Friday, January 19, 2018

ஜனவரி 20 2018 ஞாயிறு நற்செய்தி

ஜனவரி  20 2018 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 3ம் ஞாயிறு

Jonah 3:1-5,10
Ps 25:4-9
1 Cor 7:29-31
Mark 1:14-20

மாற்கு நற்செய்தி

2.
இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
கலிலேயாவில் இயேசு பணி தொடங்குதல்
(மத் 4:12-17; லூக் 4:14-15)
14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.

15
காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்
 என்று அவர் கூறினார்.
முதல் சீடர்களை அழைத்தல்
(மத் 4:18-22; லூக் 5:1-11)
16அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.

17இயேசு அவர்களைப் பார்த்து
என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்
 என்றார்.

18உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
19பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

20உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)

இந்த நேரம் சரியான நேரம்

இன்றைய நற்செய்தி, நம்மை முழுமையாக கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறது.  "காலம் நிறைவேறிவிட்டது"  -- 2000 வருடங்களுக்கு முன் அல்ல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அல்ல, இப்பொழுது தான் உங்களுக்கு இயேசு தேவை ஆக இருக்கிறார்.

"இறையாட்சி நமது கைகளில்"  -- கடவுளிடமிருந்து உங்களுக்கு என்ன தேவையோ , அது இங்கே  , உங்கள் கைகளில், உங்களுக்காக இருக்கிறது.

"மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்!" என்றால், "என்ன பின் செல்லுங்கள், என்னிடமிருந்து கற்று கொள்ளுங்கள், அதன் மூலம் என்னை போல மாறுவீர்கள்" என்று அர்த்தம். முதன் முதல் சீடர்களுக்கு , அவர்களிடமிருந்த அனைத்தையும் விட்டு விட்டு , அவர்களின் முழு நேரத்தையும் இயேசுவோடு செலவிட்டு, அவர்களின் தனிப்பட்ட முழு வாழ்வும் இயேசுவோடு இருந்தது.  அதே தான் இப்போது நமக்கும். நமது சொந்த நோக்கங்களை தள்ளி வைத்து விட்டு ,இயேசுவோடு அதிக நேரம் செலவழித்து , அவர் நம்மை எங்கே அழைத்து செல்கிறாரோ அங்கே அவரோடு செல்வது.


இன்றைய நாகரீக உலகத்தில், நாம் யேசுவை நம்புவதை விட, பல கருவிகளையும் தொழில்  நுட்பத்தையும் நம்பி இருக்கிறோம். நம்மில் பலர், செல்போன் இல்லாமல் ஓய்விற்கு கூட செல்ல முடியாது. எப்படியோ இதற்கு ஒரு முடிவு காட்ட நாம் முயல வேண்டும். திருச்சபையின் சமூக நீதிக்கான ஒரு போதனை: ஞாயிறு அன்று நாம் ஒய்வு எடுத்து, அலுவல் வேலைகளை தள்ளி வைத்து விட்டு, இயேசுவோடு அதிக நேரம் செலவழித்து, நம்மையே மீண்டும் புதுபித்து கொண்டு, இன்னும் ஆற்றலை பெருக்கி  கொண்டு செல்ல வேண்டும் என சொல்கிறது.

துரதிஷ்டமாக , இயேசு நம் வீட்டு வாயில் வழியாக வந்து, நமது காலண்டரில்,  எப்பொழுது நாம் "இயேசுவோடு ஒய்வு எடுக்கும் நாள்" என்று குறியீடு கொடுக்க முடியாது. ஒவ்வொரு கணத்திலும், இயேசுவின் குறியீடுகளை நாம் உணர்ந்து அறிந்து , அதன் படி பின் செல்ல வேண்டும். இறையாட்சியை இந்த உலகில் நாம் அனுபவிக்க, இயேசுவை பின் செல்ல , நம்மோடு ஒட்டியிருக்கும் பல விசயங்களை விட்டு விட்டு , இயேசுவின் வழியை பின் பற்றி வாழ நாம் கற்று கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஆச்சரியமளிக்கும் வழியையும் நமக்கு காண்பிப்பார்.



© 2018 by Terry A. Modica