Saturday, January 28, 2017

ஜனவரி 29, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 29, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு

Zephaniah 2:3; 3:12-13
Ps 146:6-10 (with Matthew 5:3)
1 Corinthians 1:26-31
Matthew 5:1-12a

மத்தேயு நற்செய்தி

மலைப்பொழிவு
1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.

2அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
பேறுபெற்றோர்
(லூக் 6:20 - 23)
3ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4துயருறுவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.✠a
5கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை
உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.⁕✠
6நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் நிறைவுபெறுவர்.
7இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
8தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
9அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள்
கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
10நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்
பேறு பெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்குரியது.
11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!

12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
(thanks to www.arulvakku.com)
பேருபெருதலில்  புனிதத்தை தேடி கண்டு கொள்வது
இன்றைய நற்செய்தியில், நம்மில் உள்ள புனிதத்துவத்தை நாம் பார்க்கிறோம். மத்தேயு 5:1-12 , இயேசுவை போல் வாழ்பவர்கள் எப்படி புனிதமாகவும் பேரு பெற் றோருமாகவும் இருக்க முடியும் என்று விளக்குகிறது. முதல்  நான்கு வசனங்கள், கடவுளுடன் நம் நட்பை , தொடர்பை பற்றி கூறுகிறது; கடைசி நான்கு வசனங்கள்,நாம் மற்றவர்களோடு கொண்ட தொடர்பை பற்றி கூறுகிறது.
நாமே நம்மை புனிதர் என்று எப்படி கூறி கொள்வது? நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் புனிதர் தான், நீங்கள் எவ்வளவு குறை உள்ளவர்களாக இருந்தாலும், நீங்கள் புனிதர் தான், கடவுள் உங்கள் ஞானஸ்தானத்தில்  உங்களை புனித படுத்தி உள்ளார். இயேசு சிலுவையில் உங்களுக்காக பாடுபட்டுள்ளார், அதற்கு அவருக்கு நன்றி கூறுங்கள். அதன் மூலம் உங்களை இயேசு ஆசிர்வதித்துள்ளார். மேலும், நீங்கள் இயேசுவை அன்பு செய்கிறீர்கள், அவரும் உங்களை அன்பு செய்கிறார்
கடவுள் ஆசிர்வதிக்கும் அனைத்தும் பரிசுத்தமாக்கபடுகிறது.! அதனால், நற்செய்தியில் வருவது போல வாழ்பவர்கள்(இயேசுவும் அப்படி தான் வாழ்கிறார்) , கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு, புனிதர் என்று அழைக்கபடுகிறார். எழ்மையானோர், கடவுளின் அன்பை அவர்கள் தேடுகிறார்கள், துக்கத்தில் இருப்பவர்கள் பரிசுத்த ஆவியிடம் ஆறுதல் தேடுகின்றனர்.  அடக்கத்துடன் இருப்பவர்கள், , நீதிக்காக போராடுவார்கள், ஏனெனில், அவர்கள் கடவுளை அன்பு செய்கின்றனர். ஒவ்வொரு வரியாக தியானித்து, அதில் உங்கள் புனிதத்துவத்தை பாருங்கள், மேலும், எந்த காரணத்தினால், உங்கள் புனிதத்துவம் தடுக்கபடுகிறது என்று பார்த்து , இயேசுவை போல வாழ முன்னேறுங்கள்.
திருச்சபை புனிதர்களை அர்சித்து அவர்களுக்கு புனிதர் பட்டம் கொடுக்கிறது. அதன் முலம் அவர்கள் நமக்கு முன் மாதிரியாக இருக்கிறார்கள். அவர்களின் புனிதத்தை நாம் இன்னும் அடையவில்ல என்றாலும் கூட, நாமும் அதே புனிதர்களின் சமூகத்தில் இருக்கிறோம். கிறிஸ்துவை பின்பற்றி , மோட்சத்திற்கு செல்லும் அனைவருமே புனிதர்கள் தான், உததரிக்கிற ஸ்தலத்திற்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் , புனிதர்கள் தான். நாம் புனிதத்தை நோக்கி முன்னேற, புனிதர்களிடம் உதவி கேட்கலாம், அவர்களும் நமக்கு வழிகாட்டுவார்கள்.
© 2017 by Terry A. Modica

Friday, January 20, 2017

ஜனவரி 22, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 22, 2017  ஞாயிறு  நற்செய்தி மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Corinthians 1:10-13, 17
Matthew 4:12-23

மத்தேயு  நற்செய்தி
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

13அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.

14இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:
15செபுலோன் நாடே! நப்தலி நாடே!
பெருங்கடல் வழிப் பகுதியே!
யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே!
பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!
16காரிருளில் இருந்த மக்கள்
பேரொளியைக் கண்டார்கள்.
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்
குடியிருப்போர் மேல்
சுடரொளி உதித்துள்ளது.
17அதுமுதல் இயேசு
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது
 எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
முதல் சீடர்களை அழைத்தல்
(மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.

19இயேசு அவர்களைப் பார்த்து, 
என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்
 என்றார்.

20உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
21அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.

22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(லூக் 6:17 - 19)
23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்
(thanks to www.arulvakku.com)
இருளில் வாழ்பவர்களுக்கு உதவி செய்தல்
உங்களை யார் தொந்தரவு செய்கிறார்கள்? இன்றைய ஞாயிறின்  நற்செய்தியில், இசையாஸ் இறைவாக்கு நிறைவேறியதை நாம் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவினால் தான், உங்களுக்கு தெரிந்தவர்கள், இருளில் இருப்பவர்கள், ஒளியை பார்த்து  குணமடைகிறார்கள். யாரெல்லாம் தன பாவ வாழ்வில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார்கள்? சாவின் அழிவில் இருப்பவர்கள் , அதன் நிழலில் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.  பாவ வாழ்வில் இருந்து நான் நகரமாட்டேன் என்று இன்னும் உறுதியாக இருப்பது யார்? அதனால் உங்களுக்கு அதிக கவலையாக இருக்கிறது.
உங்களின் தொடர்ந்த ஜெபத்தினாலும், விசுவாச அன்பினாலும், இயேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த உண்மைக்கு எதிராகவும், இயேசுவின் பின் சென்று மறைந்தும் இருந்தாலும், கிறிஸ்துவின் மிக பெரிய ஒளி எதிலும் மறைந்துவிடாது, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். கண்டிப்பாக மிக விரைவில், கிறிஸ்துவின் ஒளி மிக பெரிய அளவில் அனைவரையும் சென்று அடையும், அதனை யாராலும் மறைக்க முடியாது. எல்லோருக்கும் கிறிஸ்துவின் ஒளி சந்தோசத்தை கொண்டு வரும்.
லூக்கா நற்செய்தியில் (12: 49-50),  இருளில் வாழும் மக்களுக்காக அவர் படும் பாட்டை இப்படி சொல்கிறார்: 49மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.50ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். "
அதே போல உங்கள் மன குறைகளையும் இயேசு அறிந்திருக்கிறார். இன்னும் ஆழமாக , வேகமாகவும் உங்கள் கவலைகளுக்காக , வருத்தத்திற்காக , இயேசு கவலை கொள்கிறார். உங்களுக்கு தெரிந்ததை விட, அவர் இன்னும் அதிகமான காரியங்கள் உங்களுக்காக செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் எதற்காக ஜெப செய்து கொண்டு இருக்கிறீர்களோ , யாருக்காக ஜெபம் செய்கிறிர்களோ, அந்த வெற்றி கிடைக்கும் வரை இயேசு பாடுபட்டு கொண்டிருக்கிறார். முடிந்த , முடியாத விஷயங்கள் அனைத்தும் செய்து, கோரிக்கைகள் நிறைவேற இயேசு உழைக்கிறார்.
இயேசுவிடம் செல்ல வேண்டாம் என பிடிவாதமாக இருப்பவர்களிடம் , அதனால் ஏற்பட போகும் பின் விளைவுகளை தெய்வீக உதவியினால் இறைவன் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஜெபியுங்கள். கடவுள் அவர்களை மற்றவர்கள் மூலமாக அவரின் ஒளியின் நிழலுக்கு கொண்டு வர வேண்டும் என ஜெபியுங்கள். தெய்வீகத்திற்கு எதிரான நிலையை இயேசு உடைத்து , கடவுளின் வழியிலேயே அவர்களை மாற்ற வேண்டும் என்றும் ஜெபியுங்கள்.  மனம் மாறுதலுக்கு பிறகு, கிறிஸ்துவின் ஒளியை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெபியுங்கள். அவர்கள் மனம் மறுத்தல், நிரந்தரமாகவும், முழுமையான மாறுதலாகவும் இருக்க வேண்டும் என்று ஜெபியுங்கள்.
கடவுளின் மனது மாற வேண்டும் என ஜெப செய்யாதீர்கள். இருளில் இருப்பவர்களை கிறிஸ்துவின் ஒளிக்குள் கொண்டு வரும் வேலையை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். அது மாதிரியான மக்களை , நாம் கடவுளின் கரங்களுக்குள் கொண்டு வர ஜெபம் செய்வோம். ஏனெனில், அவர்கள் அதன் போன்ற ஒரு கோரிக்கையுடன் ஜெபம்  செய்வதில்லை.

© 2017 by Terry A. Modica

Saturday, January 7, 2017

ஜனவரி 8, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 8, 2017   ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி
ஞானிகள் வருகை
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,
2யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்என்றார்கள்.

3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.

4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

5-6அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்,
யூதா நாட்டுப் பெத்லகேமே,
யூதாவின் ஆட்சி மையங்களில்
நீ சிறியதே இல்லை; ஏனெனில்,
என் மக்களாகிய இஸ்ரயேலை
ஆயரென ஆள்பவர் ஒருவர்
உன்னிலிருந்தே தோன்றுவார்
என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்என்றார்கள்.

7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.

8மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

(thanks to www.arulvakku.com)
ஞானிகளுக்கு விசுவாசம் எங்கிருந்து வந்தது?
கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் வருகை நாம் கொண்டாடுவது , கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டத்தில் ,விழாவில் ஒரு பகுதியாகும். குழந்தை இயேசுவை அந்த ஞானிகள் எவ்வாறு தாழ்ந்து பணிந்து வணங்கியதை பார்ப்போம். அந்த ஞானிகள் ஜென்டைல் குளத்தை சார்ந்தவர்கள், கிரேக்க வார்த்தையில் அவர்கள் விஞ்ஞானிகள். சிலர் அவர்களை ஜோசியர் என்று கூறினாலும் கூட, கிறிஸ்துவின் குடிலுக்கு அவர்கள் வந்தது ஜோசியத்தினால் அல்ல.

ஏனெனில் அவர்கள் யூதர்கள் அல்ல,  யூதர்களின் மெசியாவை அவர்கள் பார்த்தே ஆக வேண்டும் என்ற உறுதியை பாருங்கள். அதனால் தான் , ஆண்டவரின் திருகாட்சி என்று கூறப்படுகிறது. இயேசுவின் முக்கியத்துவத்தை அதன் முழு அர்த்தம் என்ன என்றே தெரியாமல், ஞானிகள் இயேசுவின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் , அவர்கள் நமக்கு எடுத்து காட்டாய் இருந்தார்கள்.
இயேசு எப்படி அரசராக போகிறார், சாத்தானிடமிருந்து இந்த உலகை எப்படி மீட்க போகிறார் என்று தெரியாமலேயே , மெசியா அரசரை தாழ்ந்து பணிந்து வணங்கினார்கள் , அறிஞர்களாக , மத நூல்களை படித்துள்ளனர், அவர்களின் கலாசாரத்தை தாண்டி பல மத புத்தகத்தை படித்து அறிந்துள்ளனர். கடவுளின் ஆவி , அவர்களை ஆட்கொண்டு, அவர்களுக்கு கொடுத்த அறிவுரையின் பேரில், அவர்கள் செயல் படுத்தினார்கள். அதே ஆவியானவர், அவர்கள் வாழ்வையும் மாற்றினார்கள்.

பரிசுத்த ஆவியால் மட்டும் தான், ஒவ்வொருவரையும் விசுவாசம் கொள்ள வைக்க முடியும், ஏனெனில், பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு தான் விசுவாசம் (1 கொரிந்தியர் 12) . "திருக்காட்சி" என்ற வார்த்தைக்கு அர்த்தம், புதிதாக கண்டுபிடித்தல்,  வெளிப்படுத்துதல் அதன் மூலம் நம் வாழ்வை மாற்றுவது என்பது ஆகும். நாம் புது வழியில் செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் , கடவுளும் இணைந்து நமக்கு அன்பளிப்பை கொடுக்கிறார்.
ஆண்டவரின் திருகாட்சியை , குழந்தை இயேசுவின் பிரசன்னத்தில், அந்த ஞானிகள் எப்படி அனுபவித்திருப்பார்கள் என்று நம்மால் கற்பனை செய்ய முடியும். இந்த ஏழை குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தை எப்படி அரசராக போகிறது என்று தெரியாமலே , அவர்கள் வாழ்வின் கடைசி வரை, குழந்தை இயேசுவை நினைத்து கொண்டே இருந்தார்கள், மேலும், இஸ்ரேல் இருந்து ஏதாவது நல்ல செய்தி இயேசுவை பற்றி வராதா என காத்திருந்தனர். இயேசுவின் சிலுவை மரணம் பற்றியும், அவரது சீடர்கள் போதித்ததையும் அந்த ஞானிகள் கேட்டறிந்தனர். அதன் மூலம் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள், அவர்களின் திருபன்டங்கள், ஆசிர்வதிக்கப்பட்டு நாம் காத்து வருகிறோம்.

.© 2017 by Terry A. Modica