Friday, February 27, 2015

மார்ச் 1 2015, ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 1 2015, ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக் காலத்தின் 2ம் ஞாயிறு
Gen 22:1-2, 9-13, 15-18
Ps 116:10, 15-19
Rom 8:31b-34
Mark 9:2-10


மாற்கு நற்செய்தி

இயேசு தோற்றம் மாறுதல்
(
மத் 17:1 - 13; லூக் 9:28 - 36)
2ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.3அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.4அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.5பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார்.6தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.7அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஒரு குரல் ஒலித்தது.8உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.9அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர்,' மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது 'என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ' இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
(THANKS TO WWW.ARULVAKKU.COM)


மலை உச்சியில் உங்களுக்கு உள்ள அனுபவத்தை " நினைத்து பாருங்கள். அங்கே நடந்த முக்கியமான தருணம் என்ன ? அதன் மூலம் , உங்கள் வாழ்வில் ஏதாவது மாற்றம் உண்டானதா? அல்லது சாதாரண நிகழ்வாக முடிவுற்றதா ?

பைபிள் குறியிட்டில், மலை உச்சி என்பது கடவுளுக்கு அருகில் இருப்பதாக அர்த்தம். உங்கள் மலை உச்சி அனுபவம் கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றதா ?

இந்த தாபோர் மலை உச்சியில் அவரின் கடவுள் தன்மையை , நெருங்கிய நண்பர்களுக்கு காண்பித்தார். “உயர்ந்த மலை" என்று விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தாபோர் மலையோ அப்படி ஒன்றும் உயர்ந்த மலை கிடையாது. என்ன உயர்ந்த விஷயம் என்றால், அங்கே நடந்த நிகழ்வு தான் மிக பெரியது. ஏன்?

நமது ஆன்ம வாழ்வில் நடந்து முக்கியமான நிகழ்வுகள் நமக்கு சாதரணமாக இருந்ததாக நாம் நினைக்கலாம், ஆனால், அதுவும் இந்த மலை உச்சி அனுபவம் போல தான்.
மூன்று சீடர்களும் கிறிஸ்துவின் தோற்றம் மாறுதலை அருகே இருந்து பார்த்தவர்கள், அதனால் மிகவும் பயனடைந்தார்கள். ஏனெனில் ஒருநாள் அவர்கள் இவ்வுலகில் இறை சேவை செய்ய வேண்டும்.

தந்தை கடவுள் அவர்களிடம் "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" , நாம் இயேசுவை கேட்கும்பொழுது , நாமும் தோற்றம் மாறுகிறோம் .


தவக்காலம் என்பதும், இந்த மலை உச்சி அனுபவம் தான், நாம் இயேசுவை மலை உச்சிக்கு பின் சென்றோம் என்றால், நம்மிடம் உள்ள எல்லா இருளும் , அவரின் ஒளியால் எடுக்கப்பட்டு நாமும் ஒளிர்வோம்.
கிறிஸ்துவின் போதனைகளை நாம் அதிகம் கேட்டு , அதனை நம் அனுதின வாழ்வில் கடை பிடித்தோமானால், அதனை இறை சேவையில் ஈடுபடுத்தினால், நாம் கிறிஸ்துவை போல மாறுவோம், மேலும் அவரை போல மாற மாற, நமது வாழ்வு அவரது ஒளியில் மாறி, நம்மை சுற்றி உள்ள உலகை மாற்றுவோம்.


முதல் வாசகம் சொல்வது போல , ஆபிரகாம் அவரது மகனை கடவுளுக்காக விட்டு கொடுத்தார். கடவுள் தந்தை போல இயேசுவையும் நமக்காக விட்டு கொடுத்தார், அவரை நம்மிடமிருந்து பிரித்து வைக்கைவில்லை.

அதே போல, கிறஸ்துவ வாழ்வின் அணைத்து கடமைகளுக்கும் விசுவாசமாய் நாம் வாழும்பொழுது, கடவுள் மகனை நாம் மற்றவர்களிடம் பிடித்து வைத்திருக்க கூடாது. அவர்களுக்கு உதவியாகவோ, மனம் மாற்றத்தை கொண்டு வருவதிலோ , கருணையுடன் மற்றும், அவர்களின் கவலைகளை காது கொடுத்து கேட்பதிலும், , தாராள மனத்துடன் உதவி செய்வதிலும், அவர்களை மன்னிப்பதிலும், நாம் இயேசுவை அவர்களிடம் கொண்டு செல்கிறோம். நாம் கிறிஸ்துவின் கைகளாக, கால்களாக , அவரின் குரலாக இவ்வுலகில் இருக்கிறோம். இந்த உலகில், கிறிஸ்துவின் உடலாக இருக்கிறோம். மக்களின் ஜெபத்திற்கு நாம் பதிலாக இருக்கிறோம்.

கிறிஸ்துவின் அன்பை , அவரின் அன்பின் ஒளியை நம்மில் ஒளிர, நாம் ஞானஸ்நாணம் மூலம் அருள் பெற்றுள்ளோம். கிறிஸ்துவின் இவ்வுலக இறைசேவையை நாம் தொடர நாம் அருள் பெற்றுள்ளோம் மேலும் அது நம் கடமையும் கூட . தவக்காலத்தின் அனுபவங்கள், கிரிஸ்துவோடு நம்ம்மை இணைத்து இன்னும் மேலும், அவரின் இறைபணி தொடர ஆயுதம் ஆகுவோம்.


© 2015 by Terry A. Modica

Thursday, February 19, 2015

பிப்ரவரி 22 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 22 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Gen 9:8-15
Ps 25:4-9
1 Peter 3:18-22
Mark 1:12-15

மாற்கு நற்செய்தி

இயேசு சோதிக்கப்படுதல்
(
மத் 4:1 - 11; லூக் 4:1 - 13)
12உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
2. இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(
மத் 4:12 - 17; லூக் 4:14 - 15)
14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் 'என்று அவர் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

சோதனையை வெற்றி கொள்வது

இன்றைய நற்செய்தி , இயேசு ஞானஸ்நாணம் பெற்ற பின்பு, முதலில் அவர் எதிர்கொண்ட நிகழ்ச்சியை நமக்கு எடுத்து காட்டுகிறது. இயேசு சோதனையை எதிர்கொண்டு வெற்றி கொண்டதை நமக்கு எடுத்து கூறுகிறது .

இயேசுவின் ஞானஸ்நாணத்தின் பிறகு , இயேசு தன்னை முழுதும் தந்தையிடம் தன்னை ஒப்படைத்தார் . தந்தையின் விருப்பத்திற்கு தன்னை ஆட்படுத்தி கொண்டார். தண்ணிரிலிருந்து எழும்போது, அவரின் பழைய வாழ்வை விட்டு விட்டு, புதிய வாழ்வான இறைசேவைக்கு தயாரானார்.

இவரே என் அன்பார்ந்த மகன், என்று தந்தை கடவுள் மகிழ்ந்தார், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மனிதனில் முழுமையாக இறங்கினார். பரிசுத்த ஆவியும், இயேசுவும் ஏற்கனவே கடவுள் தான், அனால், இயேசுவோ முழு மனிதனாக பிறந்து , பரிசுத்த ஆவியின் முழுதும் ஏற்றார். பரிசுத்த ஆவியை பெற்ற பின்பு ,இயேசு முழுதும் உற்சாகத்தோடு இறைசேவை ஆரம்பித்தார் , ஆனால் அடுத்த செயல், சாத்தான் அவரை சோதித்தது .

இதே நடைமுறை தான் நம் வாழ்விலும் நிகழ்கிறது. விசுவாசத்தில் நாம் புதிய வளர்ச்சியை அனுபவிக்க ஆரம்பிக்கிற போதே , அல்லது தந்தை கடவுளின் அழைப்பை ஏற்று இறையசிற்கு நாம் இறைசேவை செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் நமது விசுவாசத்தை சோதிக்கும் செயல்கள் நம்மை தாக்கும். எனினும், இது மாதிரி நடக்காவிட்டால், நம் விசுவாசம் ஆழ்ந்த விசுவாசம் என்று நமக்கு எப்படி தெரியும். ? நாம் தெய்வீக ஆவியில் , பக்தியில் நாம் வளர்ந்து விட்டோம் என்று எப்படி நமக்கு தெரியும். ? இறையர்சிற்காக நாம் எப்படி இவ்வுலகில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

சரியாக நாம் சிந்திக்காமல், நாம் விசுவாசத்தில் வளர்ந்து வருவது , மிக பெரிய மாற்றத்தை உண்டு பண்ண கூடியது அல்ல என்று நாமாக ஒரு முடிவுக்கு வருகிறோம். நாம் சாத்தானிடம் தோற்றுவிடுவோம் , என்று பயந்து , நாம் விசுவாசத்தில் வளர்ந்து ஒன்றும் ஆக போவதில்லை என்று நாம் கிறிஸ்துவோடு இணைந்து இறையரசிர்காக எதுவும் செய்யாமல் இருந்தால், தெய்விக வாழ்வில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வோமா ?


ஆக இன்னும் ஒரு சோதனை!
தவக்காலம் தான் , நாம் சோதனைகளை , சபல ஆசைகளை , நாம் தினம் சந்திக்கும் பாவங்களை , மாற்றி விசுவாசத்தில் நம்மை நாமே வளர்த்து கொள்ள சரியான காலம்.

ஒவ்வொரு முறையும் நாம் பாவத்தில் விழுந்து கடவுளின் பாவ மன்னிப்பை கேட்கும் பொழுது, நாம் இன்னும் விசுவாசத்தில் முழு ஆற்றலோடு இருக்கிறோம். பாவ சங்கீர்த்தனத்தில் இன்னும் முழுமையாக இயேசுவின் அருளை குருவானவர் மூலம் பெற்று, சோதனைகளை நாம் இன்னும் முழுமையான ஆற்றலோடு வெற்றி கொள்வோம்.
இவ்வாறு செய்தால், சாத்தானை முழுமையாக வெற்றி கொண்டு, கடவுளின் கொள்கையை , நோக்கத்தை இவ்வுலகில் வாழ்வும் மக்கள் அனைவரிடமும் நாம் கொண்டு செல்ல முடியும்.
சோதனைகளை ஆசிர்வாதமாக ஏற்றுகொள்ளுங்கள், உங்கள் வாழ்வை புதுபித்து கொள்ள ஒரு வாய்ப்பாக சோதனைகளை எதிர் கொள்ளுங்கள். அதன் மூலம் இயேசுவை போல மாற முயர்சிப்ப்போம், விசுவாசத்தில் இன்னும் நன்று வளர்வோம்.

© 2015 by Terry A. Modica

Saturday, February 14, 2015

பிப்ரவரி 15 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 15 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொதுகால 6ம் ஞாயிறு
Lev 13:1-2, 44-46
Ps 32:7, 1-2, 5, 11
1 Cor 10:31--11:1
Mark 1:40-45

மாற்கு நற்செய்தி

தொழுநோயாளர் நலமடைதல்
(
மத் 8:1 - 4; லூக் 5:12 - 16)
40ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ' நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.41இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம்,' நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! 'என்றார்.42உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.43பிறகு அவரிடம்,' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.44நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் 'என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.45ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

(thanks to www.arulvakku.com)

எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்" என்று இன்றைய இரண்டாவது வாசகத்தில் வரும் வார்த்தைகளை நமது படுக்கை அறையில் வைக்க வேண்டிய வாசகம். தூங்கி எழுந்த வுடன் நாம் பார்க்க வேண்டிய வாசகம்

எல்லாமே! பல் விளக்குவது கூட கடவுளின் மட்சிமைக்காக, உங்கள் குடும்பத்தினருக்கு "காலை வணக்கம் " கூறுவதும் கடவுளை புகழத்தான்!. திருப்பலிக்கு செல்வதும் கடவுளின் மாட்சிமைக்காக தான். (வேறு மாதிரி சொல்வதானால், கோவிலுக்கு செல்வதால், அதிலிருந்து நாம் ஏதாவது பெற்று வரலாம் என்று அர்த்தமில்லை ) . கடவுளின் மாட்சிமைக்காக உங்கள் செயல்களை செய்யுங்கள். கடவுளின் மாட்சிமைக்காக மெதுவாக வண்டியை ஒட்டுங்கள். பொருட்களை வாங்கும்போதும், உணவு
உண்ணும் பொழுதும் கடவுளை புகழுங்கள். திருச்சபைக்கு தேவைகளுக்கு கொடுத்திடுங்கள், அதன் மூலம் கடவுளின் மாட்சியை உலகிற்கு தெரிவியுங்கள். கடவுள் என்ன எல்லாம் கொடுக்க விரும்புகிறாரோ அதனை பெற்றிடுங்கள். (உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள், சம்பாதிக்கும் பணம், உங்கள் ஜெபத்தால் கிடைக்கும் பலன்கள், நல்ல பரிசுகள்) அனைத்தும் அவரிடமிருந்து பெற்றிடுங்கள். எல்லாமே கடவுளின் மாட்சிமைக்காக தான்.


நம் காலை ஜெபத்தில் இந்த ஜெபம் இருக்க வேண்டும்: “ பரிசுத்த ஆவியே, இன்று செய்யும் அனைத்தும் கடவுளின் மாட்சிமைக்காக செய்ய எனக்கு உதவி செய்யுங்கள்!”

இந்த ஜெபத்தை நாம் தினமும் ஜெபிக்கும் வழக்கம் கொண்டால், கடவுளின் மாட்சிமை அவர் புகழ் என்றென்றும் நம் வாழ்வின் குண நலன்களோடு ஒன்றி போய்விடும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், “கடவுளின் மாட்சிமைக்காக " என்ற லென்ஸ் மூலம் செய்தால், நாம் எல்லாவிதமான பாவங்களை தவிர்க்கும் ஆற்றலை பெற்றிடுவோம். நம் அனுதின ஒவ்வொரு செயல்களையும் அது புனித படுத்துகிறது.


அடிக்கடி, நமது சாதாராண வாழ்க்கை வேலைகளை , சமய , திருச்சபை செயல்களோடு பிரித்து பார்க்கிறோம். கோவிலுக்கு செல்லும் நாட்களில், நாம் சில நேரங்களில் போகாமல் இருந்து விடுகிறோம். ஜெபம் செய்ய வேண்டும் என்று தோன்றும் பொழுது, அப்போதைய செயல்களை நாம் விட்டு விட்டு ஜெபம் செய்கிறோம். குருவானவர்களும், சமய சார்புள்ளவர்களும் தான் எப்பொழுதும் வாழ்க்கையில் முழுதும் பக்தியோடு இருப்பவர்கள் என்று நாம் நினைத்து கொள்கிறோம். ஏன் ?


கடவுளின் மாட்சிமையை " ஏன் நாம் பக்தி வழிபாடுகளில் மட்டும் நிறுத்தி விடுகிறோம் ? -- திருப்பலிக்கு செல்வது, பக்தி வழிபாடுகளில் கலந்து கொள்வது, இறை சேவை புரிவது , மற்றும் பல பக்தி செயல்கள். ? ஒவ்வொரு நொடியும், நாம் கடவுளை , அவரின் விருப்பத்திற்கு இணங்க , நடந்து கொண்டால் என்ன ?

© 2015 by Terry A. Modica