Saturday, May 26, 2007

பரிசுத்த ஆவியின் ஞாயிறு May 27th

பரிசுத்த ஆவியின் ஞாயிறு:

யோவான் (அருளப்பர்) நற்செய்தி http://www.arulvakku.com

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-30, 31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)
http://www.gnm.org

இன்றைய அருளப்பர் நற்செய்தியில், 20 வது அதிகாரத்தில், யேசு "அமைதி உங்களுக்கு உரித்தாகுக " என இரண்டு முறை கூறுகிறார். முதலில் அமைதியின் அன்பளிப்பை அவர்களுக்கு வழங்கி, அவர்கள் அதனை பெற்றுகொண்டு, அவர்கள் கவலைகளை மறந்து, யேசுவை அடையாளம் கண்டு கொண்டு, அவரை பார்க்க வேண்டும் என்று முதல் முறை கூறினார். அதற்கு அப்புறம், இரண்டாவது முறை கூறி, அவர்கள் அவரது பணியை தொடர வேண்டும் என்பதற்காக கூறுகிறார். பரிசுத்த ஆவியோடு சேர்ந்து, கடவுளரசிற்காக சேவை செய்யவேண்டும் என்ற கட்டளையோடு அவர்களுக்கு பரிசுத்த ஆவியை வழங்குகிறார்.

யேசு நம்மோடு இருக்கிறார் என்று நினைத்து நாம் அமைதியோடும், உறுதியோடும் இருக்கிறோம். யேசுவை மற்றவர்களுக்கு சொல்லும்போது அமைதியாய் இருப்பது என்பது, மிக பெரிய சவாலாகும். இதனால், நாம் குறையுள்ளவர்களாகவும், அல்லது மிகவும் சந்தோசமடைந்தவர்களாகவும், அல்லது நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்கிற பயத்துடன் நாம் இருக்கிறோம். இதனால் தான், கடவுள் நமக்கு பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்தார்.

கடவுள் நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்கு தேவையானதையெல்லாம் கொடுக்கிறார். நாம் உண்மையாக போதுமான அறிவாற்றலோடு இல்லையென்றாலும், நமமை ஒதுக்கி தள்ளுபவர்களோடு நமக்கு ஆறுதலாய் இல்லாவிட்டாலும்,பரிசுத்த ஆவியானவர் அதனையெல்லாம் நிவர்த்தி செய்கிறார். பரிசுத்த ஆவியின் ஆற்றலோடு, யேசுவோடு நாம் சேர்ந்து இறைசேவை செய்யும்போது நமக்கு கிடைக்கும் பரிசு என்னவென்றால், நமக்கு கிடைக்கும் "உள் அமைதி" ஆகும். இந்த உள் அமைதி நமக்கு என்ன நடந்தாலும், மற்றவர்கள் நமக்கு என்ன செய்தாலும், நாம் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் நடவடிக்கை எப்படி இருந்தாலும், இந்த அமைதி நம்மோடு இருக்கும். பரிசுத்த ஆவியோடு இருப்பதன் விளைவு இந்த அமைதியாகும். அமைதி நம்மில் நடக்கும் பரிசுத்த ஆவியின் செயலாகும்.

இந்த நற்செய்தியின் முடிவில், யேசு அப்போஸ்தலர்களுக்கு அவர் சார்பாக மற்றவர்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்குகிறார். அப்போதுதான், பாவமன்னிப்பு என்னும் அருட்சாதனத்தை வழங்குகிறார். பரிசுத்த ஆவ்யின் ஆற்றல், இந்த அமளிதுமளியான உலகத்தில் அமைதியை அனுபவிக்க வைக்கிறது. நம்மை வேதனைபடுத்துபவர்களை நாம் மன்னிப்பது நமக்கு அமைதி அளிக்கிகிறது, அவர்கள் திருந்தாவிட்டாலும் கூட நாம் அமைதி பெறுகிறோம். நாம் கோபத்தை வைத்துகொண்டு, அவர்களை பழிவாஙகவேண்டும் என்றால், நமது கோபம் நம்மை கட்டுபடுத்துகிறது. நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், நாம் மன்னிக்க முடிவு செய்தால், நாம் நம்மில் அமைதியை பரிசுத்த ஆவ்யின் உதவியோடு அனுபவிக்க முடியும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
எந்த விசயம், உன்னை அமைதியின்றி இருக்க செய்கிறது.? , அது மாதிரியான நேரங்களில் யாரை நீங்கள் மன்னிக்க வேண்டும்.? நீ எல்லாரையும் மன்னித்து விட்டாலும், இன்னும் அமைதியை அடையாவிட்டால், நீ உன்னையே மன்னிக்க வேண்டுமா? நல்ல குருவானவரிடம் அல்லது மத ஆலோசகரிடம் சென்று அவரிடம் ஆலோசித்து, யேசு உன்னிடத்தில் என்ன இருக்க வேன்டும் என்று விரும்புகிறாரோ அதனை அடையவேண்டும்.

Saturday, May 19, 2007

மறையுரை May 20th

May 20th Seventh Sunday of Easter

Good News Reflection
FOR NEXT SUNDAY: May 20, 2007
Seventh Sunday of Easter
Next Sunday's Readings:
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 17

20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். 21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். 22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். 23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். 25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள். 26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். '


மறையுரை:



இன்றைய நற்செய்தி ஒன்றிப்பின் நற்செய்தி. யேசு இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் மோட்சத்திற்கு எழுந்து சென்றார். இது திருச்சபைக்கு ஒரு ஜெபமாகும். இந்த எழுந்தேற்றத்தில் தான் அவர் 'சேக்ரமன்ட்' எனப்படும், அற்புத சடங்கை இந்த உறவின் மூலம் ஏற்படுத்தினார். யேசுவும், தந்தையும் ஒன்றாய் இருப்பது போல, நாமும் ஒன்றாய் இணைந்து இருக்க வேண்டும், இதன் மூலம் நாம் ஒன்றாய் இருப்பதற்கு சாட்சியாக இருக்கலாம். இந்த ஒற்றுமை நிரந்தரமாகவும், உறுதியாகவும், தியாகம் செய்தும், நிபந்தனையற்ற அன்பு செய்தும், இவ்வுலகிற்கு கடவுளின் அன்பினை நாம் காட்டவேண்டும். நாம் எவ்வளவு பாவம் செய்தாலும், கடவுளின் அன்பு உண்மையானது என்பதை நாம் இவ்வுலகிற்கு நிரூபிக்கவேண்டும். அவரின் அன்பு நிரந்தரமானது, உறுதியானது, நிபந்தனையற்றது, மேலும் சுய தியாகம் உடையது.



கடவுள் நம்மை எந்த அளவிற்கு நிபந்தனையின்றி அன்பு செய்கிறார் என்பதை புனித திருமணத்தில், நமக்கு காட்டுகிறார். அந்த அன்பு, நாம் நன்றாக இருந்தாலும், மோசமான் நிலையில் இருந்தாலும், நோய் வாய் பட்டிருந்தாலும், நல்ல சுகமாக இருந்தாலும், பனக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் நமக்கு கிடைக்கும். புனித திருமனத்தில், கணவன் அவருடைய வாழ்க்கையை மனைவிக்கும், மனைவி அவருடைய வாழ்க்கையை கணவனுக்கும் அர்ப்பனிக்கின்றனர். கிறிஸ்து எப்படி அவர் வாழ்வை நமக்கு இந்த திருச்சபைக்கு சேவை செய்ய அர்ப்பனித்தாரோ, அதே போல் நாமும் மனப்பென்னாக நம் வாழ்வை அவருக்கு அர்ப்பனிக்க வேண்டும்.



கத்தோலிக்க பாதிரியார், விவாகரத்து பெற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். (அல்லது, முதல் திருமணம், உணமையான இணைதல் இல்லாமல் இருந்தால் மட்டும் அனுமதிப்பார்கள்). ஏனெனில், திருமணம் மிகவும் புனிதமானது. அந்த ஒன்றிப்பு, எப்படி கிறிஸ்துவிற்கும் தந்தைக்கும் உள்ள இணைப்பு போல் புனிதமானது. கடவுளின் அன்பு சேவையாக நாமும் இந்த ஒன்றிப்பை எடுத்து காட்டாக செய்ய வேண்டும்.



இதே ஒன்றிப்பு, எல்லா விதமான உறவிலும் புனிதமானது, மற்றும் உண்மையானது. இரண்டு அல்லது அதற்கு மேலும் யாராவது சேரும்போது, அது நட்பாக இருந்தாலும், பங்கு குழுவாக இருந்தாலும், அல்லது மத குழுவாக இருந்தாலும், இந்த ஒன்றிப்பு புனிதமாக இருக்க வேண்டும். ஆனால், நாம் எந்த அள்விற்கு இந்த ஒன்றிப்பினை காக்க முயற்சி செய்கிறோம். எவ்வளவு மோசமாகவும், மத மாற்றத்திற்கு எதிராகவும், நமது கிறிஸ்துவின் உடல் பிரிந்து இருக்கிறது!



கடவுளால் உண்டாக்கபட்ட எல்லா இணைப்புகளும் புனிதமானது. (கிறிஸ்து நம்மோடு உலகில் இருப்பதும், அவரின் சக்தியும் இந்த இணைப்பில் உள்ளது.) ஒவ்வொரு உறவும், உலகிற்கு யேசுவின் உன்மையான அடையாளத்தையும், அவரின் தியாகத்தையும் காட்டும் படிப்பினையாகும். ஆனால், எல்லோரும் கடவுளுக்கு சேவை செய்து கொண்டு, எவ்விதமான ஒன்றிப்பும் இல்லாமலும், நிபந்தனை அற்ற அன்பு இல்லாமலும், எவ்வித குழுவோடும் இனையாமலும் இருப்பது வெட்க கேடானது.

Tuesday, May 15, 2007

http://arulosai.wordpress.com

please visit another blog portal: http://arulosai.wordpress.com

Saturday, May 5, 2007

மறையுரை மே 6, 2007 ஈஸ்டரின் ஆறாவது ஞாயிறு

மறையுரை மே 6, 2007
ஈஸ்டரின் ஆறாவது ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 14

23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ' என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். 24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. 25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். 26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவு+ட்டுவார். 27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 28 ' நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன் ' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.

http://www.arulvaakku.com

நாம் சரியாக செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். நாம் கிறிஸ்துவை போல வாழ்ந்து அவருக்கு மரியாதை செல்ல விரும்புகிறோம். இந்த ஞாயிறின் நற்செய்தி இதைதான் குறிப்பிடுகிறது. யேசுவை அன்பு செய்வது என்பது, அவருடைய கட்டளைகளை கடைபிடித்து, அவருடைய போதனையின் படி நடக்கவேண்டும். நாம் இது மாதிரி செய்யும்போது கடவுள் நம்மிடம் வசிக்கிறார்.

இது ஒன்றும் மிகவும் சுலபமானது அல்ல. ஒவ்வோரு நாளும், பல விசயங்கள் நாம் கிறிஸ்துவின் வார்த்தையின் படியும், அவரை மாதிரி வாழ்வதும் நமக்கு சவால் விடுகிறது. யேசு இது மாதிரி நேரங்களில் என்ன செய்வார் என்பதை நமக்கு தெரிவதில்லை அல்லது நாம் மறந்து விடுகிறோம். மக்கள் அவர்களுடைய தவறான செயல்களினால், அன்பிற்கு எதிரான செயல்களால் நம்மை தொல்லைபடுத்துவார்கள, ர்னம்மை துன்புறுத்திருகிறார்கள், நாம் இதனால் என்ன ஆகும் என்று தெரியாமல் தடுமாறுகிறோம்.

நற்செய்தியில், ஒவ்வொரு நேரத்திலும், கஷ்டமான நேரங்களிலும், கிறிஸ்துவை எப்படி பின்பற்றுவது என்று எங்கும் பட்டியலிடப்படவில்லை. "இது மாதிரி நடந்தால், கடவுளின் கொள்கையை பின்பற்றுக #127"

இதனால் தான் யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுக்கிறேன் என்று உறுதியளிக்கிறார். நம்முடைய சவால் மற்றும் சோதனையான நேரங்களில், பரிசுத்த ஆவிதான், யேசுவின் வழிகளை நமக்கு தெரியபடுத்துகிறார். காலை எழுந்து மாலை தூங்கும் வரை நம்மோடு பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

நம் பிரச்னையானது, எப்படி கடவுளின் கட்டளைகளை கடைபிடிப்பது என்பது கிடையாது. எப்படி பரிசுத்த ஆவியானவரை நம்பி அவருடைய வழிகாட்டுதலை பின்பற்ற மறந்து விடுகிறோம். நமக்கு கடவுளின் முழு உதவியும் இருக்கிறது. ஆனால், நாம் நமக்கு வரும் சவால்களை நாமே கையாள வேண்டும் என்று நினைத்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறோம்.

இங்கே ஒரு தெய்வீக பயிற்சியை உங்களுக்கு சொல்கிறோம். அதன் மூலம், பரிசுத்த ஆவியின் கட்டளைகளை எப்படி கேட்டு அதனை பின்பற்றுவது எளிதாகும். உங்களுடைய கடிகாரத்தில், ஒவ்வொரு மணிக்கும், ஒரு பீப் சத்தம் கேட்பது போல அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை அலாரம் அடிக்கும்போதும், பரிசுத்த ஆவிக்கு நன்றி சொல்லி, நம்மோடு இருப்பதற்காகவும், அடுத்த அறுபது நிமிடங்களுக்கு நமக்கு வழிகாட்டுவதற்காகவும் நன்றி சொல்லுங்கள். இந்த பயிற்சியை சில வாரங்கள் செய்த பின்பு, உஙகளுக்கு இறைவனின் ப்ரசன்னமும் அவரின் போத்னகளும் நமக்கு எப்போதும் தெரியும்.

http://www.gnm.org