Saturday, October 25, 2014

அக்டோபர் 26, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 26, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Exodus 22:20-26
Psalm 18:2-4, 47, 51
1 Thessalonians 1:5c-10
Matthew 22:34-40


முதன்மையான கட்டளை
(
மாற் 12:28 - 34; லூக் 10:25 - 28)
34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார்.37 அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.39 ' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன என்று பதிலளித்தார்.
(thanks to www.arulvakku.com)

ன்றைய நற்செய்தி, நாம் நம்மையும் மற்றவர்களையும் அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்ய முடியாது என்றும், ஆனால் கடவுள் தான் முதலில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

நமது முழு இதயத்தோடும், உள்ளத்தோடும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், நாமால் கடவுளை அன்பு செய்ய முடியவில்லை என்றால், நாம் நமது அதிக நேரத்தை , மற்றவர்களுக்காகவும் நமது சொந்த நலனுக்காகவும் செலவிடுகிறோம் என்று அர்த்தம்

கண்டிப்பாக நாம் மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களையும் அன்பு செய்ய வேண்டும் . நமது சொந்த நலனுக்காகவும் நாம் நேரம் செலவிட வேண்டும். அதனால், நாம் நம்மை அன்பு செய்வது போல மற்றவர்களையும் அன்பு செய்ய இயலும். நமது சொந்த தேவைகளை நிறைவேற்றுவது நமது கடமை. அதன் மூலம் தான், நாம் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடியும். - போதுமான ஆற்றல், உற்சாகம், இறக்கம், பொறுமை நமக்கு தேவை. ஆம் நமக்கு தேவையானவர்றிலே நாம் நேரம் செலவழித்தால், மற்றவர்களிடம் நாம் செய்யவேண்டிய கடமையை விட்டு விடுவோம் , அவ்வாறாக நாம் அவர்கள் தேவையை நிராகரிக்கிறோம்

தற்போது , நமக்கு ஒரு கேள்வி எழும்: எதனை முதற் கடமையாக செய்ய வேண்டும் ? இதனையே வேறு கேள்வியாக சொன்னால், எவ்வளவு நேரம் தனியாக கடவுளோடு நேரம் செலவிடுவது? நமக்காக எவ்வவளவு நேரம் செலவிடுவது ? மற்றவர்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுவது ? எந்த அளவிற்கு அவர்களிடம் பகிர்ந்து கொள்வது? எந்த மாரியான தியாகம் செய்வது ?

ஆச்சர்யமாக, நாம் கடவுளிடம் முதல் மற்றும் அதிக நேரம் செலவிடுவதால், அதனையே முதல் முயற்சியாக எடுத்து கொண்டால், அதற்கு முதலிடம் கொடுத்தால், நமது வாழ்க்கையில் சரியான சம பங்கிடு கிடைத்து விடும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தெரிந்து விடும். தெய்விக உறவு தான் நம் காயங்களை ஆற்றி நமக்கு தேவையான விசயங்களை கொடுக்கும். தெய்வீக உறவு தான், மற்றவர்களை அன்பு செய்யும் ஆற்றலை கொடுக்கும் கடவுளோடு எப்பொழுதுமே தனியாக இருந்தால் தான், அவரோடும் தொடர்பில் இருக்க முடியும் என்ற நினைப்பு தேவையில்லாதது .

கடவுள் மேல் முழுதும் நம்பிக்கை கொண்டு , அதையே முதல் முக்கியத்துவமாக நாம் எடுத்து கொண்டால், நாம் மற்றவர்கள் மேல் அன்பு செய்ய முடியும் மற்றும் நம்மையே நாம் அன்பு செய்ய முடியும். வழிகாட்டுவதற்கும் , ஆற்றலுக்கும், கடவுள் பக்கம் திரும்பினால், நமது முழு மனதோடும், ஆன்மாவோடும், உள்ளத்தோடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடி துளியும், என்ன நடந்தாலும் கடவுளோடு நாம் அவர் துணை வேண்டி இருந்தால், நமக்கு எல்லாம் கிடைக்கும்.

© 2014 by Terry A. Modica