நவம்பர் 12 2017 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 32ம் ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
பத்துத் தோழியர் உவமை
1“அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
2அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.
3அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
4முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
5மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
6நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது.
7மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
8அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள்.
9முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.
10அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
11பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.
12அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார்.
13எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
(thanks to www.arulvakku.com)
கடவுளுக்கு
பொருந்தாத நம்பிக்கை
இன்றைய நற்செய்தியில் எப்படி முட்டாளாக
இருப்பது என்பதை காட்டுகிறது.நாம் கிறிஸ்துவை நம்புகிறோம் -- நல்லது! நாம்
ஜெபிக்கிறோம்-- நல்லது!, நமது விசுவாச வளர்ச்சிக்கு நேரம் செலவழித்து, நமது
விசுவாசம் வளர வாய்ப்புகளை தேடுகிறோம். -- மிகவும் புத்திசாலிமானது ! மேலும், நாம்
கடவுளை நம்புகிறோம் -- மிகவும் சரி.
ஆனால் கடவுள் நமது வேண்டுதலுக்கு தேவையான நேரத்தில்
கொடுப்பதில்லை ? நாம் கிறிஸ்துவிடமிருந்து முழுமையான அன்பையும்,
நம்மை சாத்தானிடமிருந்தும் காப்பவராகவும் இருக்க ஆசை படுகிறோம், ஆனால், இன்னும்
நாம் துன்பம் படுகிறோம், மேலும் எப்பொழுது இந்த பாடுகள் முடயும் என்றும் தெரிவதில்லை.
அப்போ கிறிஸ்து எங்கே?
எப்பொழுதுமே, கடவுளுடைய நேரம் நம்
நேரத்தை விட வேறாக இருக்கும். நாம் கடவுளிடம் உதவி கேட்கும் பொழுது, நம் யோசனை
சரியானது தான் என நாம் நினைத்து நாம் எதிர்பார்த்தபடியே கடவுள் நமக்கு கொடுப்பார்
என எதிர்பார்க்கிறோம். இப்பொழுதே நமது நேரம் சரியான நேரம் ? கண்டிப்பாக, ஆனால்
கடவுளின் நோக்கத்தில் இந்த நேரம் கிடையாது. (மேலும் நம் பாரங்களுக்கு, கடவுள் நாம்
எதிர்பார்க்கும் வழியில், நமக்கு கொடுக்கவில்லை என்றால், கடவுளை நாம் ஏன் பொருப்பாளியாக்குகிறோம்? )
நாம் வேண்டி நமக்கு கிடைக்காத நேரத்தில்
விரக்தியடைகிறோம் , ஆனால், உண்மையில் நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் நமக்கு
கிடைக்க வில்லை என்றால், நாம் அதற்கு தயாராகவில்லை எனபது தான் உண்மை. அறிவிலிகளான
தோழிகள் மணமகன்
விளக்கு எரிந்து முடிவதற்குள் வந்து
விடுவார் என நினைத்தனர். அந்த நேரத்தை அவர்கள் சரியாக புரிந்து கொண்டனர் என
நினைத்தனர். நாமும் ?
மேலும், கடவுளின் திட்டம் நமக்கு
பொருந்தாத இருந்தால் -- கடவுளின் திட்டம் நமக்கு ஒத்து வராததாக இருந்தால், -- நாம்
அசுவிசுவாசம் கொள்கிறோம் . பிறகு, நாமே அந்த விசயங்களை நம் கையில் எடுத்து கொண்டு
கடவுளிடமிருந்து பிரிந்து குழப்பி கொள்கிறோம்.
நம் திட்டத்தை நாம் நம்ப வேண்டியதில்லை. அதே போல
நாமாக ஒன்றை நினைத்து , நம் புரிதல்கள் எப்பொழுதுமே நாம் நம்ப வேண்டியதில்லை. நம்
துன்பங்களை நாமாக தவறாக புரிந்து கொள்கிறோம். கிறிஸ்தவனாக இருக்க சில அபத்தங்களை
நாம் ஏற்று கொண்டு அதன் சந்தோசத்தை நாம் எதிர்கொள்ள முடிவு செய்தோமானால், அதே
நிலையில் நாம் கடவுளின் வழியை மிகவும் அற்புதமாக நாம் அறிந்து கொள்ள முடியும்.!
© 2017 by Terry A. Modica