Sunday, April 14, 2019

இயேசுவின் கல்லறை ஜெபம்



ஓ! மிகவும் வந்திக்க தக்க கர்த்தாவும் இரச்சகருமாகிய யேசு கிறிஸ்துவே! எங்கள் பெரும் பாவத்திற்காகக் கொலை களத்தில் உண்மையாகவே இறந்தீர். கிறிஸ்து இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே! எங்களுடைய நினைவுகளை கவனியும். ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே! எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களை தப்புவியும். கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்களை சகல துன்பங்களின்றும் காப்பாற்றும். இயேசு இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் பகைவரிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும். எங்கள் கருத்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் அபாய மரணத்தினின்றும் எங்களை காப்பாற்றி நித்திய ஜீவனை தந்தருளும். சிலுவையில்  அறையுண்ட நசரேனின் இயேசு நாதரே! எப்போதும் எங்கள் மீது இரக்கம் வையும்.  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நாதருடைய மகிமையாலும், அவருடைய பாடுகளாலும், உயிர்த்தெழுதலினாலும் தெய்வத் தனைக்குரிய மோட்ச ஆரோகநித்தினாலும், எங்களை பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே அந்த நாளில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தீர். மெய்யாகவே நீர் பிறந்த மூன்றாம் நாள் மூன்று இராஜாக்களால் தூபம் பொன் வெள்ளி போளம் முதலிய காணிக்கைகள் அளிக்கப் பட்டீர். பெரிய வெள்ளி கிழமையில் கல்வாரி மலையின் மேல் சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டு நிக்காதேமு, சூசை என்னும் பக்தர்களால் சிலுவையினின்று இறக்கி அடைக்கம் செய்ய்பட்டீர். மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய மகிமையானது எங்களை  சத்துருக்களுடைய வஞ்சனைகளின்று     இப்போதும் எப்போதும் காப்பாற்றும். ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மீது கிருபையாயிரும். புனித மரியே , புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். (தங்களுக்கு வேண்டியதை கேட்கவும்) கர்த்தராகிய இயேசுவே, உம்ம்டைய பாடுகளின் வழியாய் இந்த பாவ உலகத்தினின்று உம்முடைய ஆத்துமம் பிரிந்தது உண்மையே  அப்படியே நாங்களும் எங்கள் வாழ்வின் இறுதி வேளையில் படும் துன்பங்களை உமது இரக்கத்தின் கண் கொண்டு பாரும். உமது பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா இடையுறுகளிலும் இப்போதும் எப்போதும் எங்களை தப்புவியும்.
ஆமென்.


No comments: