை பார்த்து கொள்வேன். கடவுளின் அனைத்து வாக்குறுதிகளும், அவர் நிறைவேற்றுவார் என்பதை நாம் நம்புகிறேன். நான் எதற்காக வேண்டினேனோ அவை என்ன வந்து சேரவும், கடவுளின் நல்ல பலன்கள் நம்மை வந்து சேர , பல காலங்கள் ஆகும். இன்னும் பல நேரங்களில், முழுமையாக வந்தடையாமல் இருக்கும். ஆனால் இந்த வசனம் கடவுள் மேல் நான் கொண்ட விசுவாசத்தை இன்னும் வளர்க்கும்.





இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு கடவுள் இவ்வுலகில் அவர் காட்டிய மாட்சிமையை எடுத்து கூறுகிறார். இயேசு எப்படி அவரை பின் செல்பவர்கள், இயேசுவின் மேல் விசுவாசமும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பதை, அவர்களை பாராட்டி கூறுகிறார். நாம் அக்கறை கொண்டுள்ள பலர், நாம் சொல்வதை கேட்டு , நம்மில் நம்பிக்கை வைத்து நம்மை முழுதுமாக அவர்கள் ஏற்று கொள்ளும்பொழுது, நாம் எப்படி சந்தோசப்படுகிறோம்.



இப்படி யாராவது உங்கள் அன்பை, இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தை நிராகரித்தால் , நீங்கள் இயேசுவிடம் சென்று அந்த நிராகரித்த அன்பை நாம் இயேசுவிடம் கொடுபோம். நற்செய்தியில் சொல்லியிருப்பது போல, இயேசுவின் வார்த்தைகளை நாம் கேட்டு, அவர் தந்தை கடவுளிடமிருந்து தான் வந்தார் என்பதை நாம் ஏற்று கொள்கிறோம். அதன் மூலம் கடவுளின் திட்டத்தில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். இயேசு உங்களுக்காக வேண்டிகொள்கிறார். கூடிய விரைவில், நல்ல விசயங்களை , ஆண்டவரின் நலன்களை இந்த பூமியில் கான்பீர்கள்

© 2011 by Terry A. Modica